Immanual Youth Prayer Fellowship - IYPF

Immanual Youth Prayer Fellowship - IYPF Remember not thy Creator in the days of thy youth, (Ecclesiastes 12.1)

ஆந்திர மாநிலம். புத்தூர் இப்பதாங்கள் கிராமத்தில் நடந்த சுவிசேஷக் கூட்டத்தில் கர்த்தர்  அநேகரை விடுதலையாக்கினார். தேவனுக்...
10/02/2023

ஆந்திர மாநிலம். புத்தூர் இப்பதாங்கள் கிராமத்தில் நடந்த சுவிசேஷக் கூட்டத்தில் கர்த்தர் அநேகரை விடுதலையாக்கினார். தேவனுக்கு மகிமை உண்டாவதாக.

17/10/2017

🙏Dear All, Please Pray for Bro.Arivalagan and his team who where going to Andhaman (19th Oct to 25th Oct) for Ministry purpose. God has to make miracle and safeguard them while going and coming. So andhaman Team be prepared and ready 🙏

Praise the Lord
21/09/2017

Praise the Lord

REALIZE :Your near dear ones may abandon you and leave you alone in the wilderness. But GOD will never forsake you. He w...
31/12/2016

REALIZE :
Your near dear ones may abandon you and leave you alone in the wilderness. But GOD will never forsake you. He will prepare the way for your glorious return, watching over you and striking down your enemies even without your knowledge.
RED SEA - 2016
MARA - 2017
ELIM - 2018

Dear Sister's and Brother's Wish you happy Christmas......
25/12/2016

Dear Sister's and Brother's
Wish you happy Christmas......

பயப்படாதிருங்கள்நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார். -  (ஆதியாகமம் 15:1).இ...
23/12/2016

பயப்படாதிருங்கள்

நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார். - (ஆதியாகமம் 15:1).

இந்நாட்களில் பயம் என்னும் காரியம் மனிதனை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. சிலருக்கு எதையெடுத்தாலும் பயம். சிலருக்கு இருட்டைக் கண்டால் பயம், சிலருக்கு வியாதியைக் குறித்து பயம், சிலருக்கு எதிர்காலத்தை நினைத்து பயம் இப்படி பயம் பல விதங்களில் மனிதனுக்கு வருகிறது.

ஒரு வாலிபன், அவனுக்கு ஒரு வியாதியும் இல்லை, ஆனால் தனக்கு எப்போதும் நெஞ்சில் வலியிருப்பதைப் போல ஒரு உணர்வு, தான் சீக்கிரம் மரித்துவிடுவோமோ என்று பயம். அதனால் தினமும் ஆஸ்பத்திரிக்குச் சென்று, தினமும் ECG எடுத்துப் பார்த்து திருப்திபட்டுக் கொள்வான். அங்குள்ள டாக்டர்களும் நர்சுகளும் இவன் வந்தால், தினமும் ECG எடுக்கத்தான் வருகிறான் என்று ஆரம்பத்தில் அக்கறையாக கவனித்தவர்கள், பிற்பாடு ஒரு வருடகாலமானபோது, அவனை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டார்கள். ஏனென்றால், அவனுடைய ECG எப்போதும் நார்மலாக இருந்தது.

ஒரு நாள் அவன், உண்மையில் நெஞ்சுவலியுடன் வந்தபோது, அவனை கவனிப்பார் இல்லை. எல்லாரும் மற்ற நோயாளிகளுடன் பிஸியாக இருந்தபடியால், அவன் எப்போதும் வருகிறவன்தானே என்று மெத்தனமாக விட்டுவிட்டார்கள். ஆனால் அவன் உண்மையாகவே நெஞ்சுவலிவந்து, அந்த நாளில் மரித்துப் போனான். இது உண்மையில் நடந்த சம்பவம். யோபு சொல்வதுப் போல ‘நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது’ - (யோபு 3:25) அந்த வாலிபனுக்கு நேரிட்டது.

இன்னும் சிலருக்கு இந்த வியாதி தனக்கு வந்து விடுமோ, கேன்சர் வந்து விடுமோ, இரத்த பரிசோதனை செய்யும் போது ஏதாவது ஒரு லெவல் அதிகமாக வந்துவிட்டால் போதும், உடனே தனக்கு இருதய வியாதி வந்து விடுமோ என்று பயங்கர பயம். இது கிறிஸ்தவர்களையும் அதிகமாய் பாதிக்கிறது என்றால் மிகையாகாது. வியாதி வருவதைக் குறித்து மாத்திரமல்ல, அது வந்தால் தான் சீக்கிரம் மரித்துப் போய் விடுமோ என்பதுதான் மிகப் பெரிய பயம்.

