St. Anthony's Youth Front

St. Anthony's Youth Front Being the Leader in Social Service Organization for the Catholics of Sri Lanka

Our vision of building a just Society leads us to work with those most in need, where others are not in a position to respond and where we can make a real, sustainable difference. Our belief in the inherent dignity of every person, lies at the core of our commitment to building a just Society and Guides how we work. The approach that we take to our work helps make sure that we are Respectful and Responsive in how we work with others.

இன்றைய நாளுக்கான புனிதர்செப்டம்பர் 18குப்பர்டினோ நகர் புனித ஜோசப்பிறப்பு 1603,பிரிந்திசி Brindisi, அப்போலியன் Apulionஇறப...
18/09/2023

இன்றைய நாளுக்கான புனிதர்

செப்டம்பர் 18

குப்பர்டினோ நகர் புனித ஜோசப்

பிறப்பு 1603,
பிரிந்திசி Brindisi, அப்போலியன் Apulion

இறப்பு 18 செப்டம்பர் 1663

முத்திபேறுபட்டம்: 24 பிப்ரவரி 1753, திருத்தந்தை 14 ஆம் பெனடிக்ட்

புனிதர்பட்டம்: 16 ஜூலை 1767, திருத்தந்தை 13 ஆம் கிளமெண்ட்

பாதுகாவல்: விமான போக்குவரத்து, விண்வெளி, மாணவர்கள்

இவரின் பெற்றோர் பிரான்செஸ்கா பானரா Francesca Panara மற்றும் பெலீஸ் டேசா Felice Desa என்பவர்கள் ஆவார். இவர் பிறப்பதற்கு முன்பே இவரின் தந்தை இறந்துவிட்டார். தந்தை ஏற்படுத்திய கடனை இவரின் தாயால் அடைக்கமுடியவில்லை. இதனால் தாயிடமிருந்த அனைத்து சொத்துக்களையும் கடன்காரர்கள் அபகரித்து சென்றார்கள். இதனால் இவரின் தாய், மகன் ஜோசப்பை கஷ்டப்பட்டு வளர்த்தெடுத்தார். இளம் வயதிலிருந்தே ஜோசப்பிற்கு, தாய் ஞானப்பாலை ஊட்டி வளர்த்தார். இறைபக்தியில் வளர்ந்த ஜோசப், சிறுவயதிலிருந்தே இறைதரிசனங்களை பெற்றார்.

ஜோசப் பல நல்ல குணங்களை பெற்று வளர்ந்தார். இருப்பினும் கோபம் என்னும் குணமும் இவரோடு வளர்ந்தது. இதனால் துன்பங்களுக்கும் ஆளானார். இவரும் இவரின் தாயும் துன்பப்படுவதை அறிந்த இவரின் மாமா ஜோசப்பை தன்னுடன் அழைத்து சென்றார். இவர் செய்த காலணிகள் செய்யும் தொழிலை ஜோசப்பிற்கும் கற்றுக்கொடுத்தார். அத்தொழிலை செய்தபோதும், ஜோசப்பின் மனம் ஆன்மிக வாழ்வில் நாட்டம் கொண்டிருந்தது.

இதனால் 1620ம் ஆண்டு ஃபிரான்சிஸ்கன் சபையில் சேர்வதற்காக விண்ணப்பித்தார். கல்வித் தகுதிகள் இல்லாத காரணத்தால் அவரது விண்ணப்பம் மறுக்கப்பட்டது.

பிறகு, “டராண்டோ” (Taranto) நகருக்கு அருகிலுள்ள “மார்ட்டினோ” (Martino) எனுமிடத்திலுள்ள “கப்புச்சின்” (Capuchin friars) துறவற மடம் சென்று விண்ணப்பித்தார். அவர்கள் அவரை குருத்துவம் பெறாத அருட்சகோதரராக (Lay brother) சேர்த்துக்கொண்டனர். ஆனால், தொடர்ந்து அவர் கண்ட திருக்காட்சிகளால் அவரை மடத்திலிருந்து வெளியே அனுப்பினார்கள்.

தமது குடும்பத்தினரால் பரிகாசம் செய்யப்பட்ட ஜோசப், கப்புர்ச்சினோ நகருக்கு அருகேயுள்ள துறவியர் இல்லத்திற்கு சென்று, தம்மை அங்கே பணியாற்ற சேர்த்துக்கொள்ளுமாறு கெஞ்சி, மன்றாடி சேர்ந்துகொண்டார். சுமார் ஐந்து வருடங்கள் அயராது பணியாற்றிய ஜோசப்பின் கடின உழைப்பைக் கண்ட துறவியர், 1625ம் ஆண்டு, அவரை துறவற சபையில் இணைத்துக்கொண்டனர். அங்கே, மூன்று வருட கடின பயிற்சியின் பின்னர், 1628ம் ஆண்டு, மார்ச் மாதம் 28ம் தேதி குருத்துவ அருட்பொழிவு பெற்றார். குருத்துவம் பெற்ற ஜோசப், அங்கிருந்து “மடோன்னா டெல்லா க்ராஸியா” (Shrine of the Madonna della Grazia) திருத்தலத்திற்கு அனுப்பப்பட்டார். அங்கே, அவர் சுமார் பதினைந்து வருடம் பணியாற்றினார்.

