Colombo Arulmigu Sivasubramaniya Swami Kovil

Colombo Arulmigu Sivasubramaniya Swami Kovil Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Colombo Arulmigu Sivasubramaniya Swami Kovil, Religious organisation, 131, Kew Road, Colombo.

அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி, காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட...
18/09/2025

அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி, காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள்
வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.

அறுகம்புல் திருநீறு நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.

எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக்கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது.

இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும் படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும். அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.

தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். பறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்ற! அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான்.

பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு. தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயன மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.

இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.

சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா!

நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து. இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது, விளக்கம் மறைந்தது.

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்

1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும்,

வீபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும்
சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.

 #வரலெஷ்மிவிரதம்பற்றியவிளக்கமும் !!!! #இன்றையதினபஞ்சாங்கபலன்களும் !!!"ஆடி அழைக்கும் - யுகாதி ஓட்டும்" எனும் சொலவடைக்கு ஏ...
06/08/2025

#வரலெஷ்மிவிரதம்பற்றியவிளக்கமும் !!!!
#இன்றையதினபஞ்சாங்கபலன்களும் !!!

"ஆடி அழைக்கும் - யுகாதி ஓட்டும்" எனும் சொலவடைக்கு ஏற்ப ஆடிமாதம் பிறந்தாலே பண்டிகைகளும் விரதங்களும் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடரும் என்பது எல்லோரும் அறிந்ததே. பதினெட்டாம் பெருக்கை தொடர்ந்து முடிந்து இன்று வெள்ளிக்கிழமை வரலக்ஷ்மி விரதம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இல்லந்தோறும் திருமகளை வரவேற்று நோன்பிருந்து பூஜை செய்து மகிழ்கிறோம். இந்நாளை வரலக்ஷ்மி விரதம் அல்லது வரலக்ஷ்மி நோன்பு என்கிறோம். திருமகளான லக்ஷ்மி நம் இல்லத்திற்கு எழுந்தருளி கொலுவிருப்பதால் இதை வரலக்ஷ்மி பண்டிகை என்றும் கூறலாம்.

வரலக்ஷ்மி விரதம் என்பது சுமங்கலிப் பெண்கள் செய்யும் மிகச் சிறப்பான பூஜையாகும். மகாவிஷ்ணுவின் தேவியான லக்ஷ்மி தேவியைக் குறித்துச் செய்யப்படுவதே வரலட்சுமி விரதமாகும். தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் வரலக்ஷ்மி விரதம் அனுஷ்டிக்கின்றனர்.
பெண்கள் அனைவரும் தங்கள் கணவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், தீர்க்கசுமங்கலிங்களாக வாழும் விதத்திலும் வரலக்ஷ்மி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

வரலக்ஷமி விரதம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது ?

ஆடி அல்லது ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலக்ஷ்மி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. பெரும்பாலும் 3வது ஆடி வெள்ளியன்றோ அல்லது 4வது ஆடி வெள்ளி அன்றோ வரும். சுமங்கலிகள் அனுஷ்டிக்க வேண்டிய சிறப்பான விரதம் இது.

பக்தி சிரத்தையுடன் நோன்பிருந்து வரலக்ஷ்மி பூஜையை செய்வதாலும், பங்கேற்பதாலும் ஆயுள், ஆரோக்யம், மாங்கல்யபலம் கிட்டும். கன்னிப் பெண்களுக்கு திருமண வரன் கூடிவரும்.

குழந்தை பாக்ய தடைகள் நீங்கி சற்புத்திர யோகம் உண்டாகும். ஜாதகத்தில் சுக்கிர தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கும். கணவன் - மனைவி இடையே மன கசப்புகள், கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர்வார்கள்.

வரலக்ஷ்மி விரதம் பற்றிய புராணகதை:

பத்ரச்ரவஸ் என்ற மன்னன் சிறந்த விஷ்ணு பக்தன். அவன் மனைவி கரசந்திரிகா. இவர்களது ஒரே மகள் சியாமபாலா. அவளைத் திருமணம் செய்து கொடுத்தபின் தாய் துயருற்றாள். அவளது கவலையைத் தீர்த்து அவளுக்கு ஒரு ஆண் மகவு பிறக்க அருள் செய்ய எண்ணினாள் மகாலக்ஷ்மி. அதனால் வரலக்ஷ்மி விரதம் பற்றி எடுத்துக்கூற வயதான சுமங்கலி வடிவில் அவளிடம் சென்றாள். ஆனால் வந்திருப்பது லக்ஷ்மிதேவி என்று அறியாத கரசந்திரிகா அவளை அவமானப் படுத்தி அனுப்பி விட்டாள்.

