Shri Vazhiththunai Murugan Temple

Shri Vazhiththunai Murugan Temple The place for the people who seeks love and peace. The main purpose of this is
"To feed the HUNGER" Daily Free Foods For All

ஆடி வெள்ளி முன்னிட்டு நமது கல்லூர் கிராமத்தில் அருள்பாலிக்கும் காவடி சித்தர் வளாகத்தில் அமைந்துள்ள தர்மமிகு வழித்துணை மு...
09/08/2024

ஆடி வெள்ளி முன்னிட்டு நமது கல்லூர் கிராமத்தில் அருள்பாலிக்கும் காவடி சித்தர் வளாகத்தில் அமைந்துள்ள தர்மமிகு வழித்துணை முருகன் ஆலயத்தில் இன்று சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
பக்த கோடிகள் அன்னதானத்தில் கலந்துகொண்டு பசியாறினார்
அன்னதானத்திற்கு உதவிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி தங்கள் பணி மென்மேலும் சிறக்க எம்பெருமான் முருக பெருமானே வேண்டி வணங்கி பிரார்த்தித்துக் கொள்கிறோம்
இப்படிக்கு
முருகன் அடிமை
Muthusamy Kallur
9500881261

தமிழ் கடவுள் முருகன் TamilGod Murugan ஸ்ரீ திருச்செந்தூர் முருகன் சக்தி வேல் சபை வெற்றி தரும் முருகன் THIRUCHENDUR MURUGAN THUNAI திருச்செந்தூர் ஸ்ரீ முருகன் பக்தர்கள் PALANI MURUGAN TEMPLE,,,�,,, பழனி முருகன் கோவில்

#முருகன் #அன்னதானம் #அன்னதான

கடலூர் மாவட்டம் கல்லூர் கிராமத்தில் அருள்பாலிக்கும் காவடி  வளாகத்தில் அமைந்துள்ள தர்மமிகு வழித்துணை முருகன் (தினசரி அன்ன...
05/08/2024

கடலூர் மாவட்டம் கல்லூர் கிராமத்தில் அருள்பாலிக்கும் காவடி வளாகத்தில் அமைந்துள்ள தர்மமிகு வழித்துணை முருகன் (தினசரி அன்னதான மடம்) கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று வழித்துணை முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

மேலும் பக்தர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

அன்னதானத்திற்கு பொருள் உதவி செய்த நன்கொடை வழங்கிய அனைத்து அன்பர்களுக்கும் வழித்துணை முருகன் கோயில் நிர்வாகம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

வழித்துணை முருகன் தினசரி அன்னதான மடம் சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருக்கும் நன்கொடையாளர்களுக்கும் பொருள் உதவி செய்பவர்களுக்கும் எல்லாம் வல்ல எம்பெருமான் முருகப்பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்க வழித்துணை முருகனை பிரார்த்தித்துக் கொள்கிறோம்.

பசியென வருவோரின் பசி தீர்க்கும் இந்த உன்னத செயலில் கிடைக்கும் அனைத்து புண்ணியங்களும் நாங்கள் இதனை செய்ய உறுதுணையாகவும் பக்கபலமாகவும் எங்களை மென்மேலும் உற்சாகப்படுத்தும் நன்கொடையாளர்களுக்கும் பொருள் உதவி செய்பவர்களுக்கும் மேலும் அவர்களின் பெற்றோர்கள் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கும் இந்த அனைத்து புண்ணியகளும் சென்றடைய எம்பெருமான் வழித்துணை முருகனை வேண்டி வணங்கி பிரார்த்தித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு
வழித்துனை முருகன் கோவில் நிர்வாகம்
முருகனடிமை
முத்துசாமி கற்பகம்
9500881261

ஓம் வழித்துணை முருகா சரணம்!
ஓம் காவடி சித்தரே சரணம்!!