இதன்பின்னர், இவர் கண்ட திருக்காட்சிகள் பன்மடங்காயின. திருக்காட்சிகளின் பின்னர் அவர் பறப்பது போன்ற அல்லது மிதப்பது போன்ற ஒருவித பரவச நிலைக்கு போனார். இதனால் அவரது தூய்மைத்தன்மையின் புகழ் பரவத் தொடங்கியது. இதனால் எரிச்சலைடைந்த அவரது ஆன்மீக தலைவர்களும் திருச்சபையின் முன்னோடிகளும் அவரை ஒரு சிறிய அறையில் அடைத்து வைத்தனர். பொது மக்கள் கூடும் இடங்களுக்கும் பொதுக்கூட்டங்களுக்கும் போக அனுமதி மறுக்கப்பட்டார்.

அவரது இத்தகைய பறப்பது போன்ற அல்லது மிதப்பது போன்ற நிகழ்வுகள் மாந்திரீகங்களுடன் தொடர்புடையன என்று பரவலாக நம்பப்பட்டது. இதன் காரணமாக, ஜோசப் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் அவர்களின் உத்தரவின்படி, அவரை கண்காணிப்பதற்காக, அவர் ஒரு ஃபிரான்சிஸ்கன் துறவு மடத்திலிருந்து மற்றொரு மடத்திற்கு அனுப்பப்பட்டார். முதலில், 1639–53 ஆண்டு காலத்தில் “அசிசி” (Assisi) நகருக்கு அனுப்பப்பட்டார். பின்னர் சிறிது காலம் “பியெட்ரருபியா” (Pietrarubbia) எனுமிடத்திற்கும், அதன்பின்னர் இறுதியில் 1653–57 ஆண்டு காலத்தில், “ஃபொஸ்சொம்ப்ரோன்” (Fossombrone) எனுமிடத்திற்கும் அனுப்பப்பட்டார். இங்கேயெல்லாம் இவர் கப்புச்சின் துறவியரின் மேற்பார்வையில் வைக்கப்பட்டார். அவர் தனது வாழ்நாள் முழுவதிலும் கடுமையான கட்டுப்பாடுகளை அனுபவித்தார். வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே திட உணவு வகைகளை உண்டார். தமது உணவில் கசப்புப் பொருட்களை சேர்த்துக்கொண்டார். தமது வாழ்வின் முப்பத்தைந்து வருடகாலம் இவ்வாறே கழித்தார்.

இறுதியில், 1657ம் ஆண்டு, ஜூலை மாதம், 9ம் நாள், “ஓசிமோ” (Osimo) நகரிலுள்ள கத்தோலிக்க பள்ளிகளின் சமூகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டார். அங்கேயே அவர் மரித்தார்.ß

செபம்:
அன்பான இறைவா! உம்மீது கொண்ட அன்பால், கடுமையான தவம் புரிந்து உம்மிடம் இருந்து பலமுறை காட்சிகளை பெற்று வாழ்ந்த புனித ஜோசப்பைப் போல, நாங்களும் உம்மை தரிசித்து, உம்மைக்காணும் பேற்றைப் பெற, நீர் அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

18/09/2023

இன்றைய நாளுக்கான நற்செய்தி

லூக்கா 7:1-10

பொதுக்காலம் 24 வாரம் தி;ங்கள்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-10

