சேந்தமங்கலம் காடவகோன் கோப்பெரும் சிங்க சக்ரவர்த்தி

  • Home
  • India
  • Villupuram
  • சேந்தமங்கலம் காடவகோன் கோப்பெரும் சிங்க சக்ரவர்த்தி

சேந்தமங்கலம் காடவகோன் கோப்பெரும் சிங்க சக்ரவர்த்தி kallakuruchchi district sendhamangalam village one of the Port temple sri vanilaikandishwaram

ஸ்ரீ முநீஸ்வர ஸ்வாமி ஆலய கும்பாபிஷேகம்நடுநாட்டின் தலைநகரம் சேந்தமங்கலம் முன்காலாத்தே வெகுசிறப்பான நகரமாக இருந்ததற்கு மேல...
06/04/2026

ஸ்ரீ முநீஸ்வர ஸ்வாமி ஆலய கும்பாபிஷேகம்

நடுநாட்டின் தலைநகரம் சேந்தமங்கலம்

முன்காலாத்தே வெகுசிறப்பான நகரமாக இருந்ததற்கு மேலும் ஒரு சான்று

குலதெய்வ வழிபாடு

சேந்தமங்கலத்தின் கோட்டையின்எட்டு திசைகளிலும் காவல்தெய்வங்களை நிறுத்தி வழிபட்டான் காடவ கோன் கோப்பெரும்சிங்கசக்ரவர்த்தி அந்த காவல் தெய்வங்களை குலதெய்வமாய் கொண்டு வழிபட்டுள்ளனர் சேந்தமங்கலம் வாழ் குடிமிகள்.

அக்குடிகள் தற்போது தமிழகம் முழுவதும் விரவிகிடக்கின்றனர் உதாரணம் மதுரை,
காரைகுடி,
வைதீஸ்வரன்கோவில்,
திருக்கருகாவூர்,
திருப்பனந்தாள் கோயமுத்தூர்,
செங்கள்பட்டு
என பெரிய சிவாலயங்களில் சிவகைங்கர்யம் செய்யும் ஆதிசைவஅந்தணர்கள் குலதெய்வமாய் வழிபடுவது சேந்தமங்கலத்தின் மத்யபகுதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ முனீஸ்வரர் ஸ்வாமியை.

அதுபோலவே மேற்குபகுதி தேவதை ஸ்ரீமழையம்மனையும் சேலம் முதலிய நகரத்தில் வசிக்கும் வன்னிய க்ஷத்ரியவம்சாவளிகள் வந்து வழிபடுவது உண்டு.

இதுபோலவே கிழக்கில் ஸ்ரீ அங்காலபரமேஸ்வரிக்கும்

தெற்கில் வனதுர்கைக்கும்,

வடக்கில் பெரியாயி அம்மனுக்கும் குலதெவதை வம்சாவளிகள் சேந்தமங்கலத்தில் மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ளனர்

குலதெவதைக்காரர்கள் என்றால் பூர்வகுடியாய் குலதெவதை இருக்கும் இடத்தே வசித்தவர்கள் என கொள்ளவேண்டும் ஆக ஹிந்துக்களில் உள்ள அந்தணர் முதலாக அனைத்து ஹிந்துமத உட்பிறிவினரும் சேந்தமங்கலத்தில் கோப்பேரும் சிங்க சக்ரவர்த்தி காலத்தே மிகவும் நேர்தியாக ஒற்றுமையுடனும் தத்தம் குலவழக்கத்தை கடைபிடித்து சிறப்பாகவே வாழ்ந்துவந்துள்ளனர் என உணர முடிகிறது.

நேற்று மதுரையில் இருந்து வந்து சேந்தமங்கலம் ஸ்ரீ முனீஸ்வரனை வழிபட்ட சேந்தமங்கலம் வம்சாவழி அந்தணர்கள் செவிவழி செய்தியாக அவர்கள் முன்னோற்கள் சொல்லி கேள்விப்பட்ட விஷயங்கள் முன் சொன்னவை.

