02/05/2025
சித்திரை திருவாதிரை, ஞானத்தோடு சம்பந்தமுடைய சம்பந்தருக்கு ஜகன்மாதாவே தாயாகி ஞானப்பால் கொடுத்து ஞானசம்பந்தராக உணர்த்தப்பட்ட நாள் சித்திரை திருவாதிரை...... நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமஹா சன்னிதானம் அவர்களின் ஆத்மார்த்தகுருவான ஞானசம்பந்தரோடு சம்பந்தமாக இப் புண்ணிய நாளாக அமைய ஜகன்மாதா திருவருள் பொலிந்திருக்கின்றாள் போலும்........இந்து மதத்தின் முப்பெரும் ஆச்சாரியர்களில் முதல் இருவரும் அவதரித்தத் திருநாள் இது. முதல் ஆச்சாரியரும் அத்வைத தத்துவத்தை நிலை நாட்டியவரும் ஆன ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதரும் இரண்டாவது ஆசாரியரும் ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயத்தையும் விசிஷ்டாத்வைத தத்துவத்தை நிலை நாட்டியவரும் ஆன உடையவர் ஸ்ரீ இராமானுஜரும் தோன்றிய புனித நாள் இது....... நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம்