The truth about Mary

The truth about Mary Informazioni di contatto, mappa e indicazioni stradali, modulo di contatto, orari di apertura, servizi, valutazioni, foto, video e annunci di The truth about Mary, Organizzazione religiosa, Rome.

1. மரியியல் அன்றும் இன்றும்இயேசுவின் தாயாகிய மரியா பற்றிய இறையியல் சிந்தனைத் தொகுப்பு மரியியல் என அழைக்கப்படுகிறது. கடந்...
09/03/2023

1. மரியியல் அன்றும் இன்றும்

இயேசுவின் தாயாகிய மரியா பற்றிய இறையியல் சிந்தனைத் தொகுப்பு மரியியல் என அழைக்கப்படுகிறது. கடந்த இருபது நூற்றாண்டு வரலாற்றுப் பின்னணியில் மரியியலை இருபெரும் பகுதிகளாகக் காணலாம்.

1. மரபு மரியியல்,

2. மறுமலர்ச்சி மரியியல்.
மரியியல் வளர்ச்சியின் ஆரம்ப நிலைகள் இரண்டாம் நூற்றாண்டியிலேயே காணப்படுகின்றன. இயேசுவின் சீடர்கள் அவரது அன்னைக்குக் காட்டிய அன்பும், பாசமும், தொடக்கத் திருச்சபை அவருக்குக் கொடுத்திருந்த உயர்ந்த இடமும் மரியன்னை வணக்கத்தின் அடிப்படையாகிறது. திருச்சபைத் தந்தையர்கள், மறை வல்லுநர்கள் மரியன்னை பற்றி வகுத்தளித்த சிந்தனைகள் மரியியலின் ஆரம்ப வித்துக்கள் ஆயின. இடைக்காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் நிலவிய அரசியல் சமூக, பொருளாதார சூழல்களும் மரியன்னை வணக்கத்திற்கு பெரிதும் உதவிய காரணிகளாக அமைந்தன.

அதனைத் தொடர்ந்து பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை நிகழ்ந்த மரியன்னைக் காட்சிகளும், அவையொட்டி எழுந்த மரியன்னை வணக்க முறைகளும் மரியன்னை பக்தியைத் திருச்சபையில் மேலும் வளர்த்தன. தொடர்ந்து மரியன்னை பற்றிய நம்பிக்கைகள் விசுவாசக் கோட்பாடுகளாகவும் வரையறுத்து அறிவிக்கப்பட்டன. இவ்வாறு இரண்டாம் நூற்றாண்டு தொடங்கி இருபதாம் நூற்றாண்டில் கூட்டப்பட்ட இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கம் வரை மரியன்னை பற்றி எழுந்த சிந்தனைகள், நம்பிக்கைகள் மரபு மரியியல் என்றழைக்கப்படுகிறது. இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் எழுந்த அல்லது வித்திடப்பட்ட புதிய கண்ணோக்கு, அதனையொட்டி எழுந்துள்ள புதிய மரியன்னை சிந்தனைகள் மறுமலர்ச்சி மரியியல் என்றழைக்கப்படுகிறது.

(1) மரபு மரியியல் - நிறை குறைகள்
அ. கத்தோலிக்க திருச்சபையில் எழுப்பப்பட்டுள்ள பெரும்பாலான ஆலயங்கள் மரியா பெயரால் எழுப்பப்பட்டுள்ளன. அதேபோல் திருச்சபையில் எழுந்துள்ள பக்தி முயற்சிகள், பழக்க முறைகள் அதிகமாக மரியாவை மையமாக வைத்து எழுந்துள்ளன. இதன்மூலம் இயேசுவின் அன்னை மரியா கத்தோலிக்கத் திருச்சபையில் கொண்டிருக்கக் கூடிய சிறப்பிடம் தெளிவாக புலப்படும். வரலாற்றில் எழுந்த மரியியல் சிந்தனைகளும், அதனையொட்டித் தோன்றிய வணக்க முறைகளும் இயேசுவின் அன்னை மரியா பற்றிய புரிதலுக்கும் அவரின் வணக்கத்திற்கும் இட்டுச் சென்றுள்ளன. இந்த பழைய புனிதமான மரபை திருச்சபை மிகவும் போற்றிப் பின்பற்ற விரும்புகிறது. திருச்சபையின் பிள்ளைகள் அனைவரும் இத்தூய கன்னியின் வணக்கத்தைப் பெருமனத்துடன் போற்றிப் பேணி வளர்க்க வேண்டும்; பல நூற்றாண்டுகளாய்த் திருச்சபையின் ஆசிரியம் போற்றி வரும் மரியன்னை பக்தி முயற்சிகளையும், பழக்க வழக்கங்களையும் மிகவாய் மதிக்க வேண்டும்: முன்காலங்களில் கிறிஸ்து தூய கன்னி, புனிதர்கள் ஆகியவர்களின் உருவ வணக்கம் பற்றி தீர்மானிக்கப்பட்டவைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென மக்களுக்கு திருச்சங்கம் அறிவுரை கூறுகிறது" (திருச்சபை 67).

ஆ. மரபு மரியியலில் மூன்று முக்கிய மரியியல் தத்துவங்கள் காணப்படுகின்றன. தகுதியுடமை, தனித்தன்மை, இயேசுவுடன் இணை ஒப்புமை.

மரியா இறைமகன் இயேசுவின் அன்னை . எனவே அவர் இறைவனின் அன்னை. இறைவன் தம் மகனை இவ்வுலகில் ஈன்றெடுப்பதற்கு தகுதி வாய்ந்த ஓர் இல்லிடத்தைத் தேர்ந்தெடுத்தார். அவரை அனைத்து நலன்களாலும் நிறைத்தார். ஒரு மனிதப் பிறவிக்கு இறைவன் என்னென்ன சிறப்புகளைத் தரமுடியுமோ அத்தனையும் பெறுவதற்கு மரியா தகுதி வாய்ந்தவர். அத்தகுதியுடைமைக்கு ஏற்ப இறைவனும் அவரை அனைத்து நலன்களாலும், சிறப்புகளாலும் அணி செய்துள்ளார். இத்தகுதியுடைமைத் தத்துவத்தின் பின்னணியில் மரியன்னையின் பக்தர்கள் பல்வேறு அடைமொழிகள், சிறப்புப் பெயர்கள், புகழ் மொழிகள் ஆகியவற்றை மரியன்னைக்கு வழங்கி மகிழ்ந்தனர்.

சிறப்பான தகுதியைப் பெற்றுள்ள மரியா தனித்துவம் அல்லது தனித்தன்மை பெற்றவராக மாறுகிறார். ஏனைய மனித படைப்புகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட, தனித்து, உயர்ந்து நிற்பவராக மரியா புரிந்து கொள்ளப்பட்டார். எவருடம் எட்டமுடியாத உயரத்தில் ஜொலிக்கும் அல்லது பளிச்சிடும் தெய்வப்பிறவியாக அவர் காணப்பட்டார். இம்மண்ணின் பிரச்சனைகள், இவ்வுலக வாழ்வின் போராட்டங்கள் ஆகியவற்றின் மத்தியில் இறைவனை முழுமையாக நம்பி வாழ்ந்து, மானிட வாழ்வுக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் துலங்கிய மரியா உயரத்தில் வைத்தப் போற்றப்படும் அரசியாக, சமூகப் பிரச்சனைகளுக்கு அப்பாற்பட்ட தேவலோகப் பின்னணியில் போற்றப்படுபவராக மாற்றப்பட்டார். தகுதியுடைமை, தனித்தன்மை ஆகிய இரு தத்துவங்கள் மூன்றாம் தத்துவமாகிய இயேசுவுடன் இணை ஒப்புமைக்கு இட்டுச் சென்றன. இறைவனுக்கும், மனிதர்களுக்கும் இடை நிலையாளர் இயேசு என்றால் இயேசுவுக்கும், மனிதர்களுக்குமிடையே மரியா இடைநிலையாளரானார். இயேசு 'மீட்பர்' என்றால் மரியர் துணை மீட்பராகக்' காணப்பட்டார். இயேசு பாவமற்றவர் என்றால் மரியாவும் அமல உற்பவி' என்று அழைக்கப்பட்டார். இயேசு விண்ணகம் ஏறிச் சென்றார் என்றால் மரியா விண்ணுக்கு எடுத்துச் செல்லப்பெற்று தந்தை, மகன் இருவராலும் விண்ணக, மண்ணக அரசியாக முடிசூட்டப் பெற்றார். கிறிஸ்துவை அரசர்' என்று போற்றும்போது மரியா அரசி யாக போற்றப்பட்டார். இத்தத்துவங்கள் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளிலும் இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியிலும் மறையுரையாளர்கள், மரியியல் சிந்தனையாளர்களால் பயன்படுத்தப்பட்டு கத்தோலிக்க சமூகங்களின் வாழ்விலும், வழிபாட்டிலும் ஒருவகை மரியா மயம் நிலவியது.

இ. இன்றுகூட பிறமறை சகோதர சகோதரிகளால் கத்தோலிக்க ஆலயம் மாதா கோவில் என்றழைக்கப்படுகிறதென்றால் கடந்த நூற்றாண்டுகளில் மரியியல் வளர்ச்சியின் தாக்கம் கொண்டிருந்த உச்ச நிலையை நாம் தெளிவாக அறியலாம். மரபு மரியியலின் வளர்ச்சியின் காரணமாக திருச்சபையில் மரியா பற்றிய சரியான புரிதல், மரியன்னை வணக்கம், பக்தி முயற்சிகள் ஆகியவை வளர்ந்து வேரூன்றியுள்ளன. அதேசமயம் மரபு மரியியல் ஒருசில மிகைப்படுத்தலுக்கும், மூட நம்பிக்கைகளுக்கும் வழிவகுத்துள்ளது என்பது மறுக்கப்பட முடியாத வரலாற்று உண்மை . இதனை திருத்தந்தையர் 12ஆம் பத்திநாதர், 23ஆம் அருளப்பர் ஆகியோர் தம் உரைகளிலும், திருத்தந்தை ஆறாம் சின்னப்பர் 'மரியா வணக்கம்' (எண் 38) என்ற தனது திருத்தூது அறிவுரையிலும் சுட்டிக்காட்டியுள்ளனர். இறையியலாரும், இறைவாக்கைப் போதிப்பவரும் இறைவனுடைய தாயின் தனிச்சிறப்பான மாண்பைப் பற்றிப் பேசும்போது தவறான மிகைக் கூற்றுக்களையும் மிகக் குறுகிய நோக்கையும் கவனத்துடன் தவிர்க்கும்படி எச்சரிக்கப்படுகிறார்கள்” (திருச்சபை, 67) என்ற வத்திக்கான் திருச்சங்கத்தின் எச்சரிப்பு வார்த்தைகள் மரபு மரியியல் ஏற்படுத்தியிருந்த மிகைப்படுத்துதலைச் சுட்டிக்காட்டுவனவாக அமைந்துள்ளன. இத்தகைய மிகை வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தவை ஒரு சில.

பொதுவாக இரண்டாம் நூற்றாண்டு முதல் ஐந்தாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தோன்றிய திருமுறைப் புறநூல்கள் விவிலியம் தராத மாறுபட்ட கொள்கைகளை, தப்பறைகளை புராணப் பாணியில் தொகுத்து வழங்கின. மரியா பற்றிய வாழ்க்கை வரலாற்றை விவிலிய நூல்கள் அதிகமாகத் தராத சூழ்நிலையில், இயேசு கிறிஸ்துவின் அன்னை மரியாவின் பிறப்பு, வளர்ப்பு, வாழ்வு, பணிகள், இறப்பு, சிறப்பு பற்றி இந்த விவிலிய புறநூல்கள் பல செய்திகளைத் தருகின்றன. இவ்வாறு, மரியா வணக்கத்தையும் சிந்தனையையும் அதிகமாகப் பாதித்த திருமுறைப் புறநூல்கள் புனித யாக்கோபு துவக்க நற்செய்தி, இலத்தின் போலி மத்தேயு, தோமையாரின் குழந்தைப் பருவ நற்செய்தி, பிலாத்துவின் பணிகள், பிலிப்புவின் நற்செய்தி என்பனவும் மரியாவின் இறப்பு எனும் தலைப்பில் எழுதப்பெற்ற பல நூல்களுள் ஆகும்.

கிறிஸ்தவம் பரவி வளர்ந்த காலச் சூழ்நிலையில் பெண் தெய்வங்களின் வழிபாடு பெருகியிருந்தது. கிரேக்க நாட்டு டெமேற்றர், உரோமை சிபில், எபேசு நகர டயானா, எகிப்திய ஜசிஸ் போன்ற தேவதைகள் அன்னை தெய்வங்களாக வணங்கப் பெற்று வந்தன. உரோமைப் பேரரசில் அன்னை தெய்வ வழிபாட்டில் பங்கேற்ற மக்கள் கிறிஸ்தவர்களாக மாறிய பிறகு மரியாவை அன்னை தெய்வமாகக் காண முயன்றனர். கிறிஸ்தவம் உரோமைப் பேரரசின் ஆட்சி மாதமாக மாறிய பிறகு அன்னை தெய்வங்களின் ஆலயங்கள் மரியாவின் ஆலயங்களாகவும், அவர்களது விழாக்கள் மரியாவின் விழாக்களாகவும் மாறிய சூழல் அன்னை தெய்வ பாதிப்பை, தாக்கத்தை கிறிஸ்தவ மக்களின் சிந்தனையிலும் ஏற்படுத்தியது. மறியா இறைவனின் அன்னை என்ற எபேசு நகர பொதுச் சங்கத்தின் போதனையும் ஒருவகையில் சாதாரண மக்களில் மரியா 'தாய்' 'தெய்வம்' என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது!

இடைக்காலத்தில் வறுமை, பிணி, போர் . ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட அரசியல், சமூக, பொருளாதார சூழலில் வாழ்ந்த மக்களின் மரியன்னை வணக்கம் உண்மையான வணக்கத்திலிருந்து திசை திரும்பி உணர்ச்சிகளின் வடிகாலாக மாறியது. குழந்தையாக இருக்கின்ற பொழுது மனிதன் தாயிடமிருந்து பெற்ற பாசம், பாதுகாப்பு, அரவணைப்பு ஆகியன அவன் வளர்ச்சியடைந்து வாழ்வைச் சந்திக்கின்ற சூழ்நிலையில் அவனுக்குக் அவன் கிடைக்காமல் போகின்றன. அந்த நேரத்தில் அவன் மனம் தாயின் அன்புக்காக ஏங்குகிறது. இது தனிமனிதனுக்கு மட்டுமல்ல, சமூகங்கள், பண்பாடுகளுக்கும் பொருந்தும். இடைக்கால மரியன்னை பக்தி முயற்சிகள் ஒருவகையில் அம்மக்கள் அன்னை மீது கொண்டிருந்த அன்பு-சார்பு உணர்ச்சியின் வெளிப்பாடாக அமைந்திருந்தன. பக்தி, உணர்ச்சியின் வெளிப்பாடாக மாறுகிறபொழுது ஜெபமாலை, நவ நாட்கள் ஆகியவை மாந்தரீகத் தன்மையுடையனவாக கருதப்பட்டு விடுகின்றன. கிறிஸ்தவ நம்பிக்கை சமூகத்தில் காணப்படும் தீமைகளை எதிர்த்துப் போராடி உலகை மாற்றுவதற்கான அழைப்பு என்பது மாறி திருயாத்திரையும், திருநாள் கொண்டாட்டங்களும் வாழ்வுக்கான போராட்டத்தை இடப்பெயர்ச்சி செய்துவிட்டு விண்வீட்டை விரைவில் தரும் குறுக்கு வழிகளாகக் கருதப்பட்டு விடலாம். இதுவே இடைக்காலத்தில் நடந்தது.

சீர்திருத்தக் காலத்தில் லூத்தர், கால்வின், சுவிங்லி போன்ற சமயச் சீர்திருத்தவாதிகள் மரியா வணக்கத்தை வன்மையாக எதிர்த்தனர். அவர்களது எதிர்ப்புக்குக் காரணம் மரியா வணக்கத்தால் இடைக்காலத்தில் மலிந்திருந்த மூடப்பழக்கங்கள். விவிலியக் கோட்பாடுகளுக்கு முரணானது மரியா வணக்கம் என்ற எண்ணமும் அவர்களின் எதிர்ப்புக்குக் காரணமாக அமைந்தது. இத்தகைய எதிர்ப்பின் மத்தியிலும் கூட மரியியல் சிந்தனையும், வணக்கமும் அதிகமாகப் பரவின. மரியா பக்தி திருச்சபையைக் காக்கும் கவசம் போலவும் மாறியது. பல துறவற சபைகள் மரியா பக்தியைப் பரப்ப தங்களையே அர்ப்பணித்துக் கொண்டன. புனித லூயிஸ் மாண்ட்போர்ட் (1673-1761) மரியா பக்தியை பரப்புவதற்கு தம்மையே அர்ப்பணித்துக் கொண்டவர்களுள் முக்கியமானவர். இவர் எழுதிய 'தூய கன்னி மீது உண்மையான பக்தி' என்ற நூல் 1842இல் கண்டுபிடிக்கப்பட்டு 19ஆம் நூற்றாண்டில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இக்காலத்தில் மரியாவை 'ஆண்டவள்' என அழைக்கும் பழக்கமும் வெகுவாகப் பரவியது.

18ஆம் நூற்றாண்டில் தோன்றிய பகுத்தறிவு இயக்கம், மரியா வணக்க எதிர்ப்புப் போக்குகள் ஆகியவற்றிற்கெதிராக எழுந்தவையே மரியா இயக்கங்கள். இவை பல்வேறு பகுதிகளில் தனித்தனியாக மரியாவின் புகழை வளர்த்து அவரின் பக்தியைப் பரப்பி வந்தன. இத்தகைய குழுமக்கள் ஓரளவு 18ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இணைந்து மரியா இயக்கம் பேரியக்கமாக வளர ஆரம்பித்தது. சொல்லி முடிவதில்லை மரியா புகழ்' என்ற கொள்கையோடு மரியா பக்தியினைப் புதுப்பித்து பழைய விழாக்களுக்கும் புது மெருகூட்டி, புதிய சிறப்புப் பெயர்களை மரியாவுக்குச் சூட்டி, மரியா பக்தியைப் பெரிதும் பரப்பியது. மரியா இயக்கம் மரியாவின் அருள்மிகு அமல உற்பவம், விண்ணேற்பு, மரியா துணை மீட்பர், இடைநிலையாளர் என்ற மரியாவின் சிறப்புக்களை விசுவாச உண்மைகளாக திருத்தந்தை அறிக்கையிட பரிந்துரை செய்தது. இப்பின்னணியில் திருத்தந்தை 9ஆம் பத்திநாதர் 'மரியாவின் அருள்மிகு அமல உற்பவம்' என்ற விசுவாசக் கோட்பாட்டினை 1854ஆம் ஆண்டும், திருத்தந்தை 12ஆம் பத்திநாதர் 'மரியாவின் விண்ணேற்பு' என்ற கோட்பாட்டினை 1950ஆம் ஆண்டும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 19,20ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த மரியன்னையின் காட்சிகள் மரியன்னை பக்தியைப் பரப்பிட்ட ஏனைய பலமுள்ள காரணிகள். பாரிசு நகர் திருவுருவம், லா சலேத், லூர்து, பாத்திமா, குவாதலூப்பே, வேளாங்கண்ணி போன்ற காட்சியனுபவங்கள் இன்றும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அன்னை வேளாங்கண்ணி காட்சியைத் தவிர மற்ற எல்லா காட்சிகளிலும் மரியா தம் மகன் இயேசு இன்றி தனியாகவே காட்சி தந்தது, இயேசுவை விட்டு மரியாவைப் பிரித்துப் பார்க்கின்ற ஒரு. மனநிலைக்கு இட்டுச் சென்றது.

(2) மறுமலர்ச்சியில் மரியியலின் புதிய பயணம்

2ஆம் வத்திக்கான் சங்கம் திருச்சபையின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது. இது திருச்சபையின் வாழையடி வாழையாக வந்த மரபுச் சிந்தனைகள். செயல்முறைகள் ஆகியவற்றை மறுபரிசீலனை செய்து நற்செய்தியின் மதிப்பீடுகளுக்கு ஏற்ற வாழ்வு வாழ புதிய அழைப்பு விடுத்தது. 2ஆம் வத்திக்கான் சங்கம் மரியன்னை பற்றிய புதிய விசுவாசக் கோட்பாடுகளை வெளியிடும் என்று சிலர் எதிர்பார்த்தனர். ஆனால் அவ்வாறு நிகழவில்லை . அதுமட்டுமல்லாது மரியா பற்றிய மறுமலர்ச்சிச் சிந்தனை, அணுகுமுறைகளையும் சங்கம் வரையறுத்துக் கொடுத்துள்ளது. மரியா பற்றிய சிந்தனைகளைத் தனி ஏடாக வெளியிடாமல் திருச்சபை என்னும் ஏட்டின் இறுதிப் பகுதியாக (அதிகாரம் 8) சங்கம் இணைத்து வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மரபு மரியியலில் காணப்பட்ட மிகைப்படுத்துதல்களும், குறைபாடுகளும் அகற்றப்பட்டு புதிய அணுகுமுறைகளைத் தாங்கிய பகுதியாக வத்திக்கான சங்கத்தில் (திருச்சபை, 52-68) மரியியல் சிந்தனைகள் தரப்பட்டுள்ளன.

அ) மரபு மரியியல் சித்தாந்தங்களுக்கு மாறான விவிலிய அடிப்படை கிறிஸ்து மையம், திருச்சபையின் மாதிரி என்ற சரியான தத்துவங்களின் அடிப்படையில் வத்திக்கான் திருச்சங்கத்தின் மரியா பற்றிய சிந்தனைகள் அமைந்தன.

