06/06/2023
🌹அந்தோணியாரின் அழியாத நாக்கு🌹
🌹அந்தோணியார் இறந்த 32-ம் ஆண்டில் அவரது திருவுடலை முதலில் வைக்கப்பட்ட இடத்திலிருந்து எடுத்துக்கொண்டு போய் , புதிதாக கட்டப்பட்டிருந்த ஆலயத்தில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது . அப்போது பிரான்சிஸ்கன் சபையின் பெரிய மேலாளராக இருந்த தூய பொனவேந்தர் இச்சடங்கை நிறைவேற்றி வைக்க உரோமையிலிருந்து பதுவைக்கு அனுப்பப்பட்டிருந்தார் .
🌹குறிப்பிட்ட நேரத்தில் அங்குக் கூடியிருந்த மக்கள் மத்தியில் அந்தோணியாரின் கல்லறை திறக்கப்பட்டது. அவரது உடல் மண்ணோடு மண்ணாய் மக்கிப்போயிருந்தாலும் நாக்கு மட்டும் அழியாமல் உயிருள்ளநாவு போல ஈரப்பதத்துடன் காணப்பட்டது.
🌹 குருவானவராக பணி புரிந்த அந்தோனியார் வாழும் நாள் முழுவதுமே கடவுளுடைய நற்செய்தியை பறைசாற்றி வந்தார். ஆகவே கடவுளைப் புகழ்ந்த அந்தோனியாரின் நாவை கடவுள் மாட்சிப்படுத்தினார். அந்தோனியார் வாழும் போதே பல புதுமைகள் செய்யும் வரத்தை கடவுளிடமிருந்து பெற்றார்.
🌹அந்தோனியார் சிறுவனாக இருக்கும் போதே சிறுவனான சாமுவேலை இறைவன் அழைத்தது போல அந்தோனியாரையும் தன்னுடைய பணிக்கென தேர்ந்து கொண்டார். கடவுளின் திட்டங்களை யாரால் புரிந்து கொள்ள முடியும்.
🌹 இன்றும் புனிதரின் பரிந்துரை இறைவன் சந்நிதியில் வல்லமையுடையதாக இருக்கின்றது அதற்குச் சான்றாக இருப்பதே அவருடைய அழியாத நாவு🌹🙏🌹🙏
🌹கோடியற்புதரே எம் எல்லோருக்காகவும் வேண்டிக்கொள்ளும் 🌹