ஸ்ரீ கற்குவேல் அய்யனார்

ஸ்ரீ கற்குவேல் அய்யனார் அருள்மிகு ஸ்ரீ கற்குவேல் அய்யனார் தி

23/11/2025
30/08/2025
இன்று நமது கோவில் மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்ற கொண்டு இருக்கிறது
15/12/2022

இன்று நமது கோவில் மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்ற கொண்டு இருக்கிறது

08/11/2022

*🟢🙏🟢🙏🟢🙏🟢🙏 *அஷ்டமி, நவமி என்றால் என்ன?*

ஒரு மாதத்திற்கு அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள். நாட்களைச் சுட்டிக்காட்ட அமாவாசையிலிருந்து அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள். பெயர் தமிழில் வைத்திருந்தால் விளங்கும். சமஸ்கிருதம் ஆதிக்கத்தில் இருந்த போது தமிழ் வருடங்களின் பெயரை கூட பொருள் தெரியாத வடமொழியில் அல்லவா வைத்து விட்டார்கள்? நாமும் அதை மாற்ற மனமின்றி வைத்துக் கொண்டு திண்டாடுகிறோம். அதே போல் தான் நாட்களின் பெயர்களும் பின்வருமாறு வடமொழியில் உள்ளன என்று விளக்கினேன்.

1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை பிரதமர் என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.

2. துவிதை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச் சகர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும்.

3. திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று அல்லவா?

4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண் டது.

5. பஞ்சமி என்றால் அய்ந்தாம் நாள் பாஞ்ச் என்றால் அய்ந்து எனப் பொருள்.

6. சஷ்டி என்றால் ஆறாம் நாள்.

7. சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவதில்லையா?

8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம்.

9. நவமி என்றால் ஒன்பதாம் நாள் நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்.

10. தசமி என்றால் பத்தாம் நாள் தஸ் என்றால் பத்து அல்லவா? தாரம் என்ற கடவுளின் அவதாரங்களைக் கூறக் கேட்டிருக்கிறோம்.

11. ஏகாதசி என்றால் பதினொன் றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.

12. துவாதசி என்றால் பன்னிரண் டாம் நாள் தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.

13. திரியோதசி என்றால் பதிமூன் றாம் நாள் திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று.

14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்.

சதுர்த்தசிக்கும் அடுத்தது பவுர்ணமி அல்லது அமாவாசை ஆகி விடும். இப்படி நாட்களைக் சுட்டிக் காட்ட வைத்த பெயர்களில் என்ன வேறுபாடு இருக்கிறது? அமாவாசை அல்லது பவுர்ணமிக்குப் பிறகு வரும் எட்டாம் நாளும் ஒன்பதாம் நாளும் கெட்டவை என்பதற்கு ஏதேனும் அறிவியல் பூர்வமான விளக்கம் இருந்தால் கூறுங்கள். என் சகோதரியும் மைத்துனரும் வாயடைத்துப் போயினர். இந்த விளக்கம் கண்டு அவர்கள் மிகத் தெளிவு பெற்றனர்.

ஆனால் நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல .

நம் முன்னோர்கள் அஷ்டமி அன்றும் , நவமி அன்றும் நல்ல காரியங்கள் ஏன் செய்வதில்லை ? அதற்கு என்ன காரணம் ?

அதில்தான் விஞ்ஞானம் இருக்கிறது. நம் முன்னோர்களின் வானியல் அறிவு அதில் பளிச்சிடுகிறது.

கிருஷ்ண பரமாத்மா அஷ்டமி அன்று பிறந்ததால் ஒரு மிகப்பெரிய போரை நடத்த வேண்டி இருந்தது.

ஸ்ரீ ராமன் நவமி அன்று பிறந்ததால் அவரது வாழ்வில் 14 வருடம் காட்டில் கழிக்க வேண்டி இருந்தது. இதுதான் காரணமா ? இல்லை !