விவிலிய வழியில் மரியா இனம் காணப்பட்டு சரியான வணக்கத்தை திருச்சபையில் பெற வேண்டுமென திருச்சங்கம் வலியுறுத்துகிறது. மரியா வணக்கம் உண்மையான விசுவாச வழியில் வளர வேண்டுமென்பதே திருச்சங்கத்தின் ஆதங்கம். சங்கம் கூறுவதுபோல ஆசிரியத்தின் மேற்பார்வையில் அவர்கள் திருமறைநூல், திருத்தந்தையர், மறைவல்லுநர், திருச்சபையின் வழிபாட்டு முறைகள் பற்றிய ஆராய்ச்சியை வளர்த்து தூய கன்னியின் அலுவல்களையும் சிறப்பு உரிமைகளையும் சரிவர விளக்க வேண்டும். தூய கன்னியின் இவ்வலுவல்களும், உரிமைகளும் உண்மை , புனிதத் தன்மை இறைப்பற்று' என்பவையனைத்தின் ஊற்றான கிறிஸ்துவையே நாடி நிற்பனவாகும்” (திருச்சபை, 67)

மறுமலர்ச்சி மரியியல் கிறிஸ்து மையத்தை வலியுறுத்துகிறது. மேலே மேற்கோள் காட்டப்பட்ட திருச்சபை என்ற சங்க ஏடு (எண் 60, 67) இவ்வுண்மையைத் தொடர்ந்து வலியுறுத்துகின்றது. மக்கள்பால் மரியா கொண்டுள்ள தாய்க்குரிய பணியால் கிறிஸ்துவின் இந்த இணையற்ற இணைப்பாளர் பணி சற்றேனும் மறைவதுமில்லை, குறைவதுமில்லை; மாறாக அதன் ஆற்றல் இதன் வழியாக வெளிப்படுகிறது. ஏனெனில், மக்கள்பால் தூய கன்னி கொண்டுள்ள மீட்பளிக்கும் செல்வாக்கு அனைத்தும் கட்டாயத் தேவையால் அன்றி இறைவனின் விருப்பத்தினாலேயே உருவாகின்றது. கிறிஸ்துவினுடைய பேறுபலன்களில் நிறைவுப் பெருக்கத்தினின்று வழிகின்றது; அவரது இணைப்பாளர் பணியை அடித்தளமாகக் கொண்டுள்ளது; முற்றிலும் அப்பணியைச் சார்ந்தே இருக்கின்றது; அதிலிருந்தே தன் ஆற்றல் அனைத்தையும் பெறுகின்றது” (திருச்சபை, ல). எனவே மரியாவின் பண்பு இயேசுவின் பண்புகளின் பிரதிபலிப்பு. அவரது பணிகள் இயேசுவின் பணிகளிலே பங்கேற்பவையாகும். இயேசு மனிதரான நிகழ்வில் எவ்வாறு இயேசுவை மையமாக வைத்து மரியா. வாழ்ந்தாரோ, அதேபோல இன்றும் அவரது இடம் இயேசுவின் பின்னணியில்தான் புரிந்து கொள்ளப்பட முடியும். இயேசுவிற்கு அப்பாற்பட்டு மரியாவுக்குக் காட்டப்படும் அன் வணக்கமும், விவிலிய மரபுக்குப் புறம்பானவை

நற்செய்தியாளர் லூக்கா. இறைவனை முழுமையாக நம்பி அவருடைய திருவுளம் நிறைவேறுவதற்காக எல்லாச் சூழ்நிலைகளிலும் தம்மை முழுமையாக அர்ப்பணித்த இயேசுவின் சீடராகவே மரியாவை இனம் காட்டுகிறார். யோவான் தமது நற்செய்தியின் தொடக்கத்திலும், இறுதியிலும் மரியாவைக் கொண்டு வந்து திருச்சபைக்கு அடையாளமாக அவரைச் சித்தரிக்கிறார். திருத்தூதர் பணியிலும் (1:14) மரியா இயேசுவின் வாக்கு நிறைவேறும் என்று நம்பி எல்லாச் சீடர்களையும் செபத்தில் இணைத்து வைப்பவராக காட்டப்படுகிறார். இவ்வாறு திருச்சபையின் தொடர்பில் மட்டுமே மரியா சரியான விளக்கம் பெற முடியும். திருச்சபைத் தொடர்பற்ற மரியியல் சிந்தனைகளும், மரியாவிற்கு வழங்கப்படும் இடமும் தவறான அணுகுமுறைகளின் விளைவுகளாகும்.

கி.பி. முதலாம் நூற்றாண்டு, பாலஸ்தீன வரலாற்றில் பலவகை அரசியல் - ஆன்மீக இயக்கங்களைக் கண்ட காலக்கட்டம். பாலஸ்தீனம் அரசியல் ரீதியாக உரோமையர்களின் ஆட்சியில் இருந்து வந்தது. விவிலியப் பின்னணியில் யூதர்கள் இறைவனின் ஆட்சிக்குத் தவிர மற்ற மனிதர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருப்பது ஏற்க இயலாத ஒன்று. ஆகையால் அவர்கள் உரோமையரின் ஆட்சியிலிருந்து தங்களை விடுவிக்கக் கூடிய ஓர் அரசியல் மெசியாவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். அதே சமயத்தில் அரசியல் மெசியா பற்றிய எதிர்பார்ப்பு இன்றி ஆன்மீக ரீதியில் தங்களை இறைவனுக்குரிய மக்களாக ஆக்கிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ஏடேனியர் போன்ற குழுமங்களும் இருந்து வந்தன. மேலே குறிப்பிட்ட அரசியல், ஆன்மீக இயக்கங்கள் எதிலும் தங்களை இணைத்துக் கொள்ளாமல் பழைய ஏற்பாட்டின் வாக்குறுதியில் நம்பிக்கை வைத்து இறைவனுடைய தலையீட்டுக்காக காத்திருந்தவர்கள் யாவேயின் எளியோர். அவர்களில் ஒருவராக, நாசரேத்தூரில் வாழ்ந்த, சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மரியா என்னும் நங்கை நமக்கு அறிமுகமாகிறார். மரியாவைப் பொறுத்த வரையில் முதல் நிலையில் இறைமை ஏற்படுத்தும் நிறைவை எதிர்பார்த்தும் அந்த இறைத்திட்டத்தோடு ஒத்துழைத்தும் வாழ்ந்தவர்.

இப்பின்னணியில் பார்க்கும்போது மரியா இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கம் முன்வைப்பது போன்று இறைவனை விசுவாசிக்கும் விசுவாச சமூகத்தின், நிறைவை நோக்கிய பயணத்தில் ஈடுபட்டுள்ள மனித குலத்திற்கு எடுத்துக்காட்டகவும், முன் மாதிரியாகவும் திகழ்கின்றார் (திருச்சபை, 65). மனிதரான இறைமகன் திருச்சபை என்னும் மறையுடலின் தலையாவார். எனவே இந்த கிறிஸ்து மைய வாழ்வுக்கும் மரியா ஒரு முன் உதாரணமாகவும், எடுத்துக்காட்டாகவும், இலக்கணமாகவும் அமைகிறார்.

ஆ) மரியியல் ஆரம்பமாகும் இடம் கிறிஸ்து இயல். இறைவன் இம்மானிட உலகோடு உறவு கொள்கிறார். ஒரு குறிப்பிட்ட காலச்கட்டத்தில், இறை மனித உறவு ஒரு திட்டவட்டமான வடிவம் எடுக்கிறது. அதுவே கிறிஸ்து மனிதராகப் பிறந்த நிகழ்ச்சி. இவ்வடிப்படைகிறிஸ்தவ உண்மையினை கடந்த இருபது நூற்றாண்டுகளாக புரிந்து கொள்ள எழுந்த முயற்சிகளே இன்று நாம் காணும் பல்வேறு கிறிஸ்தியல் சிந்தனைகள். கிறிஸ்துவைப் பற்றிய புரிதலின் தொடர்ச்சியாக மரியியல் உருவாயிற்று. இம்மரியியல் கால ஓட்டத்தில் ஒரு சில மிகைப்படுத்துதல்களுக்கு உள்ளாகி கிறிஸ்து மையத்திலிருந்து விலகிவிட்ட சூழ்நிலை ஏற்பட்டது. இதனை இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கம் சுட்டிக்காட்டி கிறிஸ்துவின் பின்னணியில்தான் மரியாளைச் சரியாக புரிந்து கொள்ளப்படமுடியும்; கிறிஸ்தியல் பின்னணியில்தான் மரியியல் சரியான விளக்கம் பெற இயலும் என்று திட்டவட்டமாக எடுத்தியம்பியது.

கிறிஸ்து தலை என்றால், திருச்சபை அவரது உடல், கிறிஸ்துவையும், திருச்சபையையும் பிரிக்க இயலாது. மரியா இயேசுவை விசுவசித்த இயேசுவின் சீடர்களுள் தலைமகள். இயேசுவினுடைய பணி வாழ்வில் நிகழ்ந்த இயேசு - மரியா சந்திப்புகள் இதனை தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன. எனவே மரியாவைத் திருச்சபையிலிருந்து பிரித்து திருச்சபைக்கு அப்பாற்பட்ட புனிதையாகவும், திருச்சபையை அவரை நோக்கி ஏங்கியிருக்கும் மக்கள் கூட்டமாகவும் கருதுவது தவறாகும். கிறிஸ்து மைய, திருச்சபையோடு இணைந்த மரியியலே சரியானதாகும். இப்பின்னணியில் புதிய மரியியல் சிந்தனைகள் கிறிஸ்து, திருச்சபை தொடர்புடையதாக அமைய வேண்டும்.

இ) இரண்டாம் வத்திக்கான் சங்கம் முடிவுற்ற காலகட்டத்தில் கிறிஸ்தவு, ஒற்றுமை கத்தோலிக்க திருச்சபையின் குறிக்கோள், செயல்பாடுகளில் மிக முக்கியமானதாகக் கருதப்பட்டு வந்தது. எல்லா மட்டங்களிலும் கிறிஸ்தவ ஒற்றுமை பற்றிப் பேசப்பட்டது. ஆனால் சமீப காலத்தில் கிறிஸ்தவ ஒற்றுமை முயற்சிகளில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டு உள்ளது. புதிய மரியியல் பிற கிறிஸ்தவ சபைகளோடு கத்தோலிக்கத் திருச்சபை மேற்கொள்ளும் உரையாடலுக்கும், ஒற்றுமை முயற்சிகளுக்கும் உதவும் கருவியாக அமைதல் வேண்டும்.

ஈ) மரியியல் பின்னணிகளில் மிக முக்கியமானதாக அமைய வேண்டியது இன்றைய வாழ்வுச் சூழல். மரியியல் சிந்தனைகளும், மரியா வணக்கங்களும் மக்களை இவ்வுலகிலிருந்து பிரித்தெடுத்து இவ்வுலக பிரச்சனைகள், சவால்கள், ஏக்கங்கள் ஆகியவற்றுக்கு ஒரு மாந்திரீக மருந்தைத் தருவதாகவோ அல்லது இவ்வுலக ஈடுபாட்டைத் தவிர்த்து ஒருவித மாய உலகில் மக்களைச் சஞ்சரிக்க விடுவதாகவோ அமைதல் கூடாது. பெண் விடுதலை, சமத்துவம், ஏழை-எளியவரின் சமூக மேம்பாடு, உலக நேர்மறை நோக்கு, சமூக ஈடுபாடு ஆகியவை புதிய மரியியல் பாடும் பூபாளங்களாக அமைய வேண்டும்.

