Al Masjidul Jamiun Noor Medhakekila

Al Masjidul Jamiun Noor Medhakekila Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Masjidul Jamiun Noor Medhakekila, Religious organisation, Medakakila, Deltota.

இறுதி முடிவு இனிதே அமைய...நீங்கள் எப்போது மரணிப்பீர்கள் ? எங்கு மரணிப்பீர்கள் ? என்பது உங்களது கவலையாக இருக்க வேண்டியதில...
08/08/2026

இறுதி முடிவு இனிதே அமைய...

நீங்கள் எப்போது மரணிப்பீர்கள் ? எங்கு மரணிப்பீர்கள் ? என்பது உங்களது கவலையாக இருக்க வேண்டியதில்லை.

ஏன் தெரியுமா? அது உங்கள் கையில் இல்லை! அது பற்றியெல்லாம் அறிந்தவன் அல்லாஹ் மட்டுமே.

மாறாக, நான் எந்த நிலையில் மரணிப்பேன்? நான் என்ன செய்து கொண்டிருக்கும் போது எனக்கு மரணம் வரும் என்பதே நம் ஒவ்வொருவரினதும் மிகப் பெரிய கவலையாக இருக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

يُبْعَثُ كُلُّ عَبْدٍ عَلَىٰ مَا مَاتَ عَلَيْهِ.

"ஒவ்வோர் அடியானும் அவன் எந்த நிலையில் மரணித்தானோ அந்த நிலையிலேயே எழுப்பப் படுவான்."
(முஸ்லிம், அஹ்மத்)

அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்த நிலையில், ஒரு வணக்கத்தில், நற்காரியத்தில் ஈடுப்பட்டிருந்த நிலையில் மரணித்தவர் அதே நிலையில் மீளெழுப்பப்படுவார்; அல்லாஹ்வுக்கு மாறு செய்து, ஒரு பாவத்தில் ஈடுபட்ட நிலையில் மரணித்தவர் அந்த நிலையிலேயே எழுப்பப்படுவார்.

ஆரம்ப கால ஸலபுகள் சொன்ன ஒரு விடயம் இங்கு குறிப்பிடத்தக்கது.

كَمَا تَعِيشُونَ تَمُوتُونَ، وَكَمَا تَمُوتُونَ تُبْعَثُونَ، وَكَمَا تُبْعَثُونَ تُحْشَرُونَ.

"நீங்கள் எவ்வாறு வாழ்கிறீர்களோ, அவ்வாறே மரணிப்பீர்கள்.
நீங்கள் எவ்வாறு மரணிக்கிறீர்களோ, அவ்வாறே எழுப்பப்படுவீர்கள்.
நீங்கள் எவ்வாறு எழுப்பப்படுகிறீர்களோ, அவ்வாறே (விசாரணைக்காக) ஒன்று திரட்டப்படுவீர்கள்."

இதுவொரு பெரிய உண்மையாகும். இவ்வுலக வாழ்க்கை எவ்வாறு இருக்கிறதோ அதுவே மறுமை நிலையைத் தீர்மானிக்கும் என்பதை இந்தக் கூற்று ஆழமாக விளக்குகின்றது.

எனவே, எந்நிலையிலும் நல்லது செய்து, நன்மை செய்து வாழும் போதே நாம் நல்ல முடிவைப் (ஹுஸ்னுல் காதிமா) பெற முடியுமாக இருக்கும்.

யா அல்லாஹ்! நமக்கு நல்ல முடிவை தந்தருள்வாயாக. நீ நம் மீது திருப்தியடைந்த நிலையில் நமது ஆத்மாக்களைக் கைப்பற்றுவாயாக! ஆமீன்!

எதிர்வரும் *2026.08.09 ஞாயிற்றுக்கிழமை* நடைபெறவுள்ள*தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை* எழுதவிருக்கும் அன்பு மாணவச் செல்வங்கள...
07/08/2026

எதிர்வரும் *2026.08.09 ஞாயிற்றுக்கிழமை* நடைபெறவுள்ள
*தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை* எழுதவிருக்கும் அன்பு மாணவச் செல்வங்களே!

உங்கள் கடின உழைப்பும் பிரார்தனையும் வீண் போகாது.
அல்லாஹ் உங்களுக்கு ஞாபக சக்தியையும், மன அமைதியையும், அருமையான வெற்றியையும் தந்தருள்வானாக. *ஆமீன்* 🤲

*Medekekila கல்வி முன்னேற்ற மையம்* சார்பில் இன்று விசேட துஆ பிரார்த்தனையும், தேநீர் விருந்து உபசாரமும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதில் பள்ளிவாயல் நிர்வாக சபை உறுப்பினர்கள், பள்ளிவாயல் இமாம் அவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு பிள்ளைகளை உற்சாகப்படுத்தினர். அல்ஹம்துலில்லாஹ்.

