St/john the baptist church Thalankudah. Batticaloa Diocese,Srilanka

St/john the baptist church Thalankudah. Batticaloa Diocese,Srilanka Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from St/john the baptist church Thalankudah. Batticaloa Diocese,Srilanka, Religious organisation, Thalankudah, Batticaloa.

12/03/2026
உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்களால் இன்று மார்ச் 06 திருநீற்றுப் புதன் என்று அழைக்கப்படும் தவக்காலத்தின் ஆரம்ப நாள் அ...
06/03/2019

உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்களால் இன்று மார்ச் 06 திருநீற்றுப் புதன் என்று அழைக்கப்படும் தவக்காலத்தின் ஆரம்ப நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இந்த திருநீற்றுப் புதன் வி பூதிப் புதன், சாம்பல் புதன் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றது.
இன்றைய நாளில் ஒரு சந்தியும் சுத்தபோசனமும் (மாமிச தவிர்ப்பு) அனுஷ்டிக்க கத்தோலிக்க திருச்சபை கட்டளையிட்டுள்ளது. சிறியவர்களும் நோயாளர்களும் முதியவர்களும் இந்தக் கட்டளையிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.இப்புதனன்று முதல் நாம் தவக்காலத்தில் நுழைகிறோம். இதனைத் தொடர்ந்து வரும் 40 நாட்களும் நமது செப, தவ , ஒறுத்தல் முயற்சிகளுக்காக நமக்கு கொடுக்கப்பட்ட காலமாக இந்த 40 நாட்களும் கருதப்படுகின்றது.

தவக்காலம் வசந்தத்தைக் கொண்டு வருவதற்கு முன்னதான காலமாக கருதப்படுகி;ன்றது.
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் இவ்வாண்டு வழங்கியுள்ள தவக்காலச் செய்தியின் ஆரம்ப வார்த்தைகள் இந்த எண்ணத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.
“திருஅவை முழுவதும் மறுமலர்ச்சி பெறும் காலம், தவக்காலம். தனி மனிதரும், குழுமங்களும் மறுமலர்ச்சி பெறும் காலம் இது. அனைத்திற்கும் மேலாக, ‘இதுவே அருள்நிறை காலம்’ (2 கொரி. 6:2)” என்று பரிசுத்த பாப்பரசர் தன் தவக்காலச் செய்தியை ஆரம்பித்துள்ளார்.
தமிழில் நாம் தவக்காலம் என்று அழைப்பதை, ஆங்கிலத்தில் Lent season என்று அழைக்கிறோம். Lenten (அல்லது, Lencten) என்ற வார்த்தை ஒரு Anglo Saxon வார்த்தை. அதன் பொருள் வசந்தம். வசந்த காலம், தவக்காலம் இரண்டையும் இணைப்பதே ஓர் அழகான எண்ணம். புதுமையான எண்ணம்.

வசந்த காலத்தை அனுபவிப்பதற்கு முன்னதாக நம்மில் பல மாற்றங்கள் நடைபெறவேண்டும். அதற்கான அர்ப்பண வாழ்வில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். அது நமக்கு கடினமாக இருக்கலாம். ஆனால் அந்த நாட்கள் நமக்காகவே கொடுக்கப்பட்டுள்ளன.

தவக்காலத்தில் நாம் கைக்கொள்ளும் நடைமுறை வாழ்க்கை முயற்சிகள் ஆன்மீக வழி நின்று நம்மை புதிய மனிதர்களாக மாற்றிக் கொள்வதற்கு நம்மை அழைத்துச் செல்கின்றது



பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்
வத்திக்கான்

24/06/2018
24/06/2018

Rev Fr. NIRMAL SOOSAIRAJH (JDH) அவர்களினால் நடத்தப்பட்ட வெஸ்பர் நற்கருணை ஆராதனை

24/06/2018

சனிக்கிழமை மாலை இடம்பெற்ற புனிதரின் திருச்சொரூப பவனி

23/06/2018 பொது நவநாள் திருப்பலியை ஒப்புகொடுத்து இனியதொரு மறையுரையை வழங்கிய தேற்றாத்தீவு பங்குத்தந்தை Rev Fr. NIRMAL SOO...
23/06/2018

