Yogasana Alayam, Virudhunagar

Yogasana Alayam, Virudhunagar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Yogasana Alayam, Virudhunagar, Hindu temple, 55 Kasukadai bazaar, Virudupatti.

18/07/2018

Athirshtam Ashokan spoke about spirituality. She touched upon great consciousness, our body, and excellence we can achieve.

17/07/2018

குருவருள் மூதாட்டி v,t,a, காசியம்மாள் அவர்கள்
அடையாளம் காட்டுவதற்கு என்றேஆண்டவன் சிலரை அனுப்பி வைக்கிறார்,யோக மகா ரத்னா தவத்திரு கோ, மு, சுவாமிஜீ அவர்களை சரியாக உணர்ந்துவிருதுநகர் சான்றோர்களூக்கு அடையாளம் காண்பித்து அவர் வழி ஆற்றுப்படுத்த இறைவனால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்தான் குருவருள் மூதாட்டி திருமதி v, t, a, காசியம்மாள் அவர்கள்,
சென்னை வண்ணையம்பதி ஆலயமொன்றில் சுவாமிகள் மகரிஷி தாயுமானவரின் பாடல்களை எடுத்து விரிவான சொற்பொழிவுகள் ஆற்றிக்கொண்டிருந்த காலம் அது, விருதுநகர் திருமதி பெரியாயி அம்மாள் அவர்களால் ஒரு தினம் அவ்வுரை கேட்க அழைத்துச் செல்லப்பட்டார் காசியம்மாள், இவர் சென்ற நாள் மேற்கோளாக சிவஞான போதம் நூலிலிருந்து பாடலை எடுத்து விளக்கவுரையாற்றினார், மிகப்பெரிய பொருள் கொண்ட நூலுக்கு மிக எளிமையாக .விரிவாக தெளிவாக உரையாற்றிய சுவாமிஜீயை ஒரு மகான் என இனம் கண்டார் அன்னையார்,
இளம் வயதிலே [சுமார் 15.19 வயது] விருதுநகர் குருசாமி ஐயா. வள்ளியம்மாள். சின்னமணியம்மாள் போன்ற பட்டறிவு மிக்க பெரியோர்களிடம் பாடம் கேட்ட அனுபவமே சுவாமிஜீயின் அளப்பரும் ஆற்றலைக்கண்டு கொள்ள உறுதுணையாக அமைந்தது, சிறந்த குரு தம்மிடம் வரும் சிஷ்யர்களுக்கு நல்லுபதேசம் தொடங்கும் முன்னர் சீடனின் மனத்தைத் தன்னிடமும் தன் மனத்தை சீடனிடமும் நிலைப்படுத்தும் மந்திரம் ஓம் மம வர்தே தே ஹ்ருதயம் ததாமி மம சித்த மனுசித்தம் தே அஸ்து மம வாசமேக மனா ஜீஷஸ்வ ப்ருஹ ஸ்பதி ஷ்ட்வா நிபுனக்து மஹ்யம் குருமஹான் கோ, மு, சுவாமி அவர்கள் அன்னையாரின் அதி பக்குவ நிலையை உணர்நது அவருக்குரிய நிலை மந்திரப்பாடு அருள முன் வந்தார், ஆனால்காசியம்மாள் இவரே ஈஸ்வரனுக்கொப்பான குருவென்ற தீர்க்கமான முடிவால் முதல் படியிலிருந்தே பாடம் கேட்க ஆவலுற்று அவ்வாறே நிறைவேற்றிக்கொண்டார், படிப்படியாக மிக விரைவில் மந்திரோபதேசம் செய்து தன்னை உய்வித்த குருமகானின் அனுக்கத் தொண்டராக விளங்கினார் ‘’சொல்லிறப்பச் சற்குருவாய்த் தோன்றி சுகங்கொடுத்த நல்லவர்க்கே கொத்தடிமை நான்காண் பராபரமே’ என்ற தாயுமானவரின் வாக்கிற்கிணங்க பக்தியுடன் நின்றாரிவர்,