அதேபோல் இம்முறை *உயர்தர பரீட்சை* எழுதவிருக்கும் எங்கள் மாணவ மாணவிகளுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்துக்களும் துஆக்களும்.

ஊசிக்காக விசாரணை!ஒருவர் பொதுச் சொத்தில் ஓர் ஊசியைத் திருடினாலும் அவர் மறுமையில் அதற்காக விசாரணைக்கு உள்ளாக்கப்படுவார்.அல...
02/08/2026

ஊசிக்காக விசாரணை!

ஒருவர் பொதுச் சொத்தில் ஓர் ஊசியைத் திருடினாலும் அவர் மறுமையில் அதற்காக விசாரணைக்கு உள்ளாக்கப்படுவார்.

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
"நாம் உங்களில் யாருக்கேனும் ஒரு பதவியை ஒப்படைத்து, அவர் அதில் ஊசி அளவு அல்லது அதைவிட சிறியதை எங்களிடமிருந்து மறைத்தால்(பொதுச் சொத்தில் கையாடல் செய்தால்), அது மோசடியாகும். மறுமை நாளில் அதை அவர் கொண்டு வருவார்"

அவர்கள் அவ்வாறு கூறிய போது, அன்சாரிகளைச் சேர்ந்த கறுப்பு நிற மனிதர் ஒருவர் எழுந்து நின்று: "அல்லாஹ்வின் தூதரே, நீங்கள் என்னிடம் ஒப்படைத்த பொறுப்பை திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்றார்.

நபி ﷺ: _உனக்கு என்ன ஆயிற்று?என்று கேட்டார்கள்.

அம்மனிதர்: "நீங்கள் இப்படி இப்படி கூறக் கேட்டேன்" என்றார்.

நபி ﷺ: "நான் இப்போதும் கூறுகிறேன். உங்களில் யாருக்கு நாம் ஒரு பதவியை ஒப்படைக்கிறோமோ, அவர் சிறியது பெரியது எதுவாக இருந்தாலும் அனைத்தையும் கொண்டு வரட்டும். அதிலிருந்து அவருக்கு எது கொடுக்கப்படுகிறதோ அதை எடுத்துக்கொள்ளட்டும். ஹராமானதை விட்டு விலகிக்கொள்ளட்டும்." எனக் கூறினார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம்: 1833)

«من اسْتَعْمَلْنَاهُ منكم على عمل، فكَتَمَنَا مِخْيَطًا فما فوقه، كان غُلُولا يأتي به يوم القيامة».

فقام إليه رجلٌ أسودُ من الأنصار، كأني أنظر إليه، فقال: يا رسول الله، اقبل عني عَمَلَكَ،

قال: «وما لك؟»

قال: سمعتك تقول كذا وكذا،

قال: «وأنا أقوله الآن: من اسْتَعْمَلْنَاهُ على عمل فلْيَجِيْء
بقليله وكثيره، فما أُوتِيَ منه أَخَذَ، وما نهي عنه انْتَهَى

رواه مسلم برقم: (1833)

சுமார் நூறு வருட காலமாக இயங்கி வந்த எங்களுடைய  பழைய பள்ளிவாயல் புனர்நிர்மான வேலைகள் நடைபெற்று கொண்டு வருகின்றன. அல்ஹம்து...
25/07/2026

சுமார் நூறு வருட காலமாக இயங்கி வந்த எங்களுடைய பழைய பள்ளிவாயல் புனர்நிர்மான வேலைகள் நடைபெற்று கொண்டு வருகின்றன. அல்ஹம்துலில்லாஹ்.

ஊர் மக்களுடைய ஆன்மீக முன்னேற்றம், சிறார்களின் மார்க்கக் கல்வி, குர்ஆன் மத்ரஸா, ஆண் பெண்களுக்கான ஹிப்ழ் மத்ரஸா , அஹதியா பாடசாலை மற்றும் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் பயிற்சி செயலமர்வுகள் போன்ற பல்வேறு செயற்திட்டங்கள் இந்த கட்டிடத்தில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே உங்களுக்கு முடியுமான அன்பளிப்புக்கள் உதவி ஒத்தாசைகள், பொருளாதார ரீதியான உதவிகள் என்பவற்றை வழங்கி பங்களிப்பு செய்வீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

மூவாயிரம் பங்குகளை கொண்ட இச்செயற்திட்டத்தின் ஒரு பங்கின் விலை ரூபாய் 4740 மட்டுமே.

விரைந்து செயல்படுங்கள் உங்களது நண்பர்களுக்கும் எத்தி வையுங்கள்.

நன்றி
இப்படிக்கு நிர்வாகம்
Al masjidul jamiun noor
Medekekila, Deltota.

