லேக்ஹவுஸ் இந்து மன்றம்

லேக்ஹவுஸ் இந்து மன்றம் ”ஆறு சாத்திரமும் ஆறு தத்துவமும் வேதம் அடங்கலுடனே அள்ளிவந்தானையா…”

05/09/2017
15/08/2017
15/11/2016

Media/news company

நல்லூர் திருவிழாவின்போது தினகரன் பத்திரிகை விஸ்தரிப்பு பணிகளின்போது...
31/08/2016

நல்லூர் திருவிழாவின்போது தினகரன் பத்திரிகை விஸ்தரிப்பு பணிகளின்போது...

30/07/2016

முன்னேஸ்வரம் தேவஸ்தானத்தின் வருடாந்த மகா உற்சவத்தின் கொடியேற்றம் 20ம் திகதி பகல் 12 மணிக்கு உங்கள் இந்து இளைஞர்கள் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது. நேரில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு இணையத்தில் காணலாம்.
https://www.facebook.com/Hindu124/

🕒 விநாடி செய்திகள் – விநாடிகளில் உங்கள் கையடக்கத்தில் உலகம்! அரசியல், விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் மற்றும் பல தரப்புகளில் உண்மை மற்றும் விரைவான செய்திகளை தமிழில் வழங்கும் நம்பகமான இணையதளம்.

தினகரனின் முன்னாள் பிரதம ஆசிரியர் சிவா சுப்ரமணியம் காலமானார்தினகரனின் முன்னாள் பிரதம ஆசிரியர் சிவா சுப்ரமணியம் நேற்று இர...
29/05/2016

தினகரனின் முன்னாள் பிரதம ஆசிரியர்
சிவா சுப்ரமணியம் காலமானார்

தினகரனின் முன்னாள் பிரதம ஆசிரியர் சிவா சுப்ரமணியம் நேற்று இரவு யாழ்ப்பாணத்தில்
காலமானார். இடதுசாரிக் கொள்கையில் தீவிர பற்று கொண்டிருந்த அமரர் சிவா சுப்ரமணியம்
நாடறிந்த எழுத்தாளராவார்.
ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தரான அவர், இலங்கையில் பல்வேறு தேசிய பத்திரிகைகளில்
அரசியல் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வந்துள்ளார். கவிதை, சிறுகதை,
இலக்கியங்களிலும் அவர் பெரிதும் ஈடுபாடு கொண்டவராவார். யாழ். குடாநாட்டிலுள்ள அக்கால
இடதுசாரி முன்னோடிகளுடன் அமரர் சிவா சுப்பிரமணியம் நெருக்கமான அரசியல் தொடர்புகளை
கொண்டிருந்த அதேவேளை, தென்னிலங்கையின் சிங்கள இடதுசாரி அரசியல்வாதிகளுடனும்
நட்புறவை பேணி வந்துள்ளார். சிவா சுப்பிரமணியம் சிறந்த அரசியல், இலக்கிய விமர்சகராவார்.
எழுத்துத்துறை மீதும், பத்திரிகைத்துறை மீதும் கொண்டிருந்த ஆர்வம் காரணமாக தினகரன்
பத்திரிகையின் இணை ஆசிரியராக இரு தசாப்தங்களுக்கு முன்னர் பிரவேசித்த சிவா சுப்பிரமணியம்
பின்னர் பிரதம ஆசிரியராக பதவி உயர்வு பெற்று 2010 ஆம் ஆண்டு வரை கடமையாற்றினார்.
உள்ளூர், சர்வதேச அரசியல் விவகாரங்கள் தொடர்பில் அவர் ஏராளமான ஆக்கங்களைப்
படைத்துள்ளார்.
தனது தனிப்பட்ட அரசியல் கொள்கைகள் காரணமாக அவர் பதவியிலிருந்து விலக நேர்ந்த போதிலும்
மீண்டும் தினகரன் ஆசிரியர் பதவியில் இணைவதற்கான வாய்ப்புக்கள் அவரை தேடிவந்தன. ஆனால்,
கொள்கை பிடிப்புக்காரணமாக அவர் அதனை ஏற்க மறுத்தார்.
கொழும்பிலிருந்து மீண்டும் தனது சொந்த ஊரான கோண்டாவில் சென்று வாழத்தொடங்கிய அவர்,
தினக்குரல், தினமுரசு உட்பட மேலும் பல ஊடகங்களில் அரசியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி
வந்தார். சில வருட காலம் உடல் நலம் குன்றி இருந்த போதிலும் அவர் தனது எழுத்துப் பணியை
கைவிடாமல் தொடர்ந்தும் எழுதிக்கொண்டே இருந்தார். இறுதி மூச்சு வரை எழுத்தை கைவிடாத
ஒருவராக சிவா சுப்பிரமணியம் போற்றப்பட வேண்டியவர்.
தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் அவர் கொண்டிருந்த ஆளுமைத்திறன்
பலராலும் பாராட்டப்பட்டுள்ளது. மும்மொழிகளும் திறமையாக எழுதக்கூடிய அவர், சக
ஊடகவியலாளர்களுக்கு ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘தினகரன்’ பிரதம ஆசிரியர் கே. குணராசாவின்தந்தையார் திரு. கண்ணப்பர் கணபதிப்பிள்ளைநேற்று கல்முனையில் காலமானார்.கல்முனை – 03...
27/05/2016

‘தினகரன்’ பிரதம ஆசிரியர் கே. குணராசாவின்
தந்தையார் திரு. கண்ணப்பர் கணபதிப்பிள்ளை
நேற்று கல்முனையில் காலமானார்.
கல்முனை – 03 யைச் சேர்ந்த அன்னார் இறக்கும் போது வயது 92.
நான்கு பிள்ளைகளின் தந்தையான இவரின் பூதவுடல் கல்முனை – 03 சின்னத்தம்பி வீதியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இறுதிக்கிரியைகள் சனிக்கிழமை 28 ஆம் திகதி காலை 10.00 மணியளவில் கல்முனை இந்து மயானத்தில் இடம்பெறும்.

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் நடைபெற்ற பொங்கல் விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
18/01/2016

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் நடைபெற்ற பொங்கல் விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

25/11/2015
லேக்ஹவுஸ் இந்துமன்றம் வருடாந்தம் நடாத்தும் நவராத்திரி விழா இன்று (22) காலை 10.00 மணிக்கு லேக்ஹவுஸ் கேட்போர் கூடத்தில் நட...
22/10/2015

லேக்ஹவுஸ் இந்துமன்றம் வருடாந்தம் நடாத்தும் நவராத்திரி விழா இன்று (22) காலை 10.00 மணிக்கு லேக்ஹவுஸ் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் லேக்ஹவுஸ் நிறுவனத் தலைவர் காவன் ரத்நாயக்க மற்றும் பொதுமுகாமையாளர் அபய அமரதாஸ உட்பட அதிகாரிகள் மற்றும் லேக்ஹவுஸ் நிறுவன ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, வாணி விழாவை முன்னிட்டு நடாத்திய கட்டுரைப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

Address

Colombo
01000

Website

Alerts

Be the first to know and let us send you an email when லேக்ஹவுஸ் இந்து மன்றம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share