Sri Kannaki Amman Temple Milano Pagina Ufficiale

Sri Kannaki Amman Temple Milano Pagina Ufficiale சுயமுன்னேற்றம் பொழுது போக்கு

உலகில் இயற்கை வளங்களும் பூர்வீகமும் நிறைந்த இத்தாலி நாட்டின் மிலானோ நகருக்கு அன்மையில் கப்போனாகோ எனும் பதியில் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மனின் பேரருட் கருணையினாலும், அன்பர்களின் அயராத முயற்சியினாலும் மேற்படி ஆலயம் இத்தாலிய சட்ட வரைபுகளுக்கு அமைவான சமய அமைப்பாகப் பதிவு செய்யப்பெற்றிருக்கும் செய்தி அம்பாள் அடியவர்கள் அனைவர்க்கும் மகிழ்ச்சி தருவதாகும்.

இதன் பிரகாரம் இ

துவரை காலமும் நடைமுறையிலிருந்த அறங்காவலர் நிர்வாக அமைப்பு நிலையிலிருந்து பொது நிர்வாக அமைப்பில் ஆலயச் செயற்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றது.

மிலானோ அருள்மிகு ஶ்ரீ கண்ணகை அம்மன் அடியார்களே!இத்தாலியின் மிலானோ நகரில், 2013ம் ஆண்டிலிருந்து மிகச் சிறப்பாக பூஜைகள், வ...
28/06/2019

மிலானோ அருள்மிகு ஶ்ரீ கண்ணகை அம்மன் அடியார்களே!

இத்தாலியின் மிலானோ நகரில், 2013ம் ஆண்டிலிருந்து மிகச் சிறப்பாக பூஜைகள், விழாக்கள், நடைபெற்ற ஶ்ரீகண்ணகையம்மன் ஆலயத்திற்கான தற்போதைய நிலைகள் குறித்தும், புதிய இடமொன்றினைத் தெரிவு செய்வது தொடர்பாகவும், எதிர் வரும் 07.07.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணிக்கு Via Giacomo matteotti 62, agrate brianza (MB) 20864 எனும் முகவரியில், ஶ்ரீ கண்ணகை அம்மன் ஆலய அடியவர்கள், சந்தா செலுத்தும் அங்கத்தவர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள், ஆலய குருமார்,உள்ளடங்கிய கலந்துரையாடல் நடைபெற இறையருள் கூடியுள்ளது. ஆதலால் அனைவரும், அவ்வமயம் நேரில் சமூகந்தந்து, தங்களது மேலான ஆலோசனைகளைத் தந்துதவமுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இங்ஙனம்,
ஆலய நிர்வாகசபையினரும், குருமாரும்.

தொடர்புகளுக்கு:
Whatsapp 00393314466055.

14/01/2019

Cari devoti di Sri Kannaki Amman,

C'è un incontro urgente organizzato nel tempio Sri Kannaki Amman sabato 19.01.2019 alle 15.00.
Chiediamo gentilmente di partecipare a questo incontro a tutti i devoti, i membri e le persone amministrative.

Ci scusiamo per il fatto che questo incontro sia stato organizzato in tempi brevissimi a causa della situazione inaspettata e imprevista del tempio.

Lì per questo è un incontro importante. Quindi, chiediamo e invitiamo tutti voi a partecipare gentilmente e aiutarci a prendere importanti decisioni riguardo al tempio, invitiamo a tutti i devoti di Sri Kannaki Amman, persone, sostenitori e membri, donatori mensili e membri del comitato del tempio

Grazie per la tua azienda

Comitato del Tempio e Guru

14/01/2019

அனைவர்க்கும் வணக்கம் !

எதிர்வரும் 19.01.2019 சனிக்கிழமை பிற்பகல் 3.00 (15.00) மணிக்கு, மிலானோ ஶ்ரீ கண்ணகை அம்மன் ஆலய அடியவர்கள், சந்தா செலுத்தும் அங்கத்தவர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள், ஆலய குருமார், ஆகியோருடனான அவசர பொதுக் கூட்டம் ஒன்று ஆலய மண்டத்தில் நடைபெறவுள்ளதால் அனைவரையும் தவறாது சமூகந்தரும் வண்ணம் அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

மிக அவசரமானதும், முக்கியமானதூன சூழலில் அவசரபொதுக் கூட்டத்திற்கான இந்த அழைப்பு குறுகிய கால அவகாசத்தில் விடுக்கப்பட்டுள்ளது.

இது பலருக்குச் சிரமமானதாக இருந்தாலும் கூடிய வரை தவறாது இந்தக் கூட்டத்திற்குச் சமூகந்தந்து, ஆலயத்தின் வளர்ச்சிக்கு உதவுமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

Dear Sri Kannaki Amman Devotes,

There is an urgent meeting organized in Sri Kannaki Amman Temple on Saturday 19.01.2019 at 15.00 PM.
We kindly request to participate all the devotees and members and administrative people to this meeting.

