Thirukkovil Sri Sithira Velayutha Swami Kovil - திருக்கோவில்

  • Home
  • Sri Lanka
  • Ampara
  • Thirukkovil Sri Sithira Velayutha Swami Kovil - திருக்கோவில்

Thirukkovil Sri Sithira Velayutha Swami Kovil - திருக்கோவில் வேல் உண்டு வினை தீர்க்க மயில் உண்டு எமை காக்க !!

மெய்யானவனே ....மெய் அல்ல நீ மெய்யும் ஓர்நாள் கரைசேரஒலியும் ஓர்நாள் கரைசேரஒளியும் ஓர்நாள் கரைசேரஓசையும் ஓர்நாள் கரைசேரசுவ...
26/08/2026

மெய்யானவனே ....
மெய் அல்ல நீ
மெய்யும் ஓர்நாள் கரைசேர
ஒலியும் ஓர்நாள் கரைசேர
ஒளியும் ஓர்நாள் கரைசேர
ஓசையும் ஓர்நாள் கரைசேர
சுவாசமும் ஓர்நாள் கரைசேர
கரைசேரா கதியே
பஞ்ச பூதமல்ல நீ
பஞ்ச பூதமும் உன்அருளாளே
அருளுக்கு அருளான முருகா
என் உயிருக்குள் உயிரான முருகா
உண்டாக்கி
உருவாக்கி
ஒன்றாக்கி
ஒன்றிரண்டாக்கி
இரு பலவாகி
பலவற்றுள்
விதையாய்
விருட்சமமாய்
சூட்சமமாய்
அரசாளும் ஓதியப்பா
உன் பாதம் பணிந்தேன்

மகிழ்வுதர மலர்ந்தது மனம் இனிக்கும் இன்னாள்!

26/08/2026

"அலைகடல் ஓரத்தில்"
திருக்கோவில் சித்திர வேலன் புகழ் பாடும் கீர்த்தனை ❤️🦚❤️

"ஆதாயமும் கொடுத்து இன்பமும் தந்து உயர வைப்பவரே முருகா"ௐம் முருகா சரணம்🦚🐓💚🥀🙏
25/08/2026

"ஆதாயமும் கொடுத்து இன்பமும் தந்து உயர வைப்பவரே முருகா"

ௐம் முருகா சரணம்🦚🐓💚🥀🙏

ஓம் சரவணபவ ஓம்🙏
24/08/2026

ஓம் சரவணபவ ஓம்🙏

வா வா வா வா முருகையாவடிவே லழகா முருகையா!வா வா வா வா முருகையாவடிவே லழகா முருகையா!வேளுர் வளரும் முருகையாவேண்டும் வரங்கள் த...
23/08/2026

வா வா வா வா முருகையா
வடிவே லழகா முருகையா!
வா வா வா வா முருகையா
வடிவே லழகா முருகையா!

வேளுர் வளரும் முருகையா
வேண்டும் வரங்கள் தாருமையா!
போருர் வளரும் முருகையா உன்னைப்
போற்றி வாழ அருளையா!

வடபழனி வளரும் முருகையா நான்
வாழும் வகைதான் அருளையா!
வயலுார் வளரும் முருகையா உன்னை
வாழ்த்தி வாழ அருளையா!

கந்த கோட்டத்துக் கந்தையா நான்
களிப்புடன் வாழ அருளையா!
கதிர் காமத் துறை கந்தையா உன்
கழலடி வாழ்த்த அருளையா!

திருத்தணி வளரும் முருகையா நான்
தினமும் வாழ அருளையா!
திருச் செந்துார் வேல் முருகையா உன்
திருவருள் போற்ற அருளையா!

பழனி மலை வாழ் பரம் பொருளே உன்
பதமலர் பாட பணித்திடுவாய்!
பரம சிவன் திரு அருட் குமரா உன்னைப்
பரவித் துதித்திட அருள் புரிவாய்!

குமரமலை வாழ் குருபரனே என்
குறைகளை எல்லாம் தீர்ப்பவனே!
குருபரனே சிவ சண்முகனே என்
குடி முழுதாளும் குருபரனே!

வரங்களை எல்லாம் வழங்கிடுவாய் நல்ல
வளங்களை எல்லாம் தந்திடுவாய்!
வடிவேலைக் கையில் ஏந்திடுவாய் உயர்
வள்ளி தெய்வானையோடு உறைந்திடுவாய்!

திருமலை எல்லாம் உறைந்திடுவாய் உயர்
திருவேலைக் கையில் ஏந்திடுவாய்!
திருப் புகழ் தன்னைக் கேட்டிடுவாய் உயர்
திருவருள் மாரிபொழிந் திடுவாய்!

ஆனைமுகன் தனக் கிளையோனே அருள்
ஆறு முகந்தனை உடையோனே!
ஆறு படை வீடுடையோனே உயர்
ஆடும் மயில் மிசை வருவோனே!

வா வா வா வா முருகையா
வடிவே லழகா முருகையா!
வா வா வா வா முருகையா
வடிவே லழகா முருகையா

துன்பமதைத் தீர்த்துவைப்பான் முருகன்!
தூய வாழவைத் தரும் மால்மருகன்!

அழகான தமிழில் அழகா உன் அழகைஅழகாக நான் பாடவா?அழகே உன் வடிவின் அழகெல்லாம் எழுதஅழகான சொல் தேடவா?பேரழகா? உன் பேரழகா?திங்கள் ...
22/08/2026

அழகான தமிழில் அழகா உன் அழகை
அழகாக நான் பாடவா?
அழகே உன் வடிவின் அழகெல்லாம் எழுத
அழகான சொல் தேடவா?
பேரழகா? உன் பேரழகா?
திங்கள் முகத்தழகா? முகத்தழகா?
சிறு செவ்வாய்த் தேனழகா? தேனழகா
வெள்ளி வடிவேலழகா? ஞாயிறு கதிரழகா?
துள்ளும் வள்ளி மானழகா? தெய்வானை மயிலழகா?

தினை மாவும்
தெளி தேனும்
சந்தனமும்
பன்னீருமாய் வாசம்
புரியும் வசந்தமே
போற்றி போற்றி!!!
மகிழ்வுதர மலர்ந்தது மனம் இனிக்கும் இன்னாள்!

21/08/2026

ஓம் முருகா போற்றி..!🌺🌺🍀🌺🌺மொய் தார் அணி குழல்வள்ளியை வேட்டவன்முத்தமிழால்வைதாரையும் அங்குவாழவைப்போன்..!வெய்ய வாரணம்போல்கைத...
20/08/2026

ஓம் முருகா போற்றி..!
🌺🌺🍀🌺🌺

மொய் தார் அணி குழல்
வள்ளியை வேட்டவன்

முத்தமிழால்

வைதாரையும் அங்கு
வாழவைப்போன்..!

வெய்ய வாரணம்போல்
கைதான் இருபது உடையான்..!

தலை பத்தும் கத்தரிக்க
எய்தான் மருகன்..!

உமையாள்
பயந்த இலஞ்சியமே..!

குமரா..!

குகனே..!

ஓம் முருகா சரணம்..!
🌺🌺🍀🌺🌺🌺🍀🌺🌺

வாழ்க வளர்க..!

வடிவேலன் அருளுடன்..!

🙏ஓம் சரவணபவ 🙏முருகனின் அருளால் இந்த நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமையட்டும்ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏ஓம் மு...
19/08/2026

🙏ஓம் சரவணபவ 🙏
முருகனின் அருளால் இந்த நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமையட்டும்

ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

🙏ஓம் முருகா சரணம் 🙏

Address

Kovil Road, Thirukkovil 01
Ampara
32420

Alerts

Be the first to know and let us send you an email when Thirukkovil Sri Sithira Velayutha Swami Kovil - திருக்கோவில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share