20/07/2021
# #சிலைவழிபாடு # #
தயவு செய்து முழுமையாக வாசியுங்கள்..முழுமையாக வாசிக்காமல் ஆமேன் போட வேண்டாம்...கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்தவர்கள் கட்டாயம் வாசியுங்கள்...
#கத்தோலிக்க #திருச்சபையில் #சுருபங்கள்
கத்தோலிக்க திருச்சபையில் சுருபங்களை வணங்கி ஆராதிப்பதாக புரட்டஸ்தாந்து பெந்தக்கோஸ்த் மதத்தினை சேர்ந்தவர்கள் குற்றம்சுமத்துகிறார்கள்.
உண்மையில் இவர்களுக்கு வேதாகமம் குறித்த தெளிவு இல்லை..
உண்மையில் விக்கிரகங்களுக்கு எதிராக (விக்கிரகம் [idol] எது என அறிந்து) இவர்கள் இந்த குற்றச்சாட்டை சுமத்துவார்களேயானால் நிச்சயமாக அதை வரவேற்கலாம்..ஆனால் இவர்கள் கத்தோலிக்க திருச்சபையை பார்த்து இவ் குற்றச்சாட்டு முன்வைக்கிறார்கள்...
ஏனென்றால் இயேசுவின் படங்கள் சுருபங்கள், புனிதர்களின்,மரியாளின் சுருபங்கள் படங்களை அடிப்படையாக கொண்டு தங்களின் தவறான வேதாகம புரிதலின் அடிப்படையில் என்ன நோக்கத்துக்காக எழுதப்பட்டுள்ளது என்பதை மறுத்து [[சுருபங்களின் நல்ல நோக்கம் மற்றும் விக்கிரகம் எனப்படும் கற்பனை தெய்வங்களின் உருவங்களின் பிழையான நோக்கம்]]
இவ்வாறு சொல்கிறார்கள்.
புரட்டஸ்தாந்து எழுத்தாளரான லொலரயான் போத்தெனர் (Loriane boettener) என்பவர் ஒரு அடிப்படையில் தெளிவில்லாத கருத்தை இதற்கு முன்வைக்கிறார்.
என்னவென்றால் " கடவுள் சுருபங்களை வணங்கி ஆராதிப்பதை தடைசெய்துள்ளவேளை அவற்றை இல்லையென நிருபிக்க மறைநூலை ஆராய்கிறார்கள் " (யோவான் 5:39) என்கிறார்..
கடவுள் தன்னுடனான மனிதனின் உறவுக்கு அல்லது தொடர்புக்கு உருவங்களை உருவாக்குவதை தடைசெய்யவில்லை..
ஏனென்றால் அதே கடவுள் சில சந்தர்ப்பங்களில் மனிதனுடனான உறவுக்கு உருவங்களை உருவாக்கவும் கட்டளையிடுகிறார்..
நம் கத்தோலிக்க ஆலயங்களில் உள்ள சுருபங்களுக்கு எதிராக வாதாடுபவர்கள், கடவுள் உருவங்களை செய்ய கட்டளையிட்ட சந்தர்ப்பங்களை மறந்துவிடுகிறார்கள்...
அவர்கள் இதற்கு சொல்வது செய்ய சொன்னார் உருவங்களை ஆனால் வணங்கச் சொல்லவில்லை என்பது...
செய்யவே கூடாது என்ற ஒரு கட்டளையை சொன்னதும் இதே கடவுள்தான்..( எதை செய்யவேண்டாம் என்ற புரிதல் புரட்டஸ்தாந்துகளிடம் இல்லை)
உதாரணமாக விடுதலைப்பயணத்தில்
"இரு பொன் #கெருபுகளைச் #செய்தல் வேண்டும்; இரக்கத்தின் இருக்கையிலுள்ள இரு பக்கங்களிலும் அவற்றை அடிப்பு வேலையாக அமைப்பாய்.