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை
ஒரு நாள் என்று சொல்கிறோம்.

அதே பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றி வருவதை ஒரு வருடம் என்கிறோம்.

நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றி வருவதை ஒரு மாதம் என்கிறோம். அதனால் தான் மாதத்திற்கு திங்கள் என்ற பெயர் உண்டு. ( திங்கள் என்றால் சந்திரன்)

நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றி வரும் போது ஒரு பாதி சுற்று ( 15 நாட்கள் அமாவாசையாகவும் ) அடுத்த 15 நாட்கள் பௌர்ணமி என்றும் சொல்கிறோம்.

அமாவாசைக்கும், பௌர்ணமிக்கு இடைப்பட்ட எட்டாவது நாளை அஷ்டமி என்று சொல்கிறோம். ஒரு மாதத்திற்கு இரண்டு அஷ்டமி வரும்.தேய்பிறை அஷ்டமி என்றும் வளர்பிறை அஷ்டமி என்றும் சொல்கிறோம்.

சரியாக அஷ்டமி தினத்தன்று நாம் வாழும் பூமியானது சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் வருகிறது.

அவ்வேளையில் சூரியனின் சக்தியும் , சந்திரனின் சக்தியும் பூமியை தங்கள் பக்கம் இழுப்பதால் ஒருவித Vibration ஏற்படுகிறது.

அந்த Vibration பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் எதிரொலிக்கும்.

அதன் காரணமாக எந்த ஜீவராசியாலும் ஒரு நிலையான முடிவை எடுக்க முடியாது.
அஷ்டமி, நவமி நாட்களில் செய்யும் காரியம் இழுபறியாக முடியும். அஷ்டமி, நவமி திதிகள் எதிர்மறையான எண்ணங்களைத் தோற்றுவிக்கும்.
அவ்வேளைகளில் நாம் எடுக்கும் முடிவும் நிலையற்றதாக இருக்கும்.

நவமி கழிந்த பிறகே பூமி தனது இயல்பு நிலைக்கு திரும்பும். அப்போதுதான் மனிதர்கள் உட்பட அனைத்து ஜீவராசிகள் மனமும் நிலை பெறும்.

அதனால் அஷ்டமி அன்றும், நவமி நவநாழிகை வரை எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்று நம் முன்னோர்கள் முடிவெடுத்தார்கள்.

