ஆரையம்பதி வீரமாகாளி அம்மன்

ஆரையம்பதி வீரமாகாளி அம்மன் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ஆரையம்பதி வீரமாகாளி அம்மன், Religious organisation, காளி கோவில் வீதி , ஆரையம்பதி, Batticaloa.

12/08/2022

தீ மிதிப்பு - 11.08.2022

ஜெய் வீரம்மா காளி
21/07/2018

ஜெய் வீரம்மா காளி

03/08/2017

தாயாரின் மூன்றாம் நாள் மாலைச் சடங்கு.

01/08/2017

கதவு திறக்கும் நிகழ்வு

28/10/2016

புத்தர் ஒரு கிராமத்தில் தங்கியிருந்தார். அப்போது அவரைப் பார்ப்பதற்கு ஒரு இளைஞன் வந்தான். அவனுக்கு வயது இருபத்தெட்டு இருக்கும். அவனது கண்கள் கலங்கியிருந்தன. உடல் சோர்ந்து முகம் மிகவும் துயருற்றிருந்தது.
வெகு தொலைவு நடந்து வந்த அவன், புத்தரைப் பார்த்த அக்கணமே கதறி அழுதான். அவன் அழுது முடிக்கும் வரை பொறுத்திருந்த புத்தர் கனிவாகக் கேட்டார்:
,
“”சகோதரா, ஏன் இப்படிக் கண்ணீர் சிந்துகிறாய்? உனக்கு ஏற்பட்ட பிரச்னையை என்னிடம் சொல். என்னிடம் பகிர்ந்துகொள்வது உன் மனதுக்குச் சற்று ஆறுதலாக இருக்கும்.”
,
இளைஞன் தயங்கித் தயங்கிச் சொன்னான்:
“”பகவானே, என் வாழ்க்கையில் நான் எல்லையற்ற துன்பங்களை அனுபவித்து வருகிறேன். எடுத்த எதிலும் தோல்வி. தாங்க முடியாத துயரம். ஆதரவுக்கென்று எனக்கு யாருமில்லை. என் மனது மிகவும் பலவீனமாகப்போய்விட்டது. நான் எப்படி இந்த உலகத்தில் வாழ்வது. எனக்கு ஒரு வழி சொல்லுங்கள். நான் உங்களைப் பார்த்து முறையிடத்தான் பல மைல் தூரம் நடந்து வருகிறேன்.”
,
புத்தர் அன்புடன் புன்னகைத்தார். அவன் தலையை வருடிக் கூர்ந்து பார்த்தார். பிறகு அவன் கையில் தண்ணீர்க் குவளையைக் கொடுத்தார். பிறகு உப்பையும் கொடுத்து விட்டுச் சொன்னார்: “”சகோதரா, இந்தச் குவளையில் உப்பிட்டுக் கலக்கி அருந்து.”
,
அவன் உப்பைக் குவளையில் இட்டுக் கலக்கி அருந்திப் பார்த்தான். இரண்டு மிடறு குடிப்பதற்குள் அவன் முகம் கோணியது. மேற்கொண்டு குடிக்க முடியாமல் அப்படியே கீழே வைத்துவிட்டுச்சொன்னான்:
“”என்னால் இந்தத் தண்ணீரைக் குடிக்க முடியவில்லை பகவானே. மிகவும் கரிக்கிறது.”
,
“”சரி. முடியவில்லை என்றால் நீ குடிக்க வேண்டாம். விட்டுவிடு” என்ற புத்தர் மீண்டும் இதோ இப்போதும் அதே அளவு உப்பைத் தருகிறேன். இதை நீ எதிரில் இருக்கும் அதோ அந்தக் குளத்தில் கரைத்துவிடு!”
,
புத்தர் சொன்னபடியே அவன் அந்த உப்பை எதிரிலிருந்த குளத்தில் கரைத்தான். கரையில் நின்று பார்த்த புத்தர் சொன்னார்:
“”இப்போது அந்தக் குளத்து நீரைக் குடித்துப் பார்.”
,
உப்புக் கரைக்கப்பட்டபோதும் குளத்து நீரில் உப்பின் சுவை கொஞ்சம்கூடத் தெரியவில்லை. அந்த இளைஞன் போதுமான அளவு நீர் குடித்துவிட்டுக் கரைக்கு வந்தான். “”எதற்காக உப்பைக் கரைத்துக் குடிக்கச் சொன்னீர்கள் என்று
இளைஞனுக்கு ஒன்றும் புரியவில்லை. புத்தரைக் குழப்பத்துடன் பார்த்தான். தொடர்ந்து சொன்னார் புத்தர்:
“”நீ சிறிய குவளையில் இருந்த நீரிலும், பிறகு இந்தக் குளத்து நீரிலும் கரைத்தது ஒரே அளவான உப்புதான். ஆனால் சிறிய குவளையில் தண்ணீர் கொஞ்சம்தான் இருந்தது. அதனால்தான் கரிப்புச் சுவை அதிகமாக இருந்தது. எனவே உன்னால் தண்ணீரைக் குடிக்க முடியவில்லை. ஆனால் இதே உப்பு குளத்து நீரில் கரைக்கப்பட்டிருந்தாலும், அந்த நீரில் உப்பின் சுவை கொஞ்சம்கூடத் தெரியவில்லை அல்லவா. ஏனென்றால் சிறு குவளையில் இருந்த நீரைவிட எண்ணற்ற மடங்கு அதிகமான நீர் குளத்தில் இருக்கிறது.”
நம் துன்ப துயரங்கள் என்பவை உப்பைப்போலத்தான். இவை வாழ்க்கை நெடுகிலும் வந்துகொண்டே இருக்கும். இவற்றைத் தவிர்க்கவே முடியாது. ஆனால் நம்மால் நம் மனதை விசாலமாக்க முடியும். இப்போது உன் மனது அந்தச் சிறியகுவளையைப் போல் தான் இருக்கிறது. அதனால்தான் வாழ்க்கைச் சிரமங்கள் உனக்கு இந்தளவு துயரமளிக்கின்றன. நீ நிறைய அறிவும் அனுபவங்களும் பெற்று உன் மனதைப் பெரிதாக்கு. அதை வலுப்படுத்து. அப்போது உன் துயரங்கள் குளத்தில் கரைக்கப்பட்ட உப்பைப்போலக் காணாமல்போய்விடும். அந்தத் தெளிந்த நிலையில்தான் புதிய வழிகள் புலனாகும். அவ்வழிகளில் நீ உயர்வடைவாய்.”
,,,,
புரிந்துகொண்ட இளைஞன் புத்தரின் பாதங்களைத் தொட்டு வணங்கி மகிழ்ச்சியாகத் திரும்பிச் சென்றான்.