We apologies that this meeting arranged by very short time due to the unexpected urgent situation regarding the temple. There for this is an important meeting.

So, we request and invite you all to kindly participate and help us to make important decision regarding the temple,
we inviting to all the Sri Kannaki Amman devotees, people, well-wishers and members, monthly donors and the committee members of the temple

Thank you for your corporation
Temple Committee and Gurus

2019 ஜனவரி 01 காலை சிறப்பு வழிபாடு அருட்காட்சிகள்
04/01/2019

2019 ஜனவரி 01 காலை சிறப்பு வழிபாடு அருட்காட்சிகள்

18/12/2018

ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம் ஆங்கில புதுவருட பிறப்பை முன்னிட்டு விஷேட அபிஷேக பூஜை 01.01.2019 செவ்வாய்க்கிழமை காலை 08.00 மணி

மெய்யடியார்களே! எதிர்வரும் 01.01.2019 செவ்வாய்க்கிழமை காலை 08.00 மணிக்கு ஆங்கில புதுவருட பிறப்பை முன்னிட்டு ஸ்ரீ கண்ணகி அம்மனுக்கு விஷேட அபிஷேகம் , பூஜை நடைபெறத் திருவருள் பாலித்துள்ளது.

அடியவர்கள் அனைவரும் அந்நேரம், ஆசார சீலர்களாக வருகை தந்து ஆலய தரிசனம் செய்து அம்பாளின் திருவருள் பெற்றுயுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

இங்ஙனம் ஆலய குருமாரும் நிர்வாக சபையினரும்

----------

Sri Kannaki Amman Temple Milano - New Year Pooja 2019

Special Abisegam & Pooja will be held in Sri Kannaki Amman Temple Milano at 01.01.2019 on 08.00 (AM). We kindly request to participate all the devotees.

Temple Guru & Administratives

ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம் - கேதார கெளரி விரதம் 07.11.2018  புதன் கிழமை காலை 08.30 மணிமெய்யடியார்களே! எதிர்வரும் 07.11.201...
30/10/2018

ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம் - கேதார கெளரி விரதம் 07.11.2018 புதன் கிழமை காலை 08.30 மணி

மெய்யடியார்களே! எதிர்வரும் 07.11.2018 புதன் கிழமை காலை 08.30 மணிக்கு கேதார கெளரி விரத நிறைவு தினத்தை முன்னிட்டு ஸ்ரீ கண்ணகி அம்மனுக்கு விஷேட அபிஷேகம் , பூஜை மற்றும் கேதார கெளரி விரத வழிபாடும் நடைபெறத் திருவருள் பாலித்துள்ளது.

அடியவர்கள் அனைவரும் அந்நேரம், ஆசார சீலர்களாக வருகை தந்து ஆலய தரிசனம் செய்து அம்பாளின் திருவருள் பெற்றுயுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

இங்ஙனம் ஆலய குருமாரும் நிர்வாக சபையினரும்

----------

Sri Kannaki Amman Temple Milano - Kedara Gowri Viratham 2018

Special Abisegam & Pooja will be held in Sri Kannaki Amman Temple Milano at 07.11.2018 on 08.30 (AM). We kindly request to participate all the devotees.

Temple Guru & Administratives

28/09/2018

ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம் - 06/10/2018 புரட்டாதிச் சனி விசேட வழிபாட்டு பூஜை (சனிக்கிழமை)

மெய்யடியார்களே!

எதிர்வரும் 06.10.2018 சனிக்கிழமை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் காலை 11.00 மணி முதல் விசேட பூஜை மற்றும் சனீஸ்வர பெருமான் விசேட வழிபாடு ஆகியன நடைபெற அம்பாளின் திருவருள் பாலித்துள்ளது.

அந்நேரம் அடியார்கள் யாவரும் ஆலயத்திற்கு ஆசார சீலர்களாக வந்து தரிசித்து உய்யுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

இங்ஙனம் ஆலய குருமாரும் நிர்வாக சபையினரும்

--------------------------------

Sri Kannaki Amman Temple - 06/10/2018 (Saturday) Special Poja

Special Pooja will be held in Sri Kannaki Amman Temple at 06.10.2018 Saturday on 11.00 (AM). We kindly request to participate all the devotees.

Temple Guru & Administrative

ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம் மிலானோ -   கண்ணகி அம்மன் ஆலயத்தில் 5/8/2018 மற்றும் 16/09/2018 ஞாயிற்றுக்கிழமைகளில்  நடைபெற்ற வ...
17/09/2018

ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம் மிலானோ - கண்ணகி அம்மன் ஆலயத்தில் 5/8/2018 மற்றும் 16/09/2018 ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற விஷேட அபிசேக பூஜை இன் போது சில தருணங்கள்.

ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம் - 16/09/2018 விசேட அபிசேகம் பூஜை (புதன் கிழமை 12/09/2018 நிகழும் ஆவணிச் சதுர்த்தியை முன்னிட்ட வ...
09/09/2018

ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம் - 16/09/2018 விசேட அபிசேகம் பூஜை (புதன் கிழமை 12/09/2018 நிகழும் ஆவணிச் சதுர்த்தியை முன்னிட்ட விஷேட பூஜை)

மெய்யடியார்களே!

எதிர்வரும் 16.09.2018 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் காலை 11.00 மணி முதல் விநாயகப் பெருமானுக்கும் மற்றும் கண்ணகி அம்பாளுக்கும் விசேட அபிசேகம் நடைபெற்று அதைத்தொடர்ந்து விசேட பூஜை ஆகியன நடைபெற அம்பாளின் திருவருள் பாலித்துள்ளது.

அந்நேரம் அடியார்கள் யாவரும் ஆலயத்திற்கு ஆசார சீலர்களாக வந்து தரிசித்து உய்யுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

இங்ஙனம் ஆலய குருமாரும் நிர்வாக சபையினரும்

--------------------------------

Sri Kannaki Amman Temple - 16/09/2018 Special Abisekam Poja

Special Abisegam & Pooja will be held in Sri Kannaki Amman Temple at 16.09.2018 Sunday on 11.00 (AM). We kindly request to participate all the devotees.

Temple Guru & Administrative

02/08/2018

ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம் - 05/08/2018 அபிஷேக பூஜை காலை 10 மணி

மெய்யடியார்களே!

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 05/08/2018 அன்று ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய அபிஷேக பூஜை காலை 10.00 மணிக்கு (வழமையை விட சில மணித்தியாலங்கள் முன்னதாக) நடைபெறும் என்பதை தயவுடன் அறியத்தருகின்றோம்,

இந்த அறிவித்தலை ஏனைய அடியவர்களுக்கும் தெரிவியுங்கள்.

நன்றி

இங்ஙனம் ஆலய குருமாரும் நிர்வாக சபையினரும்

-------------
Sri Kannaki Amman Temple - 05/08/2018 Abiseka Pooja 10.00 AM

Dear Devotees

The Abiseka Pooja (Prayers) will be started on the Morning at 10.00 for the coming Sunday (05/08/2018).

Please pass this time change announcement to everyone.

Thank you.

Temple Guru & Administratives

24/06/2018

அருள்மிகு ஶ்ரீ கண்ணகையம்மன் ஆலயம் மணவாளக்கோல (கும்பாபிஷேக தின) விசேட அபிஷேகம் - 25.06.2018 திங்கட்கிழமை மாலை 06.00 மணிக்கு

அருள்மிகு ஶ்ரீ கண்ணகையம்மன் ஆலய கும்பாபிஷேக மணவாளக் கோல தினத்தை முன்னிட்டு நிகழும் திங்கள் (25.06.2018) மாலை 06.00 மணிமுதல் ஆரம்பமாகி, அம்பாளிற்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் விஷேட அபிஷேகமும் , சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் ஆகியன நடைபெறத் திருவருள் பாலித்துள்ளது.

அடியவர்கள் அனைவரும் அந்நேரம், ஆசார சீலர்களாக வருகை தந்து ஆலய தரிசனம் செய்து அம்பாளின் திருவருள் பெற்றுயுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

இங்ஙனம்
ஆலய குருமாரும் , அறங்காவலரும், உபயகாரர்களும்.

---------
Sri Kannaki Amman Temple - 25/06/2018 Manavala kola Kumbabisheka Day

Dear Devotees

The special abisekam Pooja (Prayers) will be held on the Evening at 18.00 for tommorow monday (25/06/2018).

Please pass this time announcement to everyone.

Thank you.

Temple Guru & Administratives

16/06/2018

ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம் - 17/06/2018 பூஜை நேர மாற்றம் பற்றிய அறிவித்தல்.

மெய்யடியார்களே!

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 17/06/2018 அன்று ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய பூஜை மாலை நேர பூஜையாக , மாலை 18.00 மணிக்கு நடைபெறும் .

இந்த அறிவித்தலை ஏனைய அடியவர்களுக்கும் அறியத்தாருங்கள்.

நன்றி

இங்ஙனம் ஆலய குருமாரும் நிர்வாக சபையினரும்

-------------
Sri Kannaki Amman Temple - 17/06/2018 Changes of Pooja Time

Dear Devotees

The Pooja (Prayers) will be held on the Evening at 18.00 for the coming Sunday (17/06/2018).

Please pass this time change announcement to everyone.

Thank you.

Temple Guru & Administratives

Indirizzo

Viale Piave 45
Pessano Con Bornago
20060

Orario di apertura

10:30 - 14:00

Telefono

00393314466055

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Sri Kannaki Amman Temple Milano Pagina Ufficiale pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi