St Xavier Church Virudhunagar

St Xavier Church Virudhunagar Official page of St.Xavier's Church, Saveriyaar nagar, Pandian nagar, Virudhunagar District, TN, India

03/12/2018

† இன்றைய புனிதர் †
(டிசம்பர் 3)

✠ புனிதர் ஃபிரான்சிஸ் சவேரியார் ✠
(St. Francis Xavier)

தூர கிழக்கு நாடுகளின் திருத்தூதர் :
(Apostle to the Far East)

பிறப்பு : ஏப்ரல் 7, 1506
ஜேவியர், நவார் அரசு, (தற்போதைய ஸ்பெயின்)
(Javier, Kingdom of Navarre (Present Spain)

இறப்பு : டிசம்பர் 3, 1552 (வயது 46)
'சாவோ ஜோவாஓ' தீவிலுள்ள போர்ச்சுகீசிய தீவு, (தற்போதைய சீனா)
(Portuguese Base at São João Island (now China)

ஏற்கும் சபை/ சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
லூதரனிய திருச்சபை
(Lutheran Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)

அருளாளர் பட்டம் : அக்டோபர் 25, 1619
திருத்தந்தை ஐந்தாம் பவுல்
(Pope Paul V)

புனிதர் பட்டம் : மார்ச் 12, 1622
திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரி
(Pope Gregory XV)

நினைவுத் திருவிழா : டிசம்பர் 3

சித்தரிக்கப்படும் வகை :
நண்டு, சிலுவை; லீலி மலர், நெருப்பு, போதகர்,
எரியும் இதயம்

பாதுகாவல் :
இந்தியா; ஆப்ரிக்க மறைப்பணிகள்; அகர்தலா; அகமதாபாத்; அலெக்சாண்டிரியா லூசியானா; ஆஸ்திரேலியா; மும்பை; கோவா (மாநிலம்); கேப் டவுன்; சீனா; டோக்கியோ; பிலிப்பைன்ஸ்; கென்யா; ஸ்பெயின்; நியுசிலாந்து; இந்தோனேசியா; மலாக்கா; மலேசியா; மங்கோலியா.

புனிதர் ஃபிரான்சிஸ் சவேரியார் ஸ்பெயின் நாட்டில் ஏப்ரல் 7, 1506 அன்று புகழ்மிக்க சவேரியார் அரண்மனையில் பிறந்தார். தமது ஒன்பது வயதில் தந்தையை இழந்த இவர் தாயின் பராமரிப்பிலேயே அதே அரண்மனையில் படித்து வந்தார். அப்போதே ஸ்பேனிஷ் மற்றும் பல மொழிகளில் புலமை பெற்றிருந்தார். இந்தியாவில் கிறிஸ்தவத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார்.

கல்வி :
1525ம் வருடம் கல்லூரி படிப்பிற்காகப் பாரிஸ் சென்றார். அதன் பின்னர் 11 வருடங்கள் பாரிசிலே இருந்த புனித சவேரியார், அங்குள்ள புனித பற்பே கல்லூரியில் தத்துவம் மற்றும் கலைத்துறையில் முதுகலை பட்டம் பெற்று, 1530 முதல் 1534 வரை விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

மீண்டும் 1534 முதல் 1536 வரை இறையியலைப் பயின்றார். அப்போது புனித சவேரியாருக்கு புனித இலொயோலா இஞ்ஞாசியார் நண்பரானார்.

"உலகையே ஆதாயமாக்கினாலும் மனிதர் தம் ஆன்மாவை இழப்பாராகில் அதனால் அவருக்கு வரும் பயன் என்ன" என்ற இறைமகன் இயேசுவின் வார்த்தையை இஞ்ஞாசியார், சவேரியாருக்கு எடுத்துரைக்க, சவேரியார் அவ்வார்த்தையின் ஆழத்தை உணர்ந்து இறைவனோடு அதிகமாய் இணைந்திருந்தார். பின்னர் இவர்கள் இயேசு சபையைத் தொடங்கினர். இதில் மீண்டும் நான்கு நண்பர்கள் சேர்ந்து இறைபணியை செய்ய முடிவு செய்தனர்.

குருத்துவமும் இந்திய வருகையும் :
சவேரியாரின் பயணங்கள் :
இதை தொடர்ந்து 1537ம் வருடம் ஜூன் மாதம் 24ம் நாள் குருவாக திருநிலை பெற்று தன் முதல் திருப்பலியை செப்டம்பர் 30ம் நாள் நிறைவேற்றினார். பின்னர் அவரும் அவருடைய நண்பர்களும் திருத்தந்தை மூன்றாம் பவுலைச்சந்தித்து இறைப்பணி செய்வதற்கான தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர். அதே வேளையில் போர்த்துகீசிய மன்னன் தனக்குக் கீழ் இருந்த நாடுகளுக்குக் குருக்களைத் தந்துதவும்படி வேண்டியதால், சவேரியார் இந்தியா மற்றும் போர்த்துகீசிய காலனி நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.

புனித சவேரியார் 1540ல் ரோமில் இருந்து புறப்பட்டு லிஸ்பன் சென்றார். அங்கு ஒரு வருடம் இறைபணியை செய்த பின்னர் இந்தியாவிற்கு வரும் வழியில் மொசாம்பிக்கில் ஒரு வருடம் இறைபணியை செய்துவிட்டு 1542 மே மாதம் 6ம் நாள் கோவாவை வந்தடைந்தார். முதல் நான்கு மாதங்கள் கோவாவிலும் பின்னர் தென் இந்தியாவின் குறிப்பாக தமிழகக் கடற்கரைக் கிராமங்களில் தனது இறைப்பணியைச் செய்துவந்தார்.

மறைப்பணி :
1543ல் தென்திருவிதாங்கூரில் தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தில் தன் இறைப்பணியைத் தொடர்ந்தார். சுமார் பதினைந்து மாதங்கள் கிராமங்கள் தோறும் மணியடித்தபடி சென்று அங்கு ஆட்கள் கூடியதும் அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றிய செய்திகளைக் கூறியும் நோயாளிகளைச் சந்தித்தும் வந்தார். திருவிதாங்கூர் இராச்சியத்தில் பல ஆலயங்கள் புனித சவேரியாரால் நிறுவப்பட்டன. மிகக் குறுகிய கால வேளையான ஒரு வருடத்திற்குள் நாற்பத்தி ஐந்து சிறிய கிறிஸ்தவ ஆலயங்களை அவர் நிறுவினார் என்று காண்கிறோம்.

கி.பி. 1544ல் திருவிதாங்கூரை (அன்றைய வேணாடு) திரு. பூதல வீர கேரள வர்மன் என்ற ஜெயசிம்ம நாட்டு மூத்த திருவடிகள் ஆண்டு வந்தார்கள். அவ்வேளையில் விசய நகர மன்னரான விதாலர் ஒரு பெரும் படையுடன் வேணாட்டை முற்றுகையிட்டார். அவரை எதிர்த்து நிற்பதற்கு வேணாட்டு அரசரால் இயலாமல் போகவே அவர் புனித சவேரியாரின் உதவியை நாடினார். விஜய நகரப் படைகள் ஒழுகினசேரி வழியாக வடசேரி மேட்டை நெருங்கிவிட்டது. அவ்வேளையில் குருசையும் செபமாலையும் உயர்த்திப் பிடித்து வடுகர்ப்படைகளை பின்வாங்கும்படி கர்ச்சித்தார்.

புனித சவோரியாரின் இந்த திடீர் செயலானது வடுகப்படையினரை நிலைகுலையைச் செய்துவிட்டது. அவர்களின் முன்பு ஏதோ ஒரு பெரும் பூதம் போருக்குத் தயாராக நிற்பதைப் போன்று அவர்கள் கண்டனர். நடுநடுங்கிய வடுகப்படைகள் எதிர்பாராத விதமாக பின்வாங்கி வேணாட்டைவிட்டு வெளியேறிச் சென்றனர். இவ்விதமாக புனிதர் சவேரியார் பெரும் ஆபத்திலிருந்து அன்று வேணாட்டைக் காத்து நின்றார். இந்நிகழ்ச்சி நடந்த இடத்தில் ஒரு சிறு கத்தோலிக்க ஆலயம் இன்றைய நாகர்கோவில் இராஐம் திருமண மண்டபத்திற்கெதிரில் காணப்படுகிறது.

“அவர்கள் என்னை மகாராஜா என்று அழைத்தார்கள், ஆனால் இனிமேல் அவர்கள் உம்மை எப்போதும் மகாதந்தை என்று அழைப்பார்கள்” (They called me great king, but hereafter for ever they will call you the Great Father) என்று மன்னர் புனிதர் சவேரியாரை நன்றியுணர்வுடன் பாராட்டினார். இன்றைய குமரி மாவட்டத்தின் கோட்டாறு புனித சவேரியார் ஆலயம் இப்புனிதராலேயே நிறுவப்பட்டுள்ளது.

ஒரு முறை கடலில் பயணம் செய்யும் போது புனித சவேரியாரின் சிலுவை தொலைந்து போயிற்று, ஆனால் கரையை அடைந்ததும் ஒரு நண்டு அந்தச் சிலுவையைக் கொண்டுவந்து சேர்த்தது என்பர்.