19/08/2016

தியானம் செய்யும் முறை !

தியானம் செய்ய வேண்டுமானால் கண்ணை மூடிக் கொண்டு தியானம் செய்யக் கூடாது.கண்ணை திறந்து கொண்டுதான் செய்ய வேண்டும் நம் வீட்டில் தனியாக ஒரு அரை இருக்க வேண்டும் அந்த அறையில் நான்கு சதுரம் உள்ள தகரக் கண்ணாடிக் கூண்டு விளக்கு வைக்க வேண்டும் அதன் மத்தியில் ஒரு அகல் விளக்கோ அல்லது உலோகத்தால் செய்த விளக்கோ வைக்க வேண்டும் அதில் நல்ல எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி சிறிய திரிப் போட்டு தீபம் ஏற்ற வேண்டும் ,அதற்கு முன்னாடி நாம் அமர்ந்து கொள்ள வேண்டும் .அந்த விளக்கின் தீப ஒளியை இடை விடாது கண்கள் வழியாக பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

நம்மால் எவ்வளவு நேரம் பார்க்க முடியுமோ அவ்வளவு நேரம் பார்க்க வேண்டும் இதற்கு நேரம் காலம் என்பது கிடையாது நேரம் கிடைக்கும் போதெல்லாம் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம் .இதனால் என்ன பயன் என்பதை பார்ப்போம் .
நம் உடம்பின் ஐம புலன்களில் முக்கியமானது முதன்மையானது கண்களாகும் கண்களின் வழியாகத்தான் நாம் உலகில் உள்ள அனைத்தையும் பார்க்கிறோம் பார்க்கும் அனைத்தும் மனதில் பதிவாகிறது .மனத்தில் பதிவானது உயிரில் பதிவாகின்றது.உயிரில் பதிவானது அன்மாவில் பதிவாகின்றது.அவைதான் ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகளாகும்.

கண்கள் எங்கு செல்கிறதோ அங்கு மனமும் செல்லும் கண்களில் பார்க்காதது மனதில் பதிவாகாது.அதனால் மனதை அடக்க வேண்டுமானால் கண்கள் வழியாகத்தான் அடக்க முடியும் .
கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்தால், தேவை இல்லாத கற்பனைகளும் தேவை இல்லாத வெளி சிந்தனைகளும் தோன்றி மனம் அலைபாயுமே தவிர மனம் அடங்காது ,மனம் என்பது ஒரு பேய் குரங்கு அதை அடக்க முடியாது ஒளியின் வழியாகத்தான் அடக்க முடியும் அதை கண்கலால்தான் அடக்க முடியுமே தவிர, வேறு மாறுபட்ட வழிகள் எல்லாம் பொய்யான மாயா ஜாலங்களாகும்.