ஒரு புறத்தில், ஒரு #கெருபும், மறுபுறத்தில் மற்றொரு #கெருபுமாக அமைக்க வேண்டும். இரக்கத்தின் இருக்கையோடு இணைந்ததாக அதன் இரண்டு ஓரங்களிலும் #கெருபுகளைச் #செய்துவை.
அக்கெருபுகள், தம் #இறக்கைகளை #மேனோக்கி #விரித்தவாறும், இரக்கத்தின் இருக்கையை தம் இறக்கைகளால் மூடியவாறும், இருக்கட்டும். #கெருபுகளின் #முகங்கள் ஒன்றையொன்று நோக்கியவாறும், இரக்கத்தின் இருக்கையைப் பார்த்தவாறும் விளங்கட்டும்"
(விடுதலைப் பயணம் 25:18-20)
இன்னுமாக 1 குறிப்பேடு
"தூபபீடத்திற்கான புடமிடப்பட்ட பொன்னின் நிறையையும் கொடுத்தார். #இறக்கைகளை விரித்து #ஆண்டவரின் #உடன்படிக்கைப் #பேழையை மூடும் #பொற்கெருபுகளைக் கொண்ட பொன் தேரின் மாதிரி வடிவத்தையும் கொடுத்தார்.
தாவீது, "இந்த மாதிரிகள் அனைத்தையும் ஆண்டவரே தம் #கையால் #வரைந்தளித்து அவை அனைத்தையும் செய்யும்படி எனக்கு உணர்த்தினார்" என்றார்.
(1 குறிப்பேடு 28:18-19)
இதில் மிக முக்கியமாக குறிப்பிட வேண்டியது மாதிரிகளை ஆண்டவர்தாமே வரைந்து கொடுத்தார் என்கிறார் தாவீது..
அடுத்ததாக உதாரணமாக
"வாயிலிலிருந்து உள்கூடம் வரையிலும் வெளியேயும் சுற்றிலுமிருந்த சுவர்களில் உள்ளேயும் வெளியேயும்
#கெருபுகள், #பேரீச்ச #மரங்களின் #வடிவங்கள் இருந்தன. ஒவ்வொரு #கெருபையும் அடுத்து ஒரு பேரீச்ச மர வடிவம் அமைந்திருந்தது. ஒவ்வொரு #கெருபுக்கும் #இரு #முகங்கள் இருந்தன.
அவற்றுள் ஒன்று பேரீச்ச மரத்தை நோக்கிய #மனித #முகமாகவும், மற்றொன்று அடுத்த பேரீச்ச மரத்தை நோக்கிய #சிங்க #முகமாகவும் #கோவில் #முழுவதும் அமைந்திருந்தன.
(எசேக்கியல் 41:17-19)

இஸ்ராயேல் மக்களின் விடுதலைப்பணத்தின்போது கொள்ளி வாய்ப் பாம்புகளை கொண்டு தண்டிக்கப்பட்டபோது,
கடவுளே மோயிசனுக்கு கட்டளையிடுகிறார் பாம்பைப்போன்ற உருவத்தை செய்யுமாறு...
அப்போது #ஆண்டவர் மோசேயிடம், "கொள்ளி வாய்ப் பாம்பொன்றைச் #செய்து அதை ஒரு #கம்பத்தில் #பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்" என்றார்.
அவ்வாறே மோசே ஒரு #வெண்கலப் #பாம்பைச் #செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.
எண்ணிக்கை 21:9
இங்கு கடவுளால் செய்யச்சொல்லி கட்டளையிடப்பட்டு செய்யப்பட்ட வெண்கலப் பாம்பும் ஒரு உருவம் அல்லது சிலைதானே???
ஏன் ஒரு உருவத்தை செய்யாமல் அதை பார்க்கவைக்காமல் கடவுளால் குணமாக்க முடியாதா???உயிர்ப்பிக்க முடியாதா...
நம் வல்லமையுள்ள கடவுளால் முடியும்...
ஆனால் இங்கு கடவுள் தன்னுடனான மனிதனின் உறவுக்கு இவ் உருவத்தை உருவாக்குவதை தடைசெய்யவில்லை மாறாக உருவாக்க கட்டளையிடுகிறார்..