மரணம் :
புனித சவேரியார் சுமார் 38000 மைல்கள் கடல் மற்றும் தரை மார்க்கமாகப் பயணம் செய்து இறைப்பணியைச் செய்துள்ளார். கடைசியாக சாங்சோங் தீவில் நோயால் பாதிக்கபட்டார். இவரை ஜார்ஜ் அல்வறேஸ் என்னும் போர்த்துக்கீசியர் கவனித்து வந்தார். இருந்தாலும் 1552ம் வருடம், டிசம்பர் மாதம், 3ம் நாள் உயிர் துறந்தார். ஜார்ஜ் அல்வறேஸ் சவேரியாரை அத்தீவிலேயே அடக்கம் செய்துவிட்டுச் சென்று விடுகிறார்.

அழியா உடல் :
சுமார் இரண்டரை மாதங்கள் கழித்து (ஃபெப்ரவரி 17, 1553) அத்தீவின் வழியாக வரும்போது, மீபொருட்களை, அவரின் சொந்த நாட்டுக்கு எடுத்துச்செல்ல கல்லறையை திறந்தபோது அவரது உடல் எந்தப் பாதிப்பும் இல்லாமல் வைத்தது வைக்கப்பட்டது போலவே இருந்தது. நறுமணமும் வீசியது. பின்னர் அவரது உடலை சண்ட க்ரூஸ் என்னும் கப்பலில் மக்காவு கொண்டு சென்றனர். இக்கப்பலானது மார்ச் 22, 1553ம் வருடம் மக்காவுவை வந்தடைந்தது. மீண்டும் ஒரு ஆலயத்தில் வைத்து அவரது உடலைப் பார்த்தபோது அது கெட்டுப் போகாமல் நறுமணம் வீசியது என்பர். பின்னர் சவேரியாரின் உடல் புனித சின்னப்பர் தேவாலயத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தந்தை பெய்ரோ புனித சவேரியாரின் உடலைக் கோவா கொண்டுசெல்ல உத்தரவிட்டார். இதன்படி டிசம்பர் 1553ல் புனித சவேரியாரின் உடல் கோவா வந்தடைந்தது. 450 வருடங்களைத் தாண்டிய பின்னரும் அழியாமல் இன்றும் இப்புனிதரின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

புனித சவேரியார் பேராலயம், கோட்டாறு :
கன்னியாகுமரி மாவட்டம், கோட்டாறில் சவேரியார் தங்கிருந்தபோது, அன்னை மரியாளுக்கு ஒரு சிறிய ஆலயம் ஒன்றை கட்டினார். அந்த ஆலயம் இருந்த இடத்தில் கி.பி. 1600ல் புனித சவேரியார் பேராலயம் ஒன்று கட்டப்பட்டது. சவேரியார் அன்னை மரியாளுக்கு கட்டிய ஆலயம் பேராலயத்தினுள் இன்றளவும் உள்ளது.

Feast of Corpus Christiஇயேசுவின் திரு உடல் திரு இரத்த பெருவிழாதிவ்ய நற்கருணை பவனியுடன் ஆலயத்தை சுற்றி..
03/06/2018

Feast of Corpus Christi
இயேசுவின் திரு உடல் திரு இரத்த பெருவிழா
திவ்ய நற்கருணை பவனியுடன் ஆலயத்தை சுற்றி..

வணக்க மாதா செபமாலையுடன் திருப்பலி
21/05/2018

வணக்க மாதா செபமாலையுடன் திருப்பலி

Our new Parish Priest
19/05/2018

Our new Parish Priest

Lent Events in the Church
11/02/2018

Lent Events in the Church

11/02/2018

† இன்றைய புனிதர் †
(Saint of the Day)
(ஃபெப்ரவரி/ February 11)

✠ தூய லூர்து அன்னை ✠
(Our Lady of Lourdes)

இடம் :
லூர்து, ஃபிரான்ஸ்
(Lourdes, France)

திருநாள் : ஃபெப்ரவரி 11, 1858

சாட்சிகள் :
புனிதர் பெர்னதெத் சூபிரஸ்
(Saint Bernadette Soubirous)

வகை :
மரியாளின் தரிசனங்கள்
(Marian apparition)

கத்தோலிக்க ஏற்பு : ஜூலை 3, 1862
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
(Pope Pius IX)

திருத்தலம் :
லூர்து அன்னை திருத்தலம், லூர்து நகர், ஃபிரான்ஸ்
(Sanctuary of Our Lady of Lourdes, Lourdes, France)

பாதுகாவல் :
லூர்து நகர் (Lourdes), ஃபிரான்ஸ் (France),
தென் கொரியா, (South Korea), நோயாளிகள்,
லான்காஸ்டர் மறை மாவட்டம் (Diocese of Lancaster), நோய்களிலிருந்து பாதுகாவல் (Protection from Diseases)