மாதாவே துணை நீரே! உம்மை வாழ்த்தி போற்ற வரம் தாரும் என்று மாதாவின் மகிமையை போற்றுகிறது உலகம். அன்னைக்கு கரம் குவிப்போம் அ...
09/03/2023

மாதாவே துணை நீரே! உம்மை வாழ்த்தி போற்ற வரம் தாரும் என்று மாதாவின் மகிமையை போற்றுகிறது உலகம். அன்னைக்கு கரம் குவிப்போம் அவள் அன்பை பாடிடுவோம் என்று அன்னையின் அன்பை பாடல் மூலம் பாடிப் போற்றுகிறோம். எனவே, அம்மாவின் அன்பு துணை இருக்கும் போது நாம அஞ்ச வேண்டாம். எனவே, தான் பெருமையிணை, அவளின் தாழ்ச்சினை நாம் நன்கு அறிந்து அதன்படி வாழ மே மாத பக்தி முயற்சி பெரும் துணை புரிகின்றது. அம்மா என்றாலே தியாகம்! தியாகத்தின் தாய் என்பதால் நாம் அடைய தன் ஒரே மகனை சிலுவை சாவை ஏற்று தந்தையின் சித்தத்தை நிறைவேற்றிட துணை புரிந்தவர் நம் அன்னைமரி.

அன்னையின் அருங்குணங்கள்:

தாழ்ச்சி, பொறுமை, நம்பிக்கை, இடைவிடாது செபித்தல், குடும்ப பொறுப்பு, துன்பத்தை ஏற்றல். கரியேல் தூதரின் வாழ்த்தினை கேட்ட அன்னை கலங்கி இது எபடியாகும்? நான் கணவனை அறியேன் என்றார். உன் வழியாக உலகத்திற்கு மீட்பு உண்டு, நீ அஞ்சாதே, தூய ஆவி உன்னில் நிழலிட நீ கருவுற்று ஓர் ஆண் மகவைப் பெறுவாய் என்றதும், “இதோ, உமது அடிமை” என்று கீழ்ப்படிந்து இறைத் திட்டத்தை ஏற்றார்.

கீழ்ப்படிதலும், நம்பிக்கையும்:

“வயது முதிர்ந்த உன் உறவினர் எலிசபெத் கருவுற்று இது ஆறாம் மாதம்” என்று தூதர் கூறிட மரியா அதை நம்பினார். அது மட்டுமல்லாமல், உடனே விரைந்து சென்று எலிசபெத்திற்கு உதவி செய்து ஆறு மாதம் அங்கு தங்கி பணி செய்தார். நம்பியதால், கீழ்ப்படித்தால் உதவி செய்ய விரைந்து சென்றார். இருவரின் சந்திப்பால் இரு உள்ளங்க பொங்கிட ஒருவர் ஒருவரை வாழ்த்தி இறை அன்பில் நம்பிக்கையை வளர்த்தனர். இறைவனின் தாயாக போகிறோம் என்ற பெருமை இன்றி சாதாரண பெண்மணி போல் மாதா எசலிபெத்திற்கு உதவியது அவரின் அடக்கம், தற்பெருமை இல்லாமையை சுட்டிக் காட்டுகிறது.

துன்பத்தில் துணைபுரியும் தாய்!

கானாவூர் திருமண விழாவிற்குச் சென்ற தாய் பரிவு உள்ளத்தோடு அவர்களுக்கு இரசம் இல்லாமையை அறிந்தார். ஆனால் மற்றவர்கள்போல் கண்டும் காணாதிருக்கவில்லை. யார் எக்கேடு கெட்டால் என்று தன்னலமாக இருக்கவில்லை. தன் மகனிடம் சென்றார். பரிந்துபேசி “மகனே, இரசம் தீர்ந்துவிட்டது” என்றார். மகன் “என் நேரம் வரவில்லை” என்று கூறினாலும் மகன்மீது நம்பிக்கை கொண்ட தாய் பணியாளர்களிடம் “அவர் சொல்வதைச் செய்யுங்கள்” என்கிறார்.

துன்பத்தை தன் வாழ்வில் ஏற்றல்
குழந்தை பிறப்பதற்கு இடமின்றி நாடு விட்டு நாடு சென்றார் மாதா. பிறந்த குழந்தையை வளர்க்கும் முன், கனவில் தோன்றிய தூதரின் கட்டளையை ஏற்று எகிப்து சென்றார். ஆலய விழாவில் பங்கு பெற்று திரும்புகையில் குழந்தை இயேசு பெற்றோரிடம் திரும்பி வராது தலைவர்களின் மத்தியில் போதித்துக் கொண்டிருந்தார். மூன்று நாட்களுக்குப் பின் சூசையும், மரியும் மகனைக் கண்ட போதும், “நான் என் தந்தையின் பணியில் ஈடுப்பட்டுள்ளேன்’ என்று கூறியதும் மாதாவிற்கு அதிர்ச்சி அளித்தது. இயேசுவை கோவிலில் காணிக்கையாக்கும் போது சிமியோன் கூறியவார்த்தை மாதாவின் இருதயத்தில் ஒரு வாள் ஊடுருவியது போல் ஆயிற்று. பெற்று வளர்த்த மகன், ஒரே மகன் சிலுவைச் சுமந்தபோது உடன் இருந்தது மாதாவிற்கு எத்தகைய துன்பமாக இருந்திருக்கும்! துன்பங்களின் மத்தியில் மாதா இறை சித்தத்தை ஏற்று, நமக்கு மீட்பின் தாயானது உலகு அறிந்த உண்மை. எனவே, உலகம் அன்னையின் அன்பைப் போற்றிப்பாடுகிறது.

சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகள் நம் தாயிடம் இல்லை. எங்கு மாதா காட்சி கொடுத்தாலும் செபம், தவம் மிகத் தேவை என்று கூறி நம்மை இறைவனோடு இணைந்து செயல்படத் துண்டுகிறார். “மனம் மாறுங்கள்” என்பதால், பாவத்திலிருந்து விடுதலை பெறுவது மிக முக்கியம் என்பதை மாதா பலமுறை உணர்த்துகிறார். போர்ச்சுக்கீசியர் வணிகத்திற்கு இந்தியா வரும்போது பெரும் காற்று, புயல் அடித்து படகு மூழ்குகையில் அன்னையிடம் செபிக்கவே மாதாவின் கருணையால் காற்று அடங்கி, கப்பல் வேளாங்கண்ணி அடைந்தது. உலகு போற்றும் வேளாங்கண்ணி ஆலயம் தம்மை நாடி வந்த யாவருக்கும் வரங்களை வாரிக் கொடுக்கிறது. எனவே, துன்பத்தில் துணை புரியும் அம்மா நம் தாய் மரி என்பது தெளிவாகப் புரிகின்றது.

மாதாவின் பல ஆலயங்கள்

பூண்டி புதுமை மாதா, வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா, பாத்திமா மாதா, லூர்து மாதா, சலேத் மாதா, கார்மேல் மாதா, செபமாலை மாதா, உத்தரிய மாதா, அமலோற்பவ மாதா என்று மாதா பெயர் சூட்டப்பட்ட பல புண்ணிய ஸ்தலங்கள் மாதாவிற்கு உள்ளன. இலங்கையில் மடுமாதா, மெட்சுகோரியே மாதா, நற்கருணை மாதா என்றும் மாதாவைப் போற்றி மக்கள் புகழ்ந்துப் பாடுகின்றனர்.

குடும்பப் பெண்

இவ்வாறு பல பெயர்களால் சூட்டப்பட்டு பலரால் போற்றப்பட்டாலும் கற்புள்ள பெண்மணி மாதா கணவராம் சூசையப்பருடன் கடினமாக உழைத்து குடும்பக் கடமையைச் சரிவரச் செய்தார். இறைச் சித்தத்தை ஏற்று நடத்திட குடும்பப் பெண்ணாகிய மரியா பெரும் துணை நின்று அன்பு, அமைதி, மகிழ்ச்சி நிறைக் குடும்பமாக செயலாற்றிட மாதா குடும்பப் பொறுப்பை ஏற்று, சிந்தையில் தெளிவுடன் செயல் பட்டார். எனவே, வறுமையிலும் வளமுடன் வாழ தன் மகனுக்குக் கற்றுக் கொடுத்தார். எனவே தான் லூக்கா நற்செய்தி “இயேசு வளர வளர ஞானத்திலும், பக்தியிலும் வயதிலும் வளர்ந்தார்’ என்று கூறுகின்றது. தாய்மைநிலையில் இருக்கும் பெண்கள் அன்னை மரியாவைப்போல் உள்ளது போதும் என்ற மன நிறைவு பெற்று, மகிழ்ச்சியுடன் வாழும்போது அன்பு, அமைதி, மகிழ்ச்சி நிறைந்த தாயாக அவர்கள் மாறி புதிய சமுதாயம் உருவாக்கிட முடியும்.

இவ்வாறு நற்குணங்கள் பல பெற்ற அன்னைக்கு வணக்கம் செலுத்தவே மே மாதம் மாதாவின் வணக்க மாதம் என்று அழைக்கப்படுகின்றது. கோழை உள்ளத்தினராய் பயந்து வாழ்ந்த சீடர்களை மாதா ஒன்று கூட்டி சேர்த்து செபித்து, தூய ஆவியால் நிரப்பி இயேசுவைப் போதித்திடத் துணை நின்றார்.

முதலும் முடிவும், அகரமும் னகரமும், ஆதியும் அந்தமுமான இயேசுவை அகிலத்திற்கு அளித்தவர் நம் தேவதாய். எனவே, மாதாவின் பாத மலரின் அடிச்சுவட்டினைப் பின்பற்றி வாடாத மலராக நாம் வாழ்ந்திட அன்னையின் அருள் வேண்டி இடைவிடாது செபிப்போம். செபமாலை சொல்வோம். கூடிச் செபிப்போம். குடும்பத்தில் நம்பிக்கையின் ஒளி வீசி அமைதிப் பூங்காவாய் குடும்பம் மாறிட அன்னையின் அருள் வேண்டிச் செபிப்போம்.