அல் மஸ்ஜிதுல் ஜாமிஉன் நூர் ஜும்மா பள்ளிவாயலில் இயங்கி வரும் அன்னூர் குர்ஆன் மதரஸாவின் முஹர்ரம் சிறப்பு விழா 01.07.2026 ஆ...
06/07/2026

அல் மஸ்ஜிதுல் ஜாமிஉன் நூர் ஜும்மா பள்ளிவாயலில் இயங்கி வரும் அன்னூர் குர்ஆன் மதரஸாவின் முஹர்ரம் சிறப்பு விழா 01.07.2026 ஆம் திகதி பிற்பகல் இரண்டு முப்பது மணிக்கு மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

அன்னூர் குர்ஆன் மதரஸா மாணவர்களின் சன்மார்க்க நிகழ்ச்சிகள், கிராஅத், ஹதீஸ், தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளிலான பேச்சுக்கள், கவிதைகள் போன்ற பல இன்னோரன்ன நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. அத்துடன் குர்ஆன் மதரஸா மாணவர்களுக்கான அன்பளிப்புகளும் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி விழாவை சிறப்பாக நடத்தி முடிப்பதற்காக ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் அல் மஸ்ஜிதுல் ஜாமிஉன் நூர் ஜும்மா பள்ளிவாயல் நிர்வாகத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஏற்பாடு
அல் மஸ்ஜிதுல் ஜாமிஉன் நூர் ஜும்மா பள்ளிவாசல் பரிபாலன சபை

*பெண்களுக்கான மாதாந்த விசேட பயான் நிகழ்ச்சி* எமது ஊர் வாழ் பெண்களுக்காக நடாத்தப்பட்டு வருகின்ற மாதர் மஜ்லிஸ் தொடரின் அடு...
03/07/2026

*பெண்களுக்கான மாதாந்த விசேட பயான் நிகழ்ச்சி*

எமது ஊர் வாழ் பெண்களுக்காக நடாத்தப்பட்டு வருகின்ற மாதர் மஜ்லிஸ் தொடரின் அடுத்த மாதர் மஜ்லிஸ் எதிர்வரும் july மாதம் 4ஆம் திகதி அஸர் தொழுகையுடன் எமது பள்ளிவாசலில் இடம்பெறும்.

அன்றைய சொற்பொழிவினை *' "முன்மாதிரி முஸ்லிம் தாய்"
புரிந்து கொள்ளப்பட வேண்டிய உண்மைகள்.என்ற தலைப்பில் அஷ்ஷெய்க். அஸ்கர் (பர்ஹானீ) நிகழ்த்த உள்ளார். எனவே ஊரிலுள்ள அனைத்து பெண்களும் குறித்த மஜ்லிஸில் கலந்து கொண்டு பூரண பயனை பெற்றுக் கொள்ளுமாறு பணிவாகக் கேட்டுக் கொள்கின்றோம்.

குறிப்பு:- பெண்களுக்கான அஸர் தொழுகை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Al masjidul jamiun noor  ஜூம்மா பள்ளிவாயலில் இயங்கி வரும்  குர்ஆன் மத்ரஸாவில் முஹர்ரம் விசேட சிறப்பு நிகழ்ச்சிகள்  இன்ஷா...
30/06/2026

Al masjidul jamiun noor ஜூம்மா பள்ளிவாயலில் இயங்கி வரும் குர்ஆன் மத்ரஸாவில் முஹர்ரம் விசேட சிறப்பு நிகழ்ச்சிகள் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் புதன்கிழமை (2026.07.01) பிற்பகல் 2:30 மணியளவில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

மாணவர்களின் சன்மார்க்க நிகழ்ச்சிகள், உள்ளத்துக்கு ஒளியூட்டும் ஈமானிய உரைகள், மாணவ மாணவிகளுக்கான பரிசில்கள் மற்றும் சிற்றுண்டி ஏற்பாடுகள் என ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

எனவே எமது சிறார்களின் மார்க்க கல்வியை உயர்த்த உங்களது ஒத்துழைப்புகளையும் பங்களிப்புகளையும் எதிர்பார்க்கின்றோம்.

ஏற்பாட்டுக் குழுவினர்.

Muharram Gathering 1448 AH 🌙On behalf of the Management of Medhakekila Quran Madrasa, we are pleased to invite you and y...
20/06/2026

Muharram Gathering 1448 AH 🌙

On behalf of the Management of Medhakekila Quran Madrasa, we are pleased to invite you and your family to join us for our Muharram Function.

📅 Date: Sunday, 21 June 2026
🕑 Time: 2:00 PM onwards
📍 Venue: Nijam Hall, Medhakekila

Let us come together to mark the beginning of the Islamic New Year with reflection, unity, and blessings.

We look forward to your presence.

Management of Medhakekila Quran Madrasa

Address

Medakakila
Deltota

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Masjidul Jamiun Noor Medhakekila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share