17/05/2026
ரஹ்மானின் பொருத்தத்தை நோக்கிய பத்து நாட்கள் - தினசரி ஆன்மீக follow-up (Daily Routine)
ஃபஜ்ர்: சரியான நேரத்தில் தொழுகை, சுன்னத்துகள், திக்ரு மற்றும் குர்ஆன் ஓதுதல்.
காலைப்பொழுது: காலை திக்ருகள், ளுஹா தொழுகை மற்றும் தஸ்பீஹ், தஹ்லீல், இஸ்திஃபார் (ஒவ்வொன்றும் 100 முறை).
ளுஹர்: கடமையான தொழுகை, முன்-பின் சுன்னத்துகள் மற்றும் குர்ஆன் திலாவத்.
அஸர்: அஸர் தொழுகை, எளிய திக்ருகள் மற்றும் துஆ.
மஃரிப்: மஃக்ரிப் தொழுகை, சுன்னத்துகள் மற்றும் மாலை நேர திக்ருகள்.
இஷா: இஷா தொழுகை, சுன்னத்துகள் மற்றும் இரவுத் தொழுகைக்குத் தயாராகுதல்.
கியாமுல் லைல்: நள்ளிரவில் 2 ரக்அத்கள் அல்லது அதற்கு மேல் தொழுது துஆ செய்தல்.
🔆 முக்கிய கடமைகள் மற்றும் நற்செயல்கள்:
தொழுகைகளை நேரத்திற்குப் பேணுதல், அதிகப்படியான தக்பீர் முழக்கம், குர்ஆன் கத்ம் செய்ய முயற்சித்தல், மற்றும் புத்துணர்ச்சியுடன் எழ சீக்கிரம் உறங்குதல்.
🔆நாள் முழுவதற்குமான நற்காரியங்கள்:
பெற்றோர் மற்றும் உறவினர்களைப் பேணுதல், வீட்டு வேலைகளில் உதவுதல், ஸதகா செய்தல், நோன்பு நோற்றல், நோன்பு திறப்பவருக்கு உணவளித்தல், மற்றும் நாவைக் காத்துக் கொள்ளுதல்.
🔆 அரஃபா நாள் ஏற்பாடு:
அரஃபா நாளுக்காக உடலளவிலும், துஆக்களைத் தயார் செய்வதிலும் கவனம் செலுத்துதல்.
🔖IIC Kuwait - 2025.05.17