St.Mary’s Cathedral - Batticaloa

St.Mary’s Cathedral - Batticaloa 1st Cathedral in Batticaloa - Sri Lanka Church

29/03/2026
27/03/2026
19.05.2025நமது மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் Rt.Rev.Dr.Joseph Ponnaih இறைபதம் அடைந்தார்.
19/05/2025

19.05.2025
நமது மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் Rt.Rev.Dr.Joseph Ponnaih இறைபதம் அடைந்தார்.

10/05/2025
“IN ILLO UNO UNUM”"அந்த ஒருவரில் நாம் ஒன்றாய் இருக்கிறோம்"Pope Leo XIV's coat of arms offers a clear reflection of his A...
10/05/2025

“IN ILLO UNO UNUM”
"அந்த ஒருவரில் நாம் ஒன்றாய் இருக்கிறோம்"

Pope Leo XIV's coat of arms offers a clear reflection of his Augustinian roots and the values he seeks to promote during his pontificate, particularly unity and communion within the Church.

The shield is divided diagonally into two sections. The upper half features a blue background with a white lily.

The lower half of the shield has a light background and displays an image that recalls the Order of Saint Augustine: a closed book with a heart pierced by an arrow. This is a direct reference to the conversion experience of Saint Augustine himself, who described his personal encounter with God’s Word using the phrase: “Vulnerasti cor meum verbo tuo” - “You have pierced my heart with your Word.”

Pope Leo XIV has also chosen a motto that reflects this Augustinian tradition: In Illo uno unum, which means “In the One, we are one.” The phrase is taken from Saint Augustine’s Exposition on Psalm 127, where he explains that “although we Christians are many, in the one Christ we are one.”

புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள (ஏறக்குறைய 70) 69 வயதுடைய கர்தினால் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரவோஸ்ட் அவர்கள் ...
09/05/2025

புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள (ஏறக்குறைய 70) 69 வயதுடைய கர்தினால் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரவோஸ்ட் அவர்கள் திருஅவையின் 267 ஆவது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
14ம் லியோ [14ம் சிங்கராயர்]

அகுஸ்தீன் சபையைச் சார்ந்த முதல் திருத்தந்தை என்னும் புகழ் பெற்ற திருத்தந்தை அவர்கள் பதினான்காம் லியோ என்னும் பெயரினை தனது பெயராக ஏற்றுள்ளார். மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குப் பின் திருஅவை பொறுப்பேற்கும் அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த இரண்டாவது திருத்தந்தையாவார். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வடக்குப் பகுதியில் பிறந்து தெற்கில் பணியாற்றிய பெருமைக்குரியவர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கல்லோ மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாகவும், திருப்பீட ஆயர்பேரவைக்கான தலைவராகவும், இலத்தீன் அமெரிக்காவிற்கான திருப்பீட ஆணையத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டவர்.

1955 -ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், சிகாகோவில் உள்ள இல்லினோய்ஸ் என்னுமிடத்தில் பிறந்தவர். இவரது தந்தை Louis Marius Prevost பிரெஞ்சு மற்றும் இத்தாலிய மொழி பேசும் வம்சாவளியைச் சார்ந்தவர். தாயார் Mildred Martínez இஸ்பானிய மொழி பேசும் வம்சாவளியைச் சார்ந்தவர். இவருக்கு Louis Martín மற்றும் John Joseph என்னும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.

தனது குழந்தைப் பருவத்தையும், இளமைப் பருவத்தையும் அமெரிக்காவில் கழித்த திருத்தந்தை அவர்கள், முதலில் புனித அகுஸ்தீன் சபையின் இளங்குருமடத்தில் கல்வி கற்றார். அதன்பின்னர், பென்சில்வேனியாவில் உள்ள வில்லானோவா பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். 1977 -ஆம் ஆண்டில் அப்பல்கலைக்கழகத்தில் கணிதத்திலும் தத்துவ இயலிலும் பட்டம் பெற்றார். அதே ஆண்டு செப்டம்பர் 1 ஆம் நாள் சிகாகோவில் உள்ள செயிண்ட் லூயிஸில் உள்ள அகுஸ்தீன் (OSA) துறவற இல்லத்தில் இணைந்து துறவறப் பயிற்சி பெற்றார். 1978-ஆம் ஆண்டு செப்டம்பர் 2, அன்று தனது முதல் வார்த்தைப்பாட்டினையும், 1981- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29, அன்று அவர் தனது நிரந்தர வார்த்தைப்பாட்டினையும் அளித்தார்.

சிகாகோவில் உள்ள கத்தோலிக்க இறையியல் ஒன்றியத்தில் இறையியலில் பட்டம் பெற்ற திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், தனது 27 ஆவது வயதில் உரோமில் உள்ள ஆஞ்சலிக்கம் திருப்பீடப் பல்கலைக்கழக்த்தில் திருஅவைச் சட்டம் பயில்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டார். பின் 1982 -ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் நாள், சாந்தா மோனிகாவின் அகுஸ்தினியானோ கல்லூரியில் பேராயர் Jean Jadot அவர்களால் குருத்துவ அருள்பொழிவு செய்யப்பட்டார்.

1984 - ஆம் ஆண்டு முதுகலைக் கல்வியைப் பெற்ற திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், அடுத்த ஆண்டு (1985) தனது முனைவர் பட்ட ஆய்வறிக்கையைத் தயாரிக்கும்போது, பெருவின் பியூராவில் உள்ள சுலுகானாஸிற்கு அகுஸ்தீன் சபை மறைப்பணிக்காக (1985-1986) அனுப்பப்பட்டார். 1987 -ஆம் ஆண்டில், தனது முனைவர் பட்ட ஆய்வறிக்கையை சமர்ப்பித்த திருத்தந்தை அவர்கள், இல்லினோய்ஸின் ஒலிம்பியா ஃபீல்ட்ஸில் உள்ள "நல் ஆலோசனை அன்னை" என்ற அகஸ்டினியன் மறைமாநிலத்தின் இறைஅழைத்தல் இயக்குநராகவும், மறைப்பணி இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார்.

1999 -ஆம் ஆண்டில் அவர் சிகாகோவின் அகுஸ்தீன் சபை மறை மாநிலத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் அகுஸ்தீன் சபைத்தலைவராக முதன்முறை தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் 2007- ஆம் ஆண்டு இரண்டாவது முறையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2013-ஆம் ஆண்டு தனது சிகாகோ மறைமாநிலத்திற்குத் திரும்பிய திருத்தந்தை அவர்கள், சபையின் முதல் ஆலோசகர், இறைஅழைத்தல் இயக்குநர் என பல பொறுப்புக்களை ஏற்றார். 2014 -ஆம் ஆண்டு நவம்பர் 3 -ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் பெருவின் சிக்லாயோ மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகியாகவும், அதே நேரத்தில் சுஃபார் மறைமாவட்டத்தின் பட்டம்சார் ஆயராகவும் நியமிக்கப்பட்டார்.

அதே ஆண்டு டிசம்பர் 12 ஆம் நாள் குவாதலூப்பே அன்னை மரியா விழாவனறு அன்னை மரியா பேராலயத்தில் ஆயராக அருள்பொழிவு செய்யப்பட்டார்.

2015 செப்டம்பர் 26, அன்று, சிக்லாயோ மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டு, 2018 மார்ச் மாதம் பெரு மறைமாவட்ட ஆயர் மாநாட்டின் இரண்டாவது துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், அதில் அவர் பொருளாதார கவுன்சிலின் உறுப்பினராகவும் கலாச்சாரம் மற்றும் கல்வி ஆணையத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

திருஅவையின் புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

Pope Leo XIV greets the world for the first time to grant his Urbi et Orbi blessing. Cardinal Robert Francis Prevost was...
08/05/2025

Pope Leo XIV greets the world for the first time to grant his Urbi et Orbi blessing. Cardinal Robert Francis Prevost was elected as the 267th Successor of Peter by the 133 Cardinal electors on Thursday, May 8th 2025.

நமது கத்தோலிக்கத் திருஅவையின் புதிய திருத்தந்தை பதினான்காம் சிங்கராயர் அவர்களை வாழ்த்தி மகிழ்வதோடு, அவரின் பணி சிறக்கவும் செபிக்கிறோம்.

- அறிவித்தல் - வணக்க மாதத்தை (வைகாசி) முன்னிட்டு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில், திங்கட்கிழமை 05.05.2025 முதல் வ...
05/05/2025

- அறிவித்தல் -
வணக்க மாதத்தை (வைகாசி) முன்னிட்டு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில், திங்கட்கிழமை 05.05.2025 முதல் வார நாட்களில் காலை 6 மணி திருப்பலி இடம் பெறாது. மாறாக மாலை 5 மணிக்கு திருச் செபமாலையும் அதனைத் தொடர்ந்து திருப்பலியும் வார நாட்களில் இடம் பெறும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழமை போன்று திருப்பலி இடம் பெறும் என்பதை அறிய தருகின்றோம்.

Address

Centeral Road
Batticaloa

Telephone

+94652222226

Website

Alerts

Be the first to know and let us send you an email when St.Mary’s Cathedral - Batticaloa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to St.Mary’s Cathedral - Batticaloa:

Share

Category