தூய லூர்து அன்னை என்ற பெயர், ஃபிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் 1858ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 11ம் நாள் முதல், 1858ம் ஆண்டு, ஜூலை மாதம், 16ம் நாள் வரை “பெர்னதெத் சூபிரஸ்” (Bernadette Soubirous) என்ற சிறுமிக்கு அன்னை மரியாள் அளித்த திருக்காட்சியின் அடிப்படையில் அவருக்கு வழங்கப்படுகின்ற பெயராகும். இந்த உலகின் பல்வேறு இடங்களில் மரியன்னை அளித்த சிறப்பு வாய்ந்த திருக்காட்சிகளில் ஒன்றாக லூர்து நகர் திருக்காட்சியும் விளங்குகிறது. லூர்து அன்னையின் திருவிழா ஃபெப்ரவரி 11ம் தேதி கொண்டாடப்படுகிறது.

மரியாளின் திருக்காட்சிகள் :
ஃபிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் பிறந்தவர் பெர்னதெத் சூபிரஸ். இவருக்கு 14 வயது நடந்தபோது, 1858ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 11ம் தேதி, இவர் தனது சகோதரி மற்றும் தோழியுடன் விறகு பொறுக்க சென்றார். அவர்கள் மசபியேல் குகை அருகே சென்று கொண்டிருந்த வேளையில், பெர்னதெத் ஒரு காட்சியைக் கண்டார்.

அன்னை மரியாள் ஓர் இளம் பெண்ணாக அந்த குகையில் தோன்றினார். அவர் வெண்ணிற ஆடையும், முக்காடும் அணிந்திருந்தார். அவர் நீல நிறத்தில் இடைக் கச்சையை உடுத்தியிருந்தார். கையில் முத்துகளால் ஆன ஒரு செபமாலை வைத்திருந்தார். அவரது காலடியில் காட்டு ரோஜா செடிகள் காணப்பட்டன. அவர் கைகளைக் கூப்பி வானத்தை நோக்கியவாறு இருந்தார். பெர்னதெத் தன்னுடன் வந்த இருவரிடமும் "அதோ பாருங்கள் மிகவும் அழகான ஓர் இளம்பெண்" என்று கூறினார். இவரது சகோதரிக்கும் தோழிக்கும் எதுவும் தெரியவில்லை.

பெர்னதெத் அன்னையின் முதல் திருக்காட்சியைக் கண்டபோது, மரியாள் அவரை மேலும் சில நாட்கள் அதே இடத்திற்கு வரச் சொன்னார். மரியாளின் வார்த்தைகளை ஏற்று, பெர்னதெத்தும் அங்கு சென்றார். ஃபெப்ரவரி மாதம், 18ம் தேதி, மரியாளைக் கண்டு பெர்னதெத் பரவச நிலையில் இருந்ததை அவரோடு சென்றவர்கள் கண்டனர். ஒரு திருக்காட்சியில் மரியன்னை தனக்கு அங்கு ஓர் ஆலயம் கட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பெர்னதெத் அதை பங்கு குருவிடம் சொன்ன போது, அவர் அதற்கான காரணத்தை அறிந்து வருமாறு கூறினார்.

ஃபெப்ரவரி 25ம் தேதி திருக்காட்சியின்போது, மரியாளின் கட்டளையை ஏற்று பெர்னதெத் மண்ணைத் தோண்டியபோது, அந்த இடத்தில் நீரூற்று ஒன்று தோன்றியது. அது பின்பு ஓடையாக மாறி, திருப்பயணிகளை கவர்ந்திழுக்கும் அற்புத இடமாக இன்றும் திகழ்கிறது. மார்ச் மாதம், 25ம் தேதி அன்னை மரியாள் பெர்னதெத்திடம், “நாமே அமல உற்பவம்” ("Que Soy Era Immaculada Concepciou") என்று தம்மைப் பற்றிக் கூறினார். இதற்கு, "பாவம் எதுவுமின்றி பிறந்தவர்" என்பது அர்த்தம்.

மொத்தம் பதினெட்டு முறை பெர்னதெத்துக்கு தரிசனமளித்த மரியன்னை, அவற்றில் 15 திருக்காட்சிகளில் செபமாலையின் மகிழ்ச்சி, துயரம், மகிமை மறைபொருட்களின் 15 மறையுண்மைகளையும் நாளுக்கு ஒன்று என்ற வகையில் பெர்னதெத்தை ஒவ்வொன்றாக தியானித்து செபிக்கச் செய்தார். பெர்னதெத்தின் பின்னே பக்தியுடன் ஒரு கூட்டமும், கிண்டல் செய்யும் நோக்கத்தில் மற்றொரு கூட்டமும் பின் தொடர்ந்தன.

