Kannkai Amman Kovil

Kannkai Amman Kovil temple in East Srilanka

With Arayampathy – I just got recognised as one of their top fans! 🎉
27/05/2026

With Arayampathy – I just got recognised as one of their top fans! 🎉

19/05/2026

அலங்காரப் பெண்ணேகற் பழியாத பெண்ணே
சின்னப்பெண் ணேயழகு செட்டிப்பெண் ணேயெங்கள்
தெய்வப்பெண் ணேசிந் தாமணிப் பெண்ணே
வன்னப்பெண் ணேகோவ லற்கினிய பெண்ணே
மானாகர் மகளாய் வளர்ந்ததொரு பெண்ணே
சொர்ணப்பெண் ணேகண் ணகைப்பெண்ணே யென்று
துரைராசர் தொழவந்த துய்யபெண் ணரசே.
வரபத்திர காளியென் றாடுமா காளி
மகமாயி யீசுபரி வல்லமைசெய் சத்தி
கரமுத் தலைச்சி சூலி கபாலி
களங்கற்ற பொன்னி விளங்குற்ற கன்னி
வரமுற்ற நரசிங்கி ஜெயவீர பத்தினி
வடுகிமா தங்கியென வந்ததிரி சூலி
உரமுற்ற புகழ்முத்து மாரியுப காரி
வராகியா னந்தியென வந்தபத் தினியே.
துர்க்கை பிடாரி மிடாரி கடல்நாச்சி
சோதிசிவ மங்கலி சுவாதிதிரு நீலி
முக்கண்ணி காடேறி யுச்சியுரு மத்தி
முன்னோடி பின்னோடி மோகனக் கன்னி|
அக்கினிக் கன்னிபொன் னம்மானைக் கன்னி
அன்னவூஞ் சற்கன்னி ஆலாத்திக் கன்னி
திக்குத்திக் கெட்டுநவ சக்திகள்வ ணங்கவரு
சேனாபதிப் பத்தி னிக்கன்னி நீயே

18/05/2026

உவகை கொள்ளப் பறையோசை, நிறைவு கொள்ள உடுக்கோசை, உனக்கெனவே ஒலித்திருக்கோம் — வாருமம்மா! உன் வரவை காத்திருக்கிறோம் — வாருமம்மா! மேலான வேல்விழியாள், பாலாறும் மென்மொழியாள், பரிவான கண்ணகியே — வாருமம்மா! மேலான வேல்விழியாள், பாலாறும் மென்மொழியாள், பரிவான கண்ணகியே — வாருமம்மா! பேழையுள் அமர்ந்தவளே, காரிகை கண்ணகியே, ஆதிசக்தி அபிராமி — வாருமம்மா!

16/05/2026

அண்டங்கள் அனைத்தும் அழகுற அமைத்து
அசைவுறச் செய்தவளே
ஆதிசங்கரரின் பாதியே தாயே
ஜோதிஸ்வரூபிணியே

அம்புஜலோசனி அகிலாண்டேஸ்வரி
அபிராம சுந்தரியே
அருளாட்சி செய்திட பேழையுள் அமர்ந்த
ஆரையம்பதி கண்ணகியே

கமலாம்பிகையே கருமாரித் தாயே
கௌரி மனோகரியே
கற்பகாம்பாளே காமாட்சி அம்மையே
காளி மகேஸ்வரி அம்பிகையே

ஆதிகாரணி அன்னபூரணி
அதிரூப சுந்தரியே
புலவன் நாகனின் புகழோங்க வைத்த
ஆரையம்பதி கண்ணகியே

#கண்ணகை #ஆரையம்பதி

14/05/2026

மேலான வேல் விழியாள்
பாலாறு மென்மொழியாள்
பரிவான கண்ணகையே வாருமம்மா

மேலான வேல் விழியாள்
பாலாறு மென்மொழியாள்
பரிவான கண்ணகையே வாருமம்மா

எங்கள் ஆரையம்பதி கண்ணகையே
வாருமம்மா

#கண்ணகை #ஆரையம்பதி

12/05/2026

உணர்ந்துதான் அருள்புரியும் அன்னையரும் நீயே
உத்தமர்கள் மதிக்கின்ற தெய்வமும் நீயே
கணக்கற்ற செல்வங்கள் தருபவளும் நீயே
கதியற்ற வாழ்வதனைக் காத்தவளும் நீயே

கணக்கில்லா மேன்மையதை அளித்தவளும் நீயே
பேழையதில் வீற்றிருந்து அருள்பவளும் நீயே
சுணக்கமின்றி எமைக் காக்கும் சுந்தரியும் நீயே
ஆரையம்பதியிலுறை கண்ணகித் தாயே

கண்ணகியாய் மாங்கனியில் வந்துதித்தாயே
கற்புடைய பத்தினியாய் துலங்கி நின்றாயே
மண்ணுள்ளோர் நலம் பெறவே அருளளித்தாயே
மக்கள் மனை செழிக்கவோ விளங்கி நின்றாயே

விண்ணுலகோர் பேற்றிடவே வாழ்ந்து வந்தாயே
விடிவெள்ளியாகவே பறந்து நின்றாயே
உண்மைநெறி செழிக்கவே அறம் வளர்த்தாயே
ஆரையம்பதியிலுறை கண்ணகித் தாயே

#கண்ணகை #ஆரையம்பதி

11/05/2026

கண்ணகித்தாயாக வந்தவளும் நீயே
கற்புநெறி தவறாத பத்தினியும் நீயே
உண்மை செரூபமாய் நின்றவளும் நீயே
உத்தமியே பத்தினியே காத்திடுவாள் நீயே

கண்ணகியாய் எங்களையும் காப்பதும் நீயே
கண்கண்ட தெய்வமாய் விளங்குவதும் நீயே
பணபுசெறி மக்கள் வாழ் ஆரையம் பதியில்
பக்திநெறி தெய்வமாதாய் விளங்குவதும் நீயே

Address

Old Road, Arayampathy
Batticaloa
30150

Alerts

Be the first to know and let us send you an email when Kannkai Amman Kovil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category