மரியியல்2. விவிலியம் வரையும் வண்ண ஓவியம்விவிலியம், மரபு ஆகிய இரண்டும் விசுவாச உண்மைகள் பற்றிய தெளிவினை நாம் அறிய உதவும் ...
08/03/2023

மரியியல்

2. விவிலியம் வரையும் வண்ண ஓவியம்

விவிலியம், மரபு ஆகிய இரண்டும் விசுவாச உண்மைகள் பற்றிய தெளிவினை நாம் அறிய உதவும் ஊற்றுக்கள். புதிய ஏற்பாட்டு நூல்கள், குறிப்பாக நற்செய்தி நூல்கள் இயேசுவின் வாழ்வு பற்றிய செய்தியினை நமக்கு வழங்கும் மூல நூல்கள். இவை ஒரே நாளில் அல்லது ஒரே கால கட்டத்தில் எழுதப்பட்ட வரலாற்று ஏடுகள் அல்ல. அவை பல்வேறு காலகட்டங்களில், பல சூழ்நிலைகளில் எழுந்த, இயேசுவை அடிப்படையாகக் கொண்ட விசுவாச சிந்தனைகளின் இறைபியல் ஏடுகள். நற்செய்தி ஏடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள இயேசுவின் இளமைப் பருவம், பொது வாழ்வு / பாடுகள்-இறப்பு-உயிர்ப்பு ஆகியவற்றில் விசுவாச சமூகத்தை முதலில் பாதித்தவை இயேசுவின் பாடுகள்-இறப்பு-உயிர்ப்பு, அதனைத் தொடர்ந்து அவருடைய பொது வாழ்வு பற்றிய கேள்விகள், இறுதியாக குழந்தைப் பருவ நிகழ்ச்சியுரைகள். இவ்வாறு நற்செய்திகளின் இறுதிப் பகுதி முதல் பகுதியாகவும் முதல் பகுதி இறுதிப் பகுதியாகவும் விசுவாச சமூகத்தில் அரும்பி - வளர்ந்துள்ளன.

இயேசுவின் உயிர்ப்பு முதல் கட்ட விசுவாச அனுபவமாகவும், அவரது பிறப்பு நான்காவது கட்ட அனுபவமாகவும் அமையும் வளர்ச்சி நிலையைப் பார்க்கின்றோம். இயேசுவின் பிறப்பு, அவரது பெற்றோர், குடும்பம், உறவினர், ஊர் ஆகியவை பற்றிய கேள்விகள் நான்காவது நிலையில் எழுந்தவை. எனவே அவை முற்றிலுமாக வரலாற்றுக் குறிப்புகள் என்பதைவிட இறையியல் நோக்கம் கொண்டுள்ள அடையாளக் குறிப்புகள் என்றழைப்பதே சரியாகும்.

இந்நோக்கில் காணும்போது நற்செய்தியாளர்கள் வரலாற்றுப் பெண்மணி, நாசரேத்தூர் மரியாவைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைத் தருகிறார்கள் என்பதைவிட இயேசுவின் அன்னை மரியா பற்றிய மரபு வழியாக தாங்கள் பெற்ற செய்திகளை இறையியல் நோக்கோடு தொகுத்து வழங்குகிறார்கள் என்று கொள்வதே சரியாகும்.

புதிய ஏற்பாட்டில் இயேசுவின் அன்னை

நற்செய்தி நூல்கள் தவிர்த்த ஏனைய புதிய ஏற்பாட்டு நூல்கள் மிகக் குறைவாகவே மரியா பற்றிப் பேசுகின்றன. திருத்தூதர் பவுல் திருமடல்களில் கலா 4:4 தவிர்த்து வேறு எக்குறிப்பும் காணப்படவில்லை. அதற்குப் பிறகு திப 1:12-14 மரியா பற்றிய குறிப்பு ஒன்றைத் தருகிறது. இறுதியாக திருவெளிப்பாட்டு நூல் அதிகாரம் 12இல் சில மரபு மரியியல் அறிஞர்கள் மரியா சம்பந்தப்பட்ட மறைமுக நற்செய்தி குறிப்பொன்றைக் காண முயன்றார்கள.

இதற்கு மாறாக நற்செய்தி நூல்கள் மொத்தத்தில் 20 இடங்களில் மாயா பற்றிய செய்திகளைத் தருகின்றன. (1) குடும்பம் பற்றிய குறிப்புகள் மாற் 6:3; மத். 13:55; (2) உறவினர் பற்றிய தர்க்க ம் - மாற் 3:21; 31. மத். 12:46-56; லூக் 8:19-21; 11:27 (3) இயேசுவின் சீடர்குழாம் - யோ 2:1-12 (கானாவூர் திருமணம்); (4) சிலுவையின் அடியில் மரியா - யோக 19:26-27; (5) குழந்தைப் பருவ நிகழ்ச்சிகள் - மத். 1-2 அதி; லூக் 1-2 அதி

1. மாற்கு நற்செய்தியில் மரியா

மத்தேயு, லூக்காவில் காணப்படுகின்ற குழந்தைப் பருவ நிகழ்ச்சிகள் மாற்கு நற்செய்தியில் காணப்படவில்லை. மாற்கு நற்செய்தி இயேசுவின் பொது வாழ்விலிருந்து ஆரம்பமாகிறது. இங்கே மரியா பற்றிய குறிப்புகள் இயேசுவின் உறவினர் பற்றிய செய்தியில் மட்டுமே காணப்படுகிறது. மாற்கு 3:31-55 இயேசுவின் உண்மையான உறவினர் பற்றிய செய்தியாக அமைகிறது. இயேசுவின் தாயும் சகோதரர்களும் இயேசுவைக் காண வந்து வெளியில் நின்றுகொண்டு, அவரை வரச்சொல்லி ஆள் அனுப்புகிறார்கள். "என் தாயும் சகோதரர்களும் யார்? என்று கேட்டு, தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே! கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும், சகோதரியும் தாயும் ஆவார்” (மாற் 3:33-35) என்றார்.

இயேசுவின் இப்பதிலானது, பிற கிறிஸ்தவ சபைகளினால் கத்தோலிக்கத் திருச்சபையின் மரியா வணக்கத்திற்கு எதிரான விவிலிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. விவிலிய ஆராய்ச்சியின் அடிப்படையில் இயேசுவின் இக்கூற்று இரத்த உறவை விட விசுவாச உறவு பெரிதானது, அதற்கே அவர் தனது பணி வாழ்வில் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றார் என்பதற்கான ஆதாரமாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும். விசுவாசக் குடும்பம் இயேசுவின் உயரிய விழுமியங்களை முன் வைத்துக் கட்டப்பட்ட குடும்பம். இந்நோக்கில் அவரது வார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பவர்கள் இயேசுவுக்கு முதல் நிலையில் உள்ள உறவினர்களாக மாறுகின்றார்கள். அந்நிலைப்பாடு இரத்த உறவில் இயல்பாகப் பெற்ற தம் அன்னை மரியாவை மறுதலிப்பது என்று கொள்வதும் ஏற்புடையாதாகாது. தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே இயேசுவின் சகோதரரும் சகோதரியும் தாயும் என்றால், இயேசுவை உலகினில் ஈன்றதினால் மட்டுமின்றி இறைத் திருவுளத்தை முதன்மையாக ஏற்றமையாலும் மரியா இயேசுவின் தாயாகிறார். "மரியா இயேசுவை தம் உதரத்தில் தாங்கும் முன் விசுவாசத்தினால் முதலில் அவரை உள்ளத்தில் பெற்றெடுத்தார்” என்னும் புனித அகுஸ்தினாரின் கூற்று ஒப்பிட்டு நோக்கத்தக்கது. நம் அன்னைக்கு இயேசு இருவகைச் சிறப்புகளைத் தருவதாக இங்கே நாம் பொருள் கொள்ளலாம். (1) கடவுளின் திருவுளத்தை ஏற்று அவரது மகனை இவ்வுலகில் ஈன்று தர சம்மதித்தால் விசுவாசக் குடும்பத்தின் தலைமகளாகவும் (2) இவரை ஈன்று புவிக்கு வழங்கியதால், இயல்பு அடிப்படையில் தாயாகவும் மரியா மாறுகின்றார்.

இயேசு பெயல்செபூலைக் கொண்டு பேய் ஓட்டுவதாகவும் அவருக்கு பேய் பிடித்திருக்கிறது என்றும் மறைநூல் அறிஞர் குற்றம் சாட்டினர் (மாற்கு 3:20-30). இச்சூழலில் அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு அவரைப் பிடித்துக் கொண்டு வரச் சென்றனர் (மாற் 3:21). இயேசுவின் உண்மையான உறவினர் பற்றிய பகுதியும் இயேசு பற்றிய குற்றச்சாட்டுப் பகுதியும் ஒன்றையொன்று அடுத்து வருகின்றன: இது இயேசுவின் தாய் மரியாவுக்கு பெருமை சேர்ப்பதாக அமையவில்லை! விவிலிய அறிஞர்களிடையே இது பற்றிய விளக்கங்கள் சில காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்று, மரியாவும் இயேசு பற்றிய புரிதலில் ஒரு வளர்ச்சி நிலையைக் கொண்டிருந்தார் என்பதாகும். அதற்குக் காரணம் இயேசு இன்னாரென்று அவர் அறியாமல் இருந்தார் என்றல்ல. மாறாக, மரியா திருமுழுக்கு யோவான் குழாமைச் சார்ந்தவராகவும் அவரது வழிமுறைகள் மீட்புக்கு இட்டுச் செல்லும் நெறிகள் என்றும் அவர் நம்பியிருந்ததாலும் திருமுழுக்கு யோவானின் கடுந்துறவு, பாலைவன வாழ்வு, இறைச்சினத்தை முன்வைத்து நற்செய்தி ஆகியவற்றிற்கு மாறாக இயேசு பாவிகளோடு கொண்டிருந்த உறவுத் தோழமை, ஏழை எளியவர்களோடு விருந்தோம்பல், இறைவனின் இரக்கத்தை முன்வைத்த செய்தி ஆகியவை மரியாவின் மனத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும். இத்தகைய இயேசுவின் வாழ்வு-பணி பற்றிய புரிதல் சிக்கல் மரியாவின் பண்புக்கு பங்கம் விளைவிக்கத் தேவையில்லை! மற்ற நற்செய்தியாளர்கள் இயேசு பற்றிய குற்றச்சாட்டுக் குறிப்பை விட்டுவிடுகிறார்கள். மத்தேயும், லூக்காவும் இயேசு யார் என்ற கேள்விக்கு பதில் தருகின்ற போது "இவர் தச்சருடைய மகன் அல்லவா” (மத் 13:55, லூக் 4:22) என்று குறிப்பிடுகின்றார்கள். அதற்கு மாறாக, மாற்கு இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே!" (மாற் 6:3) என்று இயேசு மரியாவின் மகன் என்பதனை மாற்கு ஐயம் திரிபறக் குறிப்பிடுகின்றார். எனவே இயேசுவின் உறவினர்கள் பற்றிய பதில் அன்னை -மகன் இரத்த உறவை இயேசு இரண்டாம் நிலைக்குக் கொண்டு வந்தார் என்று காட்டுவதாக வாதிடுவது மாற்கு தரும் செய்தியல்ல.

2. மத்தேயு நற்செய்தியில் மரியா

மத்தேயு நற்செய்தியாளர் தரும் மரியா பற்றிய செய்திகளை இருவகைகளாகப் பிரிக்கலாம்.