ஏப்ரல் மாதம், 7ம் தேதி, பெர்னதெத் அன்னையின் 16வது திருக்காட்சியைக் கண்டபோது, மருத்துவ ஆய்வுக்காக 15 நிமிடங்கள் இவர் கையை சிலர் தீயினால் சுட்டனர். பெர்னதெத் அதை உணரவும் இல்லை, இவர் கையில் தீக்காயமும் ஏற்படவில்லை. ஜூலை மாதம், 16ம் தேதி அன்னை மரியாளின் கடைசி திருக்காட்சியைக் கண்ட பெர்னதெத், "இதற்கு முன்பாக நான் அவரை இத்தகைய பேரழகோடு கண்டதே இல்லை" என்று கூறினார்.

தரிசன பின்னணி :
கிறிஸ்தவ வரலாற்றில் அன்னை மரியாளின் திருக்காட்சிகள் முதல் நூற்றாண்டு முதலே பதிவு செய்யப்பட்டுள்ளன. உலகின் பல இடங்களிலும் அன்னையின் திருக்காட்சிகள் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு திருக்காட்சியும் கடவுளின் ஏதேனும் ஒரு செய்தியை வழங்குவதாக விளங்குகிறது. லூர்து நகரின் திருக்காட்சியும் அப்படிப்பட்ட ஒரு திருக்காட்சியாகவே இயற்கைக்கு மேற்பட்ட விதத்தில் அமைந்துள்ளது.

திருத்தந்தை 9ம் பயஸ் 1854ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 8ம் தேதி, "மரியாள், தாம் உற்பவித்த நொடியில் இருந்தே, வல்லமை மிக்க இறைவனின் தனிப்பட்ட அருளினாலும், சிறப்பு சலுகையினாலும், மனித குலத்தின் மீட்பராம் இயேசுவின் பேறுபலன்களினாலும், சென்மப் பாவத்தின் கறைகளிலிருந்து பாதுகாக்கப்பட்டார் என்னும் திருச்சபையின் போதனை இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட உண்மையாகும். எனவே, இறைமக்கள் இதில் என்றும் தளராத உறுதியான விசுவாசம் கொள்ளவேண்டும்" என்று கூறி, மரியாளின் அமல உற்பவத்தை விசுவாசக் கோட்பாடாக அறிவித்தார். இதை உறுதி செய்யும் வகையிலேயே கன்னி மரியாள் லூர்து நகரில் திருக்காட்சியளித்தார்.

லூர்து பேராலயம் :
பெர்னதெத், அன்னை மரியாளின் திருக்காட்சிகளை கண்ட நாட்களிலேயே, லூர்து திருக்காட்சிகளின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்யும் பணியைத் திருச்சபை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர். மேலும் 1858ம் ஆண்டு, நவம்பர் மாதம், 17ம் தேதி, திருக்காட்சிகளைப் பற்றி ஆராய விசாரணைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இறுதியாக 1862ம் ஆண்டு, ஜனவரி மாதம், 18ம் தேதி, டர்பெஸ் மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ், "பெர்னதெத் சூபிரசுக்கு கன்னி மரியாள் தரிசனம் தந்தபோது, இயற்கைக்கு மேற்பட்ட இறைவனின் செயல்பாடுகள் நிகழ்ந்தது உண்மையே" என்று அறிவித்தார். திருத்தந்தை 9ம் பயஸ், லூர்து அன்னையின் வணக்கத்திற்கு அனுமதி வழங்கினார். இதன் மூலம் லூர்து நகர், அன்னை மரியாளின் பக்தர்கள் வந்து செல்லும் புனித இடமாக மாறியது.

அதன் பிறகு அன்னை மரியாள் திருக்காட்சியளித்த மசபியேல் குகையின் அருகே, மரியாளின் பெயரில் பெரிய ஆலயம் ஒன்று கட்டி எழுப்பப்பட்டது. காட்சியின்போது தோன்றிய நீரூற்றும், பெரிய ஓடையாக மாறி ஆற்றில் கலப்பதுடன், நம்பிக்கையோடு அதன் நீரைப் பருகுவோருக்கு குணமளிக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது. ஆண்டுதோறும் உலகெங்கும் இருந்து இலட்சக்கணக்கான திருப்பயணிகள் லூர்து அன்னை பேராலயத்தை நாடிச் செல்கின்றனர்.