வெற்றி தரும் முருகன் தமிழ் கடவுள் முருகன் TamilGod Murugan PALANI MURUGAN TEMPLE,,,�,,, பழனி முருகன் கோவில் THIRUCHENDUR MURUGAN THUNAI Shri Vazhiththunai Murugan Temple Muruga saranam MURUGAN ARUL Murugan tunnai....(om saravana bhava)

ஆடி கிருத்திகை முன்னிட்டு இன்று நமது கல்லூர் கிராமத்தில் அருள்பாலிக்கும் காவடி சித்தர் வளாகத்தில் அமைந்துள்ள தர்மமிகு வழ...
29/07/2024

ஆடி கிருத்திகை முன்னிட்டு இன்று நமது கல்லூர் கிராமத்தில் அருள்பாலிக்கும் காவடி சித்தர் வளாகத்தில் அமைந்துள்ள தர்மமிகு வழித்துணை முருகன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் அறுசுவை உணவுடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Find local businesses, view maps and get driving directions in Google Maps.

ஆடி கிருத்திகை முன்னிட்டு கல்லூர் கிராமத்தில் அருள்பாலிக்கும் காவடி சித்தர் வளாகத்தில் அமைந்துள்ள தர்மமிகு வழித்துணை முர...
29/07/2024

ஆடி கிருத்திகை முன்னிட்டு கல்லூர் கிராமத்தில் அருள்பாலிக்கும் காவடி சித்தர் வளாகத்தில் அமைந்துள்ள தர்மமிகு வழித்துணை முருகன் ஆலயத்தில் இன்று வழித்துணை முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனையும் செய்யப்பட்டது.
மேலும் பக்தர்களுக்கு அறுசுவை உணவுடன் அன்னதானம் வழங்கப்படுகிறது.
அன்னதானத்திற்கு நன்கொடை அளித்த பொருள் உதவி செய்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் வழித்துணை முருகன் மடம் சார்பாக மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தங்களின் அருட்கொடையால் இன்று நூற்றுக்கணக்கான உயிர்கள் வயிறார பசியாறி இருக்கிறார்கள் என்பதை என்னும் போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் அருட்கொடை மென்மேலும் வளர எம்பெருமான் வழித்துணை முருகனை வேண்டி கொள்கிறோம்.
நன்கொடை மற்றும் பொருள் உதவி செய்தோர் மற்றும் அன்னதானத்தில் கலந்துகொண்டு அனைவருக்கும் உணவு பரிமாறியோர் என அனைத்து அன்பர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் நண்பர்களும் எல்லாப் புகழும் எல்லா செல்வமும் பெற்று நீண்ட ஆயுளோடு நோய் நொடியின்றி இன்புற்று வாழ எல்லாம் வல்ல எம்பெருமான் தர்மமிகு வழித்துணை முருகனை பிரார்த்தனை செய்து கொள்கிறோம்.

ஓம் வழித்துணை முருகா சரணம்!
ஓம் காவடி சித்தரே சரணம்!!
Shri Vazhiththunai Murugan Temple

#முருகா #அன்னதானம் #முருகன் #வழித்துணைமுருகன்

  கடலூர் மாவட்டம் கல்லூர் கிராமத்தில் அமைந்திருக்கும் காவடி சித்தர் வளாகத்தில் அருள்பாலிக்கும் தருமமிகு வழித்துணை முருகன...
26/03/2024


கடலூர் மாவட்டம் கல்லூர் கிராமத்தில் அமைந்திருக்கும் காவடி சித்தர் வளாகத்தில் அருள்பாலிக்கும் தருமமிகு வழித்துணை முருகன் தினசரி அன்னதான மடம் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நேற்று நடைபெற்றது.
பக்தர்கள் அலைகடலென திரண்டு ராஜ அலங்காரத்தில் காட்சியளிக்கும் வழித்துணை முருகனை தரிசித்து ஆசி பெற்று, மதிய அன்னதானமான அறுசுவை உணவு அன்னதானத்தில் அனைவரும் பங்கேற்று அன்னதானத்தை சிறப்பித்தனர்.

அன்னதானத்திற்கு உதவிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் குடும்பமும் சுற்றமும் நண்பர்களும் மென்மேலும் வாழ்வில் எல்லா வளமும் பெற்று சிறப்புற்று வாழ வழித்துணை முருகனை வணங்கி வேண்டிக் கொள்கிறோம்.

