GURU Parasurama Peedam

GURU Parasurama Peedam Peedam Aiming to construct a temple for Lord Parasurama, and Dasamaha Devis to serve people

23/09/2023
குரு பரசுராம பீடம்  - ஆன்லைன் செயல்முறை பயிற்சி வகுப்பு 28.05.2023ஜெய் குரு தத்ஜெய் குரு பரசுராம்ஆத்ம குரு சரணம்‌பஞ்ச சு...
08/05/2023

குரு பரசுராம பீடம் - ஆன்லைன் செயல்முறை பயிற்சி வகுப்பு 28.05.2023
ஜெய் குரு தத்
ஜெய் குரு பரசுராம்
ஆத்ம குரு சரணம்‌
பஞ்ச சுத்தியும் - பஞ்ச பட்சியும் - பயிற்சி வகுப்பு
( வீட்டிலேயே ஆண்கள் பெண்கள் அனைவரும் வீட்டிலேயே எளிதில் கடைபிடித்து நோய்களில் இருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் காக்கும் வழிமுறைகளும்இ வாழ்வில் அனைத்து முயற்சிகளும் வெற்றிபெறவும் )

ஆன்லைன் செயல்முறை பயிற்சி வகுப்பு - 28.05.2023
காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை இ மற்றும் மதியம் 2.00 மணி முதல் 4.00 மணி வரையில் ஜூம் கலந்துரையாடல் செயலியில் நடத்தப்படும்.
பயிற்சியினால் கிடைக்கும் பயன்களில் சில:
- நோய்கள் வராமல் காத்துக்கொள்ளலாம்
- ஏற்கனவே ஆஸ்த்துமாஇ இதய நோய்இ சர்க்கரைஇ இரத்த அழுத்தம்இ கண்களில் பிரச்சனை போன்றவை இருந்தால் விடுபடலாம்
- உடலை மிகவும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்
- ஜாதகத்தில் உள்ள மோசமான நேரங்களைப் பற்றி கவலைப்படாமல் நமக்கு நாமே காரிய சாதனைகளை செய்து கொள்ளலாம்
- எடுத்து வைக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி பெறலாம்
-அதிர்ஷ்டம் நம்மை தேடி வர வழைக்கலாம்...
மற்றும் இன்னும் எண்ணற்ற பலன்கள் இந்த பயிற்சியில் கிடைக்கின்றது...
பயிற்சி கட்டணம் - 1200-
பயிற்சியில் இணைய தொடர்புக்கு - 63839 49915
குரு பரசுராம பீடம்
உடுமலைப்பேட்டை
தமிழ்நாடு.

19/04/2023

குரு பரசுராம பீடம் - ஆன்லைன் செயல்முறை பயிற்சி வகுப்பு 22.04.2023

ஜெய் குரு தத்
ஜெய் குரு பரசுராம்
ஆத்ம குரு சரணம்‌.

தாந்திரீக லகு ஹோம ப்ரயோகம் - பயிற்சி வகுப்பு

( வீட்டிலேயே ஆண்கள், பெண்கள் அனைவரும் செய்யக்கூடிய எளிய தாந்திரீக ஹோம வழிமுறைகள் )

ஆன்லைன் செயல்முறை பயிற்சி வகுப்பு - 22.04.2023
காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை , ஜூம் கலந்துரையாடல் செயலியில் நடத்தப்படும்.

- ஹோமத்தின் அடிப்படை விதிகள்
- ஹோம குண்டம் அமைக்கும் முறை
- ஹோமத்திற்கு பயன்படுத்த வேண்டிய சமித்துகளும், ஆகுதி திரவியங்களும், அதனை சுத்தி செய்யும் வழிமுறையும்
- அங்க சுத்தி, குரு வணக்கம், குல தெய்வ வணக்கம்
- ஹோமத்தில், அஷ்ட பாலகர்கள், அக்னி தேவ ஆவாகணம் செய்து ப்ரதான பூஜை செய்யும் வழிமுறை.

- வாழ்வில் உள்ள காரிய தடைகள், சகல விதமான தோஷங்கள், பொன் பொருள் சேர்க்கை, ராஜ யோகம் கிடைக்க வீட்டில் நித்ய ஹோமம் செய்யும் ப்ரயோகம்.

பயிற்சி கட்டணம் - 2100 /-
பயிற்சியில் இணைய தொடர்புக்கு - 6383949915

குரு பரசுராம் பீடம்,
உடுமலைப்பேட்டை,
தமிழ்நாடு.

உலகில் மிகவும் சக்திவாய்ந்த சாத்வீக  பூஜை முறை:**(உங்களுடைய பதவி¸ பணம்¸ தொழில்¸ திருமணம்¸ பதவி உயர்வு¸ குழந்தை பாக்கியம்...
18/03/2023

உலகில் மிகவும் சக்திவாய்ந்த சாத்வீக பூஜை முறை:*

*(உங்களுடைய பதவி¸ பணம்¸ தொழில்¸ திருமணம்¸ பதவி உயர்வு¸ குழந்தை பாக்கியம்¸ போன்றவை எங்குள்ளது?)*
ஓவ்வொரு 30 நிமிட பிராத்தனைகளிலும் ஒவ்வொரு விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும்...
நம்முடைய பிரார்த்தனைகள் அனைத்தும் பலித்துவிடுவதில்லை. காரணம்? அனைத்து பிரார்த்தனைகளும் சரியான வழிமுறையில் இருப்பதில்லை. பிராத்தனைகளில் உயர்ந்ததும் மந்திரத்தில் சிறந்ததும் ஸ்ரீ வித்யா உபாசனை. தந்த்ர மந்த்ர கலைகளில் மிகவும் உயர்ந்ததும் உன்னதமானதும் ஆகும். ஆனால்¸ அந்த கலை மீது இன்னும் பலருக்கு தவறான அபிப்ராயங்களும்¸ அதைக்கண்டு அச்சமும் உள்ளது. அவ்வாறு உள்ளவர்களுக்காகவே சர்வ சக்திவாய்ந்த பிரார்த்தனை மற்றும் பூஜா முறையாக உள்ளதுதான் ஸ்ரீ சக்ர பூஜா முறை.
ஒருவர் எதை நினைத்து இந்த பூஜை முறையை மேற்கொள்கின்றாரோ அந்த எண்ணத்தை உடனடியாக நிறைவேற்றித் தருவது ஸ்ரீ சக்ர பூஜா முறை. இந்த பிராத்தனையை தொடர்ந்து ஒரு வாரம் மேற்கொண்டாலே அவரவர் நினைத்த காரியங்களை சாதித்துக்கொடுக்கும் சக்திவாய்ந்தது.
இந்த சாத்வீக பூஜை முறையை தினம் 30 நிமிடங்கள் மட்டும் செய்து உங்களுடைய அனைத்து தேவைகளையும் பூர்த்திசெய்துகொள்ள முடியும். உங்களுடைய பிராத்தனை எதுவாக இருந்தாலும் சரி அதை அடைய தினம் 30 நிமிடங்கள்.
மிக மிக ஆச்சர்யமான பலனைத்தரும்
பயிற்சி பெற்ற அடுத்த சில தினங்களிலேயே உங்களுடைய விருப்பங்கள் நிறைவேறுவதற்கான மாபெரும் வாய்ப்பு.....

ஆன்லைன் பயிற்சி நாள் : 19.03.2023
பயிற்சி கட்டணம் : 2100
வாட்ஸ்அப் - 063839 49915

ஜெய் குரு தத்ஜெய் குரு பரசுராம்மஹா கணபதி சதுராவர்த்தி தர்ப்பணம்அலங்கார ப்ரியோ விஷ்ணு:அபிஷேக ப்ரியோ ருத்ர:நமஸ்கார ப்ரியோ ...
06/03/2023

ஜெய் குரு தத்
ஜெய் குரு பரசுராம்

மஹா கணபதி சதுராவர்த்தி தர்ப்பணம்

அலங்கார ப்ரியோ விஷ்ணு:
அபிஷேக ப்ரியோ ருத்ர:
நமஸ்கார ப்ரியோ பானு:
கணேசஸ் தர்பண: ப்ரிய:

ஸ்ரீ விஷ்ணுவுக்கு அலங்காரத்திலும், சிவனுக்கு அபிஷேகத்திலும், சூரியனுக்கு நமஸ்காரத்திலும், விநாயகருக்கு தர்ப்பணத்திலும் பிரியம் உண்டாகிறது என்பது சாஸ்திர ஸ்லோகம். கணபதி, அவருக்காக செய்யப்படும் தர்ப்பணத்தில் மிகவும் மனமகிழ்ந்து அவரது அடியவர்களை அருள்கிறார் என்பது பொருளாகும்.