தற்போதும் குடும்ப விஷேஷங்களுக்கு சேந்தமங்கல குலதெய்வத்திற்கு முதற்வழிபாடாக செய்துவிட்டு செல்லும் தமிழக வாசிகள் அனைத்துஹிந்து உட்பிரிவுகளை சார்ந்தோர்களே இதற்கு சான்று.

சேந்தமங்கலத்து எல்லை தெய்வங்கள் சக்தி அளப்பரியது வாருங்கள் அருட்பெற்றுசெல்லுங்கள்

பைரவாஷ்டமி பிரார்த்தனைகள்
11/03/2026

பைரவாஷ்டமி பிரார்த்தனைகள்

சனிபெயர்ச்சி மஹாயாகம் நமது கோவிலில் நடைபெற்றது
10/03/2026

சனிபெயர்ச்சி மஹாயாகம் நமது கோவிலில் நடைபெற்றது

06/03/2026

மங்களகரமான விஸ்வாவசு வருடம் மாசி மாதம் 22 ஆம் தேதி இன்றைய தினத்திலே சனீஸ்வர பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசம் செய்கின்ற நிகழ்வை முன்னிட்டு உலக மக்கள் நன்மை பெற சனீச்சர நவக்கிரக சாந்தி யாகங்கள் நமது ஆலயத்தில் துவங்கப்பட்டு நடைபெறுகின்றது

17/01/2026

பிரதோஷ தரிசனம்

ஓதினார் வேதம் வாயால்   ஒளிநிலா எறிக்குஞ் சென்னிப்பூதனார் பூதஞ் சூழப்   புலியுரி யதள னார்தாம்நாதனார் தில்லை தன்னுள்   நவி...
03/01/2026

ஓதினார் வேதம் வாயால்
ஒளிநிலா எறிக்குஞ் சென்னிப்
பூதனார் பூதஞ் சூழப்
புலியுரி யதள னார்தாம்
நாதனார் தில்லை தன்னுள்
நவின்றசிற் றம்ப லத்தே
காதில்வெண் குழைகள் தாழக்
கனலெரி யாடு மாறே. 5

சேந்தமங்கலம் நமது சிவாலயத்திலே ஆருத்ரா தரிசனம் வெகு சிறப்பாக நடைபெற்றது

 #நமதுசேந்தமங்கலம்_சிவாலயம்கோபெரும்சிங்ககடவராயசக்கரவர்த்தி அவர்கள் திருப்பணி  #காரணஆகம முறைப்படி அமைக்கப்பட்டது அதன் வழி...
21/12/2025

#நமதுசேந்தமங்கலம்_சிவாலயம்கோபெரும்சிங்ககடவராயசக்கரவர்த்தி அவர்கள் திருப்பணி #காரணஆகம முறைப்படி அமைக்கப்பட்டது

அதன் வழியே தொன்று தொட்டு வழிபாடுகளும் நடந்து வருகின்றது இவ் உண்மையை மேலும் நிச்சயித்துக் கொள்ள

நமது மகா கும்பாபிஷேக நிகழ்விற்கு முன் மகாபலிபுரம் சிற்பக் கலை கல்லூரி முன்னாள் முதல்வர்

மற்றும் எங்களுடைய குருநாதர்

நூற்றுக்கணக்கில் பட்டங்களையும், பதவிகளையும்,ஆன்றோர் சபைகளின் நாயகராகவும் இருந்து இன்றும் ஆலய வழிபாட்டில் எவ்வித சந்தேகங்கள் வந்தாலும் தீர்த்து வைக்கும் நல் ஆசிரியர்,நீதித்துறை இவரது ஆதாரங்களுக்கு வணங்கும் பாங்கு என கூறிக்கொண்டே போகலாம்

அண்ணா சோமசேகர சிவாச்சாரியார் அவர்களை வருவித்து ஆலய கட்டுமானங்களை மீண்டும் ஒரு முறை அலசி வழிபாட்டு முறைகளை மேலும் சேம்மைபடுத்திக்கொள்ள அறிவுரைகளை வாங்கிக் கொண்டோம்

பாதுகாப்பிற்காக பாட்டனார் காலத்தில் ஏற்படுத்திய சில மாற்றங்களை அவர் தற்காலத்தை மாற்றி அமைக்க கூறியிருந்தார்

இவ்வித நிகழ்வுகளை இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் தற்சமயம் செய்ய முடியவில்லை என்பதையும் பின்வரும் காலங்களில் தகுந்த ஆதாரத்துடன் எடுத்துச் சொல்லி ஆலய நிர்மாணத்தை முழுமைப்படுத்துவோம் என்று அண்ணா அண்ணாவிடம் கூறி பிரார்த்தனை செய்து கொண்டோம் அவருடைய வருகைக்கு பல கோடி நமஸ்காரங்கள்

கரண ஆகமத்தின் முக்கிய அம்சங்கள்:
தோற்றம்: சிவன் தனது ஐந்து முகங்களில் ஒன்றான சத்யோஜாத முகத்திலிருந்து, பார்வதி தேவிக்கு அருளி, விஷ்ணுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 28 சித்தாந்த ஆகமங்களில் இதுவும் ஒன்று.

பொருள்: இது பெரும்பாலும் கோவில் கட்டமைப்பு, பூஜை முறைகள், மற்றும் பிரபஞ்சத்தின் காரணக் கோட்பாடுகளை (cosmological principles) விளக்குகிறது.

வகைப்பாடு: இது 28 சைவ ஆகமங்களில் சிவபேத வகையைச் சேர்ந்தது.

துணை ஆகமங்கள்: காரண ஆகமத்திற்கு ஏழு துணை ஆகமங்கள் உள்ளன. அவை: கரண, பவனா, தௌர்கா, மகேந்திரா, பீமன், மரணம் மற்றும் த்வேஷ்டா.
பயன்பாடு: காமிகம், மகுடம் போன்ற பிற முக்கிய ஆகமங்களுடன் சேர்ந்து, இன்றும் பெரும்பாலான சிவாலயங்களில் வழிபாட்டு முறைகளுக்கு இது அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது.

ஆகமங்களின் முக்கிய வகைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்....

(1) சைவ ஆகமங்கள் (28):-
------------------------------------------------

தோற்றம் & சிறப்பு:
சிவபெருமானின் ஐந்து முகங்களிலிருந்து (சத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம்) 28 ஆகமங்கள் தோன்றின. இவை சிவபேதம் (10) மற்றும் ருத்ரபேதம் (18) என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.
சிவபேதம்: காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அஜிதம், தீப்தம், சூட்சுமம், சகஸ்ரம், அஞ்சுமான், சுப்ரபேதம் .
ருத்ரபேதம்: விஜயம், நிஸ்வாசம், சுவாயம்புவம், அக்னேயம், வீரம், ரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், பிம்பம், புரோத்கீதம், லலிதம், சித்தம், சந்தானம், சர்வோத்தம், பரமேசுவரம், கிரணம், வாதுளம்.

உள்ளடக்கம்:
நான்கு பாதங்கள்:
(1) சரியை: கோயில் கட்டுமானம், சடங்குகள்.
(2)கிரியை: பூஜை முறைகள், தீட்சை விதிகள்.
(3) யோகம்: ஆன்மீகப் பயிற்சிகள்.
(4) ஞானம்: பதி-பசு-பாசம் (முப்பொருள் தத்துவம்)
சைவ சித்தாந்தத்தின் அடிப்படை: இவை ஆன்மா மலங்களை நீக்கி சிவத்துடன் ஒன்றாதலை விளக்குகின்றன .

முக்கிய ஆகமங்கள்:
காமிகம்: கோயில் அமைப்பு மற்றும் பூஜை முறைகளை விரிவாக விளக்குகிறது.
வாதுளம்: தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட முக்கிய ஆகமம்.