நான் சில நேரங்களில் மரிக்கும் மனிதர் முன்பு இருந்திருக்கிறேன். அவர்கள் மரிப்பதற்கு முன்பு தங்கள் கைகளை ஆட்டி போராடுவதை கண்கூடாக கண்டிருக்கிறேன். அப்போது நான் நினைப்பது உண்டு, சாவின் தூதன் வரும்போது, இவர்கள் சாகாதபடிக்கு அவனோடு போராடுகிறார்கள் என்று. மரித்தப்பின் அவர்களின் முகத்தில் வேதனையின் சாயல் தெரியும். கிறிஸ்து இல்லாமல் மரிக்கும் மானிடருக்கு சாவைக் குறித்த நம்பிக்கை இல்லை.

நீதிமான் மரிப்பதுபோல் நான் மரிப்பேனாக, என் முடிவு அவன் முடிவுபோல் இருப்பதாக (எண்ணாகமம் 23:10) என்று பிலேயாம் தீர்க்கதரிசி வேண்டுகிறான். அநேக பரிசுத்தவான்கள், தங்கள் சாவு மிகவும் பயங்கரமாக, கொடியதாக, சித்தரவதை செய்யப்பட்டு மரித்தாலும், சந்தோஷமாக தங்கள் ஜீவனை ஒப்புக் கொடுத்தார்கள். ஏனென்றால் தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்ளூ என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான். (மத்தேயு 16:25) என்பதை அவர்கள் அறிவார்கள்.

பிரியமானவர்களே, நம்மைப் படைத்த தேவன் யார் என்கிற அறிவு நமக்கு இருக்க வேண்டும். அவர் சர்வ வல்லமையுளள் தேவன். அவர் சித்தமில்லாமல் நம் தலையிலிருந்து ஒரு முடிக் கூட கீழே விழுவதில்லை. அப்படி இருக்கும்போது, நாம் எதைக் குறித்தும் ஏன் கவலைப்பட வேண்டும்? பயப்பட வேண்டும்? ஜீவனுள்ள தேவன் நம்மோடு கூட இருக்கும்போது இருளைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்? இருள் நம்மை சூழ்ந்தாலும் அவர் வெளிச்சமாய் நம்மைக் காத்துக் கொள்வாரே! இந்த உலகத்தில் இருக்கிறவனிலும் நமக்குள் இருக்கிறவர் பெரியவர். பெருங்காற்று அடித்து, கடல் கொந்தளித்தபோது, சீஷர்கள் பயந்திருக்கும்போது பயப்படாதிருங்கள் என்று சொல்லி அவர்களை கரைசேர்த்த தேவன் (யோவான் 6:18-21) இன்றும் நம் வாழ்க்கையில் வரும் கொந்தளிப்புகளையும், புயல்களையும் அடக்கி, நம்மை கரை சேர்க்க வல்லவராயிருக்கிறார். வேதாகமத்தில், 365 தடவை பயப்படாதிருங்கள் என்று தேவன் நம்மை ஆறுதல்படுத்துகிறார். அது வருடத்தின் ஒவ்வொரு நாளும் நம்மை பயப்படாதிருங்கள் என்று ஆறுதல் படுத்துவதற்கு சமம். தேவன் நம்மை நேசிப்பதால் நம்மை பயப்படாதிருங்கள் என்று தேற்றுகிறார்.

ஆகவே எதைக் குறித்தும் பயப்படாதிருங்கள். யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப்பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன். - (ஏசாயா 43:1). என்று நம்மை அழைத்த தேவன் உண்மையுள்ளவர், அவர் நம்மை கடைசி பரியந்தம் காத்துக் கொள்ள வல்லவராயிருக்கிறார்.

அநேகருக்கு எதிர்காலத்தை குறித்த பயம்! எதிர்காலம் நமக்குண்டு, அதனால் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. நம்மை உள்ளங்கைளில் வரைந்து நம்மை பாதுகாக்கிற தேவன் நமக்கு உண்டு. நம் ஜீவனைக் குறித்தும் நமக்கு என்னவாகுமோ என்றும் நாம் பயப்படக் கூடாது. தேவனை ஏற்றுக் கொண்டவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. இன்று நாம் மரி;த்தால் நாம் தேவனோடு இருப்போம். மரிக்காவிட்டால் தேவ்ன நம்மோடு கூட இருக்கிறார். ஆதலால் நாம் அஞ்ஞானிகளைப் போல பயப்படக்கூடாது. நம் காலங்கள் நம் கர்த்தருடைய கரங்களில் இருப்பதால் எதைக் குறித்தும் பயப்படாமல், எல்லாவற்றையும் தேவன் மேல் வைத்து அவருக்கென்று வாழ்வோம். பயப்படாமல் வாழ்வோம். ஆமென் அல்லேலூயா!

06/12/2016

கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்து, அவர் என்னுடனே பேசி, நான் இந்த ஜனத்தின் வழியிலே நடவாதபடி எனக்குப் புத்திசொல்லி விளம்பினதாவது:
இந்த ஜனங்கள் கட்டுப்பாடு என்று சொல்லுகிறதையெல்லாம் நீங்கள் கட்டுப்பாடு என்று சொல்லாமலும், அவர்கள் பயப்படுகிற பயத்தின்படி நீங்கள் பயப்படாமலும், கலங்காமலும்,
சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம்பண்ணுங்கள், அவரே உங்கள் பயமும், அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக. ஏசாயா 8 :11-13

Dear child of GOD! You may have wondered at times why the prayers of certain people are not answered in spite of the lar...
29/11/2016

Dear child of GOD! You may have wondered at times why the prayers of certain people are not answered in spite of the large sums of money they donate to church festivities and activities.
REMEMBER: It is the power of holiness rather than the power of money that pleases God and causes Him to answer.
Isaiah 1: 14-16....

Dearly beloved of GOD !You can't please GOD with any task you take up for Him, if you neglect your father and mother. RE...
28/10/2016

Dearly beloved of GOD !
You can't please GOD with any task you take up for Him, if you neglect your father and mother.
REMEMBER : Take care of your parent's, and the Lord will take care of you.

There is a generation that curseth their father, and doth not bless their mother.
The eye that mocketh at his father, and despiseth to obey his mother, the ravens of the valley shall pick it out, and the young eagles shall eat it.
Proverbs 30 : 11,17.

I requesting to all please read the below screenshots.....
12/10/2016

I requesting to all please read the below screenshots.....

கிறிஸ்துவின் நியாயசனம்ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையம்படிக்கு, நாமெல்லாரும் ...
05/10/2016