ஸ்வாமிஜீ குறையொன்றுமில்லாத நிறைகுருவென உள்ளுணர்வின் உணர்த்தலால் அறிந்து கொண்ட அன்னை அவரே தெய்வமெனக் கொண்டு தாயுமான சுவாமிகளது
‘’,,,,,,,,,,,,,,,,,,,,,தொழுந்தெய்வமும் நீ குருவும் நீ துணை நீ தந்தை தாயும் நீ அழுந்தும் பவம் நீ நன்மையும் நீ ஆவி யாக்கை நீதானே..;; எனும் வாக்கிற்கிணங்க வாழ்ந்து காட்டினார்
மனம் ஓடுங்குவதற்க்கு இவரைப் போல எளிய வழிகாட்டும் குருவேறோருவருமிலர், நமது நீலையை மிக விரைவாக படிப்படியாக உயர்த்திச் செல்லும் ஆற்றல் வல்ல குரு இவர் ஒருவரே எனப் பலரிடமும் கூறி தன்னைச் சார்ந்தோரெல்லாம் பிறவிப்பயன் பெற வேண்டுமேன அன்னையார் பலரையும் ஆலயத்தில் ஈடுபடுத்தினார்,
,சுவாமிஜி அவர்களும் அன்னையின் உயரிய நிலையையும். பெருமைகளையும் அறிந்து கொண்டதால் யோகாசன ஆலயத்தினரை குறிப்பாக மகளிரணியினரை. ;;சந்தேகம் வரும்போது காசியம்மாளிடம் கேளுங்கள், தெளிவு கிடைக்கும்,;; எனக் கூறுவார்,
குருவின் சொற்படி அன்னையிடம் ஆசி பெற்று அவரைப் போற்றி நி ற்போர்பலருண்டு ஆலயத்தில், இவரை ஆலயப்பொறுப்புகளில் முன்னிருத்தி பணி சிறக்கச்செய்திட சுவாமிகள் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை, காரணம் அம்மையாரின் அவையடக்கமே,
௧௯௪௨—௧௯௪௩ ஆண்டுகளில் மிகச் செல்வந்தராக சென்னையில் வாழ்ந்போது சில ஆன்மீகச் சங்கங்களின் புரவலராக இருந்துள்ளார்அன்னை, அப்போதும் அச்சங்கப் பணிகளில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாதவர்,இருமுறை சமயச் சான்றோர்களை அழைத்து வந்து சிறப்பாக மாநாடு நடத்தியவர், ஆனால் அத்தகைய சுவடு எதுவும் தோன்றாமல் அமைதியான எளிய வாழ்வே மேற்கொண்டிருந்தார்,
சென்னை ;;திரு அருட்பிரகாசவள்ளலார் ஸ்ரீ மாதர்கள் சைவ சுத்த .சன்மார்க்க சங்கம் சாந்தி சங்க நிலையம;; வள்ளலார் இராமலிங்கம் அவர்கள் பிறந்த ௧௪’, ௧௦. ௧௯௪௭ ம் நாள் கொண்டாட்டத்தின் போது வெளியிடப்பட்ட ;;ஜோதிக் கண்னே; என்ற சிறு நூலின்
இறுதியில் முதலில் அல்ல கடைசிப் பக்கத்தில் திருமதி காசியம்மாளின் கீழ்க்கண்ட வாழ்த்துப்பா இடம் பெற்றுள்ளது,
;;செல்வ மிகு சென்னையின் கண் திகழ் வண்ணையின்பதி மாதர்கள் செநெறிச் சங்கமாம் சைவ சுத்த சன்மார்க்க சங்கமதன் அன்னை நன்மார்க்க நல்லருளை நல்கிய எம் சிந்தைக்கினியார் செம்மல் இராமலிங்கம் தந்த தவ நூல் திருஅருட்பாவை ஓதிவுணர்ந்தக் கழகம் கண்ட எழிலம்மை பட்டம்மாள் என்னும் எம்மை ஏற்றினார் ஞானம் தானம் தவம் ஆன அனைத்தும் அமைத்தார் அவர் சிந்தையிற்போற்றும் சிறுமி காசி அம்மா புனைந்த இப்பாமாலையால் ஏற்றினேன் இசைந்தேன் போற்றி;;
