திருவண்ணாமலை அக்னி பூமி

திருவண்ணாமலை அக்னி பூமி General about Thiruvannamalai

எட்டாம் நாள் மாலை வருடத்தில் ஒருமுறை மட்டும் இராஜ கோபுரத்தின் வழியாக  பிச்சாண்டவர் வீதி உலா
12/12/2024

எட்டாம் நாள் மாலை வருடத்தில் ஒருமுறை மட்டும் இராஜ கோபுரத்தின் வழியாக பிச்சாண்டவர் வீதி உலா

11/12/2024

உலகிலேயே மிகப் பிரமாண்டமான 24 ஜான் அகலம் கொண்ட குடை அண்ணாமலையாருக்கு இவ்வருடம் சாற்றப்பட்டது🙏

10/12/2024

திருவண்ணாமலை அண்ணாமலையார் தேரோட்டம் 🙏🙏🙏

🔥🔥🔥
10/12/2024

🔥🔥🔥

🙏
10/12/2024

🙏

திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம்-2024. தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் அவற்றின் வழித்தடங்கள்.திருவண்ணாமலை கார்த்திக...
10/12/2024

திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம்-2024. தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் அவற்றின் வழித்தடங்கள்.

திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத்தை முன்னிட்டு 12.12.2024 முதல் 15.12.2024 வரை போக்குவரத்து நெரிசல் ஏதுமின்றி பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக 25 தற்காலிக பேருந்து நிலையங்கள் எற்பாடு செய்யப்பட்டுள்ளதை மக்கள் அறிந்து, அவற்றை முறையாக பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

"பக்தர்கள் தற்காலிக பேருந்து நிலையங்கள் தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை WhatsApp உதவி எண். 9363622330 -ற்கு "Hello" Message மூலம் தொடர்பு கொண்டு Google Map Link ஐ பெற்று Google Map உதவியுடன் அந்தந்த பேருந்து நிலையங்களுக்கு செல்லலாம்."

மகாதீபத்திற்கு வரக்கூடிய வாடகை பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளும் மேற்கூறிய நிர்ணயிக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிலையங்களில் மட்டுமே பேருந்துகளை நிறுத்த வேண்டும். சாலையில் தன்னிச்சையாக வாகனங்களை நிறுத்திச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு மற்றும் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவ்வாகனங்கள் அப்புறப்படுத்தப்படும். மேற்கூறிய தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து திருவண்ணாமலை நகருக்குள் பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாய் குறிப்பிட்ட கால இடைவேளைகளில் இலவச அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

1. வேலூர் ரோடு :
வேலூர், திருப்பதி, சித்தூர், KGF, திருத்தணி, ஆற்காடு, ஆரணி உள்ளிட்ட வழித்தடங்களிலிருந்து திருவண்ணாமலை வந்தடையும் தமிழ்நாடு பேருந்துகள் கிரிவலப் பாதை அருகிலுள்ள அண்ணா ஆர்ச் தற்காலிக பேருந்து நிலையம் வந்து சேரும். மீண்டும் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்.

1. திருப்பதி, சித்தூர், வேலூர் ஆகிய வழித்தடங்களிலிருந்து போளுர் வழியாக திருவண்ணாமலை வந்தடையும் APSRTC பேருந்துகள் திருவண்ணாமலை பைபாஸில் அமைந்துள்ள ஸ்ரீ மூகாம்பிகை நகர் மற்றும் AKS நகர் தற்காலிக பேருந்து நிலையங்கள் வந்து சேரும். மீண்டும் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்.

2.அவலூர்பேட்டை ரோடு

காஞ்சிபுரம், மேல்மருவத்தூர், வந்தவாசி, சேத்துப்பட்டு ஆகிய வழித்தடங்களிலிருந்து அவலூர்பேட்டை வழியாக திருவண்ணாமலை வந்தடையும் பேருந்துகள் அவலூர்பேட்டை சாலை செல்வபுரத்திலுள்ள அழகேசன் ஆயில் மில் தற்காலிக பேருந்து நிலையம் வந்து சேரும். மீண்டும் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்.