1. இயேசுவின் குழந்தைப்பருவ நிகழ்ச்சிகளில் மரியா
2. இயேசுவின் பணி வாழ்வில் மரியா

1. இயேசுவின் குழந்தைப்பருவ நிகழ்ச்சிகளில் மரியா

அ. மூதாதையர் பட்டியல் (1:1-7)

மத்தேயு நற்செய்தி குறிப்பாக யூத கிறிஸ்தவர்களுக்காக எழுதப்பட்ட நூல். எனவே பழைய ஏற்பாட்டு நிறைவே இயேசு கிறிஸ்து என்பதையும், இரண்டாம் மோசேயாக வந்தவர்தாம் மிட்பா என்பதையம் சுட்டிக்காட்டுவது மத்தேயுவின் நோக்கம். இதற்கு ஒருவகை வரலாற்று அடிப்படையை ஆதாரமாகக் காட்டுவது இந்த மூதாதையர் பட்டியலின் நோக்கமாக அமைகிறது. ஆபிரகாமின் மகனும் தாவீதின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல் (1:1-2) என்று இம்மூதாதையர் பட்டியல் ஆரம்பமாகிறது.

அங்கு தந்தை வழி தலைமுறையே குறிப்பிடப்படுகிறது. ஆனால் மரியாவைத் தவிர்த்து நான்கு பெண்களுடைய பெயர்கள் இடம் பெறுகின்றன. 1) தாமார் (தொநூ 38:6-30) - இவர் ஒரு கனானேயப் பெண்; யூதாவின் மகனை மணந்து, அவர் தமக்கு குழந்தைப் பேறு தருமுன்னே இறந்ததால், தம் மாமனுடன் உறவு கொண்டு தமது குலம் தழைக்க வைக்க முனைந்தவர். 2) இராகாபு (யோசு 2:9) - எரிக்கோவில் வாழ்ந்த விலைமாது இவர். இஸ்ரயேலின் ஒற்றர் தப்ப உதவியவர். 3) ரூத்து (ரூத் 3:6-9; 14) - போலாமியப் பெண்ணான இவர் துணிவுடன் போவாசைச் சந்தித்து, அவரது அன்பைத் தேடி, இறுதியில் அவரை மணந்து தாவீதின் முப்பாட்டியானவர். 4) பத்சேபா (2 சாமு 11:1-8) - எத்தயர் குலத்தைச் சார்ந்த உரியாவின் மனைவி இவர். தாவீது மன்னர் இவருடன் விபச்சாரத்தில் ஈடுபட்டார்.

ஆண்களுடைய பெயர் பட்டியலையே மூதாதையர் பட்டியலாகத் தரும் மத்தேயு ஏன் இந்த நான்கு பெண்களுடைய பெயர்களைக் குறிப்பாகத் தருகின்றார் என்ற கேள்வி இயல்பாகவே எழும்புகிறது. இந்த நான்கு பெண்களும் வித்தியாசமான வாழ்வு வாழ்ந்தவர்கள். நால்வரில் மூவர் பாவிகள். இவர்களுடைய வாழ்வுக்கும் மரியாவுடைய வாழ்வுக்கும் பாரதூர வித்தியாசம் இருக்கிறது. இவர்களை அன்னை மரியின் முன்னோடிகள் என்று அழைப்பது முற்றிலும் பொருந்தாது. பெண்கள் என்ற முறையில் வேண்டுமென்றால் அவர்கள் முன்னோடிகள் என்று அழைக்கப்படலாம். வித்தியாசமான பெண்களை ஏன் மத்தேயு மூதாதையர் பட்டியிலில் இணைத்தார். என்ற கேள்விக்கு, இறைவன் வித்தியாசமானவர்களைக் கொண்டும், ஏன் பாவிகளைக் கொண்டும் தமது திட்டத்திதை நிறைவேற்றிக் காட்டுகிறார் என்பதை மத்தேயு உணர்த்துகிறார் என்று பதில் கொள்ளலாம்.

ஆ. மரியாவின் மகன் இயேசு

"ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோபு” (1:1-2) என்று குறிப்பிடும் மத்தேயு, இயேசுவைப் பற்றி வருகின்றபோது "யாக்கோபின் மகன், மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு” (1:16) என்று குறிப்பிடுவது உற்று நோக்கத்தக்கது. தாவீதின் குலத்தில் வந்த இயேசு யோசேப்பின் மகன் அல்லர். அவர் மரியாவின் மகன், என தூய ஆவியின் ஆற்றலால் பிறந்தவர் மத்தேயு வலியுறுத்துவதை உணர்கிறோம். அவர்கள் வாழுமுன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார்” (1:18ஆ). இவ்வாறு மரியா கருவுற்றிருந்தது தூய ஆவியின் வல்ல செயலால்தான் என்பதைத் திட்டவட்டமாகவம். ஆணித்தரமாகவும் எடுத்துரைக்கின்றார் மத்தேயு. மரியாவின் மண ஒப்பந்தம் பற்றிய நிகழ்ச்சியுரைகளும், யோசேப்பு நேர்மையாளர் என்ற வருணைனையும், மரியாவின் கன்னிமையை வலியுறுத்தும் பகுதிகளாக விளக்கப்பெறுகின்றன.

மத்தேயு, லூக்கா இருவரும் தரும் சியோலிடை குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளிலும் ஒரு முக்கிய வேறுபாடு காணக்கிடக்கிறது. மத்தேயு நற்செய்தியில் மெசியா பிறப்பு பற்றிய செய்தியை ஏற்பவரும், அந்த இறைக் கட்டளையை நிறைவேற்றுபவரும் யோசேப்பு. அதற்கு மாறாக, லூக்கா நற்செய்தியில் மரியா இறைச்செய்தியை ஏற்பவரும், அதனை நிறைவேற்றுபவருமாக சித்தரிக்கப்படுகிறார். மத்தேயு நற்செய்தியில் தாவீதின் ஊராகிய பெத்லகேமில் யோசேப்புக்கு ஒரு வீடு இருந்தது (2:11). எகிப்திலிருந்து அவர்கள் திரும்பியபோது அர்க்கெலாவுக்குப் பயந்து பெத்லகேம் செல்லாமல் நாசரேத்தூரில் வாழ்ந்தனர் என்று யோசேப்பு பற்றிய ஒரு சிறப்புக் குறிப்பும் காணப்படுகின்றது. மத்தேயு வழங்கும் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளின் கதாநாயகன் யோசேப்பாக இருந்தாலும் யோசேப்பு பெற்ற செய்தியில், கட்டளைகளின் மைய நபர்களாக குழந்தையும், அதன் தாயும் (2:11; 13-14; 20-21) குறிப்பிடப்படுகிறார்கள்.

இ. இறைவாக்குகளின் நிறைவு

"இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகனைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவர் என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன” (1:22-23) என்று மத்தேயு மெசியாவின் பிறப்பிற்கான இறைவாக்குப் பகுதியை ஆதாரமாகக் கொண்டு இயேசுவின் பிறப்புப் பற்றிய செய்திகளைத் தருகிறார். இயேசுவின் பிறப்பை முன்னறிவிக்கும் இறைவாக்குப் பகுதியாகக் காணப்படுவது எசாயா 7:14. ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ கருவுற்றிருக்கும் அந்த இளம்பெண் ஓர் ஆண் மகவைப் பெற்றெடுப்பாள். அக்குழந்தைக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவாள்" என்பதாகும்.

மத்தேயு குறிப்பிடும் இறைவாக்குப் பகுதி முதல் பொருளில் நேரிடையாக இயேசுவின் பிறப்பைக் குறிக்கின்றதா என்ற கேள்வி விவிலிய ஆராய்ச்சியில் எழுப்பப்படுகிறது. பழைய ஏற்பாட்டு இறைவாக்கின் நிறைவே இயேசு என்னும் மெசியாவின் பிறப்பு என்று மத்தேயு கருதியதில் ஐயமில்லை .

ஆனால் மேற்கோள் காட்டப்பட்டுள்ள எசாயாவின் இறைவாக்குப் பகுதியானது முதல் பொருளில் மற்றொரு நிகழ்ச்சியைக் குறித்து நிற்கிறது. யூதேயா நாட்டின் அரசரான ஆகாசு போர் ஆகாசு போர் தொடுக்கும் சூழலைச் சந்திக்கின்றார். சிரியா நாட்டு அரசரும், இஸ்ரயேல் நாட்டு அரசரும் யூதேயா நாட்டின் மேல் போர் தொடுத்து அதை வீழ்த்த முயலுகின்றனர். அப்போது மனம் கலங்கி நிலை குலைந்து நின்ற யூதேயா நாட்டு மன்னர் ஆகாசை இறைவாக்கினர் வழியாக இறைவன் தேற்றுகின்றார். யூதேயா நாடு நிலைபெறும். ஆகாசின் அரசு நிலைக்கும். எனவே அவர் பயந்து ஆண்டவர் தம் பாதுகாப்பாக இருக்கின்றார் என்பதனை மறந்து பகை மன்னர்களேடு கூட்டுச் சேர்ந்து எதிரிகளை வீழ்த்த முயற்சி செய்யத் தேவையில்லை. போரில் படைகளின் ஆண்டவரே யூதா நாட்டிற்கு வெற்றியைத் தருவார் என்று இறைவாக்கினர் கூறியதை ஆகாசு நம்பவில்லை. அப்பொழுது மேற்கண்ட இறைவாக்கு அவருக்கு வழங்கப்படுகிறது. கருவுற்றிருக்கும் அந்த இளம்பெண் முதல் நிலையில் நகாபின் மனைவியைக் குறிக்கின்றது. அவர் பெற்றெடுக்கும் ஆண்மகன் போரின் இறுதியில் நிகழும் நிகழ்வு. போரில் வெற்றி கிடைக்கின்ற போதே, அரச குடும்பம் நிலைக்கும். ஆண்மகன் அரசின் வாரிசு. இவ்வருங்குறியை எசாயா முதல் நிலையில் குறிப்பிடுகின்றார் என்று விவிலிய அறிஞர்களிடையே ஒருமித்த கருத்து நிலவுகிறது.

எசாயாவின் இறைவாக்கு அன்றைய வரலாற்றுச் சூழ்நிலையில் முதல் நிலையில் ஆகாசின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. இருப்பினும் இவ்விறைவாக்கு இரண்டாம் பொருளில் 700 ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ந்த இயேசுவின் பிறப்பை முன்னறிவிப்பதாகவும் கொள்ளலாம். நேரடிப் பொருள் ஆகாசுக்கும், மறைமுகப் பொருள் மெசியாவை எதிர்பார்த்திருக்கும் மக்களுக்கும் பொருந்துவதாகக் கொள்ளலாம்.

ஈ. மரியாவின் கன்னிமை

பழைய விவிலிய தமிழ் மொழி பெயர்ப்பில் எசாயா. 7:14, மத் 1:22 ஆகிய இரு இடங்களிலும் 'கன்னி' என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டிருந்தது. புதிய மொழி பெயர்ப்பில் பழைய ஏற்பாட்டு நூலில் 'இளம்பெண்' என்றும் மத்தேயு நற்செய்தியில் 'கன்னி' என்றும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. எனவே இது ஒரு பட்டிமன்றப் பொருளாக மாறியுள்ளது. எழுபதின்மர் மொழிபெயர்ப்பு என்னும் பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பில் எசா 7:14 கன்னி என்றே மொமி பெயர்க்கப்பட்டிருந்தது. அதனால் மத்தேயுவும் 1:22 இல் கன்னி என்ற சொல்லாட்சியையே கையாள்கிறார். புதிய தமிழ் மொழிபெயர்ப்பு எபிரேய மூலத்தில் உள்ளபடி எசாயா 7:14ஐ இளம்பெண் என்றும் மத் 1:22ஐ கன்னி என்றும் அம்மூல நூல்களின் அடிப்படையில் மொழிபெயர்த்துள்ளது.