இந்த வாழ்த்துப்பா பாடிய ;;சிறுமி;; க்கு அப்போது வயது சுமார் நாற்பத்தி ஐந்து, இவ்வளவு அவையடக்கம் கொண்டிருந்த இவரை எங்கும் எப்போதும் யாராலும் எதிலும் முன்னிறுத்திப் பார்க்கவே முடியாமல் போனதில் வியப்பில்லை,
;;ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவருக்கு
எழுமையும் ஏமாப்புடைத்து;; ,,,,,,திருக்குறள்
ஒரு பிறவியில் பெற்ற கல்வி ஏழு பிறப்பிலும் பெருமை தருமென்கிறார் வள்ளுவர் , இவ்வாக்கிற்கு முற்றிலும் உதாரணமாகத் திகழ்தார் நமது அன்னையார் , இவர் பள்ளி சென்று படித்தாரில்லை, ஆனால் இவர் அறியாத நூல் இல்லை,
இடைவிடாது பாராயணம் செய்து பயின்றவர் போல் ஆற்றோழுக்காக அனைத்து நூல்களிலிருந்தும் இவரால் பாடல் சொல்லி விளக்கமளிக்க முடிந்தது இத்தகைய பாடல்களும் இயற்ற முடிந்தது
ஒருமுறை நாகப்பட்டினம் சென்றிருந்த போது நவராத்திரி கொலு வைத்திருந்த வீட்டில் இவரைப் பாடும் படி கேட்டார்கள், அவர்கள் வியக்கும் வண்ணம் நாகை காரோணம் குறித்த சுந்தரர் தேவாரப் பாடலைப் பண்னோடு இனிமையாக பாடி மகிழ்வித்தார், எப்பிறவியிலோ இவர் கற்ற கல்வி இப்பிறவியில் உடன் வந்துள்ளது,
மறைந்த மகமாயி அம்மாள் வீட்டில் விருதுநகரில் ஒருசமயம் குருமகான் கோ, மு, சுவாமி அவர்கள் தங்கியிருந்தார், யோகாசன ஆலய அன்பர்கள் பலரும் கூடியிருந்தார்கள், சிறிது நேரம் சகஜமாக உரையாடிக்கொண்டிருந்த சுவாமிஜிக்கு பிஸ்கட் பழம் பானங்களும் கொடுக்க முற்பட்டனர் அவர் வழக்கப்படி ;;;எல்லோருக்கும் கொடுங்கள்;;; எனக்கூறி கடைசியில் சிறிதளவு மட்டும் தான் எடுத்துக்கொண்டார், அந்நேரம் மகமாயம்மாள் ஒரு டம்ளரில் பால் எடுத்து அன்னையாரிடம் கொடுத்து சுவாமிக்கு கொடுக்கும்படி வேண்டிக்கொண்டார், காசியம்மாள் கையில் டம்ளருடன்அமைதியாக மெளனமாக அமர்ந்து இருந்தார், பின் அவர் அருகில் சென்று கையிலிருந்த பால் டம்ளரைக்கொடுத்தார், பால் டம்ளரை வாங்கிக் கொண்ட சுவாமிஜீ ;;காசியம்மாள் என்ன செய்தார் பார்த்தீர்களா;;; எனக் கேட்டார், அனைவரும் அம்மையாரைப் பார்த்தனர், பால் செம்புடன் அமர்ந்து இருந்த அவர் சற்று நேரம் ;;நமசிவாய;; மந்திரத்தை உச்சரித்தே வழங்கினார் என்பதை உணர்ந்தனர், மேலும் எந்நிலையிலும் எப்போதும் இறையுணர்வுடன் இருக்க வேண்டுமென குருமகான் குறிப்பாலுணர்த்தியதையும் அறிந்தனர்,
;;ஏதேது செய்தாலும் என்பணி போய் நின்பணியாம் மாதேவா,,,,,,,,,,,,,,,,,,,,,,,,;;;எனும் தாயுமானவரின் வாக்கினை நினைவிற் கொண்டார்களோ குருமகான் அவர்கள் சித்தியடைந்த பின்னரும் அவரை தான் கண்டுணர்ந்ததுடன் மற்றவர்களும் காண வேண்டுமென விழைந்தவர் அம்மையார், யோகாசன ஆலயத்தின் சார்பில் எங்கு வேதவேள்வி நடந்தாலும் சுவாமி அவர்கள் அங்கு தோன்றுவார் என்பது அவரது அனுபவம், ராமபிரவசனத்தின் போது ஆஞ்சநேயர் பிரசன்னம் உண்டு என்பது உண்மைதானே, தனக்குக் கிடைத்தபடி குருவருள் குருதீட்சதண்யம் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்று விரும்பியவர் அவர்,