அக்காலத்தில் இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றார். அங்கே நூற்றுவர் தலைவர் ஒருவரின் பணியாளர் ஒருவர் நோயுற்றுச் சாகும் தறுவாயிலிருந்தார். அவர்மீது தலைவர் மதிப்பு வைத்திருந்தார். அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு யூதரின் மூப்பர்களை அவரிடம் அனுப்பித் தம் பணியாளரைக் காப்பாற்ற வருமாறு வேண்டினார். அவர்கள் இயேசுவிடம் வந்து, ``நீர் இவ்வுதவி செய்வதற்கு அவர் தகுதியுள்ளவரே. அவர் நம் மக்கள்மீது அன்புள்ளவர்; எங்களுக்கு ஒரு தொழுகைக்கூடமும் கட்டித் தந்திருக்கிறார்'' என்று சொல்லி அவரை ஆர்வமாய் அழைத்தார்கள். இயேசு அவர்களோடு சென்றார். வீட்டுக்குச் சற்றுத் தொலையில் வந்துகொண்டிருந்தபோதே நூற்றுவர் தலைவர் தம் நண்பர்கள் சிலரை அனுப்பிப் பின்வருமாறு கூறச் சொன்னார்: ``ஐயா, உமக்குத் தொந்தரவு வேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. ஆனால் ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் ஒருவரிடம் `செல்க' என்றால் அவர் செல்கிறார்; வேறு ஒருவரிடம் `வருக' என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து `இதைச் செய்க' என்றால் அவர் செய்கிறார்.'' இவற்றைக் கேட்ட இயேசு அவரைக் குறித்து வியப்புற்றார். தம்மைப் பின் தொடரும் மக்கள் கூட்டத்தினரைத் திரும்பிப் பார்த்து, ``இஸ்ரயேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை என உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார். அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது அப்பணியாளர் நலமுற்றிருப்பதைக் கண்டார்கள்.

புனித வியாகுல அன்னையின் வருடாந்த திருவிழா கொடியேற்றம் 15.09.2023
16/09/2023

புனித வியாகுல அன்னையின் வருடாந்த திருவிழா கொடியேற்றம் 15.09.2023

மரியன்னையின் பிறந்த தினமான செப்டம்பர் 8ம் நாள் திருப்பலியும், அன்னை மரியன்னைக்குரிய மணிமண்டப திறப்பு விழாவும்.
16/09/2023

மரியன்னையின் பிறந்த தினமான செப்டம்பர் 8ம் நாள் திருப்பலியும், அன்னை மரியன்னைக்குரிய மணிமண்டப திறப்பு விழாவும்.

இன்றைய நாளுக்கான புனிதர்புனிதர் கொர்னேலியஸ் ✠(St. Cornelius)21ம் திருத்தந்தை :(21st Pope)பிறப்பு : கி.பி. 180ரோம் (Rome)...
16/09/2023

இன்றைய நாளுக்கான புனிதர்

புனிதர் கொர்னேலியஸ் ✠
(St. Cornelius)

21ம் திருத்தந்தை :
(21st Pope)

பிறப்பு : கி.பி. 180
ரோம் (Rome)

இறப்பு : ஜூன் 253
சிவிடவெச்சிய, ரோமப் பேரரசு
(Civitavecchia, Roman Empire)

நினைவுத் திருநாள் : செப்டம்பர் 16

திருத்தந்தை கொர்னேலியஸ் (Pope Cornelius), ரோம் ஆயராகவும், திருத்தந்தையாகவும், அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட மார்ச்சு 6 (அல்லது) 13ம் நாளிலிருந்து, அவர் மரித்த ஜூன் 253 வரை ஆட்சி செய்தார். அவருக்கு முன் பதவியிலிருந்தவர் திருத்தந்தை “ஃபேபியன்” (Fabian) ஆவார். திருத்தந்தை கொர்னேலியஸ் கத்தோலிக்க திருச்சபையின் 21ஆம் திருத்தந்தை ஆவார்.

கிறிஸ்தவம் துன்புறுத்தப்படல் :
ரோமப் பேரரசனாக 249-251ம் ஆண்டு காலக்கட்டத்தில் ஆட்சி செய்த “டேசியஸ்” (Decius) என்பவர் கிறிஸ்தவர்களை அவ்வப்போது சில இடங்களில் கொடுமைப்படுத்தினார். ஆனால், 250ம் ஆண்டு, ஜனவரி மாதத்திலிருந்து கிறிஸ்தவத்தை மிகக் கடுமையாகத் துன்புறுத்தலானார்.

அரசு நியமித்த அதிகாரிகளின் முன்னிலையில் கிறிஸ்தவர்கள் ரோமத் தெய்வங்களுக்குப் பலி செலுத்தவேண்டும் என்றும், அவ்வாறு செய்ய மறுத்தால் சாவைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் ஆணை பிறப்பித்தார்.

அரசனின் ஆணைக்குப் பணிந்து பலிசெலுத்த மறுத்த கிறிஸ்தவர் பலர் கொல்லப்பட்டு, மறைசாட்சிகளாக உயிர்துறந்தனர். அப்போது திருத்தந்தையாக இருந்த ஃபேபியன் என்பவரும் 250ம் ஆண்டு, ஜனவரி மாதம், 20ம் நாள் கொல்லப்பட்டார்.

அரசனுக்கு அஞ்சித் தங்கள் உயிரைக் காக்கும் வண்ணம் பல கிறிஸ்தவர்கள் பலி ஒப்புக்கொடுத்தனர்.