குரு வழிகாட்டலின்படி மூலமந்திர உபதேசம் பெற்று மகா கணபதிக்கு தர்ப்பணம் செய்வது கணபதியின் அருளைத் தடையின்றி முழுமையாக பெற்றுத்தரும். சதுராவர்த்தி தர்ப்பணம் என்பது, மகா கணபதியின் 28 அக்ஷர மூலமந்திர உபதேசம் பெற்று, குருபரம்பரை முறைப்படி , சுகந்த ஜலம் பயன்படுத்தி 444 முறை தர்ப்பணம் செய்வதாகும்.

பாடத்திட்டம்:

கேரள தந்த்ர முறைகளின்படி

- பூதசுத்தி
- கணபதி, குல தேவதா, குரு வணக்கம்
- கலச பூஜை
- மகா கணபதி பூஜா விதி
- மகா கணபதி தர்ப்பணம்

பயிற்சி நாள் : 11.03.2023 சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் 11.00 மணி வரை
பயிற்சி கட்டணம் : 444/-
வகுப்பில் இணைய வாட்ஸ்அப் எண் - 6383949915

லோக வசியமும் - இராஜ சம்பத்தும் பெற மிக உயர்ந்த ஸ்ரீ சக்கர - மஹாமேரு பூஜாஎல்லாவற்றிலும் உயர்ந்தது எது என்று பார்ப்போமேயான...
02/03/2023

லோக வசியமும் - இராஜ சம்பத்தும் பெற மிக உயர்ந்த ஸ்ரீ சக்கர - மஹாமேரு பூஜா

எல்லாவற்றிலும் உயர்ந்தது எது என்று பார்ப்போமேயானால் பசுக்களில் காமதேனுவும்¸ மிருகங்களில் சிம்மமும்¸ பெண்களில் சீதையும்¸ குதிரைகளில் பஞ்சகல்யாணியும்¸ யானைகளில் ஐராவதமும்¸ தேவர்களில் ஹரியும்¸ யாகங்களில் அஸ்வமேதமும் உயர்ந்தது. அதேபோல யந்திரங்களில் மிகவும் உயர்ந்தது ஸ்ரீ சக்கர - மஹா மேரு என்பதில் ஐயமில்லை.

விநாயகன் உறையுமிடம் ஆனந்தபுரி. முருகன் இருக்குமிடம் ஸ்கந்தலோகம். ப்ரம்மன் இருக்குமிடம் ஸத்யலோகம். நாராயணன் இருக்குமிடம் வைகுந்தம்; இந்திரன் இருக்குமிடம் தேவலோகம். சிவபெருமான் இருக்குமிடம் கைலாயம்.

அது போல அன்னை ஜகன் மாதா அம்பிகை எம்பெருமானுடன் கூடி இன்புற்று உலகத்து உயிர்கள் உய்யும் பொருட்டு அருள்பாலிக்கும் இடம் ஸ்ரீபுரம் எனக்கூறப்படும் ஸ்ரீசக்ர பூர்ணமகாமேரு பீடம் என்னுமிடமாகும். அன்னையுறையும் இந்த யந்திரத்தை கோடுகளாக வரைந்து வைத்தால் அது ஸ்ரீ சக்ரம் எனவும் அதற்கு வடிவம் கொடுத்தால் அதுவே மகாமேரு எனவும் கூறப்படும்.

அன்னை உறையும் இந்த மகாமேரு 9 ஆவரணம் என்னும் கோட்டைகளைக் கொண்டது. அரசர்கள் அரண்மனைகளைச் சுற்றிகோட்டை மதில்களை அமைத்துக் காப்பது போல் தேவியின் ஸ்ரீ சக்ரபுரம் என்னும் கோட்டையைச் சுற்றி 9 கோட்டைகள் உண்டு. ஒவ்வொரு கோட்டையையும் சேனாதிபதிகள் காப்பது போல பெண் சேனாதிபதிகள் காவல் காக்கின்றனர். ஒவ்வொரு கோட்டையும் ஒவ்வொரு அமைப்பைக் கொண்டது.

1 :முதலில் சதுரக் கோட்டை த்ரைலோக்கிய மோகனச் சக்கரம் என்று பெயர். இதனை ப்ரகடயோகினி முதலான தேவியர் காவல்புரிகின்றனர்.

2 : தாமரை இதழ்போன்ற 16 அமைப்புக்கள் கொண்ட ஷோடசதளபத்மம் என்னும் ஸர்வாசபரிபூரக சக்ரம் கோட்டை. இதை குப்தயோகினி முதலான 16 தேவியர் காவல் புரிகின்றனர்.

3: தாமரை இதழ் போன்ற 8 அமைப்பைக் கொண்ட அஷ்டதளபத்மம் என்னும் கோட்டை ஸர்வஸம்சேஷபன சக்ரம் என்று பெயர். இதனை குப்தரயோகினி முதலான 8 தேவியர் காவல் புரிகின்றனர்.

4: 14 முக்கோணங்களைக் கொண்ட ஸர்வ ஷௌபாக்கியதாயக சக்ரம் என்ற பெயரைக் கொண்டது இதனை ஸம்ப்ரதாய யோகினி முதலான 14 தேவதைகள் காவல் புரிகின்றனர்.

5. 10 முக்கோணங்களைக் கொண்ட ஸர்வார்த்த ஸாதக சக்கரம் என்ற பெயரைக் கொண்டது. இதை குலோத்தீரண யோகினி முதலான 10 தேவதைகள் காவல் புரிகின்றனர்.

6. 10 முக்கோணங்களைக் கொண்ட சர்வரஷாகர சக்ரம் என்ற பெயரினைக் கொண்டது. இதனை நிகர்ப்பயோகினி முதலான பத்து தேவதைகள் காவல் புரிகின்றனர்.

7. முக்கோணங்களைக் கொண்ட ஸர்வரோகஹர சக்ரம் என்ற பெயரினைக் கொண்டது. இதனை ரஹஸ்ய யோகினி முதலான 8 தேவதைகள் காவல்புரிகின்றனர்.

8. ஒரே முக்கோணம் ஸர்வ ஸித்திப் பிரதாயக சக்கரம் என்ற பெயரைக் கொண்டது. இதனை அதிரஹஸ்ய யோகினி முதலான தேவதைகள் காக்கின்றனர்.

9. பிந்துஸ்தானம் எனப்படும் ஸர்வானந்தமய சக்கரம் என்ற பெயரைக் கொண்டது. இது ஒரு புள்ளி போன்ற இடமாகும். இதில் பரதேவதையான அம்பிகை ஸ்ரீ லலிதா மகா திரிபுரசுந்தரியாக இருந்து கொண்டு அருள் பாலிக்கின்றாள்.

இவ்வளவு மகத்துவம் பொருந்திய ஸ்ரீ சக்கர மஹா மேரு பூஜை செய்வதால் ஏற்படும் மிகச்சிறந்த நன்மைகள்:-

1. சினிமாத்துறையில் உயர்ந்த உச்சிக்கு செல்லலாம்
2. அரசியலில் உயர்ந்த பதவிகளை பெறலாம்.
3. சாதாரண நிலையில் உள்ளவரும் பொருளாதாரத்தில் மிக உயர்ந்த இடத்தைப் பெறலாம்.
4. நாம் எந்த துறையில் இருந்தாலும் அந்த துறையில் மிகச்சிறந்த வெற்றியைக் கொடுக்கும்.
5. எவ்வளவு மோசமான ஜாதக அமைப்பாக இருந்தாலும் அதன் கெடு பலன்களை மாற்றி நற்பலன்களை வழங்கும்.
6.லோக வசியத்தையும்¸ இராஜ சம்பத்தையும் கொடுக்கும். ஜன வசியம்¸ தன வசியம்¸ ராஜ வசியம்¸ இவ்வாறு சகல வசியங்களையும் கொடுத்து ஒரு சாதாரண மனிதனையும் மிக உயர்ந்த இடத்தில் கொண்டு சேர்க்கும் வல்லமை இந்த ஸ்ரீ சக்கர / மஹா மேரு பூஜைக்கு உள்ளது.

த்ரைலோக்கிய மோகனச்சக்கரம் முதல் பிந்து ஸ்தானம் வரையில் உள்ள ஒன்பது ஆவரணங்களையும் உரிய முறையில் ஸ்ரீ வித்யா முத்திரைகளைக் காட்டி தினம் காலை பிரம்ம முகூர்த்தத்தில் பூஜை செய்பவர்களுக்கு இவை அனைத்தும் கைகூடும் என்பதில் ஐயமில்லை.

ஆன்லைன் வகுப்பு நாள் - 19.03.2023 ( ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4 மணி வரை)

பயிற்சி கட்டணம் - ரூ.‌2100

வாட்ஸ்அப் எண் - 6383949915

Contact : 063839 49915Fees : Rs. 2100
02/03/2023

Contact : 063839 49915
Fees : Rs. 2100

Address

Udumalpet

Website

Alerts

Be the first to know and let us send you an email when GURU Parasurama Peedam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category