23/06/2018 பொது நவநாள் திருப்பலியை ஒப்புகொடுத்து இனியதொரு மறையுரையை வழங்கிய தேற்றாத்தீவு பங்குத்தந்தை Rev Fr. NIRMAL SOOSAIRAJH (JDH) அவர்களுக்கு மனமார்ந்தநன்றிகளும்பாராட்டுக்களு

22/06/2018 இன்றைய நவநாள் திருப்பலியை ஒப்புகொடுத்து எமக்கு மறையுரை தந்தRev Fr jensan loyd அடிகளாருக்கு மனமார்ந்த நன்றிகள்...
22/06/2018

22/06/2018 இன்றைய நவநாள் திருப்பலியை ஒப்புகொடுத்து எமக்கு மறையுரை தந்த
Rev Fr jensan loyd அடிகளாருக்கு மனமார்ந்த நன்றிகள்..

22/06/2018
நவநாளை சிறப்பித்த புனித சவேரியார் அன்பியத்தில் உள்ள குடும்பங்கள் அனைத்தையும் எம் புனிதர் திருமுழுக்கு யோவான் ஆசீர்வாதத்த...
18/06/2018

நவநாளை சிறப்பித்த புனித சவேரியார் அன்பியத்தில் உள்ள குடும்பங்கள் அனைத்தையும் எம் புனிதர் திருமுழுக்கு யோவான் ஆசீர்வாதத்தால் நிரப்புவாராக அமென்.

18/06/2018 திங்கள்கிழமை இன்றைய நவநாளை நல்லமுறையில் நடாத்தி குடும்பம்-சமூக அக்கறை எனும் கருப்பொருளில் மறையுரையாற்றிய Rev ...
18/06/2018

18/06/2018 திங்கள்கிழமை இன்றைய நவநாளை நல்லமுறையில் நடாத்தி குடும்பம்-சமூக அக்கறை எனும் கருப்பொருளில் மறையுரையாற்றிய
Rev .fr. p jeevaraj அடிகளாருக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

எமது ஆலயத்தை புது பொலிவுடன் கட்டியெழுப்ப நண்பர்கள் ஆதரவாளர்கள் அனைவரும் தங்களால் இயன்ற நிதி உதவியை ஆலயத்தில் பங்குதந்தைய...
17/06/2018

எமது ஆலயத்தை புது பொலிவுடன் கட்டியெழுப்ப நண்பர்கள் ஆதரவாளர்கள் அனைவரும் தங்களால் இயன்ற நிதி உதவியை ஆலயத்தில் பங்குதந்தையிடமோ அல்லது கீழ் காணும் வங்கி கணக்கு இலக்கத்திலோ வைப்பிலிடலாம்.
கணக்கிலக்கம் :
M/S CHURCH BUILDING FUND
St/JOHN THE BAPTIST CHURCH,
THALANKUDAH,
BATTICALOA-30000
A/C NO : 77593135
BANK OF CEYLON
BATTICALOA.
தொடர்புகளுக்கு :
பங்குத்தந்தை,
புனித திருமுழுக்கு அருளப்பர் ஆலயம்,
தாளங்குடா,
மட்டக்களப்பு,
இலங்கை.பங்குத்தந்தை
Rev .Fr.ஸ்ரணிக்லோஸ் அடிகளார் .0773524016 .
தொலைபேசி இல:+940652246988.இறைவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்.

Address

Thalankudah
Batticaloa
30153

Telephone

+940652246988

Website

Alerts

Be the first to know and let us send you an email when St/john the baptist church Thalankudah. Batticaloa Diocese,Srilanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to St/john the baptist church Thalankudah. Batticaloa Diocese,Srilanka:

Share