18/07/2026
#அன்புள்ளம் கொண்ட அடியார்களே!
இவ்வருட இறுதியில் கும்பாபிஷேகம் காண உதவுங்கள்.. #
கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு நாவற்குடா பகுதியில் இன்றைக்கு 2000ம் வருடங்களுக்கு முன் நாகர் காலத்தில் அமைக்கப்பட்டதற்கான ஆதாரங்களை கொண்ட பழைமையான ஆலயம், சிவாலயமாக முதன் முறையாக இவ் வருட இறுதியில் திருக்குடமுழுக்கு காண திருப்பணிகள் நடைபெற்று வருகின்றது. இவ்வாலயத்தின் சிறப்பை மெருகூட்ட கருவறையினை சுற்றி காசி நர்மதா நதியில் எடுக்கப்பட்ட 108 பாணலிங்கங்களை பிரதிஷ்டை செய்து எமது ஆலயம் மிகச்சிறப்பானதும், கிழக்கில் 108 பாணலிங்கம் அமையப்பெறும் முதல் சிவாலயமாகவும் நிர்மாணிப்பதற்காக திட்டமிடப்பட்ட 108 பாணலிங்க பிரதிஷ்ட்டை உபயத்திற்காக ஏற்கனவே பல அடியார்கள் முன்பதிவுகளை செய்துள்ளனர், தற்போது எஞ்சியுள்ள பாணலிங்க பிரதிஷ்ட்டைகாக, விரும்பியவர்கள் முன்வந்து தங்களின் பெயரிலோ அல்லது தங்களின் அன்புக்குரியவரின் நினைவாகவோ செய்துகொள்ள முடியும். எனவே பாணலிங்கத்தினை பெற்றுத்தரவிரும்பும் சிவனடியார்கள் சிவன் ஆலய நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டு முன் பதிவுகளை செய்து கொள்ளவும்.
(+94 77 361 9230 / +94 77 387 6361)
மேலும் புராதன கோயிலை புனரமைத்து பூசைகள் நடைபெறச் செய்யும் மகத்தான பணியில் தாங்களும் இணைந்து பேறுபெறுங்கள். ஆலயத்தில் மீதமுள்ள திருப்பணி வேலைகளை விரைவில் முடிக்க அடியார்களின் உதவிகளை ஆலய திருப்பணிக் குழுவினர் நாடிநிற்கின்றனர். தங்களின் உதவிகளை நேரடியாக வழங்கவோ அல்லது வங்கி கணக்கில் வைப்பிலிடவோ முடியும்.
(சிவன் ஆலயம், இலங்கை வங்கி, மட்டக்களப்பு கிளை கணக்கிலக்கம் - 2887243)