22/07/2026
தேவனுடைய வார்த்தைகளை ஏனோதானோ என்று கேட்காமல், வாசிக்காமல் ஒரு விலையேறப்பெற்ற பொக்கிஷத்தைப் பாதுகாப்பது போல திருவசனத்தை கேட்டு அல்லது வாசித்து அதை நம் இருதயத்தில் பத்திரப்படுத்தி, அதற்குக் கீழ்ப்படிவதே கைக்கொள்ளுதல்.
முழு இருதயம்: பிரிக்கப்படாத, அரைகுறையான இருதயத்தோடு அல்லாமல், நம்முடைய முழு அன்பு, ஆசை, எண்ணம் மற்றும் விருப்பத்தோடு தேவனைத் தேடுவதைக் குறிக்கிறது.
நாம் உலக ஆசீர்வாதங்களுக்காகவோ அல்லது கடமைக்காகவோ, அல்லது சுயநல நோக்கத்தோடோ
மட்டும் தேவனைத் தேடாமல், தேவனை மட்டுமே நேசித்து, அவரே நம் வாழ்வின் பிரதான நோக்கம் என்று உணர்ந்து தேட வேண்டும்.
நாம் உண்மையான மகிழ்ச்சியையும் அமைதியையும் தேடி உலகப் பொருட்களின் பின்னால் ஓடாமல், கிறிஸ்துவின் வார்த்தைகளை நம் இதயத்தில் இருத்தி, அதன்படி வாழும்போது நம் வாழ்வு ஆசீர்வதிக்கப்பட்டதாக மாறும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
மத்தேயு 7:26
நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.
நீங்கள் யார் என்பதை உங்களை அலசி ஆராய்ந்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
கிறிஸ்துவின் போர்வீரன்
பேதுரு 💪 ROCK 💪
நாசரேத்
தூத்துக்குடி மாவட்டம்
தேவ செய்தியை வாட்ஸ் அப்பில் பெற்றிட விரும்பினால்
9486080025