செபிப்போம் :
"நாமே மாசில்லா உற்பவம்" என்று திருவாய் மலர்ந்த அன்னையே!
எம்மையும், எம் குடும்பத்தையும், இச்சமூகத்தையும், உம்மை விசுவசிக்காத சகோதர்களையும் உமது பொற்பாதத்தில் ஒப்படைகிறோம்!
உலக மாந்தரனைவரினதும் அன்புத்தாயே!
உம்மையே தஞ்சமென ஓடிவரும் அடியோர் மேலே தயவாயிரும் அம்மா!
கருணையின் ஊற்றுக்கண்ணான மாதாவே!
நீர் பரிந்துரைத்தால் தண்ணீரும் இரசமாகும் என்பதனை உளமார உணர்ந்து விசுவசிக்கும் எம்மை கரம் பிடித்து வழி நடத்துமம்மா!
எல்லையில்லாத உமது திருஇருதயத்தின் அன்பால் எம்மைக் காக்கும் அதிதூய இறை அன்னையே!
உமது திருவயிற்றின் கனியாகிய இயேசுவின் திருவார்த்தைகளின் வழிநடக்க எமக்கு கற்றுத் தாருமம்மா!

லோக நாயகியே! ஆரோக்கிய அன்னையே! சகாய தாயே! அடைக்கல மாதாவே! பனிமய அன்னையே! சந்தன மாதாவே! மடு மாதாவே! செல்வ மாதாவே! பெரிய நாயகி அன்னையே! அதிசய மணல் மாதாவே! அதிசய மின்னல் மாதாவே! பூண்டி புதுமை அன்னையே! லூர்து அன்னையே! காணிக்கை மாதாவே! ஜெபமாலை அன்னையே!
நீர் அருளித்தந்த செபமாலையை நாங்கள் விட்டுவிடாதிருக்கும் வரமருளும் அம்மா!
† ஆமென் †

மாசில்லாக் கன்னியே, மாதாவே உம்மேல்...
நேசமில்லாதவர் நீசரே ஆவார்...
வாழ்க, வாழ்க, வாழ்க மரியே...

Merry Christmas to all
25/12/2017

Merry Christmas to all

03/12/2017

† இன்றைய புனிதர் †
(Saint of the Day)
(டிசம்பர்/ December 3)

✠ புனிதர் ஃபிரான்சிஸ் சவேரியார் ✠
(St. Francis Xavier)

தூர கிழக்கு நாடுகளின் திருத்தூதர் :
(Apostle to the Far East)

பிறப்பு : ஏப்ரல் 7, 1506
ஜேவியர், நவார் அரசு, (தற்போதைய ஸ்பெயின்)
(Javier, Kingdom of Navarre (Present Spain)

இறப்பு : டிசம்பர் 3, 1552 (வயது 46)
'சாவோ ஜோவாஓ' தீவிலுள்ள போர்ச்சுகீசிய தீவு, (தற்போதைய சீனா)
(Portuguese Base at São João Island (now China)

ஏற்கும் சபை/ சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
லூதரனிய திருச்சபை
(Lutheran Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)

அருளாளர் பட்டம் : அக்டோபர் 25, 1619
திருத்தந்தை ஐந்தாம் பவுல்
(Pope Paul V)

புனிதர் பட்டம் : மார்ச் 12, 1622
திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரி
(Pope Gregory XV)

நினைவுத் திருவிழா : டிசம்பர் 3

சித்தரிக்கப்படும் வகை :
நண்டு, சிலுவை; லீலி மலர், நெருப்பு, போதகர்,
எரியும் இதயம்

பாதுகாவல் :
இந்தியா; ஆப்ரிக்க மறைப்பணிகள்; அகர்தலா; அகமதாபாத்; அலெக்சாண்டிரியா லூசியானா; ஆஸ்திரேலியா; மும்பை; கோவா (மாநிலம்); கேப் டவுன்; சீனா; டோக்கியோ; பிலிப்பைன்ஸ்; கென்யா; ஸ்பெயின்; நியுசிலாந்து; இந்தோனேசியா; மலாக்கா; மலேசியா; மங்கோலியா.

புனிதர் ஃபிரான்சிஸ் சவேரியார் ஸ்பெயின் நாட்டில் ஏப்ரல் 7, 1506 அன்று புகழ்மிக்க சவேரியார் அரண்மனையில் பிறந்தார். தமது ஒன்பது வயதில் தந்தையை இழந்த இவர் தாயின் பராமரிப்பிலேயே அதே அரண்மனையில் படித்து வந்தார். அப்போதே ஸ்பேனிஷ் மற்றும் பல மொழிகளில் புலமை பெற்றிருந்தார். இந்தியாவில் கிறிஸ்தவத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார்.