அநேகமான சிதறிப்போன புரட்டஸ்தாந்து, பெந்தக்கோஸ்த் சபைகள் பல்வேறு காரணங்களுக்காக இயேசுவின் படங்களை உபயோகிக்கிறார்கள்..
இவர்கள் இதற்கு சொல்லும் வியாக்கியானம் படங்களை பயன்படுத்துகிறார்களாம் ஆனால் வணங்குவதில்லையாம்...
உதாரணமாக வேதாகமம் வசனங்களை இணையத்திலும் தங்கள் வீட்டு சுவர்களிலும் அச்சடித்து ஒட்டுவதற்க்கு படங்களை உபயோகிக்கிறார்கள்..
இன்னுமாக சிறுவர்களுக்கு வேதாகமத்தின் கதைகள் குறித்தும் இயேசுவை குறித்தும் கற்பிப்பதற்க்கு இயேசுவின் படங்கள் என அறியப்படுவதையும் ஒரு படி மேலே போய் கார்ட்டூன் போலவும் உருவாக்கி பயன்படுத்துகிறார்கள்..
கத்தோலிக்க திருச்சபையின் கடவுளுடனான உறவுக்கான சுருவங்களை,படங்களை உருவாக்கி பயன்படுத்துவதை குற்றம்சுமத்தும் இவர்கள் அதே குற்றச்சாட்டை தங்களுக்கு பிரயோகிப்பதில்லை...
அப்படியாயின் இவர்களும் தங்கள் கருத்துப்படி சிலைவழிபாட்டினரே...

உண்மையில் இவைகள் வேதாகமத்தில் குறிப்பிடப்படும் விக்கிரக ஆராதனைகளே அல்ல..
கடவுள் தனக்கு நிகராக ஒரு கற்பனையில் ,உண்மையில் இல்லாத ஒரு உருவத்தை உருவாக்கி( உதாரணமாக கன்று உருவம்) அதை கடவுளாக ஆராதிப்பதையே தடைசெய்கிறார்...அதுவே உண்மையில் விக்கிரக ஆராதனை...
அவற்றை கடவுள் செய்ய வேண்டாம் என்கிறார்...
முற்றுமுழுதாக தன்னுடனான மனிதனின் உறவுக்கு உருவங்களை உருவாக்குவதை தடை செய்யவில்லை...மேலே பார்த்ததுபோல அவரே உருவாக்க கட்டளையுமிடுகிறார்...
புரட்டஸ்தாந்துகளின் குற்றச்சாட்டை ஏற்பதானால் கடவுளைக்குறித்த இயேசுவைக்குறித்த திரைப்படங்கள், புகைப்படங்கள், வரையப்பட்ட படங்கள்,கார்ட்டூன்கள எல்லாம் தடைசெய்யப்பட வேண்டியவையே...
ஆண்டவரின் தேவாலயம் ,எசேக்கியேல் குறிப்பிடுவது, வெண்கல பாம்பு உருவம், கெருபின்கள், உடன்படிக்கை போழை இவற்றை அடிப்படையாக வைத்துப்பார்த்தால் நம் பக்தி முயற்சிக்காக, ககவுளுடனான உறவுக்காக சுருபங்கள் படங்களை வைத்துக்கொள்வதில் தடையேதுமில்லை...
ஆனால் செய்யப்பட்ட ஒரு கற்பதை அல்லது நிஜத்தில் இல்லாத ஒரு உருவத்தைஉருவாக்கி அதுதான் கடவுள் என் யாராவது சொல்வார்களேயானால் அப்போதுதான் கடவுளின் கோபம் வெளிப்படுகிறது...
உதாரணமாக
மோசயால் கடவுளின் பணிப்பரைக்கு அமைவாக செய்யப்பட்ட வெண்கல பாம்பு...இதை உருவாக்க சொன்னதே கடவுள்தான்..இங்கு கடவுள் மனிதனுக்கும் தனக்குமான உறவுக்கான உண்மையான பயன்பாட்டிற்கு( ritual use) இதை தடை செய்யவில்லை...உருவாக்க சொன்னதே அவர்தான்...