இங்ஙனம்
என்றும் இறைப்பணியில்
முருகன் அடிமை முத்துசாமி
9500881261

ஓம் வழித் துணை முருகா சரணம்!
ஓம் காவடி சித்தரே சரணம்!!

🙏 #வழித்துணைமுருகன் #அன்னதானம் தமிழ் கடவுள் முருகன் TamilGod Murugan THIRUCHENDUR MURUGAN THUNAI ஸ்ரீ திருச்செந்தூர் முருகன் சக்தி வேல் சபை PALANI MURUGAN TEMPLE,,,�,,, பழனி முருகன் கோவில் வெற்றி தரும் முருகன் திருச்செந்தூர் ஸ்ரீ முருகன் பக்தர்கள்

கடலூர் மாவட்டம் *கல்லூர்* கிராமத்தில் அருள்பாலிக்கும் நமது *தருமமிகு வழித்துணை முருகன்* கோவில் (தினசரி அன்னதான மடம்) *கா...
23/03/2024

கடலூர் மாவட்டம் *கல்லூர்* கிராமத்தில் அருள்பாலிக்கும் நமது *தருமமிகு வழித்துணை முருகன்* கோவில் (தினசரி அன்னதான மடம்) *காவடி சித்தர்* வளாகத்தில் *பங்குனி உத்திரம்* திருநாளை முன்னிட்டு நாளை *24-03-2024 ஞாயிற்றுக்கிழமை*

காலை 6.30க்கு *கணபதி ஹோமம்* நடைபெறும்.

8.30 மணியளவில் வழித்துணை முருகனுக்கு பக்தர்கள் அனைவரும் *காவடி மற்றும் பால் குடம்* எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

10.30க்கு வழித்துணை முருகனுக்கு *பால் அபிஷேகம்* நடைபெறும்.

11 மணிக்கு மேல் வழித்துணை *முருகனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம்* செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

மேலும் *சிறப்பு அன்னதானம்* நடைபெறும்.

*பங்குனி உத்திரம்* திருநாளான *25-03-2024 திங்கட்கிழமை* முருகன் சிறப்பு அலங்காரமாக *சந்தன காப்புடன் ராஜா அலங்காரத்தில்* அன்பர்களுக்கு அருள்பாலிப்பார்.

மேலும் *பங்குனி உத்திரம் சிறப்பு* அன்னதானமாக *அறுசுவை உணவு* வடைபாயசத்துடன் பரிமாறப்படும்.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டத்தில் உள்ள *கொரக்கை மற்றும் லக்கூர் கிராமத்தில் இருந்து திருப்பதி* பாதையாத்திரையாக *80...
06/03/2024

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டத்தில் உள்ள *கொரக்கை மற்றும் லக்கூர் கிராமத்தில் இருந்து திருப்பதி* பாதையாத்திரையாக *80க்கும்* மேற்பட்டோர் இன்று அதிகாலை தங்கள் யாத்திரையை தொடங்கினார்கள்.

அவர்களுக்கு *கடலூர் மாவட்டம், கல்லூர்* கிராமத்தில் அருள்பாலிக்கும் நமது *தருமமிகு வழித்துணை முருகன் கோவில், தினசரி அன்னதான மடத்தில்* காலை சிற்றுண்டியாக *பால், வாழைப்பழம் மற்றும் சுண்டல்* வழங்கப்பட்டது.

அனைவரும் *தருமமிகு வழித்துணை முருகனை தரிசித்து ஆசி பெற்று* மீண்டும் தங்கள் யாத்திரையை தொடர்ந்தார்கள்.

#பாதயாத்திரை #அன்னதானம் #முருகன் #திருப்பதி
Shri Vazhiththunai Murugan Temple திருப்பதி

நெடுங்கூர் பாலமுருகன் கோயில் https://youtu.be/hRMMo3ZKBfU29ஆம் ஆண்டு கல்லூர்-பழநி பாதயாத்திரை*ஓம் வழித்துணை முருகா சரணம்...
02/03/2024

நெடுங்கூர் பாலமுருகன் கோயில்

https://youtu.be/hRMMo3ZKBfU

29ஆம் ஆண்டு கல்லூர்-பழநி பாதயாத்திரை

*ஓம் வழித்துணை முருகா சரணம்!* *ஓம் காவடி சித்தரே சரணம்!!* #முருகன் #பாதயாத்திரை #பழநி