(2) வைணவ ஆகமங்கள்
-----------------------------------------------

(2 முக்கிய வகைகள்)
(1) பாஞ்சராத்ரம்: விஷ்ணுவின் பல அவதாரங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளை விளக்குகிறது.
(2) வைகானசம்: ஆலயங்களின் அமைப்பு மற்றும் மூர்த்தி நிர்மாணத்திற்கான விதிகளைக் கொண்டது .

சிறப்பு:
பாஞ்சராத்ரம்: "பஞ்ச கால" (ஐந்து காலக்கட்டங்கள்) மற்றும் விஷ்ணுவின் திருவுருவங்களை வழிபடும் முறைகள்.
வைகானசம்: விஷ்ணுவின் பரம்பொருள் தன்மையை எடுத்துரைக்கும் தத்துவ நூல்.

தத்துவம்: விசிஷ்டாத்வைதம் இராமானுஜரால் வளர்க்கப்பட்டது. உயிர்-ஈசன் உறவை "உடல்-ஆன்மா" போன்று விளக்குகிறது .

(3) சாக்த ஆகமங்கள் (தந்திரங்கள் 64)
-----------------------------------------------------------------------

தோற்றம் & சிறப்பு: சக்தி தேவியை மையமாகக் கொண்ட இவை தந்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றுள் 64 முக்கிய ஆகமங்கள் உள்ளன.
முக்கிய தந்திரங்கள்: யாமளம், மாலினீவிஜயோத்தரம், தந்திரசாத்பாவம்.

உள்ளடக்கம்:
சக்தி வழிபாடு: காளி, துர்கா போன்ற தெய்வங்களின் மந்திரங்கள் மற்றும் யந்திரங்கள்.
தத்துவம்: சிவன்-சக்தி ஒருமைப்பாடு. சிவன் நிலையானவர்; சக்தி இயக்கமானவர் .

பிரிவுகள்:
வாம மார்கம்: இடது மரபு சடங்குகள்.
தட்சிண மார்கம்: வலது மரபு சடங்குகள்.

ஆகமங்களின் பொதுவான அம்சங்கள்:-
(1) தெய்வீக உரையாடல்:
பெரும்பாலான ஆகமங்கள் சிவன்-பார்வதி அல்லது விஷ்ணு-லட்சுமி உரையாடல் வடிவில் அமைந்துள்ளன .
(2) நான்கு பாகங்கள்:
ஞானம் (தத்துவம்), யோகம் (மன ஒழுக்கம்), கிரியை (சடங்குகள்), சரியை (நெறிமுறைகள்).
(3) சமூகத் தாக்கம்: சாதி வேறுபாடின்றி அனைவருக்கும் வழிபாடு செய்ய உதவுகின்றன.

மேற்கோள்கள் & மேலதிக தகவல்கள்:
------------------------------------------------------------------------
சைவ ஆகமங்கள்: திருமந்திரம், சிவஞான சித்தியார்
வைணவ ஆகமங்கள்: பகவத் கீதை, புராணங்கள்.
சாக்த ஆகமங்கள்: காளிகா புராணம், தேவி பாகவதம்.

குறிப்பு:
சாக்த ஆகமங்களின் எண்ணிக்கை 64 என்பதால், உங்கள் கேள்வியில் குறிப்பிடப்பட்ட "6" என்பது பிழையாக இருக்கலாம். சாக்தர்களின் முக்கிய தந்திரங்கள் 64 என்பதே ஆதாரங்களில் உள்ளது .

முடிவுரை:
ஆகமங்கள் இந்து சமயத்தின் ஆன்மீக, சமூக, கலை மரபுகளின் அடித்தளம். சைவம், வைணவம், சாக்தம் ஆகியவற்றின் தனித்துவத்தை இவை வெளிப்படுத்துகின்றன!