அங்கிருந்து சியாமபாலாவிடம் சென்ற மகாலக்ஷ்மி நடந்தவற்றைக் கூறி, தான் போனால் எல்லா யோகங்களும் அரண்மனையை விட்டுப் போய்விடும் என்று கூறினாள். தன் தாயின் தவறுக்காக வருந்தி மன்னிப்புக் கோரிய சியாமபாலா, வரலக்ஷ்மி விரதத்தைப் பற்றிக் கேட்டறிந்து சிரத்தையுடன் அதைக் கடைப் பிடித்து வரத் தொடங்கினாள். அதன் பிறகு அவளுக்குச் சுபிட்சம் பொங்கிய அதே நேரத் தில் அவளது பெற்றோர் அனைத்து செல்வங் களையும் இழந்தனர். தன் பெற்றோரது வறுமையை அறிந்த சியாமபாலா ஒரு குடம் நிறைய பொற்காசுகளை அவர்களுக்கு அனுப்பி வைத்தாள். அக்குடத் தில் கரசந்திரிகா கை வைத்ததும் பொற்காசுகள் கரியாகி விட்டன. இதையறிந்த மகள் அந்த ஆண்டு தன் தாயுடன் வரலக்ஷ்மி விரதம் மேற் கொண்டாள். விரதத்தின் மகிமையால் கர சந்திரிகா தன் முந்தையை சுபிட்ச நிலையை எய்தியதோடு ஆண் வாரிசும் பெற்றாள். வரலக்ஷ்மி விரதம் இருக்கும் பெண்கள் அஷ்ட போக பாக்கியங்களைப் பெறுவார்கள் என்பதை இவ்வரலாறு எடுத்துரைக்கிறது.

ஜோதிடத்தில் 'வர' லக்ஷமி யோகம்:

ஒருவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி அதிக பலம் பெற்று ஆட்சி உச்சம் போன்ற நிலை பெற்று ஒன்பதாமதிபதி ஆட்சியோ உச்சமோ பெற்று கேந்திர திரிகோணங்களில் நிற்பது லக்ஷமி யோகத்தை தரும்.

ஜாதகத்தில் இலக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதி மற்றும் சுக்கிரன் கேந்திர, திரிகோணங்களில் இருந்தாலும் ஆட்சி, உச்சம் பெற்றாலும் லட்சுமி யோகம் ஏற்படும். செல்வத்தின் அதிபதியான லக்ஷ்மி தேவியை குறிக்கும் சுக்கிரகோளின் வலிமையை கொண்டு இந்த யோகம் விவரிக்கபடுகிறது.

லக்ஷமி யோகம் பலன்கள்:

லக்ஷ்மி யோகத்தை ஜெனன ஜாதகத்தில் பெற்ற ஒருவன் அனைத்து செல்வங்களையும் பெற்று அரசனுக்கு நிகராக விளங்குவான்.

நற்குணங்கள் உடையவராகவும்,அழகானவராகவும், புகழ் பெற்றவராகவும் இருப்பார், செல்வ நிலையில் உயர்வு தரும்.

விரத தினத்தன்று லக்ஷ்மி துதி, லக்ஷ்மி வரலாறு போன்றவற்றைச் சொல்லி தங்களை முழுமையாக வழிபாட்டில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அன்று மாலை சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து, பூஜை முடிந்ததும் மங்கலப் பொருட்களுடன் தக்ஷிணையும் வைத்துக் கொடுத்து அனுப்ப வேண்டும்.

லக்ஷ்மி யோகம் ஒருவருக்கு இல்லாவிட்டாலும லக்ஷ்மி பூஜை செய்துவிட்டால் அனைத்து வளங்களும் பெருகும் என்பது நிதர்சனம்.
எனவே அனைத்து வளங்களையும் வாரி வழங்கும் வரலக்ஷ்மியை வழிபட்டு நலம் பெறுவோமாக !!!

தங்கத்தேர் திருவிழா 2025
29/07/2025

தங்கத்தேர் திருவிழா 2025

அழகன் முருகன் தலைநகரில் கம்பீர உலா | DEVOTIONAL GOD MURUGA | தேர்த்திருவிழா HINDUISM

16 Forms of Lord Murugan
29/07/2025

16 Forms of Lord Murugan

இன்று அட்சய திருதியைஅட்சய திருதியை ; தங்கம் வாங்குதல் ஒரு நவீன மூடநம்பிக்கை/ வணிக வதந்தி??."அட்சயம்" என்ற சொல்லிற்கு பல ...
30/04/2025

இன்று அட்சய திருதியை

அட்சய திருதியை ; தங்கம் வாங்குதல் ஒரு நவீன மூடநம்பிக்கை/ வணிக வதந்தி??.

"அட்சயம்" என்ற சொல்லிற்கு பல அர்த்தங்கள் உள்ளன.
அழிவில்லாதது,
நிலையானது,
தானம்,
சேவை,
நற்காரியம்,
தீராதது என்பதுடன்
அரிசி என்ற அர்த்தமும் உள்ளது. திருமணத்தில் மணமக்களை வாழ்த்த அட்சதை இடுதல் எனும் சொல்லும் இதனாலேயே வந்தது.
மகாபாரதம், சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட அட்சய பாத்திரம் என்பது கூட கொடுக்க கொடுக்க குறையாத அரிசி நிறைந்த பாத்திரம் என்றே பொருள்.

அட்சய திருதியை; சித்திரை மாத சுக்ல பக்ஷ த்விதியை அன்று புனித நாளாகக் கொண்டாடப்படுகிறது.
அந்நாளிலேயே காசியில் அன்னபூரணி சிவனுக்கு 'அரிசி' பிச்சை இட்ட நாளாகவும் மணிமேகலை பிச்சை பெற்ற நாளாகவும் கருதப்படுகிறது.

இந்த நாளில், ஒரு நல்ல காரியம் தொடங்க, தானம் செய்ய ஒரு சிறந்த நாள் என்று கருதப்படுகிறது. இந்தத் திருதியை நாளில் செய்யப்படும் தானம், நற்காரியம் என்றும் அழிவுறாது, பெருக்கமே தரும் என நம்பப்படுகிறது.

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்க வேண்டும் என்ற வணிக வதந்தி பண்டைய கால சம்பிரதாயம் அல்ல. இது நவீன காலத்தில், குறிப்பாக 1990களுக்குப் பிந்தைய வணிக ரீதியான பிரசாரத்தால் உருவானது.
தங்கம் வாங்குவது அதே நாளில் செய்ய வேண்டிய ஒரு மரபு என்று பண்டைய நூல்களோ, புராணங்களோ கூறவில்லை.

இந்த வாடிக்கை பெரும்பாலும் தங்க வியாபாரிகளால் கட்டமைக்கப்பட்ட ஒரு வணிக உத்தி ஆகும். அவர்கள், "இந்த நாளில் வாங்கும் தங்கம் குறையாது, செல்வமாக மாறும்" என விளம்பரங்கள் மூலம் மக்களிடம் நம்பிக்கையை உருவாக்கினர்.
ஆரம்பத்தில் தென்னிந்தியாவில் தொடங்கி இன்று எல்லா இடங்களிலும் இந்த வணிக வதந்தி பரவி ஒரு நம்பிக்கை ஆக்கப்படுகிறது.

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்க வேண்டும் என்பது மரபு அல்ல, அது ஒரு வணிகம் சார்ந்த சமீபத்திய நம்பிக்கை. ஆனாலும், அது மக்கள் நம்பிக்கையால் இப்போது ஒரு கலாச்சாரப் பகுதியாகவே மாற்றப்படுகிறது.
இது ஒரு மரபு என்பதற்கான எந்தவொரு ஆதாரம் இல்லை. இது சமீபத்திய வணிக விளம்பரத்தால் உருவானது. மக்களை வேட்டையாடும் விளம்பரங்களின் எண்ணத் திணிப்பு.

உண்மையில், நன்கொடையும் சேவையும் செய்வதற்குரிய நாளை பொருளாதார செலவுக் கடமையாக மாற்றிவிட்டது. இத்தனை சில வருடங்களில் ஏதோ ஒரு அட்சய திருதியை க்கு ஒரு குண்டுமணி தங்கமேனும் இதுவரை வாங்கியிருப்பீர்கள்! தங்கம் உங்கள் வீட்டில் பல்கி பெருகிவிட்டதா என்ன!!
அனேகமாக வாங்கிய தங்கம் கூட இப்போது அடகு கடையில்/வங்கியில் தான் இருக்கும்.

'அட்சயம்' என்பது பொருளில் அல்ல, நற்காரியங்களில் உள்ளது.
ஒரு பசுமை மரம் நடுவது, பசித்தவனுக்கு உணவளிப்பது, கல்வியுதவி மாணவனுக்கு வழங்குவது,
சுற்றுச்சூழலை பாதுகாப்பது, அல்லலுறும் மக்களுக்கு வழிகாட்டுவது.....
இதுவே அட்சய புண்ணியம்.

அட்சய திருதியை என்பது மனித நேயம் மற்றும் தானத்தின் தத்துவத்தை கொண்டாடும் நாள். தங்கம் வாங்கும் நாளாக திரிக்கப்படுவதை ஏற்க கூடாது. அந்நாளை பொருள் தேவைப்படும் மக்களுக்கு உதவுவதன் மூலம் அர்த்தமுள்ள நாளாக மாற்றலாம். உண்மையான "அட்சயம்" என்பது நம்மால் செய்யப்பட்ட தன்னலமற்ற நற்காரியங்கள், அவைதான் தீராத செல்வமாக வாழ்வில் நிலைத்திருக்கும். மறு சிந்தனை மக்களுக்கு அவசியமாகிறது. அது மூடநம்பிக்கையாக மாறுவதைத் தவிர்க்க, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது நம்மைச் சார்ந்தது. உண்மையான செல்வம் என்பது அறமும், கருணையும், சேவையும் தான்.