20/09/2022

*தேரிக்குடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோவில் தேரிவன பேச்சியம்மனின் அழைப்பு:*
🔥🔱கற்பக விநாயகருடன் கவலையைப் போக்க வாருமம்மா....
🔥🔱கற்குவேல் அய்யனாருடன் சேர்ந்து காவலுக்கு வாருமம்மா...
🔥🔱பூர்ணம் அம்மாள் உடன் பூலோகம் ஆள வாருமம்மா...
🔥🔱பொற்கலை அம்மாள் உடன் பொக்கிஷமாக வாருமம்மா...
🔥🔱கற்குவேல் அய்யன் பந்தியின் முதன்மை காவல்காரியே வாருமம்மா...
🔥🔱தேரி வனத்தை அடக்கி ஆளும் வனப்பேச்சியம்மனே வாருமம்மா...
🔥🔱சங்கிலி சாமி உடன் சங்கடங்களைத் தீர்க்க வாருமம்மா...
🔥🔱சுடலைமாடசாமி உடன் சுடர் ஒளியாக வாருமம்மா...
🔥🔱கருப்பசாமி உடன் கயவனை அழிக்க வாருமம்மா...
🔥🔱பெரியாண்டவர் உடன் பேய் ஓட்ட வாருமம்மா...
🔥🔱செருக்கன் சாமி உடன் செம்மண்ணை ஆட்சி செய்ய வாருமம்மா...
🔥🔱மாலையம்மன் உடன் மங்களம் தர வாருமம்மா...
🔥🔱ஐவர்ராஜா உடன் ஐயம் போக்க வாருமம்மா...
🔥🔱பிணமாலை சூடும் பெருமாள் உடன் பிணியைப் போக்க வாருமம்மா...
🔥🔱நல்ல மாடசாமி உடன் நன்மைகள் செய்ய வாருமம்மா...
🔥🔱சிவனணைந்த பெருமாள் உடன் சிக்கல்களைத் தீர்க்க வாருமம்மா...
🔥🔱லாடசன்னாசி உடன் லாபத்தை கொடுக்க வாருமம்மா...
🔥🔱பொன் இருளப்பசாமி உடன் பொன்னும் பொருளும் அள்ளிக் கொடுக்க வாருமம்மா...
🔥🔱வன்னிச்சி அம்மன் உடன் வரம் அளிக்க வாருமம்மா....
🔥🔱வன்னியராஜா உடன் வறுமையைப் போக்க வாருமம்மா...
🔥🔱வன்னியராஜா சகோதர்கள் உடன் வளமான வாழ்வு தர வாருமம்மா...
🔥🔱துப்பாக்கி மாடசாமி உடன் துடியாக வாருமம்மா...
🔥🔱அக்னி மாடத்தி உடன் அன்பாக வாருமம்மா...
🔥🔱வேர்வபுத்திரர் உடன் வேதனையை தீர்க்க வாருமம்மா...
🔥🔱ராக்காயி அம்மன் உடன் ராஜலெட்சுமியாக வாருமம்மா...
🔥🔱உச்சிமாகாளி அம்மன் உடன் உறுதுணையாக வாருமம்மா...
🔥🔱காலபைரவர் உடன் காவலாக வாருமம்மா...
🔥🔱பகடைவீரசாமி உடன் பகையைப் போக்க வாருமம்மா...
🔥🔱பலவேசக்காரசாமி உடன் பலவேசம் போட்டுக்கிட்டு வாருமம்மா...
🔥🔱புலமாடசாமி உடன் புகழைத் தர வாருமம்மா...
🔥🔱புலமாடத்தி அம்மன் உடன் புன்னகை முகத்தோடு வாருமம்மா...
🔥🔱கல்லர்சாமி உடன் கட்டளைக் கொடுக்க வாருமம்மா...
🔥🔱மரக்கடாசாமி உடன் மகிமை புரிய வாருமம்மா....
🔥🔱பிரம்மசக்தி அம்மன் உடன் பிரம்பு எடுத்து ஆடி வாருமம்மா...
🔥🔱ஆழியப்பர் சாமி உடன் ஆசி வழங்க வாருமம்மா...
🔥🔱இசக்கியம்மன் உடன் இன்னல்களை தீர்க்க வாருமம்மா....
🔥🔱பொம்மக்கா அம்மன் பொறுப்போடு வாருமம்மா...
🔥🔱பட்டவராயசாமி உடன் பவளமல்லி சூடிக்கொண்டு வாருமம்மா....
🔥🔱திம்மக்கா அம்மன் உடன் திரிசூலம் ஏந்தி வாருமம்மா...
🔥🔱முன்னடி தேவி உடன் முளைப்பாரியில் காட்சி கொடுத்து வாருமம்மா...
🔥🔱முன்னடியான் சாமி உடன் முன் நின்று காவலாக வாருமம்மா...
🔥🔱எமதர்மராஜா உடன் எமபயம் நீக்க வாருமம்மா...
🔥🔱ஓடக்கரை மாடசாமி உடன் ஓடி விளையாண்டு வாருமம்மா...