கிறிஸ்தவம் துன்புறுத்தப்பட்ட காலத்திற்குப்பின் எழுந்த பிரச்சினைகள்:
கிறிஸ்தவம் துன்புறுத்தப்பட்ட காலத்தில் தங்கள் உயிரைக் காக்கும் எண்ணத்துடன் அரச ஆணைக்குப் பணிந்து ரோம தெய்வங்களுக்குப் பலிசெலுத்தி, கிறிஸ்தவத்தை மறுதலித்த கிறிஸ்தவர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து மனம் மாறி மீண்டும் கிறிஸ்தவ சபையோடு இணைய விரும்பினர். அவர்களை மீண்டும் திருச்சபையில் ஏற்பது குறித்து இருவித கருத்துகள் எழலாயின.

1) கிறிஸ்தவத்தை மறுதலித்தவர்கள் மனம் திரும்பி மீண்டும் திருச்சபையில் சேர விரும்பினால் அவர்கள் மீண்டும் ஒருமுறை திருமுழுக்குப் பெற வேண்டும் என்று நோவாசியன் என்பவரும், அவருடைய குழுவும் கூறினார்கள்.

2) தங்கள் தவற்றிற்கு வருந்தி மீண்டும் சபையில் புக விரும்புவோருக்கு இரண்டாம் முறையாகத் திருமுழுக்குக் கொடுக்க வேண்டியதில்லை. அவர்கள் உண்மையாகவே மன வருத்தம் தெரிவித்தால் போதும் என்று திருத்தந்தை கொர்னேலியஸ் கூறினார். அவருக்கு ஆதரவாக புனித சிப்ரியன் என்னும் தலைசிறந்த இறையியல் அறிஞரும் கருத்துத் தெரிவித்தார்.

திருத்தந்தைத் தேர்தல் தடைபட்டது:
ரோம மன்னன் “டேசியஸ்” (Emperor Decius) கிறிஸ்தவத்தைக் கடுமையாகத் துன்புறுத்தினால் அது தானாகவே அழிந்துபோகும் என்று நினைத்திருக்க வேண்டும். அந்த எண்ணத்தில் அவர் திருத்தந்தை ஃபேபியனை (St Fabian) சிறையிலடைத்து கொன்றபின் (ஜனவரி 20, 250), அவருக்குப் பின் இன்னொரு திருத்தந்தை பதவி ஏற்காமல் தடைசெய்தார்.

ஆனால், அச்சமயத்தில் “கோத்” இனத்தவர்கள் (Goths) பால்கன் பகுதியில் தாக்குதல் நிகழ்த்தினார்கள். அவர்களை எதிர்த்துப் போரிடும் பொருட்டு டேசியஸ் தமது படைகளோடு புறப்பட்டார். அந்த இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு கிறிஸ்தவர்கள் புதிய திருத்தந்தையைத் தெரிந்தெடுத்தார்கள்.

பதினான்கு மாதகாலமாகத் திருத்தந்தையின் பணியிடம் வெறுமையாக இருந்தது. திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட மிகத் தகுதிவாய்ந்தவராகக் கருதப்பட்ட “மோசே” (Moses) என்பவர் திருச்சபை துன்புறுத்தப்பட்ட காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.

அவருடைய சாவைத் தொடர்ந்து, “நோவாஷியன்” (Novatian) தாம் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று எதிர்பார்த்தார். ஆனால், கிறிஸ்தவர்கள் கொர்னேலியசைத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்தனர். அவரும் தயக்கத்தோடு அப்பதவியை ஏற்றுக்கொண்டார்.

திருத்தந்தை கொர்னேலியசுக்கு எதிராக “நோவாஷியன்” (Novatian) என்னும் எதிர்-திருத்தந்தை:
கொர்னேலியஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்த நோவாஷியன் மிகுந்த சினம் கொண்டார். தாம் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற குறை ஒருபுறம் இருக்க, கிறிஸ்தவத்தை மறுதலித்தவர்களை மறு திருமுழுக்குக் கொடுக்காமல் திருச்சபையில் மீண்டும் ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறிய ஒருவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது முறையல்ல என்று அவர் எண்ணினார்.

எனவே, நோவாஷியன் "நானே திருத்தந்தை" என்று கூறி, தம்மைத் தாமே திருத்தந்தை நிலைக்கு உயர்த்திக்கொண்டர். இவ்வாறு நோவாஷியன் என்னும் ரோம குரு, திருத்தந்தை கொர்னேலியஸுக்கு எதிரான எதிர்-திருத்தந்தையாக மாறினார். திருச்சபையில் ஒரு பிளவு ஏற்பட்டது.

கொர்னேலியஸ் திருத்தந்தையாக மாறியதைத் தொடர்ந்து நோவாசியன் தம் நிலையை இன்னும் அதிகக் கடுமைப்படுத்தினார். கிறிஸ்தவர்கள் தம் மதத்தை மறுதலிப்பது போன்ற எந்தவொரு கொடிய பாவத்தைக் கட்டிக்கொண்டால் அவர்களுக்குப் பாவ மன்னிப்பே கிடையாது என்றும், கடவுளின் நீதி இருக்கையின் முன் இறுதித் தீர்ப்பின்போது மட்டுமே அவர்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக மாற முடியும் என்றும் நோவாசியான் கூறலானார். இது "நோவாசியக் கொள்கை" (Novatianism) என்று பெயர்பெறலாயிற்று

கொர்னேலியஸ் படிப்பினைக்கு “சிப்ரியன்” (Cyprian) ஆதரவு:
திருச்சபை துன்புறுத்தப்பட்ட காலத்தில் ரோம தெய்வங்களுக்கு பலிசெலுத்திய கிறிஸ்தவர்களுக்கு மீண்டும் ஒருமுறை திருமுழுக்கு கொடுக்க வேண்டியதில்லை என்று திருத்தந்தை கொர்னேலியஸ் கூறிய கருத்துக்கு அவருடைய நண்பரும் தலைசிறந்த இறையியல் வல்லுநருமான புனித “சிப்ரியன்” (Cyprian) முழு ஆதரவு தெரிவித்தார். அவர் நோவாசியனைச் சபைநீக்கம் செய்தார்.

மேலும், அலெக்சாந்திரிய நகர் ஆயர் புனித “டையோனீசியஸ்” (Dionysius) மற்றும் பெரும்பான்மையான ஆப்பிரிக்க, ஆசிய ஆயர்கள் அப்போதனைக்கு ஆதரவு அளித்தார்கள். ரோமில் ஒருசில குருக்களும் பொதுநிலையினரும் கொர்னேயசுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நோவாசியனை ஆதரித்தார்கள்.

ரோம சங்கம் அளித்த தீர்ப்பு:
இதைத் தொடர்ந்து கொர்னேலியஸ் ரோமில் ஒரு சங்கத்தைக் கூட்டினார். அதில் 60 ஆயர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் கொர்னேலியசை முறைப்படியான திருத்தந்தை என்று உறுதிப்படுத்தியதோடு, எதிர்-திருத்தந்தையாகத் தம்மை அறிவித்துக்கொண்ட நோவாசியனையும் ஆதரவாளர்களையும் சபைநீக்கம் செய்தனர்.

திருச்சபை துன்புறுத்தப்பட்ட காலத்தில் தங்கள் உயிரைக் காப்பதற்காகக் கிறிஸ்தவத்தை மறுதலித்தவர்கள் பொருத்தமான விதத்தில் மனவருத்தம் தெரிவித்தபின் நற்கருணை விருந்தில் பங்கேற்க அனுமதிக்கப்படலாம்; அவர்களுக்கு மறு திருமுழுக்கு வழங்கவேண்டியதில்லை என்று சங்கம் தீர்ப்பளித்தது.

கொர்னேலியஸ் எழுதிய கடிதம்:
ரோமில் நடந்த சங்கத்தின் முடிவுகளை உள்ளடக்கிய ஒரு கடிதத்தை கொர்னேலியஸ் அந்தியோக்கியா நகர் ஆயராகவும் நோவாசியனின் ஆதரவாளருமாக இருந்த ஃபாபியுஸ் (Fabius) என்பவருக்கு அனுப்பினார். நோவாசியனுக்கு ஆதரவு தெரிவிப்பது சரியல்ல என்று அக்கடிதத்தில் கொர்னேலியஸ் எழுதினார்.

கொர்னேலியசின் இறப்பு:
மன்னன் டேசியுசுக்குப் பிறகு “கால்லுஸ்” (Trebonianus Gallus) மன்னர் ஆனார். அவரும் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தத் தொடங்கினார். 252ம் ஆண்டு, ஜூன் மாதத்தில் மன்னனின் ஆணைப்படி திருத்தந்தை கொர்னேலியஸ் கைதுசெய்யப்பட்டு, ரோமின் துறைமுகப் பட்டினமாகிய “சென்ட்டும்செல்லே” (Centumcellae) என்னும் இடத்துக்கு நாடுகடத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

ஓராண்டு சிறைவாசத்துக்குப் பின் அவர் மறைச்சாட்சியாக உயிர்துறந்தார். சிறையில் இருக்கும்போது அவருக்கு ஆதராவாக புனித சிப்பிரியன் அவருக்கு உருக்கமானதொரு கடிதம் எழுதினார்.

