03/04/2022
2022 - 2023 குருபெயர்ச்சி பலன்கள் - பாகம் 06
குருபெயர்ச்சி பலன்கள் 2022 - 2023
மங்களகரமான பிலவ வருடம் பங்குனி மாதம் 30ஆம் (13.04.2022) தேதியன்று இயற்கை சுபரான குருதேவர் சுய நட்சத்திரமான பூரட்டாதி மூன்றாம் பாத நட்சத்திரத்தில் இருந்து (கும்ப ராசி), சுய நட்சத்திரமான பூரட்டாதி நான்காம் பாத நட்சத்திரத்திற்கு (மீன ராசி) அதாவது, புதன்கிழமை பின்னிரவு (14.04.2022) வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அதிகாலை 04.09 மணியளவில், திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் புதன்கிழமை மாலை 03.49 மணியளவில் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகி 22.04.2023 வரை சஞ்சாரம் செய்ய உள்ளார்.
கனிவான பேச்சுக்களின் மூலம் காரியங்களை சாதிக்கக்கூடிய கன்னி ராசி அன்பர்களே..!!
வருகின்ற குருபெயர்ச்சியில் சத்ரு ஸ்தானமான ஆறாம் இடத்தில் இருந்துவந்த குருபகவான் களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார்.
பலன்கள் :
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகளும், வெளிவட்டாரங்களில் செல்வாக்கும், மதிப்பும் அதிகரிக்கும். மனதில் நீண்ட நாட்களாக நினைத்திருந்த சில காரியங்கள் கைகூடி வரும்.
பொருளாதாரம் :
பொருளாதாரம் தொடர்பான முயற்சிகளில் இருந்துவந்த ஏற்ற, இறக்கங்கள் குறையும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
உடல் ஆரோக்கியம் :
மகிழ்ச்சியான தருணங்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகளும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளும் உருவாகும்.
பெண்களுக்கு :
உங்களுடைய எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். சிறு மற்றும் குறுந்தொழில் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் திறமைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு :
வியாபார பணிகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். அனுபவமிக்க வேலையாட்களின் ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்புகள் மேம்படும்.
விவசாயிகளுக்கு :
விவசாயம் சார்ந்த துறைகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். புதிய மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வரப்பு தொடர்பான பிரச்சனைகள் குறையும்.
அரசியல்வாதிகளுக்கு :
சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதாயமான சூழ்நிலைகள் காணப்படும். உங்களின் மீதான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளிகள் உண்டாகும்.
கலைஞர்களுக்கு :
கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உருவாகும். வயதில் மூத்தவர்களின் ஆலோசனைகள் நம்பிக்கையையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தும்.
நன்மை :
இந்த குருபெயர்ச்சியின் மூலமாக மனதில் நினைத்த எண்ணங்களை செயல் வடிவில் மாற்றி, செல்வாக்கினை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
கவனம் :
இந்த குருபெயர்ச்சியில் நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நன்மையை ஏற்படுத்தும்.
வழிபாடு :
வியாழக்கிழமைதோறும் அர்த்தநாரீஸ்வரரை வழிபாடு செய்துவர தம்பதியர்களுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.
உலக உயிர்களுக்கெல்லாம் கடையேன் அடியேன் சிறியேன்
K.R.பாலயோகி சுவாமிகள்
ஸ்ரீதேவி ஸ்ரீபூமாதேவி சமேத மேல்மலை லட்சுமி நாராயண குபேர பெருமாள்
வடக்கு கிரிவலப் பாதை குபேர நகர் வேங்கிக்கால் திருவண்ணாமலை 606604.
Cell: 6374426077
: 9486229409
Website : http://www.melmalaikuberar.com
GMail: [email protected]