அனைவருக்கும் லக்ஷ்மி அன்னையின் திருவருள் கிடைக்கட்டும் 🙏🙏

13/04/2025

‘விசுவாசுவ' வருடப்பிறப்பு

2025 ஆண்டு தமிழ் - சிங்கள சித்திரை புத்தாண்டு 'விசுவாசுவ வருடம் 14.04.2025 திங்கட்கிழமை அதிகாலை 2.29 மணிக்கு பிறக்கிறது

விஷ புண்ணியகாலம்

13.04.2025 ஞாயிறு இரவு 10.29 மணி முதல் 14.04.2025 திங்கட்கிழமை காலை 6.29 மணி வரை

(தலைக்கு -ஆலிலை காலுக்கு - இலவமிலை)

ஆடை நிறம் - சிவப்பு, வெள்ளை

கைவிஷேட நேரங்கள்

14.04.2025 திங்கட்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணி வரையும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையும்

ஆதாய விடயம்

மேஷம் - 2 வரவு 14 செலவு

இடபம் - 11 வரவு 5 செலவு

மிதுனம் - 14 வரவு 2 செலவு

கடகம் - 14 வரவு 8 செலவு

சிம்மம் - 11 வரவு 11 செலவு

கன்னி - 14 வரவு 2 செலவு

துலாம் - 11 வரவு 5 செலவு

விருச்சிகம் -2 வரவு 14 செலவு

தனுசு 5 வரவு 5 செலவு

மகரம் - 8 வரவு 14 செலவு

கும்பம் - 8 வரவு 14 செலவு

மீனம் - 5 வரவு 5 செலவு

தோஷ நட்சத்திரங்கள்

திருவாதிரை, சித்திரை, சுவாதி,விசாகம், சதயம், பூரட்டாதி, உத்தரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களை கொண்டோர் தவறாமல் மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்யவேண்டும்.

11/03/2025
10/03/2025
09-03-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00   மணி அபிஷேகம் 9:30  மணி பூஜை 9.45 சஹஸ்ர நாம அர்ச்சனை10.30 மணி வசந்த மண்டப பூஜை தொட...
08/03/2025

09-03-2025 ஞாயிற்றுக்கிழமை
காலை 8.00 மணி அபிஷேகம்
9:30 மணி பூஜை
9.45 சஹஸ்ர நாம அர்ச்சனை
10.30 மணி வசந்த மண்டப பூஜை தொடர்ந்து உற்சவம் திருவருட் பிரசாதம் வழங்குதல்.
மாலை
4. மணி அபிஷேகம்
5:30 மணி பூஜை
6. மணி சஹஸ்ரநாம அர்ச்சனை
7. மணி வசந்த மண்டப பூஜை தொடர்ந்து உற்சவம் திருவருட் பிரசாதம் வழங்குதல்.

08-03-2025 சனிக்கிழமை  காலை 8:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன்  ஆரம்பமாகி 17-03-2025 திங்கட்கிழமை  வரை காலை மாலை இருவேளையும் ...
02/03/2025

08-03-2025 சனிக்கிழமை காலை 8:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகி
17-03-2025 திங்கட்கிழமை வரை காலை மாலை இருவேளையும் அர்ச்சனை விஷேடவசந்தண்டப பூஜை சுவாமி உற்சவம் ஆகியவை இடம்பெறும்.

18-03-2025 செவ்வாய்கிழமை அன்று காலை 08 மணியளவில் 1008 சங்காபிஷேகம் இடம்பெற்று மாலை 05 மணியளவில் விஷேடவசந்தமண்டப பூஜை சுவாமி இரதபவனி வரும் திருக்காட்சியும் இடம் பெறும்.

Address

131, Kew Road
Colombo
00200

Opening Hours

Monday 05:30 - 10:30
17:00 - 20:00
Tuesday 05:30 - 11:30
17:00 - 20:00
Wednesday 05:30 - 10:30
17:00 - 20:00
Thursday 05:30 - 10:30
17:00 - 20:00
Friday 05:30 - 12:00
17:00 - 20:00
Saturday 05:30 - 12:00
17:00 - 20:00
Sunday 05:30 - 10:30
17:00 - 20:00

Telephone

0112432225

Website

Alerts

Be the first to know and let us send you an email when Colombo Arulmigu Sivasubramaniya Swami Kovil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share