ஆதலால் கண்கள் உருவம் அற்ற, ஒளியை பார்த்து தியானம் செய்ய வேண்டும் .கண்களும் ஒளி-- ,தீபமும் ஒளி --இரண்டும் ஒளியாக இருப்பதால் ஜீவனும் ஒளி --ஆன்மாவும் ஒளியாகும்--,நாம் பிறந்ததில் இருந்து கண்கள் வழியாகப் பார்த்து , பார்த்த அனைத்தும் ஆன்மாவில் பதிவாகி உள்ளது .அந்த பதிவுதான் நினைவு அலைகளாக நமக்கு துன்பமும் துயமும் அச்சமும்,பயமும் தந்து கொண்டே வருகிறது .அந்த பதிவுகளை நீக்கினால் மட்டுமே மனம் அமைதி பெரும்
அந்த பதிவுகளை அகற்ற தீப ஒளி தியானம் தான் மிகவும் முக்கியமானதாகும் அப்படியே தினமும் தீபத்தை பார்த்துக் கொண்டு வந்தால் அந்த தீப ஒளி என்ற உருவமும் மறைந்து பின் புருவ மத்தியில் உள்ள ஆன்ம ஒளியைக காணும் செயலுக்கு அதே கண்கள் வந்து விடும்---பின் .உருவம் கரைந்து அருவமாகும். .துவைதமாக இருந்தால் அத்துவைதம் தானே ஆகும் .எப்படி எனில் பார்க்கும் தான் கெடுவது அத்வைதம் ,பார்க்கப் படும் பொருளும் கெடுவது அதீதம் இதுதான் சத்தியமான உண்மையாகும்.

மலம ஒழிப்பு என்பார்கள் அந்த மலத்தை ஒழிப்பதற்கு குரு தீட்சை கொடுப்பதாக சொல்லுவார்கள் மலம என்பது யாதெனில் ஆணவம் மாயை கன்மம் மாமாயை பெருமாயை என்னும் ஐந்து மலங்களாகும்,அதற்கு மலம ஒழிப்பு என்பார்கள் தீட்சை என்பது யாதெனில் தீ+ட்சை என்பது மலம் ஒழிப்பு என்பது ஒழிவு அதற்கு மலம ஒழிப்பு என்று பெயராகும் பலபேர் விபரம் தெரியாமல் நிறைய பணம் கட்டி தேவை இல்லாமல் தியானம் யோகம் தவம் போன்ற தவறான வழிகளில் சென்று நேரத்தையும்,பணத்தையும் வீண் விரையம் செய்து கொண்டு வருகிறார்கள் அப்படி செய்வது அறியாமையாகும் அறியாத மக்களை ஏமாற்ற நிறைய அமைப்புகள் உருவாகி விட்டது
அறியாமை என்னும் மலத்தை வேறு யாராலும் ஒழிக்க முடியாது அவரவர்கள் ஆன்மாவில் பதிவானதை அவரவர்களே தான் ஒழிக்கவேண்டும் ,அழிக்க வேண்டும் வேறு ஒருவரால் நீக்க முடியாது என்பதை அறிவால்அறிந்து கொள்ள வேண்டும்.வள்ளல்பெருமான் பாடிவைத்துள்ள பாடல்.

கண்ணில கலந்தான் கருத்தில் கலந்தான் என்
எண்ணில் கலந்தே இருக்கின்றான் .
கையற விலாது நடுக கண் புருவ பூட்டு
கண்டு களி கொண்டு திறந்து உண்டு நடு நாட்டு .

வள்ளலார் பாட்டு ,
மேலே சொல்லியபடி செய்து வாருங்கள் உங்களுக்கே அனுபவம் தானே கிடைக்கும்.

மகாவிஷ்ணுவின் தேவியான லட்சுமி தேவியைக் குறித்துச் செய்யப்படுவதே வரலட்சுமி விரதமாகும். விஷ்ணு என்பதற்கு எங்கும் வியாபித்த...
12/08/2016

மகாவிஷ்ணுவின் தேவியான லட்சுமி தேவியைக் குறித்துச் செய்யப்படுவதே வரலட்சுமி விரதமாகும். விஷ்ணு என்பதற்கு எங்கும் வியாபித்திருப்பவர் என்று பொருள். லக்ஷ்மம் என்றால் குறிப்பு அல்லது அடையாளம் என்று பொருள். விஷ்ணு பகவான் தான் எங்கும் நிறைந் துள்ளதை விளக்க, உலகிலுள்ள அழகுகள் அனைத்தையும் ஒன்றாக்கி அமைத்துள்ள அடையாளமே மகாலட்சுமி ஆகும்.

ஸ்ரீ(செல்வம்), பூ(பூமி), சரஸ்வதி(கல்வி), ப்ரீதி(அன்பு), கீர்த்தி(புகழ்), சாந்தி(அமைதி), துஷ்டி(மகிழ்ச்சி), புஷ்டி(பலம்) ஆகிய எட்டு சக்திகளும் அஷ்ட லட்சுமிகள் என்று அழைக் கப்படுகிறார்கள். அஷ்ட லட்சுமிகளும் திருமாலிடம் அடைக்கலம் பெற்றிருப்பதால் அவரை லட்சுமிபதி என அழைப்பர். இந்த சக்தி களையே லட்சுமியாக உருவகித்து வழிபடுகிறார் கள். இந்த சக்திகளின் மூலமாகத்தான் கல்வி, செல்வம், ஆரோக்கியம் உள்ளிட்ட அனைத்து வரங்களும் பெறப்படுகின்றன.

சிரவண மாதம் எனப்படும் ஆடி அல்லது ஆவணி மாதத்தில், பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. சுமங்கலிகள் அனுஷ் டிக்க வேண்டிய சிறப்பான விரதம் இது. இதைச் செய்வதன் மூலம் சுமங்கலித்துவம் வளரும்; குடும்ப நலன் பெருகும். கன்னிப் பெண்கள் இவ்விரதத்தை மேற்கொள்வதன் மூலம் சிறப் பான குடும்ப வாழ்க்கை அமையப் பெறுவர்.

பூஜைக்கு முதல்நாள் வீட்டைப் பெருக்கி மெழுகி, மாக்கோலமிட்டு செம்மண் பூச வேண்டும். வாசற்படிக்கு மஞ்சள், குங்குமப் பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும். மாக்கோலமிட்டு செம்மண் இட்ட ஒரு பலகையின் மேல் தலைவாழை இலை வைத்து, அதில் சிறிது அரிசியைப் பரப்பி, அதன் மேல் அம்மன் கலசத்தை வைப்பார்கள். சிலர் சிறு மண்டபம் அமைத்து அதில் கலசம் வைத்துப் பூஜை செய்வார்கள்.
கலசத்தில் அரிசி அல்லது தண்ணீரை நிரப்பி, மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து, சந்தனம், மலர் ஆகியவற்றால் அலங்கரித்து, கலசத்தின்மேல் தேவியின் பிரதிமையை வைத்துப் பூஜை செய்வர். ஒன்பது முடிச்சுடைய மங்களகரமான மஞ்சள் கயிற்றைப் பூஜையில் வைத்து வழிபட்ட பின்னர், அதை வலது மணிக்கட்டில் கட்டிக் கொள்ள வேண்டும்.

வரலட்சுமி விரதம் பற்றிய புராணக் கதை ஒன்றைக் காண்போம்.
பத்ரசிவன் என்ற மன்னன் சிறந்த விஷ்ணு பக்தன். அவன் மனைவி கரசந்திரிகா. இவர் களது ஒரே மகள் சியாமபாலா. அவளைத் திருமணம் செய்து கொடுத்தபின் தாய் துயருற்றாள். அவளது கவலையைத் தீர்த்து அவளுக்கு ஒரு ஆண் மகவு பிறக்க அருள் செய்ய எண்ணினாள் மகாலட்சுமி. அதனால் வரலட்சுமி விரதம் பற்றி எடுத்துக்கூற வயதான சுமங்கலி வடிவில் அவளிடம் சென்றாள். ஆனால் வந்திருப்பது லட்சுமிதேவி என்று அறியாத கரசந்திரிகா அவளை அவமானப் படுத்தி அனுப்பி விட்டாள்.

அங்கிருந்து சியாமபாலாவிடம் சென்ற மகாலட்சுமி நடந்தவற்றைக் கூறி, தான் போனால் எல்லா யோகங்களும் அரண்மனையை விட்டுப் போய்விடும் என்று கூறினாள். தன் தாயின் தவறுக்காக வருந்தி மன்னிப்புக் கோரிய சியாமபாலா, வரலட்சுமி விரதத்தைப் பற்றிக் கேட்டறிந்து சிரத்தையுடன் அதைக் கடைப் பிடித்து வரத் தொடங்கினாள். அதன் பிறகு அவளுக்குச் சுபிட்சம் பொங்கிய அதே நேரத் தில் அவளது பெற்றோர் அனைத்து செல்வங் களையும் இழந்தனர்.
தன் பெற்றோரது வறுமையை அறிந்த சியாமபாலா ஒரு குடம் நிறைய பொற்காசுகளை அவர்களுக்கு அனுப்பி வைத்தாள். அக்குடத் தில் கரசந்திரிகா கை வைத்ததும் பொற்காசுகள் கரியாகி விட்டன. இதையறிந்த மகள் அந்த ஆண்டு தன் தாயுடன் வரலட்சுமி விரதம் மேற் கொண்டாள். விரதத்தின் மகிமையால் கர சந்திரிகா தன் முந்தையை சுபிட்ச நிலையை எய்தியதோடு ஆண் வாரிசும் பெற்றாள். வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள் அஷ்ட போக பாக்கியங்களைப் பெறுவார்கள் என்பதை இவ்வரலாறு எடுத்துரைக்கிறது.

விரத தினத்தன்று லட்சுமி துதி, லட்சுமி வரலாறு போன்றவற்றைச் சொல்லி தங்களை முழுமையாக வழிபாட்டில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அன்று மாலை சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து, பூஜை முடிந் ததும் மங்கலப் பொருட்களுடன் தட்சணையும் வைத்துக் கொடுத்து அனுப்ப வேண்டும்.

அனைத்து வளங்களையும் வாரி வழங்கும் வரலட்சுமியை வழிபட்டு நலம் பெறுவோம்.

07/08/2016

நம்மில்பலர் தெய்வ சிந்தனையே இல்லாமல் இருப்பதைக் காண்கிறோம். அதனால் என்ன பலன் என்று வாதம் செய்வோரும் உண்டு. சிலர் வாழ்நாள் முழுவதுமே அப்படி இருந்து விடுகிறார்கள். "புண்ணியம் செய்வார்க்குப் பூ உண்டு நீர் உண்டு" என்று திருமூலர் சொல்லியிருப்பதை நாம் இங்கு நினைவு படுத்திக் கொள்ளவேண்டும்.
-
புண்ணியம் செய்தவர்களுக்கே புண்ணிய மூர்த்தியாகிய சிவபெருமானுக்குப் பூக்களாலும், தூயநீராலும் ஆராதிக்கும் பாக்கியம் கிடைக்கும் என்று ஒரு பொருளும், சிவபுண்ணியத்தை வேண்டினால், பூக்களாலும் நீராலும் அவனை ஆராதித்தால் அவன் அருள் கிடைக்கும் என்றும் இரு விதமாகப் பொருள் கொள்ளலாம்.
-
சைவ சித்தாந்த வழியில் நின்று பார்க்கும்போது முதலில் சொன்ன பொருளே உயர்ந்ததாகத் தோன்றுகிறது. அதாவது, அவன் அருள் இருந்தால் மட்டுமே, பூவாலும் நீராலும் அவனை வழிபாட்டு அவனருளைப் பெற முடியும் என்று கொள்ளலாம். இதைத்தான், "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்று திருவாசகமும் கூறுகிறது.
-
முந்தைய பிறவிகளில் செய்த நல்வினைப் பயன்களால் இந்த நிலை ஏற்படுகிறது. பன்னாட்கள் அவனது நாமத்தை, நாக்குத் தழும்பு ஏற உச்சரிப்போர்க்கு சிவன் முன்னின்று அருளுவான் என்கிறார் அப்பர் பெருமான்.
-
இதில் நமது முயற்சியோ சாமர்த்தியமோ ஏது? "காண்பார் ஆர் கண் நுதலாய்க் காட்டாக்காலே" என்ற அப்பர் வாக்கு இதையே வலியுறுத்துகிறது. சில சமயங்களில் நமக்கு இறைவனின் ஞாபகம் வந்தபோதிலும் அது வந்த வேகத்திலேயே மறைந்து விடுவதையும் காண்கிறோம். அப்படியானால், ஒரு கண நேரம் அந்த சிந்தனையைத் தந்துவிட்டுப் பிறகு அதை அப்போதே மறக்கும்படி செய்வதும் அந்த பரம்பொருளின் செய்கையே அன்றி வேறு எதுவாக இருக்க முடியும் என்கிறார் அப்பரடிகள்.
-
ஒருபோதும் உன்னை நினைக்காமல் செய்கிறாய். ஒருக்கால் அவ்வாறு நினையப் புகுந்தால் அந்தக் கணமே மறக்கும் படியும் செய்து விடுகிறாய். அது மட்டுமல்ல. வேறு ஒன்றில் நாட்டம் வரும்படியும் செய்து விடுகிறாய். இவ்வாறு உன்னை எப்போதாவது கூட நினைக்க மாட்டாதவன் ஆகி, உன்னை எப்போதும் மறப்பவனாக ஆகிவிட்டேன். இருந்தாலும் உன் கருணையை என்னவென்று நான் சொல்வது? அற்பன் என் உள்ளத்துள் அளவில்லாத உன்னைத் தந்துவிட்டாயே! உனக்கு இனியவனாக ஆக்கி விட்டாயே! கல்லைப் பிசைந்து கனி ஆக்கி விட்டாயே! நின் கருணை வெள்ளத்தைக் காட்டினாயே! பண்டு செய்த பழ வினையின் பயனும் இது தானோ? நான் பெற்ற பேறு யார் பெற வல்லார்? இறைவா, உன் கருணைக்குப் பாத்திரனாக ஒருபோதும் இருக்கத் தகுதி அற்ற இவ்வெளியேனை ஆட்கொண்டது எக்காரணம் பற்றி? என்னை ஒப்பாரும் உள்ளார்களோ சொல்லுவாயாக.
-
இந்தப் பாடல் இறைவனின் ஐந்தொழில்களுள், காத்தல், அருளல், மறைத்தல் என்ற மூன்று தொழில்களைக் காட்டுவதாக அமைந்துள்ளது. அதாவது, அப்பர் பெருமானை அன்பால் ஆர்த்து அருள் நோக்கால் ஆண்டு கொண்டு சமண் நீக்கிக் காத்தான் இறைவன். தேவர்களுக்கும் அரியவனான அப்பெருமான் எளியவனாக முன் நின்று அருள் செய்தான். எப்படிப்பட்ட அருள் தெரியுமா? "இரவும் பகலும் பிரியாது வணங்கும்" பேரருள். பிழைத்தவை அத்தனையையும் பொறுத்து ஆண்டு கொண்டான். அதே நேரத்தில், இரங்காதவன் போல் தன்னை மறைத்துக் கொள்ளவும் செய்தான். இந்த கருணையைக் கண்ட திருநாவுக்கரசர், "இத்தனையும் எம்பரமோ?" என்று கசிந்து உருகுகின்றார். இந்த அருமையான பாடலை நாம் காண்போமா?
-
"நின்னை எப்போதும் நினையல் ஒட்டாய் நீ நினையப்புகில்
பின்னை அப்போதே மறப்பித்துப் பேர்த்து ஒன்று நாடுவித்தி
உன்னை எப்போதும் மறந்திட்டு உனக்கு இனிதாய் இருக்கும்
என்னை ஒப்பார் உளரோ சொல்லு வாழி இறையவனே."
-
#பொழிப்புரை: இறைவனே, உன்னைத் தொடர்ச்சியாக என்னால் நினைக்க முடியவில்லை. இந்த நிலைக்கு நீயே காரணம். உன்னையே நினைத்து இருக்கவேண்டும் என்று நான் முனைந்தாலும். அடுத்த கணமே, எனது நினைவை மாற்றி வேறு ஒரு பொருளை நாடுமாறு செய்கின்றாய். இவ்வாறு நான் உன்னை விட்டு விட்டு நினைத்தாலும், நீ எனக்கு மிகவும் இனியவனாக இருந்து என்னைப் பல துன்பங்களிலிருந்தும் காக்கின்றாய். உன்னை மறந்த போதிலும் உனது அன்பினைப் பெறுகின்ற என்னைப் போன்று இந்த உலகத்தில் வேறு எவரும் உளரோ, இறைவனே நீ தான் எனக்கு சொல்லவேண்டும்.
-
நன்றி : Sivapathasekaran ஐயா அவர்களுக்கு
-
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

அவ்வை பாட்டிநல்வழி உரைத்தாலும் தோன்றாது உணர்வுபூக்காமலே காய்க்கும் மரங்கள் உண்டு. அது போல சொல்லாமலேயே புரிந்து கொள்ளும் ...
03/08/2016

அவ்வை பாட்டி

நல்வழி உரைத்தாலும் தோன்றாது உணர்வு
பூக்காமலே காய்க்கும் மரங்கள் உண்டு. அது போல சொல்லாமலேயே புரிந்து கொள்ளும் மனிதர்களும் இருக்கிறார்கள். சில சமயம் நல்ல விதையை விதைத்தாலும், விதைத்த இடம் பழுதாக இருந்தால் செடி முளைக்காது. அது போல முட்டால்களிடமும், தீயவர்களிடமும் நல்லததை சொன்னாலும் அவர்களுக்கு மண்டையில் ஏறாது. அவர்கள் சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பார்கள்...நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று.

பாடல்
பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே-தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலுந் தோன்றா துணர்வு.

தீயவர்களை பார்த்து, அவர்களோடு பழகி, அவர்களை நல் வழிப் படுத்த நினைப்பவர்களுக்கும், அப்படி நினைப்பவர்களுக்கு துணை போபவர்களுக்கும் அவ்வை சொல்லும் அறிவுரை இது.

23/07/2016

*தமிழனின் சாதனை பட்டியல்கள்*...

பகிருங்கள் நண்பர்களே
நமது வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்...

பதாகைக்கு வரலாறு
தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு, வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு...!

*கல்லணை* :-

உலகிலுள்ள அணைகளுக்கு
முன்னோடியான கல்லணை
கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை,
கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டினான்.

***

*மாமல்லபுரம்* :-

கடற் சீற்றத்திற்கு இடையே,
கடற்கரையோரமாக 1400
ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும்
பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் நரசிம்ம பல்லவ மன்னனால்
உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள்.

மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில்
தூண்கள் செதுக்கப்பட்டன.

மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது.

***

*அங்கோர்வாட் கோயில்*:-

உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட்
என்ற இடத்தில் இக்கோயிலை
கட்டியுள்ளான்.

இன்று வரை உலகில்
கட்டப்பட்ட வழிபாட்டுத்
தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது.

திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை.

40 ஆண்டுகளில் இது கட்டி
முடிக்கப்பட்டுள்ளது.

இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும்.

இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும். இதை முழுமையாக
ஒளிப்படம் எடுக்க முடியும். இதன் முழு கட்டிடமும் அப்போது தான் பதிவாகும்.

***

*திருநள்ளாறு காரி ஈசன் கோயில்* :-

எந்த ஒரு செயற்கைகோளும்
தமிழ்நாடு அருகில் உள்ள
புதுச்சேரி திருநள்ளாறு கரி ஈசன் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது 3 வினாடிகள் செயலிழந்து
விடுகிறது.

அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்த வித
பாதிப்பும் ஏற்படுவதில்லை.

இதை பற்றி நாசா அறிவியலாளர்கள்
ஆராய்ந்தனர். முடிவு வியப்பை தந்தது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த
கோவிலின் மீது விழுந்து
கொண்டே இருக்கிறது.

இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த
கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும்.

விண்வெளியில் சுற்றி
கொண்டிருக்கும்
செயற்கைகோள்கள் இந்த
கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது செயலிழந்துவிடுகிறது. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு
எந்த விதபாதிப்பும்
ஏற்படுவதில்லை.

இன்றைய அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்களால் கண்டறியயப்படும்
காரியின் கதிர்வீச்சை, கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டுபிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி, கதிர்வீசுகள் மிகுதியாக விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனி பெயர்ச்சி
என்று அறிவிக்கும் தமிழர்களின் அறிவியல் திறமையை, என்ன
வென்று சொல்வது.

***

*கடல் நடுவே ராமேசுவரம்*:-

கடலுக்கு நடுவே உள்ள
ராமேசுவரம் தீவில் மலைகளோ
பாறைகளோ கிடையாது.

ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது. 1212 மிகப் பெரிய
தூண்கள், 590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை
மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க
முடியும். பெரும் பாறைகளை
பாம்பனிலிருந்து கடற்கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு
சென்றிருக்க முடியும் என்பது வியப்பை தருகிறது

***

*தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயில்*:-

கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு
கட்டினான் என்பது புரியாத புதிர்.

கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில்
கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது.

சுமார் 80 ஆயிரம் கிலோ
எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில்
நிறுவியிருக்க முடியும்.

பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம்
ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர்.

கோயில் முழுவதும் ஒரே
தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக
யுனேசுகா அறிவித்துள்ளது.

***

*தொல்காப்பியமும், திருக்குறளும்*:-

5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு
முன்னோடியாக விளங்குகிறது.

தமிழ் நாட்டின் எல்லைகளை
வரையறைத்து கூறியுள்ளது.

ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது.

பன்னெடுங்காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம்
என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக
இருக்கிறது.

2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள்
உலகின் 26 மொழிகளில்
வெளிவந்துள்ளது.

ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர். தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி அறிவு பெற்றவர்கள்
தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர்.

இது போன்ற சொற்செழுமை வாய்ந்த
நூல்களை பிறமொழிகளில் இயற்ற முடியமா?

தமிழர்கள் சிந்திக்க
வேண்டும் ?

***

*அணு* :-

அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை..அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை
அணுகலுமாமே"
-ஆசான் திருமூலர்
சித்தர்களின் அறிவியலின்படி
எண்ணிலாடங்கா கோடி அண்டங்கள்,
பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல
காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல்.

ஒரணுவை ஆயிரங்கூறாக்கினால்
கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு
என்று சொல்கிறார்கள்.

பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள்.

அந்தப் பரமணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட
பேரண்டங்களை இயக்கிக்
கொண்டிருக்கின்றது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள்.

அணுவை சுற்றி மின்
காந்தம் அமைத்திருப்பதை
கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள்.

அவ்வை பாட்டியும் அணுவைத்
துளைத்து................... என்று பாடி உள்ளார்.

***

*சித்தர்கள்*:-

சித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள்,
அறிவியலாளர்கள், மக்களை
நல்வழிப்படுத்தும் சான்றோர்கள்.

நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள்.

அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி
விட்டோம்.

தீராத நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு
உண்டு.

கடந்த ஆண்டு டெங்கு
காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறையே என தமிழக
அரசு அறிவித்த பொழுதே
தமிழர்கள் அதன் பயனை சிறப்பை முழுமையாக உணர்ந்தனர்.

இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள்
ஓலை சுவடிகளில் தங்களது தாய் மொழியான தமிழிலேயே எழுதி
வைத்துள்ளனர்.

***

*வானியல்அறிஞர்கள்*:-

பூமி உருண்டை என்றும்,
சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும்,
அதைத் தொடர்ந்து நிகழும்
கும்மிருட்டு, முழுநிலவு மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும்
அன்றே கணித்த வானியல்
வல்லுனர்கள் தமிழர்களே!

சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே
ஒன்பது கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின் மேல் கட்டப்பட்டுள்ள
துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படையாக கொண்டே
இருக்கும்.

தமிழர்கள் என்றோ
கண்டுபிடித்ததை மற்றவர்கள் இன்று கண்டறிந்து
கூறுவதை நாம் உயர்வாக
மதிக்கிறோம்.

*பூம்புகார் உலகின் தொன்மையான நகரம்*:-

9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட
கடற்கோளில் மூழ்கிய நகரம் பூம்புகார் ஆகும்.

கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும்.

அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளில் மூழ்கின.

பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா,
மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப்
பழமையானவை ஆகும்.

பூம்புகார் நகர் கடலில் மூழ்கியுள்ளதை
ஆங்கிலேயே அறிஞர் கிரகாம் குக் என்பவர் காணொளி, ஒளிபடச்
சான்றுகளுடன் உலக நாடுகளுக்கு நிரூபித்தார்.

அதில் மண் கல்லான
கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச்
சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள்,
வீட்டு முற்றங்கள் ஆகியவை
காணப்படுகின்றன.

***

*உலகை கட்டி ஆண்ட தமிழன்*:-

கடற் வழியே படை எடுத்து சென்று உலகை கட்டி ஆண்ட அருள்மொழித்தேவன்
அறிமுகப்படுதியதே உலகம் முழுவதும் சனநாயகம் என்று
போற்றி புகழும், மக்கள்
வாக்களித்து தலைவனை
தேர்ந்தெடுக்கும் குடவோலை முறையை அறிமுகப்படுத்தியவன்
பேரரசன் அருள் மொழித் தேவனே..

வெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் அம்மக்களை அடிமைபடுத்தாது
சிறப்பான ஆட்சி புரிந்து,
அம்மக்களை விடுதலையோடு வாழ
வைத்தவன் தமிழனே.

அத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க
நெறிகளோடு வாழ்ந்தவர்கள்
தமிழர்கள் என்பது நிரூபனமாகிறது.

இவ்வளவும் நமது பாட்டன்
முப்பாட்டனின் பெருமைகள் நாம்
இவற்றை பாதுகாப்பு அழியாமல்
காப்பாற்றினாலே போதும்.

நிறைய பகிருங்கள் நமது
வரலாற்றை நமக்கு அடுத்துவரும்
தலைமுறையினர் தெரிந்து
கொள்ளவும் நமது முன்னோர்கள்
எவ்வளவு சிறப்பான
வாழ்க்கையினை வாழ்ந்துள்ளார்கள்
என்பதை அறிய இது உதவும்.

நன்றி, வணக்கம்.

20.07.2016 - இறுதி நாளான தீ மிதிப்பு / அன்னதானம்
20/07/2016

20.07.2016 - இறுதி நாளான தீ மிதிப்பு / அன்னதானம்

Address

காளி கோவில் வீதி , ஆரையம்பதி
Batticaloa

Telephone

+94768918480

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஆரையம்பதி வீரமாகாளி அம்மன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share