கிறிஸ்துவின் நியாயசனம்
ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையம்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும். - (2 கொரிந்தியர் 5:10).
இந்த உலகில் வாழ்கிற விசுவாசிகளானாலும் சரி, அவிசுவாசிகளானாலும் சரி, நாம் ஒவ்வொருவர் செய்யும் ஒவ்வொரு கிரியையும் தேவனால் கவனிக்கப்பட்டு வருகிறது. அந்த எல்லா கிரியைக்கும் தக்க பலன் உண்டு. அந்த நாள் நியாயத்தீர்ப்பின் நாள் ஆகும். அந்த நாளில் சர்வத்திற்கும் நியாயாதிபதியாம் இயேசுகிறிஸ்து நியாயாசனத்தில் அமர்ந்து, நம் ஒவ்வொருவரிடமும் உன் உக்கிராணக் கணக்கை ஒப்புவி என்று கட்டளையிட்டாரானால் நாம் என்ன பதில் சொல்லுவோம்? கீழ்க்ண்டவாறு நம்மை கேட்பாரானால் நாம் என்ன பதில் சொல்வோம்?
நான் உன் கையில் ஒப்புவித்த உலகப் பொருட்களை நீ எவ்வாறு உபயோகித்தாய்? நீ உன் வீட்டையும், நான் உனக்கு தந்த அநேக சௌகரியங்களையும் என்னுடைய மகிமைக்காக மாத்திரம் உபயோகித்தாயா? அல்லது அவைகளை உன்னுடைய புகழ்ச்சிக்காகவும், உன்னையே பிரியப்படுத்திக் கொள்வதற்காகவும் பயன்படுத்திக் கொண்டாயா?
நான் உனக்கு தந்த உடைகளை நீ எவ்வாறு உபயோகித்தாய்? அவைகளை பெருமைக்கும் மாயைக்கும், பிறரை பாவத்திற்கு ஏதுவாய் தூண்டுகிற விதமாக கவர்ச்சியாகவும் உடுத்தினாயா? அல்லது, தகுதியான வஸ்திரத்தினால் உன்னை ஒழுக்கமாய் மூடுவதற்கும், சீதோஷண நிலையிலிருந்து உன்னைக் காத்துக் கொள்வதற்காகவும் உடைகளை உடுத்தினாயா?
உன் பணத்தை நீ எவ்வாறு உபயோகித்தாய்? உன் மாம்சத்தின் இச்சைகளையும் உன் கண்களின் இச்சைகளையும் உலகத்தின் ஜீவனத்தின் பெருமைகளையும் பூர்த்தி செய்வதற்கென உபயோகித்தாயா? வீணாக செலவு செய்து உன் பணத்தை சிதறடித்தாயோ? அப்படி இல்லாமல் பணத்தை உனக்கும், உன் குடும்பத்திற்கும் தேவையானதை உபயோகித்துவிட்டு, மீதியாய் இருப்பவைகளை வாங்கிக் கொள்ளும்படி நான் நியமித்த ஏழைகளின் மூலம் எனக்கு திருப்பித் தந்தாயா?
நான் உனக்கு ஒப்புவித்த சரீரத்தை எப்படி உபயோகித்தாய்? நீ எனக்கு துதி செலுத்தும்படியே நாவை உனக்கு தந்தேன், அதை தீமை பேசுவதற்கும் பிரயோஜனமற்ற வீண் சம்பாஷணைகளுககும், பயன்படுத்தினாயா? அல்லது கேட்பவர்களின் செவியை கிருபை பொருந்திய வார்த்தைகளால் நிரப்பினாயா? மேலும் நான் உனக்கு நியமித்த கிரியைகளை நீ செய்து முடிக்கும்படி உனக்கு கரங்களையும் கால்களையும் இன்னும் பல உறுப்புகளையும் வழங்கியிருந்தேன். நீ அவைகளை பயன்படுத்தி உன்னை பூமிககு அனுப்பினவரின் சித்தத்தை செய்து முடித்தாயா? அல்லது உன் மாம்சத்தின் விருப்பத்தையும் உன் உணர்ச்சியும் நடத்திய பாதைகளுக்கு எல்லாம் உன் அவயவங்களை உன் இஷ்டத்திற்கு ஒப்புக் கொடுத்து விட்டாயா?
நான் உனக்கு கொடுத்த நேரத்தை எப்படி உபயோகித்தாய்? உன் மீதியான நேரங்களில் உன் தேவனோடு உறவாட வேண்டிய நேரங்களில் உறவாடினாயா? ஊழியம் செய்ய வேண்டிய நேரங்களில் உல்லாசமாக, அல்லது உலக காரியங்களுக்காக செலவழித்தாயா?
நியாயாதிபதியாம் இயேசுகிறிஸ்து நம்மைப் பார்த்து இந்தக் கேள்விகளை கேட்டால் நாம் என்ன பதில் சொல்வோம்? ஆம் ஆண்டவரே, நீர் என்னை உலகத்தில் படைத்த நோக்கத்தை நிறைவேற்றி முடித்தேன் என்று புன்னகையோடு சொல்ல முடியுமா? அல்லது தலைகுனிந்து நிற்போமா?
ஒருவேளை நாம் குறைவாக காணப்பட்டால், இந்த நாளிலிருந்துதானே அதை சரியாக்க முற்படுவோம். நம் நடை உடை பாவனை சொல் செயல் எல்லாம் அவரையே பிரதிபலிக்கட்டும். கர்த்தர் கிருபையாக நமக்கு கொடுத்த எல்லாவற்றிலும் அவரையே மகிமைப்படுத்துவோம். 'ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையம்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும். என்ற வார்த்தையின்படி நாம் நிச்சயமாக அவர்முன் நிற்க வேண்டும். அதற்காக நம்மை தயார்ப்படுத்துவோம்.
ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான் (ரோமர் 14:12) என்ற வார்தையின்படி கணக்கொப்புவிக்கும அந்த நியாயத்தீர்ப்பின் நாளில் வெட்கப்பட்டு நிற்காதபடிக்கு சந்தோஷமாய் நாம் கணக்கொப்புவிக்கும்படியாக நம்முடைய கிரியைகள் காணப்படட்டும். கர்த்தரும் சந்தோஷமாய் நம்மைப் பார்த்து, உண்மையும் உத்தமுமான ஊழியக்காரனே எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றுக் கூறுவார். ஆமென் அல்லேலூயா!

04/10/2016

மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்: கோள் சொல்லுகிறவன் பிராண சிநேகிதத்தையும் பிரித்துவிடுகிறான். நீதிமொழிகள் 16 :28
A troublemaker plants seeds of strife, gossip separates the best of friends....

Address

Vellore
632501

Website

Alerts

Be the first to know and let us send you an email when Immanual Youth Prayer Fellowship - IYPF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share