All Ceylon Jamiyyathul Ulama - ACJU

Call Directions Website Contact the place of worship

All Ceylon Jamiyyathul Ulama - ACJU The Official page of All Ceylon Jamiyyathul Ulama At present ACJU has 163 Branches in 24 districts and over 8000 Scholars as subscribed Members.

ABOUT ALL CEYLON JAMIYYATHUL ULAMA

All Ceylon Jamiyyathul Ulama (ACJU) has been in existence since 1924 and was incorporated by Parliament Act No. 51 of 2000 of the Democratic Socialist Republic of Sri Lanka. The objectives of the ACJU are farsighted, long-run, and designed to serve the Muslim Community and the nation. The ACJU has organized itself into Sub-Committees (Divisions) to serve its stakeholders, in which most of the veteran members are involved as volunteers, along with professional staff members in the forefront serving the community and the country together, focusing on the aspects of Ulama (Religious Scholars) Affairs, Muslim Community Affairs, Citizens Affairs and engagement with authorities. Vision

To build an exemplary and complying Muslim community enriched with the Islamic values and teachings and contribute towards the upliftment of Deenul Islam and the betterment of the community and the nation. Mission

Providing spiritual, ethical, and moral guidance to all levels of the Muslim community based on Islamic teachings, and contributing towards the development of educational, economic, social, and cultural aspects of the community and nation, whilst building unity among community and coexistence with all ethnicities. Objectives

To provide spiritual guidance to all levels of the Muslim community based on Islamic Teachings
To work towards building individuals and families enriched with ethical and moral values
To work towards the welfare of the Ulama and enhancement of the Islamic Religious Education
To contribute towards the development of educational, economic, social, and cultural aspects of the community and nation
To work towards upholding unity among community
To develop peaceful coexistence with all ethnicities
To instigate all necessary efforts and activities to attain the objectives and goals of ACJU. Values

Islamic
Sri Lankan Identity
Moderation
Accommodative
Diversity & Pluralism

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிளைகள் விவகாரப் பிரிவினருக்கும், ஜம்இய்யாவின் மன்னார் மாவட்டக் கிளையின் நிர்வாக உறுப...
20/10/2026

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிளைகள் விவகாரப் பிரிவினருக்கும், ஜம்இய்யாவின் மன்னார் மாவட்டக் கிளையின் நிர்வாக உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று, 2026 ஒக்டோபர் 18 அன்று மன்னார் டவுன் ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

மன்னார் மாவட்டக் கிளை மற்றும் அம்மாவட்டத்திலுள்ள பிரதேசக் கிளைகளின் செயற்பாடுகள், நிர்வாக விடயங்கள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கலந்துரையாடும் நோக்கில் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, மன்னார் மாவட்டக் கிளை மற்றும் பிரதேசக் கிளைகளில் காணப்படும் சவால்கள் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், அவற்றுக்கான பொருத்தமான தீர்வுகளை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில், ஜம்இய்யாவின் மன்னார் மாவட்டக் கிளை மற்றும் பிரதேசக் கிளைகளின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

ஜம்இய்யா சார்பில், கிளைகள் விவகாரப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் என்.ரீ.எம். ளரீஃப் மற்றும் அப்பிரிவின் ஆளணியினரான அஷ்-ஷைக் அப்துல் காதர், அஷ்-ஷைக் உமர் பாரிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிளைகள் விவகாரப் பிரிவினால், முல்லைத்தீவு மாவட்டக் கிளைக்கான புதிய நிர்வாகக் குழுத் த...
20/10/2026

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிளைகள் விவகாரப் பிரிவினால், முல்லைத்தீவு மாவட்டக் கிளைக்கான புதிய நிர்வாகக் குழுத் தெரிவானது 2026 ஒக்டோபர் 17ஆம் திகதி ஹிஜ்ராபுரம் ஜுமுஆப் பள்ளிவாயலில் சிறப்பாக நடத்தப்பட்டது.

இதன்போது, முன்னைய நிர்வாகக் குழு கலைக்கப்பட்டு, புதிய நிர்வாகக் குழுவுக்கான தலைவர், செயலாளர், பொருளாளர், உப தலைவர்கள் மற்றும் உப செயலாளர் ஆகியோர் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, புதிய நிர்வாகக் குழு நியமிக்கப்பட்டது.

இத்தெரிவானது, ஜம்இய்யாவின் கிளைகள் விவகாரப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் என்.ரீ.எம். ளரீஃப் அவர்களின் மேற்பார்வையிலும், குறித்த பிரிவின் ஆளணியினரான அஷ்-ஷைக் அப்துல் காதர் மற்றும் அஷ்-ஷைக் உமர் பாரிஸ் ஆகியோரது பங்களிப்புடனும் சிறப்பாக நடைபெற்றது.