கல்வி :
1525ம் வருடம் கல்லூரி படிப்பிற்காகப் பாரிஸ் சென்றார். அதன் பின்னர் 11 வருடங்கள் பாரிசிலே இருந்த புனித சவேரியார், அங்குள்ள புனித பற்பே கல்லூரியில் தத்துவம் மற்றும் கலைத்துறையில் முதுகலை பட்டம் பெற்று, 1530 முதல் 1534 வரை விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

மீண்டும் 1534 முதல் 1536 வரை இறையியலைப் பயின்றார். அப்போது புனித சவேரியாருக்கு புனித இலொயோலா இஞ்ஞாசியார் நண்பரானார்.

"உலகையே ஆதாயமாக்கினாலும் மனிதர் தம் ஆன்மாவை இழப்பாராகில் அதனால் அவருக்கு வரும் பயன் என்ன" என்ற இறைமகன் இயேசுவின் வார்த்தையை இஞ்ஞாசியார், சவேரியாருக்கு எடுத்துரைக்க, சவேரியார் அவ்வார்த்தையின் ஆழத்தை உணர்ந்து இறைவனோடு அதிகமாய் இணைந்திருந்தார். பின்னர் இவர்கள் இயேசு சபையைத் தொடங்கினர். இதில் மீண்டும் நான்கு நண்பர்கள் சேர்ந்து இறைபணியை செய்ய முடிவு செய்தனர்.

குருத்துவமும் இந்திய வருகையும் :
சவேரியாரின் பயணங்கள் :
இதை தொடர்ந்து 1537ம் வருடம் ஜூன் மாதம் 24ம் நாள் குருவாக திருநிலை பெற்று தன் முதல் திருப்பலியை செப்டம்பர் 30ம் நாள் நிறைவேற்றினார். பின்னர் அவரும் அவருடைய நண்பர்களும் திருத்தந்தை மூன்றாம் பவுலைச்சந்தித்து இறைப்பணி செய்வதற்கான தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர். அதே வேளையில் போர்த்துகீசிய மன்னன் தனக்குக் கீழ் இருந்த நாடுகளுக்குக் குருக்களைத் தந்துதவும்படி வேண்டியதால், சவேரியார் இந்தியா மற்றும் போர்த்துகீசிய காலனி நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.

புனித சவேரியார் 1540ல் ரோமில் இருந்து புறப்பட்டு லிஸ்பன் சென்றார். அங்கு ஒரு வருடம் இறைபணியை செய்த பின்னர் இந்தியாவிற்கு வரும் வழியில் மொசாம்பிக்கில் ஒரு வருடம் இறைபணியை செய்துவிட்டு 1542 மே மாதம் 6ம் நாள் கோவாவை வந்தடைந்தார். முதல் நான்கு மாதங்கள் கோவாவிலும் பின்னர் தென் இந்தியாவின் குறிப்பாக தமிழகக் கடற்கரைக் கிராமங்களில் தனது இறைப்பணியைச் செய்துவந்தார்.

மறைப்பணி :
1543ல் தென்திருவிதாங்கூரில் தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தில் தன் இறைப்பணியைத் தொடர்ந்தார். சுமார் பதினைந்து மாதங்கள் கிராமங்கள் தோறும் மணியடித்தபடி சென்று அங்கு ஆட்கள் கூடியதும் அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றிய செய்திகளைக் கூறியும் நோயாளிகளைச் சந்தித்தும் வந்தார். திருவிதாங்கூர் இராச்சியத்தில் பல ஆலயங்கள் புனித சவேரியாரால் நிறுவப்பட்டன. மிகக் குறுகிய கால வேளையான ஒரு வருடத்திற்குள் நாற்பத்தி ஐந்து சிறிய கிறிஸ்தவ ஆலயங்களை அவர் நிறுவினார் என்று காண்கிறோம்.

கி.பி. 1544ல் திருவிதாங்கூரை (அன்றைய வேணாடு) திரு. பூதல வீர கேரள வர்மன் என்ற ஜெயசிம்ம நாட்டு மூத்த திருவடிகள் ஆண்டு வந்தார்கள். அவ்வேளையில் விசய நகர மன்னரான விதாலர் ஒரு பெரும் படையுடன் வேணாட்டை முற்றுகையிட்டார். அவரை எதிர்த்து நிற்பதற்கு வேணாட்டு அரசரால் இயலாமல் போகவே அவர் புனித சவேரியாரின் உதவியை நாடினார். விஜய நகரப் படைகள் ஒழுகினசேரி வழியாக வடசேரி மேட்டை நெருங்கிவிட்டது. அவ்வேளையில் குருசையும் செபமாலையும் உயர்த்திப் பிடித்து வடுகர்ப்படைகளை பின்வாங்கும்படி கர்ச்சித்தார்.

