08/02/2024
ராமநகர நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து, ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் (NBW) பிறப்பித்தது – லெனின்மீது கற்பழிப்பு குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது
பிப்ரவரி 7, 2024
கைலாஸா இந்துக்களுக்கான மற்றுமொரு முக்கியமான சட்டரீதியான வெற்றியில், பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் மற்றும் கைலாஸாவிற்கு எதிராக சதிச்செயல் புரிந்த சதிகாரர்களுள், மிக மிக முக்கியமான சதிகாரனான வக்கீல் ஸ்ரீதருக்கு எதிராக, இந்திய ராமநகர நீதிமன்றம், ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது.
மார்ச் 14, 2012 அன்று லெனின் கருப்பன், பணம் பறித்தல் மற்றும் அச்சுறுத்தி பணம் பறித்தல் ஆகிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டான். இந்தக் குற்றங்களுக்காக 100 நாட்களுக்கு மேல் சிறையிலிருந்த லெனின், பிறகு மிகுந்த கண்டிப்பான நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டான். தமிழ்நாடு காவல்துறை லெனின் செய்த குற்றங்களை மேலும் விசாரணை செய்து, மார்ச் 2015ல் அவன்மீது சதிசெய்தது, பணம் பறித்தது, மகளிரை அநாகரிகமாக உருவமைத்து காண்பித்தது, முற்றிலும் பொய்யான காணொளிகளை உருவாக்கியது, விரோதத்துடன் மிரட்டியது ஆகிய குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய குற்றப்பத்திரிகையை பதிவு செய்தது. அதற்குபின், இந்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக எடுக்கப்படும் சட்டரீதியான நடவடிக்கைகளிலிருந்து தப்பிப்பதற்காக லெனின் தலைமறைவானான்.
இன்று, மாண்புமிகு கர்நாடக நீதிமன்றம், லெனின் செய்த கற்பழிப்பு, பணம் பறித்தல் மற்றும் சதிச் செயல்களுக்கான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள, அவனுக்கு அழைப்பாணையை விடுத்தது.
மாண்புமிகு ராமநகர நீதிமன்றம், இந்து விரோத தீய சக்திகள் செய்த மிகக் கொடிய குற்றங்களான கற்பழிப்பு, பணம் பறித்தல் மற்றும் விரோதத்துடன் மிரட்டிய குற்றங்களை ஏற்றுக்கொண்டு, ஸ்ரீதருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இந்த தீய எண்ணம் கொண்டவர்கள் திட்டமிட்டு ஒரு சித்தரிக்கப்பட்ட பொய்யான வீடியோவை தயாரித்தனர். அந்த சித்தரிக்கப்பட்ட பொய் வீடியோ, கைலாஸா மீது இடைவிடாத தொடர்ந்த தாக்குதல்களை தூண்டியது.
ராமநகர நீதிமன்றம் லெனின்மீது கற்பழிப்பு, சட்டத்திற்குப் புறம்பாக பணம் பறித்தது மற்றும் மிரட்டிய குற்றங்களுக்கான வழக்குகளைப் பதிவுசெய்து, தொடர் கற்பழிப்புக் குற்றங்களைப் புரிந்த லெனின் மீதும் மற்றும் வழக்கறிஞர் ஸ்ரீதர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் ஆணையிட்டது. வழக்கறிஞர் ஸ்ரீதர், தீய மற்றும் சித்தரிக்கப்பட்ட பொய்யான வீடியோவை உருவாக்குவதற்கு முக்கியமான கூட்டாளியாக இருந்தான் என்பதும் மற்றும் அதிர்ச்சியூட்டும் வகையில் 100 கோடி ரூபாயை கைலாஸாவிடமிருந்து பறிக்கும் அப்பட்டமான முயற்சியில் ஒரு முக்கிய சதிகாரன் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றம், உண்மை மற்றும் நியாயத்தினைப் பாதுகாக்க உறுதியாக நின்றமையாலும், கைலாஸாவின் இந்துக்களை தாக்கிக்கொண்டிருக்கும் இந்து விரோத தீய சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தமையாலும், தர்மம் காக்கப்பட்டது. நீதி தழைத்தது.
2 பிப்ரவரி 2024, அன்று மாண்புமிகு குஜராத் உயர்நீதி மன்றம், பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த கடத்திவைத்தல், குழந்தைக் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து, வழக்கையே தள்ளுபடி செய்து, மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியது. மேலும் இவ்வருடத்தின் துவக்கத்தில், Youtube, இந்த சட்டத்திற்கு புறம்பான குற்றங்களுக்குத் தொடர்பான உள்ளடக்கங்களையுடைய, பாதகம் விளைவிக்கின்ற, முற்றிலும் பொய்யான வீடியோவை பரப்புவதை முடக்குவதற்கு நடவடிக்கை எடுத்தது. 160 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ள பல்வேறு சேனல்களில், 80 மில்லியன் பார்வைகளைக் கொண்ட தீய மற்றும் பொய்யான ஆபாச உள்ளடக்கங்களைக் கொண்ட 110த்திற்கும் மேற்பட்ட வீடியோக்களை Youtube முடக்கியது. மனித உரிமைகளைப் பாதுக்காப்பதிலும் மற்றும் இணையதளப் பாதுகாப்பிலும் இது மிகவும் முக்கியமான ஒரு செயலாகும். இந்தச் செயலானது, முற்றிலும் பொய்யானவற்றையும், இந்து விரோத தீயசக்திகளையும், வெறுப்புப் பிரச்சாரங்களையும் மற்றும் தவறான தகவல்களையும் எதிர்த்துப் போராடுவதற்கு ஒரு முன்னோட்டத்தை அமைக்கின்றது. மேலும் இணையதள உரிமைகளையும் மற்றும் தொழிற் நுட்ப நெறிமுறைகளையும் உயர்நிறுத்துகின்றது. முற்றிலும் பொய்யானவற்றினுடைய தீங்கின் இயல்பை Youtube அடையாளம் கண்டுக்கொண்டு இந்த பொய்யான வீடியோக்களின் நீக்கத்திற்கான அடிப்படைகளை விளக்கி ஒரு எச்சரிக்கைச் செய்தியையும் Youtube வெளியிட்டது.
மேலும் இப்பொழுது, ராமநகர மாவட்ட நீதிமன்றம், குற்றவாளிகள் புரிந்த பல குற்றங்களை ஏற்று, குற்றம்புரிந்தவர்களுக்கு எதிராக துரிதமான மற்றும் இறுதியான நடவடிக்கைகளை எடுக்க ஆணையிட்டுள்ளது. குறிப்பாக ஸ்ரீதரை நீதிமன்றத்திற்கு கொண்டு வர ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. 10 வருடங்களுக்கு மேலாக, பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களுக்கும் மற்றும் கைலாஸாவிற்கும் எதிராக குற்றங்களைப் புரிந்த ஸ்ரீதருக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய இத்தீர்ப்பு மிக மிக முக்கியமானதாகும்.