இம்மொழிபெயர்ப்பு மரியாவின் கன்னிமைக்கும் பங்கம் விளைவித்து விட்டதாகக் கருதத் தேவையில்லை. மத்தேயு, தான் பெற்ற மரபுச் செய்தியை மாற்றாமல் தமது நற்செய்தியில் தருகின்றார். கி.பி. 70-75 ஆண்டுகளில் எழுதப்பெற்ற மத்தேயு நற்செய்திக்கு முன்னரே மரியாவின் கன்னிமை பற்றிய கருத்து கிறிஸ்தவ விசுவாச சமூகத்தில் பெரும்பான்மையினரின் கருத்தாக நிலவி வந்தது என்பது தெளிவாகத் தெரிகிறது. மக்தேயும் மரியாவின் கன்னிமையை மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். அதற்குப் பிறிதொரு சான்றும் தரப்படுகின்றது. "மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை.... (மத் 1:25) என்ற செய்தி தூய ஆவியின் வல்லமையால் மரியா மகனைப் பெற்றெடுத்தார் என்பதற்காக மத்தேயு இணைத்த குறிப்பே தவிர, இயேசுவுக்குப் பின் பிற சகேர்தர சகோதரிகள் பிறந்தார்கள் என்பதற்கான ஆதாரம் அன்று!

2. இயேசுவின் பணி வாழ்வில் மரியா

மத்தேயுவின் மூலமாகிய மாற்கின் செய்திகளைக் கையாளுகின்ற மத்தேயு தம் இறையியல் நோக்கிற்கேற்பவும், தாம் பெற்ற மரபின் அடிப்படையிலும் சில மாற்றங்களைச் செய்கின்றார். இயேசுவின் உண்மையான உறவினர் பற்றி எடுத்துரைக்கும் பகுதியில் (12:45-50) மாற்கில் வரும் கடுமையான சொற்களையும் தவிர்த்து இயேசுவின் உறவினர் பற்றிய பகுதியினை மென்மைப்படுத்தித் தருகின்றார் மத்தேயு.

மத் 13:53-58 - நாசரேத்தூர் செபக்கூட நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியிலும் மேலே கூறப்பட்ட மற்ற நிகழ்ச்சி போன்று மென்மையான பாணியை மத்தேயு கையாளுகின்றார். மாற். 6:3இல் தரப்படுகின்ற சில விவரங்களை மத்தேயு தவிர்த்து விடுகின்றார். இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே?" (6:55) என்ற சொற்றொடரின் மூலம் இயேசு தாவீதின் வழிவந்தவர், இயேசு தூய ஆவியால் பிறந்தவர், யோசேப்பின் மகன் அல்லர் என்ற தனது நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை மத்தேயு வலியுறுத்துகிறார்.

3. லூக்கா நற்செய்தியில் மரியா

லூக்காவின் நற்செய்திக்குப் பல்வேறு சிறப்புப் பெயர்கள் உண்டு. அவற்றுள் ஒன்று பெண்களின் நற்செய்தி'. இயேசுவின் பிறப்பு முதல் விண்ணேற்பு நிகழ்வு வரை அதிகமாக பெண்கள் இடம் பெற்றதாக குறிப்பிடும் நூல் லூக்கா நற்செய்தி. லூக்காவின் குழந்தைப் பருவ நிகழ்ச்சியுரைகளின் கதாநாயகியாக மரியா வருணிக்கப்படுகிறார். இயேசுவின் பணி வாழ்விலும் ஏனைய இரு நற்செய்திகள் போன்றே அதே சூழ்நிலையில் மரியா இடம் பெறுகிறார். மத்தேயுவை விட ஒருபடி மேலே சென்று, இயேசுவின் தாயும், சகோதரரும் அவரிடம் வந்தார்கள்; ஆனால் மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுக முடியவில்லை (லூக் 8:19) என்ற காரணத்தைக் காட்டி இயேசுவின் அனனைக்கும் அவரது உறவினருக்கும் நல்ல சூழ்நிலையை அமைத்துத் தருகிறார். இந்நிகழ்ச்சியை மாற்கு இயேசுவின் உறவினர் சார்ந்த வகையில் எதிர்மறையில் சித்தரிக்க, மத்தேயு நடுநிலைமையைக் கடைப்பிடிக்க, லூக்கா நேர்மறையில் இயேசுவின் உறவினர் சிந்திப்பது உற்று நோக்கத்தக்கது.

அன்னை மரியாவினுடைய பல்வேறு சிறப்புப் பண்புகள் லூக்கால குழந்தைப்பருவ நிகழ்ச்சிகளில் இனம் காட்டப்படுகின்றன.

1. குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளில் மரியா

அ. இயேசு பிறப்பின் முன்ன றிவிப்பு (1:26-38)

இறைவன் வானதூதரை நாசரேத்தூரில் வாழ்ந்த மரியா என்னும் கன்னிகையிடம் அனுப்புகிறார். அவரைத் தூதர் அருள் மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" (1:28ஆ) என்று கூறி வாழ்த்துகிறார். லூக்காவின் பார்வையில் மரியா இறைவனின் அருளை மிகப் பெற்றவராகவும், கன்னிகையாகவும் இருந்தார் என்பது ஐயத்திற்கு அப்பாற்பட்டது.

தூதரின் செய்தியைக் கேட்ட மரியா தமது தயக்கத்தை வெளிப்படுத்துகிறார். மரியாவின் கேள்விக்குப் பதில் தந்த தூதர் செக்கரியாவைத் தண்டித்ததை (1:18-19) லூக்கா குறிப்பிடுகிறார். பிறப்பு அறிவிப்பு' இலக்கிய வகையில் இறைவனின் செய்தி தரப்படுகின்ற போதே செய்தியைப் பெறுபவர் தமது தயக்கத்தைத் தெரியப்படுத்துவது, விளக்கம் கேட்பது என்பதற்கு இடமுண்டு. அப்பொழுதெல்லாம் அவர்களுடைய தயக்கம் ஆதரவு மொழிகளால் தேற்றப்படுகிறது. அவர்களின் கேள்விகளுக்குப் பதில் தரப்படுகிறது. மோசே 'எனக்குப் பேசத் தெரியாதே' என்றும், 'எசாயா' 'அசுத்த உதடுகளைக் கொண்டவன் நான்' என்றும், எரேமியா நான் இளைஞன்' என்றும் இறைவாக்குப் பணிக்கு தாங்கள் தகுதியற்றவர்கள் என்று தயங்குவதைப்போல, இங்கே மரியாவும் "இது எப்படி நிகழும்? நான் கன்னியாயிற்றே” (1:34) என்ற கேள்வியோடு கூடிய தயக்கத்தை முன் வைக்கிறார்.

நம் தமிழ் மரபில் நிகழ்வது போன்று இஸ்ரயேல் சமூகத்தில் மண ஒப்பந்தம், திருமணம் ஆகிய இரு நிகழ்ச்சிகள் நிகழ்ந்து வந்துள்ளன. யூத சமூகத்தில் திருமணம் இரு கட்டங்களில் நடந்தேறியது. முதல் கட்டம்ஒப்பந்த நிகழ்ச்சி. சாட்சிகளின் முன்னிலையில் ஒரு இளைஞனும் ஒரு இளம் பெண்ணும் திருமண ஒப்பந்தம் செய்து கொள்வர். இந்நிலையில் ஒப்பந்தம் செய்துள்ள இளைஞர், தன்னோடு ஒப்பந்தம் செய்துள்ள சட்டரீதியான உரிமைகளைப் பெறுவார். இவ்விளம் பெண் இவ்விளைஞனுடைய மனைவி என்றே அழைக்கப்பட்டார் (மத் 1:20,24). இருப்பினும் அவர்கள் கூடி வாழும் வரை அவ்விளம்பெண் தன் பெற்றோர்களுடன் வாழ்ந்து வந்தார். அக்கட்டத்தில் அவர்கள் கணவன்மனைவி (தாம்பத்திய) உறவு கொள்வதில்லை (மத் 1:8). இரண்டாவது கட்டமான திருமண விழா பொதுவாக ஓராண்டுக்குப் பிறகு நிகழும். அப்பொழுது மணமகன் மணமகளை (ஒப்பந்தமாயிருக்கும் பெண்ணை) ஆடம்பரமாகத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று மனை மர் 1:20.24) அவருடன் கூடி வாழவார். இயேசுவின் பிறப்புப் பற்றிய செய்தியானது மரியாவுக்கு மண ஒப்பந்தம் நிறைவேறிய பிறகு, இரண்டாவது கட்டமாகிய திருமண நிகழ்ச்சி நடைபெறுமுன் வழங்கப்படுகிறது.

"தூய ஆவி உம்மீது வரும், உன்னதக் கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை காயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்" (1:35) என்ற செய்தியைக் கேட்டு இறைத்திருவுளத்தை உடனே ஏற்று வாழ்வை அர்ப்பணிக்கிறார் மரியா. “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" (1:38) என்ற சொற்களால் இறைத்திருவுளத்தோடு தன்னை இணைத்துக் கொள்கிறார்.

ஆ. மரியா - எலிசபெத் சந்திப்பு (1:39-45)

தமது உறவினரான எலிசபெத்து அவரது முதிர்ந்த வயதில் கருவுற்றிருக்கிறார் என்று அறிந்ததும் அவருக்கு உதவி செய்ய மரியா விரைகிறார். எலிசபெத் வாழ்ந்து வந்த அயின் கரீம் என்ற ஊர் ஏறத்தாழ 90 மைல் தொலைவில் இருந்தது. மூன்று அல்லது நான்கு நாள் பயணத்தையும், பயணத்தின் ஆபத்துக்களையும் தொல்லைகளையும் பொருட்படுத்தாது, உதவி தேவைப்படும் தமது உறவினருக்கு உதவுவதற்காக மரியா விரைந்து செல்கிறார். விரைந்து' என்பதற்கு மிகுந்த ஆர்வத்தோடு, தாம் பெற்ற இறை வெளிப்பாட்டிற்கு கீழ்ப்படிந்து (ஒப் 2:16) என்று பொருள் கொள்ளலாம். இவ்வாறு ஏறத்தாழ ஆறு மாதங்கள் எலிசபெத்து வீட்டில் தங்கியிருந்து, பணிவிடை புரிந்த பிறகு, மரியா தம் வீடு திரும்புகிறார் (1:56). தேவையறிந்து, கேட்கப்படுமுன்பே குறிப்பறிந்து செயல்படும் அன்பின் திருத்தூதராக மரியா லூக்காவால் சித்தரிக்கப்படுகிறார். அதுவே மரியா-எலிசபெத்து சந்திப்பின் சிறப்பம்சமாக அமைகிறது.