புனித சவோரியாரின் இந்த திடீர் செயலானது வடுகப்படையினரை நிலைகுலையைச் செய்துவிட்டது. அவர்களின் முன்பு ஏதோ ஒரு பெரும் பூதம் போருக்குத் தயாராக நிற்பதைப் போன்று அவர்கள் கண்டனர். நடுநடுங்கிய வடுகப்படைகள் எதிர்பாராத விதமாக பின்வாங்கி வேணாட்டைவிட்டு வெளியேறிச் சென்றனர். இவ்விதமாக புனிதர் சவேரியார் பெரும் ஆபத்திலிருந்து அன்று வேணாட்டைக் காத்து நின்றார். இந்நிகழ்ச்சி நடந்த இடத்தில் ஒரு சிறு கத்தோலிக்க ஆலயம் இன்றைய நாகர்கோவில் இராஐம் திருமண மண்டபத்திற்கெதிரில் காணப்படுகிறது.

“அவர்கள் என்னை மகாராஜா என்று அழைத்தார்கள், ஆனால் இனிமேல் அவர்கள் உம்மை எப்போதும் மகாதந்தை என்று அழைப்பார்கள்” (They called me great king, but hereafter for ever they will call you the Great Father) என்று மன்னர் புனிதர் சவேரியாரை நன்றியுணர்வுடன் பாராட்டினார். இன்றைய குமரி மாவட்டத்தின் கோட்டாறு புனித சவேரியார் ஆலயம் இப்புனிதராலேயே நிறுவப்பட்டுள்ளது.

ஒரு முறை கடலில் பயணம் செய்யும் போது புனித சவேரியாரின் சிலுவை தொலைந்து போயிற்று, ஆனால் கரையை அடைந்ததும் ஒரு நண்டு அந்தச் சிலுவையைக் கொண்டுவந்து சேர்த்தது என்பர்.

மரணம் :
புனித சவேரியார் சுமார் 38000 மைல்கள் கடல் மற்றும் தரை மார்க்கமாகப் பயணம் செய்து இறைப்பணியைச் செய்துள்ளார். கடைசியாக சாங்சோங் தீவில் நோயால் பாதிக்கபட்டார். இவரை ஜார்ஜ் அல்வறேஸ் என்னும் போர்த்துக்கீசியர் கவனித்து வந்தார். இருந்தாலும் 1552ம் வருடம், டிசம்பர் மாதம், 3ம் நாள் உயிர் துறந்தார். ஜார்ஜ் அல்வறேஸ் சவேரியாரை அத்தீவிலேயே அடக்கம் செய்துவிட்டுச் சென்று விடுகிறார்.

அழியா உடல் :
சுமார் இரண்டரை மாதங்கள் கழித்து (ஃபெப்ரவரி 17, 1553) அத்தீவின் வழியாக வரும்போது, மீபொருட்களை, அவரின் சொந்த நாட்டுக்கு எடுத்துச்செல்ல கல்லறையை திறந்தபோது அவரது உடல் எந்தப் பாதிப்பும் இல்லாமல் வைத்தது வைக்கப்பட்டது போலவே இருந்தது. நறுமணமும் வீசியது. பின்னர் அவரது உடலை சண்ட க்ரூஸ் என்னும் கப்பலில் மக்காவு கொண்டு சென்றனர். இக்கப்பலானது மார்ச் 22, 1553ம் வருடம் மக்காவுவை வந்தடைந்தது. மீண்டும் ஒரு ஆலயத்தில் வைத்து அவரது உடலைப் பார்த்தபோது அது கெட்டுப் போகாமல் நறுமணம் வீசியது என்பர். பின்னர் சவேரியாரின் உடல் புனித சின்னப்பர் தேவாலயத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தந்தை பெய்ரோ புனித சவேரியாரின் உடலைக் கோவா கொண்டுசெல்ல உத்தரவிட்டார். இதன்படி டிசம்பர் 1553ல் புனித சவேரியாரின் உடல் கோவா வந்தடைந்தது. 450 வருடங்களைத் தாண்டிய பின்னரும் அழியாமல் இன்றும் இப்புனிதரின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

புனித சவேரியார் பேராலயம், கோட்டாறு :
கன்னியாகுமரி மாவட்டம், கோட்டாறில் சவேரியார் தங்கிருந்தபோது, அன்னை மரியாளுக்கு ஒரு சிறிய ஆலயம் ஒன்றை கட்டினார். அந்த ஆலயம் இருந்த இடத்தில் கி.பி. 1600ல் புனித சவேரியார் பேராலயம் ஒன்று கட்டப்பட்டது. சவேரியார் அன்னை மரியாளுக்கு கட்டிய ஆலயம் பேராலயத்தினுள் இன்றளவும் உள்ளது.

Address

Pandian Nagar
Virudhunagar
626001

Alerts

Be the first to know and let us send you an email when St Xavier Church Virudhunagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to St Xavier Church Virudhunagar:

Share