கொர்னேலியசின் உடல் ரோமுக்குக் கொண்டுபோகப்பட்டு, கலிஸ்துஸ் கல்லறைத் தோட்டத்திலுள்ள நிலத்தடி கல்லறையில் (Catacomb) அடக்கம் செய்யப்பட்டது. அவருடைய கல்லறைமீது வைக்கப்பட்ட கல்வெட்டு இலத்தீன் மொழியில் உள்ளது. அதற்கு முன்னர் கிரேக்க மொழி பயன்படுத்தப்பட்டது.

ரோம் திருப்பலி நூலில் (Roman Missal) பெயர் சேர்ப்பு:
புனித கொர்னேலியஸின் பெயர் ரோம திருப்பலி நூலில் (Roman Missal) நற்கருணை மன்றாட்டில் சேர்க்கப்பட்டது. அதுபோலவே அவருடைய நண்பரும் ஆதரவாளருமான புனித சிப்ரியனின் (St. Cyprian) பெயரும் அதில் இடம்பெற்றது.
இந்த இரு புனிதர்களின் நினைவுத் திருநாளும் செப்டம்பர் 16ஆம் நாள் ஆகும்.

16/09/2023

இன்றைய நாளுக்கான நற்செய்தி

லூக்கா 6:43-49

பொதுக்காலம், வாரம் 23 சனி

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 43-49

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ``கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை. ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். ஏனென்றால் முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை; முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை. நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும். நான் சொல்பவற்றைச் செய்யாது என்னை, `ஆண்டவரே, ஆண்டவரே' என ஏன் கூப்பிடுகிறீர்கள்? என்னிடம் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவற்றின்படி செயல்படும் எவரும் யாருக்கு ஒப்பாவார் என உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன். அவர் ஆழமாய்த் தோண்டி, பாறையின்மீது அடித்தளம் அமைத்து, வீடு கட்டிய ஒருவருக்கு ஒப்பாவார். வெள்ளம் ஆறாகப் பெருக்கெடுத்து அந்த வீட்டின்மேல் மோதியும் அதை அசைக்க முடியவில்லை; ஏனென்றால் அது நன்றாகக் கட்டப்பட்டிருந்தது. நான் சொல்வதைக் கேட்டும் அதன்படி செயல்படாதவரோ, அடித்தளம் இல்லாமல் மண்மீது வீடு கட்டியவருக்கு ஒப்பாவார். ஆறு பெருக்கெடுத்து அதன்மேல் மோதிய உடனே அது விழுந்தது; அவ்வீட்டுக்குப் பேரழிவு ஏற்பட்டது.''

புதுச்செட்டித் தெரு, கொழும்பு 13, புனித வியாகுல அன்னையின் வருடாந்த திருவிழா 2023.நவநாட்களிலும், திருப்பலியிலும் கலந்து அ...
16/09/2023

புதுச்செட்டித் தெரு, கொழும்பு 13, புனித வியாகுல அன்னையின் வருடாந்த திருவிழா 2023.
நவநாட்களிலும், திருப்பலியிலும் கலந்து அன்னையின் ஆசீரை பெற அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

08/12/2022
08/12/2022

தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்” (மத் 5:8).

நிகழ்வு :

முன்பொரு காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான். அவன் மக்களை அதிகம் அன்புசெய்தான். மக்களும் அவனை அதிகமாக அன்பு செய்தார்கள். அப்படிப்பட்ட அரசன் ஒருநாள் தன்னுடைய அமைச்சர் மற்றும் படைவீரர்களோடு நகர்வலம் சென்றான். அவன் சென்ற வழியில் குழந்தை ஒன்று அழுதுகொண்டிருந்தது. அதைக் கவனித்த அரசன் அந்தக் குழந்தையை தன்னுடைய கையில் ஏந்தி, “பிள்ளாய்! ஏன் இப்படி அழுகின்றாய்?, உனக்கு என்ன வேண்டும் சொல், நான் அதைத் தருகின்றேன்?” என்றான். அதற்கு அந்த குழந்தை, “நான் என்னுடைய தாயை விட்டுப்பிரிந்து வழிதவறி வந்துவிட்டேன். அவளிடம் மீண்டுமாக நான் போகவேண்டும்” என்று அழுதுகொண்டே சொன்னது. அதற்கு அரசன், “நான் உன்னை உன்னுடைய தாயிடத்தில் கொண்டுபோய் விடுகிறேன். ஆனால் அவள் எப்படி இருப்பாள் என்பதை மட்டும் சொல்?” என்றான். “என்னுடைய தாய் மிகவும் அழகாக இருப்பாள்” என்றது அந்தக் குழந்தை.