🔥🔱கசம் காத்த மாடன் உடன் கவசமாக வாருமம்மா...
🔥🔱அத்தி மாடசாமி உடன் அருள் தர வாருமம்மா...
🔥🔱சொற்கேளா வீரன் உடன் சொல்வளம் அளிக்க வாருமம்மா...
🔥🔱பொன் காத்த அய்யன் உடன் பொற்சிலம்பு மாட்டிக்கிட்டு வாருமம்மா....
🔥🔱சின்னதம்பி ராஜா உடன் சிம்ம வாகனத்தில் ஏறிக்கொண்டு வாருமம்மா...
🔥🔱அக்னியை கிரீடமாக சூடிக்கொண்டு அருமையாக வாருமம்மா...
🔥🔱கோரைப்பற்கள் உடன் காட்சிக்கொடுக்கும் கோபக்காரியே வாருமம்மா...
🔥🔱நாக்கை தான் நீட்டிக்கிட்டு நாக வடிவில் வாருமம்மா...
🔥🔱சந்தனக்காப்பு உடன் சாந்தமாக வாருமம்மா...
🔥🔱மஞ்சனை பூசிக்கொண்ட மருத்துவச்சியே வாருமம்மா...
🔥🔱மருதாணியை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் மகாலட்சுமியே வாருமம்மா...
🔥🔱பேச்சு திறன் அளிக்கக்கூடிய சரஸ்வதி தேவியே வாருமம்மா...
🔥🔱எலுமிச்சை மாலை அணிந்துக்கொண்டு ஏவலை அழிக்க வாருமம்மா...
🔥🔱மஞ்சளை முகத்தில் பூசிக்கொண்டு மங்களகரமாக வாருமம்மா...
🔥🔱வீரவாள் கையில் ஏந்தி வேட்டையாடி வாருமம்மா...
🔥🔱சீலைப்பிள்ளையை எடுத்துக்கொண்டு குழந்தை வரம் கொடுக்க வாருமம்மா...
🔥🔱வெள்ளி பிரம்பு எடுத்துக்கிட்டு நல்வாக்கு சொல்ல வாருமம்மா...
🔥🔱வேப்பிலை கையில் எடுத்து பில்லி,சூனியத்தைக் கருவறுக்க வாருமம்மா...
🔥🔱சாட்டையை தான் எடுத்துக்கொண்டு சாமப் பூஜை ஏத்துக்க வாருமம்மா...
🔥🔱திரிசூலம் ஏந்தி தீமையை அழிக்க வாருமம்மா...
🔥🔱குங்குமத்தை அள்ளிக் கொடுக்கும் குலதெய்வமே வாருமம்மா...
🔥🔱தேரிக்காட்டை காவல்காக்கும் காவல்சக்தியே வாருமம்மா...
🔥🔱பரிவார தெய்வங்களுக்கு உத்தரவு கொடுக்கும் பராசக்தியே வாருமம்மா...
🔥🔱பேய்களை அடக்கி ஆளும் பேய்ச்சியம்மனே வாருமம்மா...
🔥🔱எங்கள் கற்குவேல் அய்யனாரின் தாயே தேரிவன பேச்சியம்மனே வாருமம்மா....
🔥🔱ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி...🔥🔱

31/08/2022
புனித தீர்த்தங்கள் அனைத்தும் தற்போது நமது திருக்கோயில் வந்தடைந்தது.... நாளை விடியற்காலை முதல் யாகசாலை பூஜை ஆரம்பம்.... ப...
29/08/2022

புனித தீர்த்தங்கள் அனைத்தும் தற்போது நமது திருக்கோயில் வந்தடைந்தது.... நாளை விடியற்காலை முதல் யாகசாலை பூஜை ஆரம்பம்.... பக்தர்கள் அனைவரும் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.... 🙏🙏🙏

29/08/2022

புனித தீர்த்தங்கள் அனைத்தும் தற்போது நமது திருக்கோயில் வந்தடைந்தது.... நாளை விடியற்காலை முதல் யாகசாலை பூஜை ஆரம்பம்.... பக்தர்கள் அனைவரும் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.... 🙏🙏🙏 #கற்குவேல்அய்யனார்

Address

Tuticorin

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீ கற்குவேல் அய்யனார் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category