▪️கதீப்மார்களின் கவனத்திற்கு,▪️Attention to all Khatheebs,📌 𝐉𝐨𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐀𝐂𝐉𝐔 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥:https://whatsapp.com/channel/...
20/10/2026

▪️கதீப்மார்களின் கவனத்திற்கு,
▪️Attention to all Khatheebs,

📌 𝐉𝐨𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐀𝐂𝐉𝐔 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥:
https://whatsapp.com/channel/0029VaDLuVR8fewxPY30pS0J

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழுவினால் நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ள கிப்லா திசை பார்த்தல் பயிற்சிநெறி தொடர்...
16/10/2026

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழுவினால் நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ள கிப்லா திசை பார்த்தல் பயிற்சிநெறி தொடர்பிலான ஆலோசனைக் கூட்டம் 2026 ஒக்டோபர் 15அன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பயிற்சிநெறியின் போது போதிக்கப்படவுள்ள விடயங்கள், பயிற்சிக்கான வளவாளர்களை நியமித்தல் மற்றும் இட ஒழுங்குகள், பயிற்சியாளர்களுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.

இதில், ஜம்இய்யாவின் ஜம்இய்யாவின் பிறைக்குழுவின் தவிசாளர், செயலாளர், ஒருங்கிணைப்பாளர் ஆகியோருடன் குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

பாடசாலைகளில் அழகியற் கலைகளைக் கற்பித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் தொடர்பில் ஜம்இய்யாவின் ஃபத்வாப் பிரிவினருக்கும் துறைச...
16/10/2026

பாடசாலைகளில் அழகியற் கலைகளைக் கற்பித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் தொடர்பில் ஜம்இய்யாவின் ஃபத்வாப் பிரிவினருக்கும் துறைசார்ந்த அதிகாரிகளுக்குமிடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று, 2026 ஒக்டோபர் 15 அன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன்போது, முஸ்லிம் பாடசாலை மாணவர்கள் அழகியற் கலைப் பாடங்களைத் தெரிவுசெய்து கற்பதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும், அழகியற் கலைகளை இஸ்லாமிய மார்க்க வரையறைகளுக்கு அமைவாகப் புதிய பாடத் திட்டத்தில் உள்ளடக்குவது தொடர்பான கருத்துக்களும் பரிமாறப்பட்டன.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலிம்கள் விவகாரப் பிரிவின் ஏற்பாட்டில் கதீப்மார்களுக்கான இருநாள் வதிவிட வலுவூட்டல் செ...
16/10/2026

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலிம்கள் விவகாரப் பிரிவின் ஏற்பாட்டில் கதீப்மார்களுக்கான இருநாள் வதிவிட வலுவூட்டல் செயலமர்வு 2026 ஒக்டோபர் 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் ஜாமிஆ நளீமிய்யாவின் ADRT மண்டபத்தில் நடைபெற்றது.

கதீப்மார்களின் திறன்கள் மற்றும் ஆளுமைகளை மேம்படுத்துவதுடன் ஜுமுஆ குத்பாக்களை வினைத்திறன் மிக்க வகையில் தயாரித்து மக்களிடம் முன்வைப்பதற்கான பயிற்சியினை வழங்கும் நோக்கில் இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, கதீப்மார்களின் ஆன்மீக மேம்பாடு, அறிவுப் பின்புலம் மற்றும் ஆளுமை விருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விளக்கக் காட்சிகளூடாக விரிவான முறையில் விளக்கமளிக்கப்பட்டது.

அத்தோடு, காலத்திற்கேற்ற மற்றும் சமூகத்திற்கு பயனுள்ள வகையில் வினைத்திறன் மிக்க குத்பாக்களை நிகழ்த்துவது எப்படி? குத்பாக்களை தயாரிப்பதற்கு இணையத் தளங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பன குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இச்செயலமர்வில், ஜம்இய்யாவின் ஆலிம்கள் விவகாரப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் என்.எம். ஸைபுல்லாஹ் அவர்கள் கலந்துகொண்டதுடன், பிரிவின் உதவிச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். யஹ்யா, நிறைவேற்றுக்குழு உறுப்பினர் அஷ்-ஷைக் ஏ.ஆர். அப்துர் ரஹ்மான் மற்றும் ஜாமிஆ நளீமிய்யாவின் முதல்வர் அஷ்-ஷைக் ஏ.சீ. அகார் முஹம்மத் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு பல்வேறு விளக்கங்களையும் வழிகாட்டல்களையும் வழங்கினர்.