உடனே அரசன் தன்னுடைய நாட்டில் இருக்கும் அனைத்து அழகான தாய்மார்களையும் அரண்மனைக்கு வருமாறு தண்டோரா போட்டு அறிவித்தான். அரசனுடைய அறிவிப்பைத் தொடர்ந்து நாட்டில் இருந்த அழகான தாய்மார்கள் எல்லாரும் அரண்மனைக்கு வந்தார்கள். ஆனால் அந்தக் கூட்டத்தில் யாருமே குழந்தையின் தாயாக இருக்கவில்லை. அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தார்கள். கடைசியல் பெண்ணொருத்தி மெலிந்த தேகத்தோடு கொஞ்சம் கருமை நிறத்தில் அரண்மனைக்கு உள்ளே நுழைந்தான். அவளுடைய முகத்தில் தன்னுடைய குழந்தையை இழந்த சோகம் தெரிந்தது. அவளைப் பார்த்த குழந்தை அம்மா என்று சொல்லிக்கொண்டு ஓடிவந்து, அவளுடைய தோளைக் கட்டிப்பிடித்து அணைத்துக் கொண்டது. எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த அரசனுக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. ‘அழகான தாய் என்று சொல்லிவிட்டு, இப்படி மெலிந்த தேகத்தோடு கருமை நிறத்தில் இருக்கும் பெண்ணொருத்தியை தாயென்று கட்டிக்கொள்கிறதே’ என்று ஒரு கணம் அவன் யோசித்தான். பின்னர் அவன் குழந்தைக்கு தன்னுடைய தாய் எப்போதுமே அழகானவள் என்ற உண்மையை உணர்ந்தவனாய் ஆறுதல் அடைந்தான்.

ஆம், நம் அனைவருக்கும் எப்போதுமே நம்முடைய தாயானவள் அழகானவள். அதிலும் குறிப்பாக பாவ மாசில்லாது இந்த மண்ணுலகத்தில் பிறந்த நம் அன்புத் தாய் அன்னை மரியா இன்னும் அழகானவள்.

வரலாற்றுப் பின்னணி
இன்று நாம் அன்னை மரியாவின் அமலோற்பவப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். இவ்விழா தொடக்கத்தில் பல்வேறு பெயர்களில் கொண்டாப்பட்டு வந்தாலும் 1854 ஆம் ஆண்டு டிசம்பர் 8 நாள்தான் திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் ‘மரியாவின் அமலோற்பவப் பெருவிழா’ என்ற பெயரில் கொண்டாட அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். மேலும் அவர் தான் எழுதிய Ineffabilis Deus என்ற மடலில் “மனுக்குல மீட்பரான இயேசு கிறிஸ்துவின் பயன்களை முன்னிட்டு கன்னிமரி கருவான நொடிப்பொழுதிலேயே எல்லாம் வல்ல இறைவனது அருளாலும் சலுகையாலும் ஜென்மப் பாவமாசு அணுகாதவளாய்த் தோன்றினார்” என்று குறிப்பிட்டு அமலோற்பவியான கன்னி மரியா என்ற விசுவாசப் பிரகடனத்தை அறிவித்தார்.

திருத்தந்தையின் அறிவிப்பை உறுதிசெய்யும் வகையில் 1858 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் நாள் பிரான்சு நாட்டில் உள்ள லூர்து நகரில் பெர்னதத் என்ற பதினான்கு வயது சிறுமிக்குக் காட்சி கொடுத்த மரியா ‘நாமே அமல அற்பவம்’ என்று அறிவித்தார். அன்றிலிருந்து இன்றுவரை மரியா அமலோற்பவி என்பதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 8 நாள் மரியாவின் அமலோற்பவப் பெருவிழாவைக் கொண்டாடி வருகின்றோம். இந்த நேரத்தில் இவ்விழா உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.

பழைய ஏற்பாட்டில் தாவீது அரசன் ஆண்டவருக்காக கோவில் கட்ட நினைத்தபோது, ஆண்டவர் அவரிடம், “நீ மிகுதியான குருதியைச் சிந்தினாய், பெரும் போர்களை நடத்தினாய்; எனக்கு முன்பாகத் தரையில் நீ மிகுதியான குருதியைச் சிந்தியதால், என் பெயருக்கு நீ கோவில் கட்ட வேண்டாம்” என்கிறார் ( 1 குறி 22 :8), கடவுளுக்கு கோவில் கட்ட இருப்பவர் தூய்மையாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் அவர், தன்னுடைய மகனைப் பெற்றெடுக்க இருக்கும் பெண் எவ்வளவு தூய்மையாக இருக்கவேண்டும் என்று நினைத்திருப்பார்?. ஆதலால்தான் பாவக்கறை சிறுதும் இல்லாத தன்னுடைய மகன் இயேசு பிறக்க பாவமாசு அணுகாத மரியவைத் தேர்ந்தெடுக்கின்றார். அதற்காக அவர் மரியாவை ஜென்மப் பாவத்திலிருந்து விடுக்கின்றார்; அவரை இறைவன் தங்கும் இல்லிடமாக மாற்றுகின்றார். இத்தகைய சிறப்புகளைக் கொண்டவளாய் விளங்கியதால்தான் வானதூதர் கபிரியேல் கூட, “அருள் மிகப் பெற்றவரே வாழ்க, ஆண்டவர் உம்முடனே” என்று வாழ்த்துகிறார் (லூக் 1: 28). ஆகவே மரியாவின் அமலோற்பவத்தை நினைவுகூறும் வேளையில் கடவுள் மரியாவுக்கு அளித்த மிகப்பெரிய பேற்றினை நினைவுகூர்ந்து பார்ப்போம்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
மரியாவின் அமலோற்பவப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நாளில், இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. தூய மாசற்ற வாழ்க்கை வாழ முயற்சிப்போம்
மரியா பாவ மாசின்றிப் பிறந்தார், அது மட்டுமல்லாமல் பாவத் தூண்டுகை இல்லாது இருந்தார். அவருடைய விழாவை கொண்டாடும் நாம் அவரைப் போன்று மாசற்ற தூய வாழ்க்கை வாழ்கின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

திருத்தந்தை தூய இரண்டாம் யோவான் பவுல் கூறுவார், “இன்றைக்கு மனிதர்கள் பாவம் என்ற உணர்வே இல்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்றைய காலத்தின் மிகப்பெரிய பாவம்” என்று. இது முற்றிலும் உண்மை. மனிதர்கள் கடவுளுக்கும் பயப்படாமல், தங்களுடைய மனசாட்சிக்கும் பயப்படாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒருசிலர் தங்களுடைய மனசாட்சியை அடகு வைத்து வாழ்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் மரியாவின் மாசற்ற தன்மையை நினைத்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமானதாகும். அவர் தன்னையே கடவுளுக்கு உகந்த தூய, நறுமணம் வீசும் பலிபொருளாக ஒப்புக்கொடுத்தார். நாமும் நம்மையே கடவுளுக்கு உகந்த தூய பலிபொருளாக ஒப்புக்கொடுக்கவேண்டும் (எபே 5:2). அதுதான் நம்முன்னே இருக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது.

தூய பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தில் (இன்றைய இரண்டாம் வாசகம்) கூறுவார், “நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மை கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார் (எபே 1:4) என்று. ஆகவே, நாம் தூயோராகவும் மாசற்றோராகவும் விளங்க வேண்டும் அதுதான் இறைவனிடமிருந்து எதிர்பார்க்கும் ஒன்றாகும்.
இது ஒரு யூதக் கதை. ஒருநாள் ரெப் லிப் (Reb Lieb) என்ற யூத இளைஞர் மெஸ்ரிச்சர் மாகித் (Mezritcher Maggid) என்ற இரபியை பார்க்கச் சென்றார். வழியில் ரெப் லிப் தன்னுடைய நண்பரைச் சந்திக்க நேர்ந்தது. நண்பர் அவரிடம், “எங்கே செல்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு ரெப்லிப், “நான் மெஸ்ரிச்சர் மாகித் என்ற இராபியைச் சந்திக்கச் செல்கிறேன்” என்றார். அதற்கு அவருடைய நண்பர் அவரிடம், “ஓ! அவர் கொடுக்கும் மறைநூல் விளக்கங்களை அறிந்துகொள்ளப் போகிறாயா?” என்று கேட்டார். அதற்கு ரெப் லிப், “இல்லை இல்லை, நான் அவரிடமிருந்து அவரை தூய்மையான வாழ்க்கையை பாடமாகக் கற்றுக்கொள்ளப்போகிறேன். அவரைப் போன்ற தூய்மையான மனிதர் இந்த உலகத்தில் பார்க்க முடியாது” என்றார். ரெப் லிப், மெஸ்ரிச்சேர் மாகிதின் தூய்மையைக் கண்டு வியந்ததுபோன்று, நம்முடைய தூய்மையான வாழ்வைக் கண்டு, மற்றவர்கள் வியக்கும் நாள் எந்நாளோ?.

ஆகவே, மரியாவின் அமலோற்பவப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து அவரைப் போன்று தூய மாசற்ற வாழ்க்கை வாழக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.

Address

61-63, Vivekananda Hill, Colombo 13
Colombo
01300

Website

Alerts

Be the first to know and let us send you an email when St. Anthony's Youth Front posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to St. Anthony's Youth Front:

Share