Shri Vazhiththunai Murugan Temple

கடலூர் மாவட்டம், கல்லூர் கிராமத்தில் அருள்பாலிக்கும் *தருமமிகு வழித்துணை முருகன்* கோயிலில் இருந்து அருள்மிகு ....

https://youtu.be/3Ox1FdFV9Vo29ஆம் ஆண்டு கல்லூர்-பழநி பாதயாத்திரை இரண்டாம் நாள்                   #பாதயாத்திரை           ...
01/03/2024

https://youtu.be/3Ox1FdFV9Vo

29ஆம் ஆண்டு கல்லூர்-பழநி பாதயாத்திரை இரண்டாம் நாள் #பாதயாத்திரை

கடலூர் மாவட்டம், கல்லூர் கிராமத்தில் அருள்பாலிக்கும் *தருமமிகு வழித்துணை முருகன்* கோயிலில் இருந்து அருள்மிகு ....

29/02/2024

கடலூர் மாவட்டம், கல்லூர் கிராமத்தில் அருள்பாலிக்கும் *தருமமிகு வழித்துணை முருகன்* கோயிலில் இருந்து அருள்மிகு பழநி பாலதண்டாயுதபாணியை தரிசிக்க 29ஆம் ஆண்டு கல்லூர்-பழநி பாதயாத்திரை

இரண்டாம் நாள்

*ஓம் வழித்துணை முருகா சரணம்!* *ஓம் காவடி சித்தரே சரணம்!!* #முருகன் #பாதயாத்திரை

பசுதா கிராமம், விதிஷா மாவட்டம், மத்தியப் பிரதேசம், ஜகதீஷ்புரியிலிருந்து ராமேஸ்வரம் பாதையாத்திரையாக செல்லும் இவர்கள் நால்...
29/02/2024

பசுதா கிராமம், விதிஷா மாவட்டம், மத்தியப் பிரதேசம், ஜகதீஷ்புரியிலிருந்து ராமேஸ்வரம் பாதையாத்திரையாக செல்லும் இவர்கள் நால்வருக்கும் இன்று கடலூர் மாவட்டம், கல்லூர் கிராமத்தில் அருள்பாலிக்கும் நமது தருமமிகு வழித்துணை முருகன் கோயில், தினசரி அன்னதானம் மடத்தில் காலை உணவு வழங்கப்பட்டது.
நால்வருக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது, அவர்கள் வழித்துணை முருகனை வணங்கி விட்டு தங்கள் பயணத்தை மீண்டும் தொடங்கினர்.
மேலும் தருமமிகு வழித்துணை முருகன் மடத்திலிருந்து நமது குருசாமி முருகன் அடிமை முத்துசாமி அவர்கள் இவர்களுக்கு மதிய உணவாக கோதுமை சப்பாத்தி செய்து கொண்டுபோய் வழங்கினார் மற்றும் இரவு உணவிற்கு சப்பாத்தி பார்சல் செய்து கொடுக்கப்பட்டது.

மிக்க மகிழ்ச்சி என்று அவர்கள் நமது குருசாமி முருகன் அடிமை முத்துசாமி அவர்களை கட்டித்தழுவி தங்கள் அன்பை பகிர்ந்துகொண்டார்கள்.

உணவு தயாரிப்புக்கு உதவிய பக்தர் சுரேஷ், கார்த்திக், மற்றும் கீதா வேப்பூர் மற்றும் கற்பகம் முத்துசாமி அனைவருக்கும் மிக்க நன்றி.

தருமமிகு வழித்துணை முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டிக் கொள்கிறோம்.

இங்ஙனம்
தருமமிகு வழித்துணை முருகன் கோயில்
தினசரி அன்னதான மடம்
9500881261, 9360089056
Shri Vazhiththunai Murugan Temple
Kashi Tamil Sangamam #பாதயாத்திரை #அன்னதானம்

Address

NH45, Kallur Road, Ma Podaiyur Post
Veppur
606108

Alerts

Be the first to know and let us send you an email when Shri Vazhiththunai Murugan Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share