25/10/2020
ஆசாதாரணமான சூழ்நிலை காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதித்தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய இளைஞர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் இன்று (25.10.2020) காலை 9.00 மணியிலிருந்து பி.ப 1.00 மணிவரை சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி புனித லிகோரியார் ஆலயத்தின் குழந்தை இயேசு முன்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. இதில்
34 குருதிக்கொடையாளர்கள் குருதிக்கொடை வழங்கி உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.