ஸ்ரீ ராமகிருஷ்ணர் ;;புதிதாக அயல்நாட்டுக்குச் செல்ல விரும்புபவன் வழி தெரிந்த துணைவன் சொல்வதை நம்பி அவனுடைய இஷ்டப்படி நடந்து கொள்வானேயன்றி பலருடைய வார்த்தைகளையும் கேட்டு மயங்குவதில்லை, அவ்விதமே இறைவனை அடைய முயல்பவன் அதன் வ்ழியை அறிந்த ஒரே குருவின் அறிவுரைகளைக் கேட்டு எதிர்த்துப் பேசாது அவன் ஆணைப்படி நின்று உத்தமகதி அடைவான்;;; என்கிறார்,
சற்குரு கோ, மு, சுவாமி ;;;மோட்சம் எல்லோருக்கும் உண்டு ஆனால் அவரவர் விவேகத்திற்கு தக்கவாறு முன்னும் பின்னுமாக பெறமுடியும், நாம்உய்யும் பொருட்டு இறைவன் அருள் குருவாக வந்து துணை புரிவார் என அருளியுள்ளார், [யோகாசன ஆலய விஜயம் மலர் ௪௨ இதழ் ௧௦ ௧௯௮௯ அக்டோபர்]
;;ஞான நெறிக்கேற்ற குரு நண்ணரிய சித்தி முத்தி
தானம் தருமம் தழைத்த குரு மானமோடு
தாயெனவும் வந்தென்னைத் தந்த குரு என் சிந்தை
கோயிலென வாழுங்குரு;;
என மகரிஷி தாயுமான சுவாமிகள் கூறுவார்,
இறைவனைக் கூட பாடாமல் தன் குரு நம்மாழ்வார் பற்றி ;;;கண்ணீ நுண் சிறு தாம்பு ,,,,,,,,,,,,,,,,;;எனத் தொடங்கி பாசுரம் பாடியவர் மதுரகவியாழ்வார், ;;;தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவேனே;;;;; என்று குருவின் நாமம் குருவின் புகழ் பாடுவதிலேயே இன்பம் கண்டவர் மதுரகவி குருவே கடவுளாகிறார்,
குருவருள் மூதாட்டி அம்மையார் இம்மகான்களின் அருள் வாக்குப்படி சுமார் முப்பது ஆண்டுகளாக யோகமகா ரத்னா தவத்திரு, கோ,மு, சுவாமிஜீ அவர்களையே தன்னை க் கடைத்தேற்ற வந்த குருவாக ஏற்று அவர் காட்டிய வழியே சென்று உய்வடைந்தவராவார்,
சர்வேஸ்வரன் தான் குரு,கோ,மு, ஸ்வாமி என்பதை அனுபவம் முதிர்ந்த நிலையில் உணர்ந்தார், ;;குருவடிவான குறைவிலா நிறைவை;;;; சாதனையில் பல வடிவங்களில் கண்ட அவர் சிந்தை ஒருமித்து குரு வேறு சர்வேஸ்வரன் வேறு அல்ல என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தார், இவ்வனுபம் வெறும் சொற்களால் விளக்கப்படுவதில்லை, நாமும் அவ்வனுபவத்தை உணரவேண்டும், பெறவேண்டும், அந்நிலைக்குகுருவருளும் குருவருள் முதாட்டி நல்லாசிகளையும் இறைஞ்சுவோமாக,
;;குருவே ஈஸ்வரன் என்றுணர்ந்து கோமுசுவாமி
குருவே ஈஸ்வரன் என்றுரைத்த திருவுரு
காசியம்மா மலர்த்தாள் பணிந்து குருவை
நேசமுடன் போற்றுவாமென்னாளும்,;;
a,ஸ்வர்ணஜெயந்தி அசோகன்,

