Sai Ram Tiruvarur

Sai Ram Tiruvarur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sai Ram Tiruvarur, Hindu temple, Tiruvarur.

தஞ்சாவூரில் இருந்து 62 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது திருவாரூர். இதன் புகழை பற்றி சொல்வதென்றால் இது சோழர்களின் ஐந்து ...
04/09/2015

தஞ்சாவூரில் இருந்து 62 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது திருவாரூர். இதன் புகழை பற்றி சொல்வதென்றால் இது சோழர்களின் ஐந்து தலைநகரங்களில் (உறையூர், பழையாறை, தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம்) ஒன்று, முதலாம் குலோத்துங்க சோழன் இங்குதான் ஆட்சி செய்தான். சங்கீத மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் தியாகராஜா, முத்துசாமி தீட்சிதர், ஸ்யாமா சாஸ்திரிகள் பிறந்த ஊர் இது ! திருவாரூரை ஆண்ட மனு நீதி சோழன் பசுவிற்கு நீதி வழங்க தன் சொந்த மகனையே தேரை ஏற்றி கொன்றது வரலாற்றில் நீதிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அறியப்படுகிறது. இதன் பெயர் காரணம் தெரிய வேண்டும் என்றால்...... திருவாரூர் = திரு+ஆரூர் . திருவாரூரில் கோவில் கொண்டுள்ள தியாகராஜர் மேலும் 6 ஊர்களில் கோவில் கொண்டுள்ளார் ( சப்தவிடங்க தலங்கள் ) எனவே முதலில் ஆரூர் (தேவார பாடல்களில் ஆரூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது) என்றும் பின்னர் கோவில் ஊர் என்பதால் திரு சேர்க்கப்பட்டு திருஆரூர் என்றாகி திருவாரூர் என மருவியது. திருவாரூர் என்ற பெயருக்கு வழங்கப்படும் மற்றும் ஒரு காரணம் என்பது...... திருமகள் திருமாலை அடையவேண்டி திருவாரூரில் உள்ள வன்மீகநாதரை வழிபட்டு, வரம் பெற்று திருமாலை மணந்து கொண்டதுடன் தன் பெயரிலேயே இவ்வூர் வழங்கப்படவேண்டும் என்று கேட்டதால் கமலாலயம் (அ) திருவாரூர் ( திரு - லட்சுமி ,ஆர் - பூமாதேவி பூஜித்தது ) என பெயர் பெற்றது.

பிரியமுடன் சாய் சக்தி கனேஷ் சாய் ராம் திருவாரூர் sai sakthi ganesh

சத்குரு சாய் மந்திரில் தினந்தோறும் நான்கு வேளை தீப ஆராதனை நடைபெறுவதால் இந்த உலகத்தில் நல்லது நடைபெற்றுக் கொண்டு இருக்கிற...
04/09/2015

சத்குரு சாய் மந்திரில் தினந்தோறும் நான்கு வேளை தீப ஆராதனை நடைபெறுவதால் இந்த உலகத்தில் நல்லது நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. சீரடிசாய் பகவான் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட அவதாரம். கங்கா, யமுனை, வாரணாசி ஆகிய நதிக்கரைகளில் சூரிய அஸ்தமத்தில் ஆரத்தி நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

ஆரத்தி மூலமாக சத்குருவை வணங்கினால் ஒழுக்கமும், பாதுகாப்பும் கிடைக்கும். ஆரத்தியை தினம் தினம் இப்படி பழக்கப்படுத்திக் கொண்டால் மந்த புத்தி சுறுசுறுப்படையலாம். இந்த ஆரத்தியில் பல அற்புதங்கள் நிறைந்துள்ளன. நாம் காலையில் எழுந்து சத்குருவை நினைத்து உலகமும் நாமும் நலமாக இருப்பதற்கு காகட ஆரத்தி உதவி செய்கிறது.

அன்றாட வாழ்க்கையில் சிறுசிறு துன்பங்கள் வராமல் இருப்பதற்கு மதிய வேளை ஆரத்தி உதவி செய்கிறது. மனம் போன போக்கில் போகாமல் சாய் சரணம் அடைவதற்கு தூப ஆரத்தி உதவி செய்கிறது. இன்று நடந்த நல்ல காரியங்களுக்காக நன்றி தெரிவிக்க சேஜ் ஆரத்தி செய்கிறோம்.

இந்த நான்கு ஆரத்திகளை தினம் தினம் செய்வதினால் மனமும் உடலும் நல்வழி செல்லும். அதுவே பாபாவின் வழி. எங்கெல்லாம் சாய் ஆரத்தி நடக்கிறதோ, அங்கெல்லாம் நான் இருப்பேன் என்று சாய் கூறியுள்ளார். ஒருநாள் இந்த ஆரத்தியை செய்து பாருங்கள்

நிலையான துணை!மனித ஆத்மாக்கள் தங்கள் கர்ம வினைகளிலிருந்தும், பல பிறவிகளிலிருந்தும் விடுபடுவதற்காக, அவர்களை தம் பக்கம் இழு...
04/09/2015

நிலையான துணை!

மனித ஆத்மாக்கள் தங்கள் கர்ம வினைகளிலிருந்தும், பல பிறவிகளிலிருந்தும் விடுபடுவதற்காக, அவர்களை தம் பக்கம் இழுத்து, உதவி செய்து, பண்படுத்தி, ஆன்மீக வழியில் முன்னேற்றம் அடையச்செய்வதே பரம சத்குருவான ஸ்ரீ சாயி நாதரின் முக்கியப் பணியாகும். ‘ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா’ புத்தகத்தில் பாபா அவர் முன்பிறவியைப்பற்றி பல கதைகள் கூறியிருக்கிறார். அவர் பரமாத்மாவாக இருப்பதால், எல்லா ஜீவாத்மாக்களின் முற்பிறவிகள் பற்றியும் அறிந்திருக்கிறார்.

“ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் என் பக்தர்கள் எவரேனும் ஒருவர் இறப்பை சந்திக்க நேரிடும்போது, அந்த ஆத்மாவை என்னிடம் இழுத்துக் கொள்ள முடியும். எல்லோரையும் பற்றி, எல்லாவற்றையும் நான் அறிந்திருக்கிறேன்”. ஓர் உண்மையான பக்தனுக்கு, இப்படிப்பட்ட ஒரு சமர்த்த சத்குருவை பற்றிக்கொள்வதே அடிப்படையான மற்றும் இறுதியான தேவையாகும்.

ஆனால், சத்குரு ஒருவர் மட்டும்தான் இறப்பிற்குப் பிறகும் நம்முடனேயே வருகிறார். ஆகவே, அவரே நமது சிறந்த, நிலையான துணையாவார். நாம் கொண்டிருக்கும் ஆழ்ந்த அன்பு, பக்தி, நம்பிக்கை இவற்றை முழுமையாக அவர்பால் செலுத்தி அவரையே நாம் இறுகப் பற்றிக்கொள்வோம்.

இவ்வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் சுக துக்கங்கள்யாவும் அவருடைய கட்டுப்பாட்டிற்கும் வழிகாட்டுதலுக்கும் உட்பட்டே நடக்கின்றன என்பதை நாம் உணரவேண்டும். இத்தகைய அனுபவங்கள் ஆத்மாவை உய்விக்கத்தான் என்பதால் அவை தேவையானவை என்றும் நாம் உணர வேண்டும். இத்தகைய தீவிர நம்பிக்கையும், பொறுமையும் உடையவர்கள், இவற்றை சீக்கிரமே இழந்து விடும் மற்றவர்களை காட்டிலும், விரைவாக முன்னேற்றம் காண்பார்கள், பாபா உறுதியளிக்கிறார்: “ஒரு கஷ்டமான நிலைமையை சந்திக்கும் போது மனம் உடைந்து போக வேண்டாம். பொறுமையுடன் என்ன நடக்கிறது என்பதை கவனித்த வண்ணம் இருங்கள் ஏனெனில் என்னுடைய குழந்தைகளையும், பக்தர்களையும், எப்படியாவது காப்பாற்றுவதே என்னுடைய கடமையாகும்.” இதைவிட சிறந்த உறுதி மொழியை வேறு எவரால் நமக்கு கொடுக்க முடியும்?

முருகக் கடவுளுக்காக சிறப்பாக அனுஷ்டிக்கப்படும் விரதங்களில் ஒன்றான சஷ்டி விரதம் இன்றாகும்.இன்றைய தினம் அனைத்து முருகன் கோ...
04/09/2015

முருகக் கடவுளுக்காக சிறப்பாக அனுஷ்டிக்கப்படும் விரதங்களில் ஒன்றான சஷ்டி விரதம் இன்றாகும்.

இன்றைய தினம் அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் இடம்பெறும்.

வருடத்தின் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்திற்கு பின்னர் வரும் சிறப்பு தினத்தில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

சந்தேகமற்ற சுகம் ஓ, குருநாதா, இகத்திலும், பரத்திலும் எந்தெந்தப் பொருட்களைச் சுகம் என்று என்மனம் சந்தேகமறக் கருதுகின்றதோ ...
04/09/2015

சந்தேகமற்ற சுகம்

ஓ, குருநாதா, இகத்திலும், பரத்திலும் எந்தெந்தப் பொருட்களைச் சுகம் என்று என்மனம் சந்தேகமறக் கருதுகின்றதோ அவற்றையெல்லாம் நீரே நிறைவேற்ற வேண்டும். உமது கருணையினால் இவ்வாறு செய்துவிடும், எனது மனதை அடக்கிவிடும். எனது எல்லாக் குற்றங்களையும் மன்னிக்க வேண்டுமென்று வேண்டுகிறேன். பக்தியின்மை, சந்தேகங்கள் போன்ற அலைகளை விரைவில் நீக்குவீராக. - ஸ்தவன மஞ்சரி-யில், ஸ்ரீ தாஸ்கணு மகாராஜ், 1840 வருடம்.

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரை பிரதோஷ பூஜை நடத்தப்படுகிறது. இதை "நித்திய பிரதோஷம்` என்...
04/09/2015

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரை பிரதோஷ பூஜை நடத்தப்படுகிறது. இதை "நித்திய பிரதோஷம்` என்பார்கள். இந்த நேரத்தில் தியாகராஜரை முப்பத்து முக்கோடி தேவர் களும் தரிசிப்பதாக ஐதீகம். எனவே, இந்தக் கோயிலுக்கு மாலை வேளையில் சென்றால், எல்லா தேவர்களின் அருளையும் பெற்ற புண்ணியம் கிடைக்கும்.

பிரியமுடன் Sai Sakthi Ganesh சாய் ராம் திருவாரூர்

இராஜயோகம் தரும் சிவலிங்கம்வீட்டில் சிவலிங்கத்திற்கு பூஜை செய்தால் எல்லா நலன்களும் கிடைக்கும். அசுரர்களுக்கு சிவலிங்கத்தி...
04/09/2015

இராஜயோகம் தரும் சிவலிங்கம்

வீட்டில் சிவலிங்கத்திற்கு பூஜை செய்தால் எல்லா நலன்களும் கிடைக்கும். அசுரர்களுக்கு சிவலிங்கத்தின் மகத்துவத்தை எடுத்து சொன்னார் மயன். அதில் உறுதியான நம்பிக்கைக் கொண்டு சிவ லிங்கத்திற்கு பூஜை செய்தார்கள் அசுரர்கள். அந்த பூஜையின் பலனாக அசுரர்கள் மாட மாளிகையுடன், கற்பக விருச்சகங்களே மரமாகவும் காமதேனுவே பசுவாகவும் அசுரர்களின் மாளிகையை சுற்றி இருந்தது. ஐஸ்வரியத்தில் புரண்டார்கள் அசுரர்கள்.

சிங்கத்திற்கு நேரம் கெட்டால், நரி கூட நாட்டாமை செய்யும் என்கிற கதையாக தேவர்களை விரட்டி அடித்தார்கள் அசுரர்கள். பிரம்மனும், விஷ்ணுவும் தங்கள் நிலையை நினைத்து வருந்தினார்கள். கடும் போரை தொடங்கினார்கள். அது ஆண்டுக்கணக்கில் நடந்த பிறகே அசுரர்களை அழிக்க முடிந்தது. சிவலிங்கத்திற்கு பூஜை செய்பவர்களை எந்த மந்திர தந்திர சக்தியாலும் வெல்ல முடியாது.

வீட்டில் சிவலிங்கத்தை வைத்து பூஜிப்பவர்கள் பல மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் சிவலிங்கத்துக்கு அபிஷேகங்கள் செய்ய இயலாவிட்டாலும், தண்ணீரையும், வில்வ இலையையும் சர்வேஸ்வரனுக்கு சமர்பித்து, வெல்லம், பச்சரிசியையும் நெய்வேதியமாக படைத்து வணங்கி, “ஓம் நமசிவாய – ஹர ஹர மஹாதேவ” என்ற மந்திரத்தை உச்சரித்தாலே சகல நன்மைகளும் தருவார் சிவபெருமான்.

பிரியமுடன் சாய் சக்தி கனேஷ் சாய் ராம் திருவாரூர் sai sakthi ganesh

கார்த்திகேயனை விரதமிருந்து வழிபாடு மேற்கொள்ள பொருளாதார வீழ்ச்சி , பணப்பற்றாகுறை , குடும்ப ஒற்றுமை , மனவிரக்தி மற்றும் பி...
04/09/2015

கார்த்திகேயனை விரதமிருந்து வழிபாடு மேற்கொள்ள பொருளாதார வீழ்ச்சி , பணப்பற்றாகுறை , குடும்ப ஒற்றுமை , மனவிரக்தி மற்றும் பிணிகள் அகலும்.

உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள்

கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானின் நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் ச...
04/09/2015

கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானின் நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது நாளை சனிக்கிழமை காலை பரணி நட்சத்திரம் மதியத்திற்கு பிறகு கார்த்திகை விரதம் எல்லா முருகன் கோயில்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, வீதிஉலா என விமரிசையாக நடக்கிறது

பிரியமுடன் Sai Sakthi Ganesh சாய் ராம் திருவாரூர்

திருவாரூர் தியாகராஜர் கமலாம்பாள் அனுமதியுடன் என் குலதெய்வம் குன்றக்குடி சண்முகநாதன்அருளாலும் என் குருநாதர் சீரடி சாய்பாப...
04/09/2015

திருவாரூர் தியாகராஜர் கமலாம்பாள் அனுமதியுடன் என் குலதெய்வம் குன்றக்குடி சண்முகநாதன்அருளாலும் என் குருநாதர் சீரடி சாய்பாபா ஆசியுடனும் மற்றும் இஷ்ட தெய்வத்தின் கிருபையால் நாளை எனது திருமணம் சாய் சொந்தங்களும் மற்றும்
சாய் நண்பர்கள் பெரியோர்கள் ஆன்றோர்கள் மேழும் எங்களுடைய புதிய சொந்தங்கள் ஆசிவதிக்க வேண்டுகிறேன்

பிரியமுடன் Sai Sakthi Ganesh சாய் ராம் திருவாரூர்

சீக்கிரமே உனக்கு நல்ல வழி பிறக்கும்!என்னை முழுவதுமாக நம்பு. அப்போது உனக்கு இளைப்பாறுதல் செய்வேன். என்னிடம் முழு மனதோடு க...
04/09/2015

சீக்கிரமே உனக்கு நல்ல வழி பிறக்கும்!

என்னை முழுவதுமாக நம்பு. அப்போது உனக்கு இளைப்பாறுதல் செய்வேன். என்னிடம் முழு மனதோடு கேள். என்னிடமுள்ள அனைத்தை யும் நான் உனக்குத் தருவேன்..

சோதனையும் வேதனையும் உன்னை சோர்ந்து போகச் செய்வதற்கு வருவதில்லை. போதனை செய்வதற்காகவே வருகின்றன. போதனையை உணர்ந்தால் உனக்குச் சாதனையாக மாறும்.
ஒவ்வொரு நிலையை நினைத்தும் வேதனைப்படுகிறாய். பிள்ளை நலனை நினைத்து வேதனை. இழந்து போனதை நினைத்து வேதனை.. நோகச்செய்பவர்களை நினைத்து வேதனை.. இப்படி வேதனை மேல் வேதனைப்பட்டு எதைச் சாதிக்கப் போகிறாய்? உனது கவலையால் எதையேனும் சாதிக்கமுடிந்தால் சொல்லேன்..

கவலை என்பது உன் மனதை என்பால் திரும்பாமல் கட்டி வைக்கிற வலை. முதலில் இந்த வலைக்குள் இருந்து வெளியே வா.. அப்போது எனது அனுக்கிரகம் உனக்குக் கிடைக்கும். எனது அனுக்கிரகத்தாலேயே உனது கிரகம் சரியாகும்.

சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படு...
04/09/2015

சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார். அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவிகள் அஷ்ட பைரவிகளும் உண்டு. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்தது ஆகும். அந்நாள் பைரவாஷ்டமி என்று வழங்கப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமி காலபைரவாஷ்டமி என்று வழங்கப்பட்டு சிறப்பு பெறுகிறது.

தேய்பிறை அஷ்டமி நாளில் அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வணங்குகின்றனர். அந்த நாளில் நாம் பைரவரை வணங்குவதால் பைரவரின் அருளோடு அஷ்ட லஷ்மிகளின் அருளும் கிடைக்கப்பெறுவோம். பிரியமுடன் சாய் சக்தி கனேஷ் சாய் ராம் திருவாரூர்

Address

Tiruvarur
610001

Telephone

9597959601

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sai Ram Tiruvarur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category