மேலும், ஆலிம்கள் விவகாரப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். பவாஸ் மற்றும் பிரிவின் உறுப்பினர் அஷ்-ஷைக் ஹஸ்ஸான் ஸுலைமான் ஆகியோர்கள் இந்நிகழ்வினை சிறப்பாக ஒருங்கிணைத்தமை குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஊடகப் பிரிவினருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலா...
16/10/2026

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஊடகப் பிரிவினருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று 2026 ஒக்டோபர் 15அன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தல் மற்றும் ஜம்இய்யாவின் ஊடக செயற்பாடுகளை விரிவுபடுத்துவது குறித்து கலந்துரையாடும் நோக்கில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, ஆலிம்களுக்கான ஊடகப் பயிற்சிக் கருத்தரங்குகளை நடத்தல், சமூக வலைத்தளங்களை முறையாக பயன்படுத்துவது குறித்த வழிகாட்டல் கோவை தயாரித்தல், பிற சமூக ஊடகவியலாளர்களோடு நல்லுறவை பேணுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு சில முக்கிய தீர்மானங்களும் எட்டப்பட்டன.

இதில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் சார்பில் அதன் தலைவர் எம்.பீ.எம். பைரூஸ், செயலாளர் ஷம்ஸ் பாஹிம் மற்றும் உப தலைவர் ஷிஹார் அனீஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

ஜம்இய்யா சார்பில், ஊடகப் பிரிவின் தவிசாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், பிரிவின் செயலாளர் எம்.எஸ்.எம். தாஸிம், பிரதம நிறைவேற்று அதிகாரி வை.எல்.எம். நவவீ, பொது முகாமையாளர் எஸ். ஜவாஹிர் சாலி ஆகியோருடன் ஊடகப் பிரிவின் ஆளணியினரும் கலந்துகொண்டனர்.

13/10/2026

✅ ஸவ்தா பின்த் ஸம்ஆ (ரழி) அவர்களின் வாழ்க்கை வரலாறு

உஸ்வதுஸ் செய்யிதாத் - 04

🎙️ அஷ்-ஷைக் ஆஷிக் அபுல் ஹஸன்
பிரச்சாரக் குழு உறுப்பினர் - ACJU

📌 𝐉𝐨𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐀𝐂𝐉𝐔 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥:
https://whatsapp.com/channel/0029VaDLuVR8fewxPY30pS0J

🔸அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறை நாட்காட்டி - ஜுமாதல் ஊலா - 1448🔸සමස්ත ලංකා ඉස්ලාම් ආගමික විද්වතුන්ගේ සභාවෙහි චන...
12/10/2026

🔸அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறை நாட்காட்டி - ஜுமாதல் ஊலா - 1448

🔸සමස්ත ලංකා ඉස්ලාම් ආගමික විද්වතුන්ගේ සභාවෙහි චන්ද්‍ර දින දර්ශනය - ජුමාදල් ඌලා - 1448

🔸ACJU Hilaal Calendar - Jumaadal Oola - 1448

📌 𝐉𝐨𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐀𝐂𝐉𝐔 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥:
https://whatsapp.com/channel/0029VaDLuVR8fewxPY30pS0J

🔸குத்பா வழிகாட்டல்'போதைப் பொருட்களிலிருந்து அனைவரையும் பாதுகாப்போம்' என்ற தலைப்பில் எதிர்வரும் 16.10.2026 நடைபெறவுள்ள கு...
12/10/2026

🔸குத்பா வழிகாட்டல்

'போதைப் பொருட்களிலிருந்து அனைவரையும் பாதுகாப்போம்' என்ற தலைப்பில் எதிர்வரும் 16.10.2026 நடைபெறவுள்ள குத்பாப் பிரசங்கத்தை அமைத்துக் கொள்ளுமாறு சகல கதீப்மார்களையும் ஜம்இய்யா கேட்டுக்கொள்கிறது.

📌இணைப்பைப் பார்வையிடவும்.
https://www.acju.lk/ta/documents-ta/

🔸Kuthba Guidance

The Jamiyyah requests all Khateebs to deliver the Friday Khutbah on the topic “Protecting Everyone from Drug Abuse” on 16 October 2026.

📌 Find the Attachment
https://www.acju.lk/ta/documents-ta/

📌 𝐉𝐨𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐀𝐂𝐉𝐔 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥:
https://whatsapp.com/channel/0029VaDLuVR8fewxPY30pS0J

Address

No. 281, Jayantha Weerasekara Mw, Colombo/10
Colombo
01000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00

Telephone

+94117490490

Alerts

Be the first to know and let us send you an email when All Ceylon Jamiyyathul Ulama - ACJU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to All Ceylon Jamiyyathul Ulama - ACJU:

Shortcuts

Share