3. திண்டிவனம் ரோடு

சென்னை, புதுச்சேரி, திண்டிவனம் ஆகிய வழித்தடங்களிலிருந்து செஞ்சி, கீழ்பென்னாத்தூர் வழியாக திருவண்ணாமலை வந்தடையும் பேருந்துகள் திருவண்ணாமலை மார்கெட் கமிட்டி தற்காலிக பேருந்து நிலையம் வந்து சேரும். மீண்டும் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்.

4. வேட்டவலம் ரோடு

விழுப்புரம், புதுச்சேரி, ஆகிய வழித்தடங்களிலிருந்து கண்டாச்சிபுரம், வேட்டவலம் வழியாக திருவண்ணாமலை வந்தடையும் பேருந்துகள் திருவண்ணாமலை பைபாஸ் ரோடு அருகிலுள்ள ஏந்தல் சர்வேயர் நகர் தற்காலிக பேருந்து நிலையம் வந்து சேரும். மீண்டும் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்.

5.திருக்கோவிலூர் ரோடு

கடலூர், சிதம்பரம், நாகப்பட்டினம், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய வழித்தடங்களிலிருந்து உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், வெறையூர் வழியாக திருவண்ணாமலை வந்தடையும் பேருந்துகள் திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள தற்காலிக பேருந்து நிலையம் வந்து சேரும். மீண்டும் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்.

6.மணலூர்பேட்டை ரோடு

தியாகதுருகம், மணலூர்பேட்டை, ஆகிய வழித்தடங்களிலிருந்து தச்சம்பட்டு வழியாக திருவண்ணாமலை வந்தடையும் பேருந்துகள் திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் உள்ள SR ஸ்டீல் கம்பெனி எதிரிலுள்ள தற்காலிக பேருந்து நிலையம் வந்து சேரும். மீண்டும் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்.

7.தண்டராம்பட்டு ரோடு

அரூர், நரிப்பள்ளி ஆகிய வழித்தடங்களிலிருந்து தானிப்பாடி, தண்டராம்பட்டு வழியாக திருவண்ணாமலை வந்தடையும் பேருந்துகள் திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் உள்ள SR ஸ்டீல் கம்பெனி எதிரிலுள்ள தற்காலிக பேருந்து நிலையம் வந்து சேரும். மீண்டும் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்.

8.செங்கம் ரோடு

பெங்களுரு, ஒசூர், கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், சேலம், தருமபுரி ஆகிய வழித்தடங்களிலிருந்து ஊத்தங்கரை, செங்கம், பாச்சல் வழியாக திருவண்ணாமலை வந்தடையும் பேருந்துகள் திருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகிலுள்ள அத்தியந்தலில் அமைக்கப்பட்டுள்ள 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் வந்து சேரும். மீண்டும் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்.

9.காஞ்சி ரோடு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்திற்குட்பட்ட மேல்சோழங்குப்பம், கடலாடி, புதுப்பாளையம் ஆகிய வழித்தடங்களிலிருந்து திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி வழியாக திருவண்ணாமலை வந்தடையும் பேருந்துகள் ஆடையூர் அருகேயுள்ள டான் பாஸ்கோ சிகரம் பள்ளியில் உள்ள தற்காலிக பேருந்து நிலையம் வந்து சேரும். மீண்டும் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்.

பக்தர்களுக்கு மேலும் விவரகங்ளோ, உதவியோ தேவைபடும்பட்சத்தில் வழிப்பாதையில் அமைந்திருக்கும் போலிஸ் May I Help You Booth- யை அணுகலாம்

👇
10/12/2024

👇

✌
10/12/2024

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் 10.12.2024 தீபத் திருவிழா ஏழாம் நாள் பஞ்சமூர்த்திகள் அலங்காரம்,தீபாராதனை மற்றும் ரதத...
10/12/2024

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் 10.12.2024 தீபத் திருவிழா ஏழாம் நாள் பஞ்சமூர்த்திகள் அலங்காரம்,தீபாராதனை மற்றும் ரதத்தில் மாடவீதியுலா 🙏

ஐப்பசி மாத பௌர்ணமி கிரிவலம் 🙏
12/11/2024

ஐப்பசி மாத பௌர்ணமி கிரிவலம் 🙏

Address

Tiruvannamalai
606601

Website

Alerts

Be the first to know and let us send you an email when திருவண்ணாமலை அக்னி பூமி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share