இறை வெளிப்பாட்டில் வழங்கப்பட்ட செய்திக்கு ஒத்துழைத்த இரு பெண்களின் சந்திப்பில் இரு புகழ்ப் பாடல்கள் வெளிப்படுகின்றன. எலிசபெத்தின் புகழ்ப்பா (1:42-45) மரியாவைப் பற்றியதாக அமைகிறது. மரியாவின் புகழ்ப்பா இறைவனின் மகத்தான செயல்களை புகழ்ந்து போற்றுவதாக அமைகிறது (1:46-56). எலிசபெத்தை மரியா வாழ்த்தினார் (1:41) என்று குறிப்பிடும் நற்செய்தியாளர் என்ன வார்த்தைகளால் அல்லது எதற்காக வாழ்த்தினார் என்று குறிப்பிடவில்லை!

எலிசபெத்து "பெண்களுள் நீர் ஆசி பெற்றவர்" (1:42) என்று மரியாவை வாழ்த்துகிறார். இஸ்ரயேல் வரலாற்றில் கனானயரிடமிருந்து விடுதலை வெற்றி ஈட்டித் தந்த யாயேலும் (நீத 5:24), அசிரீயரிடமிருந்து விடுதலை பெற்றுத் தந்த யூதித்தும் (யூதி 13:123) பெண்களுள் பேறு பெற்றவர் என யூத மரபில் போற்றப்பட்டனர். மரியாவோ இஸ்ரயேல் இனத்திற்கு மட்டுமின்றி மனித குலம் முழுமைக்கும் இயேசு வழியாக மீட்பைப் பெற்றுத் தருவதால், பெண்களுள் ஆசி பெற்றவராகப் போற்றப்படுகிறார். அன்னையின் பெருமை அவர் ஈன்ற பிள்ளைகளின் உயர்வைப் பொறுத்து அமையும் என்பது யூத எண்ணம். அப்பின்னணியில் மரியா ஈன்றெடுக்க இருக்கும் குழந்தை வழியாக (உம் வயிற்றில் வளரும் குழந்தை ஆசி பெற்றதே 1:42) அவர் புகழ் பெறுவதாக சித்தரிக்கப்படுகிறார். மேலும் மரியா முற்றிலும் இறைவனை நம்பி அவருக்குத் தம்மையே அர்ப்பணம் செய்ததால் (1:38)க எல்லாத் தலைமுறைகளிலும் பேறு பெற்றவர் (1:48) ஆகிறார்.

இ. மரியாவின் புரட்சிக்கீதம் (1:46-56)

எலிசபெத்தின் வாழ்த்துக்கான மரியாவின் பதில் இறைவனைப் பற்றிய புகழ்ச்சிக் கீதமாக அமைகிறது. இப்பாடல் குழந்தைப் பேறு பெற்ற சாமுவேலின் அன்னை அன்னாவின் புகழ்ச்சிக் கீதத்தோடு (1 சாமு 2:1-10) ஒப்பிட்டு நோக்கத்தக்கது. இறைவனின் வல்ல செயல்பாடுகளின் அழுத்தம் மரியாவின் பாடலில் தெளிவாகத் தெரிகிறது. மரியாவின் பாடலைப் புரட்சிப் பாடல் என்றும் அழைக்கலாம். சமூக, அரசியல், பொருளாதார, ஆன்மீக புரட்சிகளுக்கான பூபாள வித்துக்கள் இப்பாடலிலே நிறைந்துள்ளன. பழைய ஏற்பாட்டுப் பின்னணியில் பெரும்பாலும் இறையரசுப் பணிக்கான அழைப்பு ஆண்களுக்கே தரப்படுகிறது. ஆனால் புதிய ஏற்பாட்டின் முதல் அழைப்பு மரியா என்ற பெண்மணிக்கு விடுக்கப்படுகிறது. அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்” (1:48) என்ற சொல் ஆண் சமூகத்தின் அடிமைகளாக இருக்கும் பெண் சமூகத்தின் பிரதிநிதி என்ற முறையில் புகழ்மொழியாக இறைவனை நோக்கி எழுப்பப்படுகிறது. 1:50-53 வசனங்களில் இறைவன் நிகழ்த்துகின்ற சமூக, அரசியல், பொருளாதார புரட்சிகள் கோடிட்டுக் காட்டப்படுகின்றன. புதிய சமுதாயத்தை இறைவன் படைக்கின்றார். அதன் உடன் படைப்பாளராக மரியா அழைக்கப்படுகிறார். அதே அழைப்பை ஏனைய பெண்களும், இறைவனில் விசுவாசம் கொள்ளும் அனைவரும் பெறுகிறார்கள் என்பதை மரியாவின் புரட்சிக்கீதம் நினைவூட்டி நிற்கிறது.

ஈ. இயேசுவின் கோவில் அர்ப்பணம் (2:21-38)

1) இயேசுவின் கோவில் அர்ப்பண நிகழ்ச்சியுரை முதல் பகுதியில் (2:21-24) ஒன்றன் பின் ஒன்றாக நடந்தேறிய நான்கு நிகழ்ச்சிகளை ஒரே நிகழ்ச்சி போல் தருகிறது. 1. விருத்தசேதனம் 2. பெயரிடுதல் 3. தலைமகன் அர்ப்ப ணம் 4. தாயின் சுத்திகரம்.

யூத ஆண்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்யப்பட்டனர். இது ஆபிரகாமோடு இறைவன் செய்து கொண்ட உடன்படிக்கையின் அடையாளம். ஆண் குழந்தை பிறந்த எட்டாம் நாள் விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும் என்பது தொநூ 17:9-14 விதிக்கும் சட்டம். இச்சட்டப்படி இயேசு விருத்தசேதனம் செய்யப்படுகிறார்.

அதனைத் தொடர்ந்து குழந்தைக்குப் பெயர் சூட்டும் சடங்கு நடைபெறுகிறது. முன்னோரின் பெயரைக் குழந்தைக்குச் சூட்டும் யூத மரபை 11:59-61) விடுத்து, காட்சியில் சொல்லப்பட்ட இயேசு யாவே மீட்கிறார்) என்னும் பெயரை (1:31) மரியா தம் குழந்தைக்குச் சூட்டி மகிழ்கிறார்.

எகிப்திய விடுதலைக்குமுன் கடவுள் எகிப்தியரின் தலைப்பேறுகளை அழித்து, இஸ்ரயேல் குலத்துக்கு விடுதலை அளித்ததால், தலைப்பேறுகள் இறைவனுக்கென அர்ப்பணிக்கப்பட்டனர். இவர்கள் இறைப் பணியாற்றி வந்தார்கள். பிற்காலத்தில் லேவியர் குலம் இப்பணியை ஏற்றுக் கொண்டதால் ஏனைய குலத்து ஆண்பிள்ளைகள் ஐந்து செக்கல் பணம் கொடுத்து மீட்டுக் கொள்ளப்பட்டனர் (எண் 18:15-16; 23:12-13). குழந்தைப் பிறப்பால் தாய் தீட்டுப்பட்டவராகக் கருதப்பட்டார். அதனால் ஆண் மகவைப் பெற்றவர் நாற்பது நாள் தீட்டு (12:2-4) கழித்து சுத்திகரச் சடங்கை நிறைவேற்றி தூய்மை பெறுவார். ஏழைகள் வழங்கும் இரண்டு காட்டுப் புறாக்கள் அல்லது இரண்டு புறாக் குஞ்சுகளைப் பலியாகக் கொடுத்து (2:24) மரியா இக்கடமையை நிறைவேற்றினார்.

2. சிமியோன், அன்னா ஆகிய இரு யூத குலப் பெரியவர்களும் எருசலேம் ஆலயத்திற்கு வந்து குழந்தையைப் பார்த்து மகிழ்ந்து இறைவனைப் போற்றிப் புகழ்கின்றனர். இதில் சிமியோன் மரியாவிடம் கூறிய வார்த்தைகள் பல நூற்றாண்டுகளாகக் கல்வாரி நிகழ்ச்சியின் முன்னுரைப்பாக விளக்கம் தரப்பட்டு வந்தது. விவிலிய ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி, "இதே, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளியிடப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” (2:3-35) என்ற சிமியோனின் அருள்வாக்கு கல்வாரி நிகழ்ச்சியோடு சம்பந்தப்படாத ஒன்று; ஏனெனில் லூக்கா நற்செய்திப்படி மரியாவுக்குக் கல்வாரியில் இடமே இல்லை. இயேசு குடும்பங்கள் நடுவே பிரிவினை என்னும் வாளைக் கொணர்கிறார் (12:51-53).

உ. கோவிலில் சிறுவன் இயேசு (2:41-52)

பக்தியுள்ள யூதர்கள் பாஸ்கா விழா, பெந்தக்கோஸ்து விழா மற்றும் கூடார விழாவை எருசலேமிற்குச் சென்று கொண்டாடி வந்தனர். பெண்களும் சிறுவர்களும் செல்ல வேண்டிய கடமை இல்லாதிருந்தாலும் ஆண்டுதோறும் மரியா தம் கணவர் யோசேப்போடு எருசலேமிற்கு பாஸ்கா விழாவிற்குச் சென்று வந்தார், அவரோடு தம் மகனையும் அழைத்துச் சென்று வந்தார் (2:41-42) என்று லூக்கா குறிப்பிடுகிறார். இயேசுவுக்கு பன்னிரு வயது நடக்கும்போது பாஸ்கா விழாவிற்காக எருசலேம் சென்ற இயேசு அங்கேயே தங்கி விடுகிறார். பதறிக் கொண்டு திரும்பி வந்து மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக் கொண்டிருந்தோமே (2:48) என்று தம் மகனைக் கேட்ட அன்னை மரியாவுக்கு இயேசு தரும் பதில் திகைக்க வைக்கிறது. நீங்கள் ஏன் என்னை தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குக் தெரியாதா?' (2:49) என்ற இயேசுவின் பதில் வழியாக இறைத் திருவுளத்தை நிறைவேற்றுவதே தம் முதல் கடமை, கிடைத்தற்கரிய பேறு என்ற உண்மையை நற்செய்தியாளர் உணர்த்த விரும்பியதாகப் பொருள் கொள்ளப்படுகிறது.

2. தொடக்கத் திருச்சபையில் மரியா

குழந்தைப் பருவ நிகழ்ச்சிகள், இயேசுவின் பணி வாழ்வு, இயேசுவின் விண்ணேற்பிற்குப் பின் தொடக்கத் திருச்சபையில் அன்னை மரியாவின் பங்கு என மூன்று முக்கிய காலக் கட்டங்களில் லூக்கா மரியாவை இனம் காட்டுகிறார்.

இயேசுவின் மரணத்தால் அவரது சீடர்கள் தைரியம் இழந்தவர்களாக, தங்கள் வாழ்வின் குறிக்கோள் சிதறியதாக எண்ணி சித

Indirizzo

Rome
00173

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando The truth about Mary pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta Il Luogo Di Culto

Invia un messaggio a The truth about Mary:

Condividi