12/07/2018

ஆலயம்துவங்கியது

அனைவரின் ஞானப்பசிக்கும், இறை வேட்க்கைக்கும் தீர்வாகவும் யோகாசன ஆலயம் ஆரம்பித்தது. சுவாமிஜி பல ஊர்களுக்குச் சென்று அருட்கொடை வழங்கினார். அவர் அன்று ஏற்றிய விளக்கு, இன்றும் நந்தாவிளக்காக ஒளிர்கின்றது. கீழ்க்கண்ட வகையில் புண்ணிய காரியங்கள் செய்கின்றது.

• தாயுமானவர் பாடல்கள் முற்றோதல்
• சிறார்கள் தாயுமானவர் பாடல்கள் மனனம்
• ஆன்மீக கருத்துக்கள் கூறுதல், கலந்துரையாடல்
• யோகாசன ஆலய விஜயம் என்னும் மாதாந்திர பத்திரிகை அன்பர்களுக்கு கலங்கரை விளக்காக திகழ்கிறது.

ஆலய பணிகள் மென்மேலும் வளர்ச்சி பெற்று, அனைவரும் பயனடைய இறைவனை பிராத்திப்போம்.

12/07/2018

நிறுவுனர் கோ.மு.சுவாமிஜி

ஆங்கிலேய ஆட்சியில் அடக்குமுறை, கொடுங்கோன்மை, பாராபட்சம் நிறைந்து இருந்தது. மக்கள் வாழ்வியல் முன்னேற்றத்திற்க்காக எண்ணற்ற சுதந்திர போராட்ட தியாகிகள் தங்கள் பொருள், வசதி, சுகம், உயிரையும் ஈந்தனர். நமது சுவாமிஜி அவர்களும் தேச நலனில் நாட்டம் கொண்டார். சிறு வயதிலேயே இறை சிந்தனை கொண்ட இவர், மக்களை அருள்பாதையில் அழைத்துச்செல்வதே சிறந்த பலன் அளிக்கும் என தீர்மானித்தார்.

அச்சு தொழிற்கூடத்தில் பணிபுரிந்த அவர், சிவசிந்தனையில் லயித்திருந்தார். சுவாமிஜி அவர்களுக்கு பற்பல ஆன்மிக அனுபவங்கள் கிட்டியிருக்கின்றன. ஒருமுறை நிஷ்காம்ய நிலையில் இருந்த பொழுது, விளக்கிலிருந்து ஒரு கை வெளிவந்து நெற்றிப்பொட்டில் சுட்டிக்காட்டியது. இது ஒரு புது அனுபவம். தாத்பர்யம் கிட்டவில்லை. பலரிடம் கேட்டும் தெளிந்த விளக்கம் தரயியலவில்லை. சில நாள் கழித்து நூலகம் ஒன்றில், கீழ்க்கண்ட பாடல் கண்டார்.

மைகாட்டும் மாயை மயக்கமற நீகுருவாய்க்
கைகாட்டவும் கனவு கண்டேன் பராபரமே

பார்த்தவுடன் தன் சந்தேகம் தெளிந்தார். அப்பாடல் தாயுமானவர் இயற்றியது என அறிந்து, மேலும் படித்தார். தாயுமானவர் பாடல்களை கை நூலாக ஏற்றுக்கொண்டார்.

மக்களுக்கு நல்வழி காட்ட எண்ணம் கொண்டார்.

Address

55 Kasukadai Bazaar
Virudupatti
626001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yogasana Alayam, Virudhunagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category