Imam channel

Imam channel இஸ்லாம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

This Page is only for Dawah,Only Dawah Posts,Pics,Videos will be Uploaded In'Shaa'Allah; And other Islamic Speeches willn't be posted(As we have many pages for that); And Questions, Allegations, Misconeceptions posed by Non Muslims will be answered In'Shaa'Allah in a Good Manner.. :) :) Non Muslim Brothers and Sisters feel free to message us to know about Islam thereby clearing your doubts and Misconceptions on ISLAM. :) :) Please Go through all our posts to know the TRUE MESSAGE OF ISLAM.

https://www.facebook.com/share/p/18yZzUVXNC/ அமெரிக்கச் சிறைச்சாலைகளிலிருந்து ஒரு நெகிழ்ச்சியான செய்தி: இஸ்லாம் நடத்தையை...
10/06/2026

https://www.facebook.com/share/p/18yZzUVXNC/
அமெரிக்கச் சிறைச்சாலைகளிலிருந்து ஒரு நெகிழ்ச்சியான செய்தி: இஸ்லாம் நடத்தையை எவ்வாறு மாற்றுகிறது? 🕊️✨
அமெரிக்கச் சிறைச்சாலை பாதுகாவலர் ஒருவர் ஒரு சிறப்பான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்; அதன்படி, அந்தச் சிறை வளாகத்திலேயே "முஸ்லிம் பிரிவு" (Muslim wing) தான் மிகச் சிறந்த மற்றும் அமைதியான பகுதியாகத் திகழ்கிறது.
மற்ற பகுதிகளிலிருந்து இந்தப் பிரிவு எவ்வாறு தனித்து விளங்குகிறது?
முழுமையான ஒழுக்கம்: ஒவ்வொரு மூலையிலும் வெளிப்படையாகத் தெரியும் அமைதி, நேர்த்தியான கட்டமைப்பு மற்றும் தூய்மை.
இறைவழிபாட்டில் ஈடுபாடு: தினமும் ஐந்து வேளை தொழுகைகளைத் தவறாமலும், மிகத் துல்லியமான நேரக் கட்டுப்பாட்டுடனும் கடைப்பிடித்தல்.
பரஸ்பர மரியாதை: கைதிகளுக்கு இடையே சண்டைகள், வாக்குவாதங்கள் அல்லது மோதல்கள் கிட்டத்தட்ட இல்லவே இல்லை.
பாதுகாப்பு: அறைகளை வழக்கமாகச் சோதனையிடும்போது, ​​தடைசெய்யப்பட்ட பொருட்கள் ஏதுமின்றி அல்லது எந்தவிதக் குழப்பமும் இன்றி அவை சீராக நிறைவடைகின்றன.
எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே புகழ்! இஸ்லாம் என்பது வெறும் மனதில் மட்டும் வைத்துக்கொள்ளப்படும் நம்பிக்கை மட்டுமல்ல, அது ஒரு முழுமையான வாழ்க்கை முறை என்பதற்கு இதுவே நேரடிச் சான்றாகும். சூழல் எவ்வளவு சவாலானதாக இருந்தாலும், அது ஒழுக்கத்தை மேம்படுத்தி, நடத்தையைச் சீராக்கி, ஒழுக்கமான மற்றும் கண்ணியமான மனிதர்களை உருவாக்குகிறது.
ஒருவர் நம்பிக்கையின் போதனைகளை உண்மையாகப் பற்றிக்கொள்ளும்போது, ​​அதன் பலன்கள் அவர்களின் மன அமைதியிலும், தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் அவர்கள் நடந்துகொள்ளும் விதத்திலும் உடனடியாக வெளிப்படுகின்றன.
ஒழுக்கம், கருணை மற்றும் கட்டுப்பாட்டைக் கொண்ட மார்க்கமான இஸ்லாம் எனும் அருட்கொடைக்காக அல்லாஹ்வைப் புகழ்கிறோம் (அல்ஹம்துலில்லாஹ்).

A touching message from the heart of American prisons: How does Islam change behavior? 🕊️✨
An American prison security guard shared a remarkable testimony, confirming that the "Muslim wing" is the best and quietest wing in the entire correctional facility.
What makes this wing stand out so much from the rest?
Absolute Discipline: Noticeable calmness, organization, and cleanliness in every single corner.
Devotional Commitment: Strict and punctual adherence to the five daily prayers.
Mutual Respect: An almost complete absence of fights, arguments, or disputes among the inmates.
Security & Safety: Routine room inspections consistently pass without finding any contraband or facing any chaos.
Glory be to Allah, the Almighty! This is living proof that Islam is not just a belief held silently in the heart—it is a complete way of life. It transforms morals, refines behavior, and builds disciplined, respectful individuals, no matter how challenging their environment is.
When someone truly holds fast to the teachings of faith, the fruits instantly show in their peace of mind and how they treat those around them.
Alhamdulillah (Praise be to Allah) for the blessing of Islam—the religion of morals, mercy, and discipline. 🤍

06/03/2026

#திருக்குறள்_திருக்குர்ஆன்_ஒழுக்கம்_அமைதி_மருத்துவம்_நல்லிணக்கம்_இயேசுவின்இரண்டாம்வருகை_உலகஅழிவு பற்றிப் பேசும் அறிவுப் பெட்டகம்
= ரூ.360 மதிப்புள்ள 7 புத்தகங்கள் ரூ 200 க்கு
- தள்ளுபடி மற்றும் STOCK CLEARANCE SALE!

1. #திருக்குறளும்_திருக்குர்ஆனும் - புதிய புத்தகம்..
தமிழின் பெருமையை உலகம் முழுவதும் உணர்த்திய நூல் திருக்குறள். அதேபோல், உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டும் இறைவேதம் திருக்குர்ஆன். இரண்டும் வெவ்வேறு காலத்திலும், வெவ்வேறு சூழலிலும் தோன்றியவை என்றாலும், அவை சொல்லும் கருத்துக்களில் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. (32 பக்கம்)
குர்ஆனுக்கும், குறளுக்கும் இருக்கிற முரண்பாடுகளை ஒரு பக்கம் வைத்து விட்டு, அவை சொல்லும் ஒத்த கருத்துக்கள் மேல் கவனம் செலுத்தினால், பன்முக சமூகத்தில் வாழும் நமக்கு மத்தியில் இணக்கமும், புரிதலும் அதிகரிக்கும். இந்த சிறு நூலில் குர்ஆனுக்கும், குறளுக்கும் இருக்கும் ஒத்த கருத்துக்களை பற்றி பார்க்கலாம்.

2. #இணைய_காத்திருக்கும்_இருபெரும்_சமூகங்கள். இந்த நூலில் இயேசுவைக் களங்கங்களில் இருந்து காத்த தேற்றரவாளர் யார், முஹம்மது நபியவர்களின் முக்கியத்துவம், இருவரும் போதித்த இறை ஏகத்துவம், இறைவனுக்கு இணைவைத்தலைக் கண்டிக்கும் பைபிள், தேற்றரவாலரின் சிறப்புக்கள் , இயேசுநாதரின் அற்புதப் பிறப்பு, இயேசுநாதரின் இரண்டாம் வருகையின்போது நடைபெற உள்ளவை, இயேசுவுக்கும் இஸ்லாத்திற்கும் உள்ள தொடர்பு, அன்னை மரியாள் யூதர்கள் சுமத்திய களங்கங்களில் இருந்து காப்பாற்றப்படுதல்... இன்னும் சுவையான பல உண்மைகள் (பக்கம் 48)

3. #தவறான_புரிதல்கள்* (pages 258)
- இஸ்லாத்தின் மீது தொடுக்கப்படும் குற்றச்சாட்டுகளும் அவற்றுக்கான தெளிவான பதில்களும்.

4. #அமைதி_அது_உங்கள்_சாய்ஸ்! (p 28)
- தனி மனித மற்றும் சமூக அமைதிக்கான வழி இறைவனுக்கு அடிபணிந்து வாழ்வதே என்பதை தெளிவாக விளக்கும் நூல்.

5. #திருக்குர்ஆன்_மருத்துவம்- உடலும் உள்ளமும் நலம்பெற..
வழக்கமான மருத்துவம் பெரும்பாலும் உடலை மட்டுமே நோக்கிப் பார்ப்பதாக இருக்கும். ஆனால் குர்ஆன் மருத்துவம், உடல்–மனம்–ஆன்மா என்ற மும்முறையையும் ஒன்றாகக் கருதுகிறது. மன அமைதி, இறை நம்பிக்கை, நேர்மையான வாழ்க்கை, தீமையிலிருந்து விலகல், தூய்மை, உணவு ஒழுக்கம் போன்ற அம்சங்கள் அனைத்தும் மருத்துவத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றன.
அதனால் குர்ஆன் மருத்துவத்தில், நோயைச் சிகிச்சை செய்வதற்குப் பிறகும், நோய் வராமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை வழிமுறைகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. குர்ஆன், தூய்மையை, அளவான உணவை, குடிநீர் பாதுகாப்பை, தவறான பழக்கவழக்கங்களிலிருந்து விலகலை, மன அழுத்தத்தைக் குறைக்கும் இறை நினைவுகளை—இவை அனைத்தையும் ஆரோக்கியத்தின் தூண்களாகக் காட்டுகிறது. (பக்கம் 24)

6. #உலகம்_இப்படித்தான்_அழியும்* (pages 101)
சாட்ஜிபிடி துணையோடு ஆதாரங்களுடன்
- மகத்தான் யதார்த்தத்தை எதிர்கொள்ள துணை செய்யும் தெளிவான நூல்!
உலக அழிவு என்பது பூமியில் வாழும் அனைத்து உயிர்களும் அழிந்து, இயற்கையின் நிலைமைகள் முற்றிலும் மாறி உலகம் தனது இயல்பான நிலையை இழக்கும் நிலையாக வரையறுக்கப்படுகிறது. அறிவியல் பார்வையில், இது இயற்கை பேரழிவுகள், சுற்றுச்சூழல் வீழ்ச்சி,

7. #இல்லறத்தை_நல்லறமாய்_துவங்கிட இறைவன் கூறும் வழிமுறைகள்..
- வரதட்சணைக்கு மாறாக வது தட்சணை, கணவன் மனைவி கடமைகள் - உரிமைகள், திருமணத்தின் மற்றும் இல்லறத்தின் புனிதம், விருந்தும் செலவும் ஆண் மீது கடமை, குழந்தை வளர்ப்பு .. போன்ற பல விடயங்கள். (Pages 24)
===============
#திருக்குர்ஆன்_நற்செய்தி_மலர் உங்கள் இல்லம் தேடி வர ₹180 சந்தா கட்டி சந்தாதாரர் ஆகலாம் இன்ஷாஅல்லாஹ் https://wa.me/p/33176695991945755/918867298998

 #திருக்குர்ஆன்_நற்செய்தி_மலர்பிப்ரவரி 2026 இதழுக்கான கேள்விகள்1. இஸ்லாமிய மனமாற்றம் என்றால் என்ன? 2. அது உண்டாக்கிய ஒரு...
25/02/2026

#திருக்குர்ஆன்_நற்செய்தி_மலர்
பிப்ரவரி 2026 இதழுக்கான கேள்விகள்
1. இஸ்லாமிய மனமாற்றம் என்றால் என்ன?
2. அது உண்டாக்கிய ஒரு ஆறு புரட்சிகளை கூறுக.
3. இஸ்லாம் எவ்வாறு சமத்துவத்தை நடைமுறைக்கு கொண்டு வருகிறது?
4. சிரவணக்கம் செய்ய முற்பட்ட நபிததோழரிடம் நபிகளார் என்ன கூறினார்கள்?
5. பெண்ணை வாழவிடாமல் மனிதகுலம் தழைக்காது- ஏன்?
6. யாருடைய அன்பைப் பெற்றால் நம் வாழ்க்கை முழுமை அடையும்?
7. சமத்துவம் பேணுவேன் என்பதற்கான உறுதிமொழி எது?
8. ஒரு அடிமையை விடுவித்தால் அவர் இறைவனிடமிருந்து பெரும் நன்மை என்ன?
================
- மேற்படி கேள்விகளுக்கு வாசகர்கள் பிப்ரவரி இதழின் அடிப்படையில் பதில் அளிக்கலாம்.
- சரியான விடைகளை வாட்சப் மூலம் எழுதி அனுப்பும் மாற்றுமத அன்பர்களுக்கு பரிசுகள் உண்டு.
- இஸ்லாமிய வாசகர்களும் பங்கேற்கலாம். (சந்தா தாரர்கள் மட்டும்)
- வாட்சப் மூலம் பதில்கள் அனுப்பவேண்டிய எண்: 9886001357
- போட்டி விஷயத்தில் நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.
- தொடர்ந்து போட்டியில் கலந்து கொண்டு பதில் அனுப்புபவர்களுக்கு சர்ப்ரைஸ் பரிசுகள் காத்திருக்கின்றன.
- --------++++-------
#திருக்குர்ஆன்_நற்செய்தி_மலர்
- பிப்ரவரி 2026 இதழ்
- பொருளடக்கம்
உலக நடைமுறைகளை திருத்திய இஸ்லாமிய மன மாற்றம் -2
சமத்துவம் – உலக அமைதிக்கான அஸ்திவாரம் -6
அடிமைத்துவத்தை உடைத்தெறிந்த இறையச்சம் -8
சுயமரியாதையின் அடித்தளமும் இறையச்சமே! -10
பெண்ணை வாழவிடாமல் மனிதகுலம் தழைக்காது! -12
பாவங்களை மன்னிக்கக் காத்திருப்பவன்! -14
இன்றைய செய்திகளும் இறைவனின் வழிகாட்டலும் -15
கேள்விகள் பல – விடை தெரிந்ததே! -17
புதிய கேள்வி -பதில் பகுதி -20
ஆசிரியர் - வாசகர் நேரடி சந்திப்பு நிகழ்ச்சி.-21
(PDF வாசிக்க க்ளிக் செய்யுங்கள்)
https://www.quranmalar.com/2026/02/2026.html
===============
திருக்குர்ஆன் நற்செய்திமலர் உங்கள் இல்லம்தேடி வர ₹180 சந்தா கட்டி சந்தாதாரர் ஆகலாம் இன்ஷாஅல்லாஹ் https://wa.me/p/33176695991945755/918867298998

இந்த ரமலான் மாதத்தின் சிறப்புக்கு ஒரு மிகச்சிறந்த காரணம் இருக்கிறது!அது என்ன? அதை அறிய வரலாற்றில் சற்று பின்னோக்கி பயணிப...
19/02/2026

இந்த ரமலான் மாதத்தின் சிறப்புக்கு ஒரு மிகச்சிறந்த காரணம் இருக்கிறது!

அது என்ன? அதை அறிய வரலாற்றில் சற்று பின்னோக்கி பயணிப்போம்...

அனைத்துமே ஆரம்பமானது அங்கே...

முஹம்மத் நபி அவர்கள் மக்கா நகரில் அன்று உயர்குலமாக அறியப்பட்டிருந்த குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571ல் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும் போது தந்தையாரையும், பிறந்து சில மாதங்களில் தனது தாயாரையும் இழந்தார்கள். அநாதையான இவரை அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் என்பவர் பெறுப்பேற்று வளர்த்தார்கள். அநதையாகவே வளர்ந்தாலும் நற்பண்புள்ளவராகவும் உண்மையாளராகவும் திகழ்ந்த இவரை மக்கள் அல் அமீன் (பொருள்: நம்பிக்கைக்கு உரியவர்) என்று பட்டம் சூட்டி அழைத்தனர்.

ஆனால் அவரைச்சுற்றி அனாசாரங்களும் மூடநம்பிக்கைகளும் அநியாயங்களும் அட்டூழியங்களும் வெகுவாகப் பரவியிருந்தன. அங்கு மக்கள் முன்னோர்கள் விட்டுச்சென்ற முடமான பழக்கவழக்கங்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றி வந்தனர். யாரென்றே தெரியாதவர்களுக்கு எல்லாம் சிலைகள் வைத்து வணங்கினார்கள். கடவுளின் பெயரால் புரோகிதர்கள் கற்பித்த மூடநம்பிக்கைகளையும் வீண் சடங்குகளையும் மறுகேள்வி கேட்காமல் பின்பற்றினார்கள். பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தனர், மது குடித்தனர், மனித உயிர்களை துச்சமாக மதித்தனர், பெண்களை அடிமைகளாக நடத்தினர், சாதராண விஷயத்திற்காக பலஆண்டுகள் தொடராக சண்டை இட்டுக் கொண்டனர், நிறவெறி, கோத்திரவெறி, தேசியவாதம், சாதியம் போன்ற தீமைகள் கட்டுக்கடங்காமல் மக்களை அலைக்கழித்துக் கொண்டிருந்தன.

விடியலுக்கு ஏங்கிய உள்ளம்

இப்படிப்பட்ட சூழலில் அனைத்துமே அனைவருமே பாவங்களில் மூழ்கியிருப்பதால் நன்மை எது, நீதி எது, நியாயம் எது என்பதையே யாரும் சிந்திக்காமல் இருக்கும் நிலை! ஆனால் நபிகள் நாயகத்தின் மனம் மட்டும் அங்கு இதற்கோர் விடிவு பிறக்காதா என்று ஏங்கியது! அவரால் அந்த அசிங்க சூழலை சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. அதன் விளைவாக அவர் மனம் தனிமையை விரும்பியது.

அவருக்கு அப்போது நாற்பது வயது நெருங்கியிருந்தது. சத்துமாவையும் தண்ணீரையும் எடுத்துக் கொண்டு மக்காவிலிருந்து இரண்டு மைல் தொலைவிலுள்ள நூர் மலையின் ஹிரா குகைக்குச் செல்லத் தொடங்கினார். அக்குகை நான்கு முழ நீளமும் ஒன்றே முக்கால் முழ அகலமும் கொண்டது. ரமழான் மாதத்தில் அங்கு தங்கி வணக்க வழிபாடுகளிலும், இப்புவியையும் அதைத் தாண்டிய பிரபஞ்சத்தையும் இயக்கும் அபார சக்தியைப்பற்றி சிந்திப்பதிலும் ஈடுபட்டார்கள்.

அன்று பெய்தது தேன்மழை!

இப்படிப்பட்ட அந்த சூழலில்... அந்த ரமலான் மாதத்தின் ஒரு இரவில்தான்... அந்த பேரற்புதம் நிகழ்ந்தது! ஆம் மனித வரலாற்றின் போக்கை மாற்றி எழுதிய அந்த அற்புதம்! விண்ணும் மண்ணும் உறவைப் புதுப்பித்துக்கொண்ட அற்புதம்! வருடங்களாக வறண்டு கிடந்த வானம் பார்த்த பூமியின்மேல் வான்மழை பொழிந்தால் எப்படியிருக்கும்? அதுவும் பொழிந்தது தேன்மழையாக இருந்தால் கேட்கவும் வேண்டுமோ? ஆம் அன்று பெய்த தேன்மழை அன்றோடு நின்று விடவில்லை. தொடர்ந்து பெய்தன அத்தேன் துளிகள்! நபிகளார் இப்புவியில் நடமாடிய காலம் வரை தொடர்ந்து சிறுகச்சிறுகப் பெய்தன அந்த அமுதத்தின் துளிகள். நபிகளாரின் இதயத்தில் சேகரமான அந்த தேன்துளிகளின் தொகுப்பே இன்று உலகெங்கும் பரவி நிற்கும் திருக்குர்ஆன் என்ற வான்மறை!
https://www.quranmalar.com/2016/06/blog-post_10.html
-----------
நன்றி:
திருக்குர்ஆன் நற்செய்தி மலர்
இதழ் உங்கள் இல்லம்தேடி வர ₹180 சந்தா கட்டி சந்தாதாரர் ஆகலாம் இன்ஷாஅல்லாஹ் https://wa.me/p/33176695991945755/918867298998

தனி இதழ் விலை -ரூ.15 - ஆண்டு சந்தா ரூ.180- · ₹180.00

 #இறுதித்தீர்ப்பு_நாள் #இஸ்லாம்_என்றால்_என்ன #அமைதி_அது_உங்கள்_சாய்ஸ் #திருக்குர்ஆன்_நற்செய்தி_மலர் – ஜனவரி 26 இதழ்பொருள...
15/02/2026

#இறுதித்தீர்ப்பு_நாள்
#இஸ்லாம்_என்றால்_என்ன
#அமைதி_அது_உங்கள்_சாய்ஸ்

#திருக்குர்ஆன்_நற்செய்தி_மலர் – ஜனவரி 26 இதழ்
பொருளடக்கம்:
புதிய ஆண்டு – புதிய மனிதன் -2
இஸ்லாம் நபித்தோழர்களில் ஏற்படுத்திய அதிசய மாற்றங்கள் -4
நபிகளார் – மனமாற்றத்திற்கான சிறந்த ஆசான் -6
மனமாற்றமும் குணமாற்றமுமே இலக்கு -8
கண்டிக்கக் கற்றுத்தரும் அழகிய ஆசான் நபிகளார் -9
தவறைத் திருத்தும் நபிவழி
விபச்சாரத்தில் இருந்து விடுபட்ட இளைஞன்! -11
பள்ளிவாசலில் சிறைக்கைதியின் தலைகீழ் மனமாற்றம் - 14
சிறைச்சாலைகளை ஏன் சீர்திருத்த வேண்டும்?-18
சிறைவாசிகளை சீர்திருத்திடும் இறைநம்பிக்கை! -21
மால்கம் எக்ஸ் – சிறையிலிருந்து சிந்தனைப் புரட்சிவரை.. -23
===========
ஜனவரி 2026 இதழுக்கான கேள்விகள்
1. மனிதனின் மாற்றத்திற்கான அடிப்படை விதியை அறிவிக்கும் இறைவசனம் எது? வசன எண் குறிப்பிடுக.
2. நபித்தோழர்களை சீர்திருத்த நபிகளார் கையாண்ட வழிகள் எவை?
3. பள்ளிவாசலில் சிறுநீர் கழித்த கிராமவாசியை நபிகளார் என்ன செய்தார்கள்?
4. விபச்சாரம் செய்ய விரும்பிய இளைஞனை நபிகளார் எவ்வாறு திருத்தினார்கள்?
5. அந்த இளைஞன் முடிவில் என்ன கூறினான்?
6. பள்ளிவாசலில் சிறைவைக்கப்பட்ட கைதி யார்?
7. சிறைகள் எவ்வாறு கைதிகளை சீர்கேடுக்கின்றன?
8. சிறைவாசிகளை எவ்வாறு இறைநம்பிக்கை சீர்திருத்தும்?
9. மால்கம் x எதற்காக சிறை சென்றார்?
10. எவ்வளவு வருடமாக நற்செய்தி மலரை வாசித்து வருகிறீர்கள்?
---------------------------------------
- மேற்படி கேள்விகளுக்கு வாசகர்கள் கடந்த ஜனவரி இதழின் அடிப்படையில் பதில் அளிக்கும் வாசகர்களுக்கு 6 மாத சந்தா அன்பளிப்பு
- பதில்கள் அனுப்பவேண்டிய எண்: 9886001357
- போட்டி விஷயத்தில் நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.
===============
திருக்குர்ஆன் நற்செய்திமலர் உங்கள் இல்லம்தேடி வர ₹180 சந்தா கட்டி சந்தாதாரர் ஆகலாம் இன்ஷாஅல்லாஹ் https://wa.me/p/33176695991945755/918867298998

 #ஒழுக்கம்_திரும்ப_வழி கள்ளக்காதலால் சிதையும் குடும்பங்கள், காமப்பசி தீர்த்துவிட்டு கன்னியரை கர்ப்பிணியாக்கி விட்டோடும் ...
14/02/2026

#ஒழுக்கம்_திரும்ப_வழி
கள்ளக்காதலால் சிதையும் குடும்பங்கள், காமப்பசி தீர்த்துவிட்டு கன்னியரை கர்ப்பிணியாக்கி விட்டோடும் காமுகர்கள், பெற்றோரை அவமதிக்கும் பிள்ளைகள், பெருகும் சிசுக்கொலைகள், பெருகும் மது-போதைப் பொருள் புழக்கம், ஓரினச்சேர்க்கை, குடும்ப உறவுகள் மதிப்பிழத்தல், பாலியல் வல்லுறவுகள், இலஞ்சம், ஊழல், கொலை, கொள்ளை என அனைத்து தீய ஒழுக்கங்களும் கட்டுக்கடங்காமல் மலிந்து காணப்படும் இக்காலத்தில் மனிதன் வாழவே வெறுக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. தேசிய குற்றவியல் ஆவணக் காப்பக அறிக்கைப்படி நாளொன்றுக்கு 450 தற்கொலைகள் இந்திய காவல் நிலையங்களில் பதிவாகின்றன. (பதிவாகாதவை இன்னும் ஆறுமடங்கு!)
மீண்டும் உலகில் ஒழுக்கம் திரும்ப வழி உண்டா?
ஆம் என்கிறான், மனிதனுக்குள் குடிகொண்டிருக்கும் ஆத்மாவைப் படைத்த இறைவன்:
"ஆத்மாவைப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார். ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்." (திருக்குர்ஆன் 91:9,10)
ஆத்மாவைப் பரிசுத்தப்படுத்துவது எவ்வாறு?
அதற்கு முதற்கண் படைத்த இறைவனைப் பற்றியும் அவனது கண்காணிப்பைப் பற்றியும் மறுமையில் #இறுதித்தீர்ப்பு_நாள் அன்று நம் செயல்களுக்கு விசாரணையும் அதற்கேற்ப சொர்க்கமும் நரகமும் உண்டு என்னும் உண்மைகளைப் பகுத்தறிவுபூர்வமாக அவனுக்குக் கற்பிக்க வேண்டும்.
மக்களுக்கு இவ்வுண்மைகளைக் கற்பிக்கவே இறைவன் தொன்றுதொட்டு தன் தூதர்களையும் வேதங்களையும் அருளி வந்துள்ளான். அந்த தூதர்கள் வரிசையில் இறுதியாக வந்தவரே நபிகள் நாயகம் (ஸல்). அவர் மூலமாக அருளப்பட்ட வேதமே திருக்குர்ஆன். திருக்குர்ஆன் மற்றும் நபிகளாரின் செயல்முறை விளக்கத்தின் அடிப்படையில் அமைந்த வாழ்வியல் திட்டமே இஸ்லாம் என்று இன்று அறியப்படுகிறது.
#இஸ்லாம்_என்றால்_என்ன?
இஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலக வாழ்க்கையிலும் அமைதி பெறலாம். மறுமையிலும் அமைதி அல்லது மோட்சம் பெறலாம் என்பது இந்த இறைமார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும்.
அதாவது இறைவன் கற்பிக்கும் கட்டுப்பாடுகளை (discipline)ப் பேணி வாழ்வதால் தனிநபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் பெறப்படும் அமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம்! இவ்வாறு கட்டுப்பாடு மிக்க வாழ்வை வாழ்ந்ததற்குப் இறைவன் புறத்திலிருந்து மறுமையில் வழங்கப்படும் பரிசே நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்கம்!
------------
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html
இஸ்லாம் என்றால் என்ன? #முஸ்லிம்_என்றால்_யார்?
http://quranmalar.blogspot.com/2015/07/blog-post_7.html
பற்பல மதங்கள் எவ்வாறு உருவாயின?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_31.html
இதைப் படிக்காவிட்டால் இழப்பு! பேரிழப்பு!!

05/02/2026

https://www.facebook.com/reel/1048886155144479
இதைக் காணும்போது பூமி என்ற பந்தின் மீது அமர்ந்துகொண்டு விசாலமான இந்த விண்வெளியில் உலா வந்துகொண்டு இருப்பதை உணரமுடிகிறது.
இந்தப் பயணத்தின் நோக்கம் என்ன?
இதை நம்மால் நாம் கண்டும் காணாமல் இப்படியே இருந்துவிட்டால் இதை நடத்திக்கொண்டு இருப்பவன் சும்மா விடுவானா? அவன் வீணுக்காக இதை செய்கிறானா? நாம் சிந்திக்க வேண்டாமா?

23:115. ''நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?''

இறைவனின் இக்கேள்விக்கான பதிலை சிந்திக்கும்போதுதான் இறைத்தூதர்களும் இறைவேதங்களும் நமக்கு எடுத்துச் சொல்வது உண்மை என்று புலப்படும். அந்த உண்மை என்னவெனில் இவ்வுலகை இறைவன் இவ்வுலகை நமக்கு ஒரு பரீட்சைக் கூடமாகப் படைத்துள்ளான் என்பதெ!.
ஆம், இந்த பூமியென்ற விண்கலத்தின் மீதமர்ந்து நாம் செய்யும் இந்த குறுகிய சவாரியின் நோக்கம் மறுமை வாழ்வில் நம் இருப்பிடத்தை முடிவு செய்வதற்காகவே! இறைவனுக்கு கீழ்படிந்து வாழ்வோர் இப்பயணத்தின் இறுதியில் சொர்க்கத்தை சென்றடைகிறார்கள். அல்லாதோர் நரகத்தை சென்றடைகிறார்கள்.
http://quranmalar.blogspot.in/2014/05/blog-post_15.html

 #எல்லா_பைல்களும்_திறக்கப்படும்_நாள் இது நம்மைப் படைத்த இறைவனுக்கு சொந்தமான உலகம். இங்கு நமது குறுகிய தற்காலிக வாழ்க்கை ...
04/02/2026

#எல்லா_பைல்களும்_திறக்கப்படும்_நாள்
இது நம்மைப் படைத்த இறைவனுக்கு சொந்தமான உலகம். இங்கு நமது குறுகிய தற்காலிக வாழ்க்கை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகம் அதற்கான பரீட்சைக்கூடமாகவும் படைக்கப் பட்டுள்ளது. இதில் இறைவன் நம்மிடம் எவற்றை ஏவுகிறானோ அவை நமக்கும் மனித குலத்திற்கும் நன்மை பயப்பவை. அவற்றை செய்தால் அவை புண்ணியங்களாக இறைவனிடம் பதிவு செய்யப்படுகின்றன. எவற்றை செய்யக்கூடாது என்று நம்மைத் தடுக்கிறானோ அவை நமக்கும் மனிதகுலத்திற்கும் தீங்கு விளைவிப்பவை. அவையே பாவங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. எனவே இந்த வாழ்க்கைப் பரீட்சையில் வென்று மறுமையில் சொர்க்கத்தை நமது நிரந்தர வாழ்விடமாக அடையவேண்டுமானால் நாம் அவனது எவல்-விலக்கல்களை பேணியே ஆகவேண்டும்.
இந்த வாழ்க்கைப் பரீட்சையில் இறைவனால் தடை செய்யப்பட்ட அந்நிய ஆண்பெண் உறவுகள், கள்ளக்காதல், திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகள், மது மற்றும் போதைப்பொருட்கள் பயன்பாடு உள்ளிட்ட ஒழுக்ககேடுகள் அனைத்தும் தண்டனைக்கு உரியவை ஆகும். இவை மனிதனின் தனிநபர் வாழ்க்கைக்கும் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் அளப்பரிய தீங்கு விளைவிப்பவை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
அவனது தடையை மீறி அவற்றை செய்வதால் மனிதனுக்கு இங்கு உண்டாகும் தீமைகளை விட மறுமையில் உண்டாகக்கூடிய வேதனைகளும் நரகத்து தண்டனைகளும் அதிபயங்கரமானவை. இறைவனின் இறுதிவேதம் திருக்குர்ஆன் கூறுகிறது:
= 20:74 நிச்சயமாக எவன் தன் இறைவனிடத்தில் குற்றவாளியாக வருகிறானோ அவனுக்கு நரகம் நிச்சயமாக இருக்கிறது அதில் அவன் மரிக்கவும் மாட்டான் வாழவும் மாட்டான்.
= 7:41 அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும் (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
= 78:21 நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக! அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்!...... கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.!
அற்பமான தற்காலிக வாழ்க்கை
இன்று நாம் வாழும் தற்காலிகவாழ்கை என்பது மறுமையோடு ஒப்பிடும்போது மிகமிக அற்பமானதே.
= நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைவன் மீதாணையாக! மறுமையோடு ஒப்பிடும்போது இவ்வுலகின் நிலையானது, உங்களில் ஒருவர் தமது இந்த அதாவது சுட்டு விரலை கடலில் வைப்பதைப் போன்றுதான். அதில் எந்த அளவு தண்ணீர் ஒட்டிக்கொள்கிறது என்று அவர் பார்க்கட்டும். (நூல் :முஸ்லிம் 5490)
செயல்களின் பதிவேடு
இறைவன் கூறுகிறான்:
தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா? அவனுக்கு நாம் இரண்டு கண்களை ஆக்கவில்லையா? மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)? (திருக்குர்ஆன் 90:7 -9)
இங்கு மனிதன் செய்யும் அத்துமீறல்கள் ஒவ்வொன்றும் தவறாமல் பலவகைகளில் பதிவாகின்றன. இன்று எங்கும் கண்காணிப்புக்காக பொருத்தப்படும் CCTV கேமராக்கள் பதிவு செய்கின்றனவோ அதைப்போலவே நம் ஒவ்வொருவரது கண்களும் காதுகளும் தோல்களும் நமது நடவடிக்கைகளை இயற்கையாகவே பதிவு செய்து கொண்டிருக்கின்றன. வேறு பலவகையிலும் நமது செயல்களின் பதிவுகள் நடந்து கொண்டிருந்தாலும் இவை ஒன்றே போதுமானவையாக இருக்கும் என்பதை நாம் அறியலாம்.

உங்களைப் படைத்தவன் தரும் தீர்வுகள் இவை..

Address

Adam Garden, Nallavanpalayam
Tiruvannamalai
606603

Website

Alerts

Be the first to know and let us send you an email when Imam channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share