சிவம்பெருகட்டும்

https://www.facebook.com/share/p/1McwEGNxVq/ சேந்தமங்கலம் பெருமையை உலகறிய  அடுத்த நிலைக்கு நமது ஆபத்சஹாயர் எடுத்து செல்க...
21/12/2025

https://www.facebook.com/share/p/1McwEGNxVq/

சேந்தமங்கலம் பெருமையை உலகறிய அடுத்த நிலைக்கு நமது ஆபத்சஹாயர் எடுத்து செல்கிறார்

ஆலய ராஜகோபுர அமைப்பிற்கு உண்டான கட்டுமான வரைபடம் தயார் செய்யப்பட்டு மண் பரிசோதனை அறிக்கை (Soil Test Report) முதலிய அறிக்கை செய்வதற்க்கு திருச்சி NIT நிறுவனம் வருவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்கள் நன்றிகள் Tamilnadu ADDITIONAL secretary mam avargalukku

 #நாமார்க்குங்குடியல்லோம்நமனை யஞ்சோம்நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்இன்பமே எந்நாளு...
08/12/2025

#நாமார்க்குங்குடியல்லோம்நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற்

நமது சிவாலயத்தில் கார்திகை மாதம் அனைத்து ஸோமவாரத்திலும் சங்காபிஷேகம் கடந்த இருபத்து வருடங்களுக்கு மேலாய் நடைபெருகிறது உலக நன்மையை கருத்தில் கொண்டு.

 #புத்தரோடுபொறியில்சமணும்புறம்கூறநெறி நில்லாஒத்தசொல்லஉல கம்பலிதேர்ந்தெனதுஉள்ளம்கவர் கள்வன்மத்தயானைமறுக அவ்உரிபோர்த்ததோர்...
08/12/2025

#புத்தரோடுபொறியில்சமணும்புறம்
கூறநெறி நில்லா
ஒத்தசொல்லஉல கம்பலிதேர்ந்தெனது
உள்ளம்கவர் கள்வன்
மத்தயானைமறுக அவ்உரிபோர்த்ததோர்
மாயம்இது என்னப்
பித்தர்போலும்பிர மாபுரமேவிய
பெம்மான்இவன் அன்றே

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

நல்ல நாளாக அமைந்தது நேற்று மாநில செகரட்டரி அலுவலகத்திலிருந்து (நம்முடைய ஆலய சிவ பக்தர்) அரசினுடைய ஸ்தபதியார் குழுமத்திலி...
08/12/2025

நல்ல நாளாக அமைந்தது நேற்று

மாநில செகரட்டரி அலுவலகத்திலிருந்து (நம்முடைய ஆலய சிவ பக்தர்)

அரசினுடைய ஸ்தபதியார் குழுமத்திலிருந்து ஒரு நபரை நமது சேந்தமங்கலம் சிவாலய ஆலயத்தின் ராஜகோபுர மதிப்பீட்டை மதிப்பிடும்படி கூறியிருந்தார்

அதன்படி நேற்றைய தினம் ராஜகோபுரத்தினுடைய அளவைகள் குறிப்பு எடுத்தனர் பின்னர் அது ஆய்வு செய்யப்பட்டு மாநில மத்திய அரசினுடைய துறைக்கு அனுப்பி ராஜகோபர திருப்பணி வேலைகளை செய்வதற்கு உண்டான பணிகள் செய்யப்படும்

அதே நேரத்தில் எனது நண்பர் பெரும் சிவ பக்தர் முத்தையா அவர்கள் இல்லத்திலே இருந்து ஒரு பாதுகாப்பு பெட்டகம் இறைவனுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது

வாழ்க அவரது குடும்பம்

சிவம் பெருகட்டும்

Address

Sendamngalam
Villupuram
607204

Opening Hours

Monday 8am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+919443481300

Website

Alerts

Be the first to know and let us send you an email when சேந்தமங்கலம் காடவகோன் கோப்பெரும் சிங்க சக்ரவர்த்தி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to சேந்தமங்கலம் காடவகோன் கோப்பெரும் சிங்க சக்ரவர்த்தி:

Share

Category