27/08/2024
எமது ஆலய திருவிழா
16 -25 / 08 / 2025
நவநாட்காலங்களில் பல அருட்தந்தையர்களால் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டன.
திருவிழா திருப்பலி எமது முன்னால் பங்குத்தந்தை அருட்பணி மகிமைதாஸ், CRS அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருப்பலி முடிவில் அன்னதானம் வழங்கப்பட்டு, எமது திருவிழாவினை சிறப்பிக்கும் முகமாக அன்று மாலை கிராமிய விளையாட்டுகளும் டொம்போலா நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது
திருவிழா சிறப்புற ஒத்துழைப்பு வழங்கிய குருக்கள் அருட் சகோதர சகோதரிகள் எமது பங்கு மக்கள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்👏
எமது பங்கின் பாதுகாவலராம் புனித நிக்கோலாஸ் முனிந்திரரின் பரிந்துரை ஜெபம் வழியாக இறை ஆசீர் அனைவரோடும் தங்குவதாக 🙌🙌🙌