எப்போது அது பிழையானது அந்த வெண்கலப்பாம்பை கடவுளாக பார்க்கத்தொடங்கினார்கள்..அதை கடவுளாக்கி அதற்கு "நெகுஸ்தான்" என்ற பெயரில் கடவுளுக்கு இணையாக புதிய ஒரு கடவுளாக உருவாக்கினார்கள்...இதுதான் விக்கிரகம்...கடவுளால் தடை செய்யப்பட்ட ஒன்று...இதனால்தான் அது உடைக்கப்பட்டது..
புரட்டஸ்தாந்து ,பெந்தக்கோஸ்த் சபைகள் சபைகள் சொல்வதுபோல கடவுள் ஒட்டுமொத்தமாக உருவங்களை உருவாக்க தடை விதித்தார் என்றால்
ஏன் வெண்கல பாம்பு உருவம்?? ஏன் கெருபின்கள்??அதுவும் தங்கத்தில்.
ஏன் விலங்குகளின் உருவங்கள்?? பதில் உண்டா இதற்கு..??
கத்தோலிக்க திருமறை [CCC] [Catechism of the Catholic Church]
இதைக்குறித்து தெளிவாக சொல்கிறது...
கத்தோலிக்க திருமறை 2114 பகுதி.
TRENT நகரில் கூடிய சங்கம் (1566 இல்) சொல்வதாவது --
விக்கிரக வழிபாடு என்றால் விக்கிரகங்களையும், உருவங்களையும் கடவுளாக எண்ணி வழிபடுவது,
அல்லது அச்சிலைகள் தெய்வீகத்தன்மை அல்லது அதன் இயல்பால் அவற்றை வழிபடுவது சரியானது என்று நம்புவது (விசுவசிப்பது),
அவற்றிடம் செபம் பண்ணுவது அல்லது அவற்றின் மீது நம்பிக்கை வைப்பது மூலமாக,
மனிதனுக்கு இயல்பாக உள்ள மத உணர்வை தவறாக பயன்படுத்துவதே ஆகும்.
கடவுளைப்பற்றிய அழிக்கவியலாத தன்மையை கடவுள் அல்லாத வேறு பொருட்களின் மீது காட்டுபவனே விக்கிரக வழிபாட்டுக்காரன்.
{The Catechism of the Council of Trent (A.D. 1566) taught that idolatry is committed “by worshipping idols and images as God, or believing that they possess any divinity or virtue entitling them to our worship, by praying to, or reposing confidence in them.”
“Idolatry is a perversion of man’s innate religious sense. An idolater is someone who ‘transfers his indestructible notion of God to anything other than God’” (Paragraph 2114, Catechism of the Catholic Church)}
விக்கிரக ஆராதனை என்னும் பாவத்தை கத்தோலிக்க திருச்சபை முற்றிலும் கண்டிக்கிறது.. கத்தோலிக்க திருச்சபையை எதிர்க்க வேண்டும் என்பதற்காக வாதாடுபவர்கள் புரிந்துகொள்ளதவறியது என்னவென்றால், ஒரு கல்லை அல்லது ஒரு கற்பனை உருவத்தை ஒரு கடவுள் என்று நினைப்பதற்கும், கிறிஸ்துவையும், பரலோகத்திலுள்ள புனிதர்களையும் அவர்களின் மரியாதைக்குரிய சுருபங்களை உருவாக்குவதன் மூலம் பார்வைக்கு அவர்களின் கிறீஸ்துவுக்கள்ளான சாட்சியவாழ்வை நினைவில் வைக்க விரும்புவதற்கும் உள்ள வேறுபாடுகளை அறியாமல் இருப்பதேயாகும்.
நம் இறை நம்பிக்கைக்காக சுரூபங்களை உருவாக்குவதும், பயன்படுத்துவதும் முற்றிலும் விவிலிய நடைமுறையாகும்..இதை வேறுவிதமாக கூறும் எவருக்கும் வேதாகமம் குறித்த அறிவுத்தெளிவில்லை...