25/03/2026
பேரன்புகொண்ட பாக்குப்பேட்டை வாழ் ஆன்மிக அன்பர்களே, வணக்கம்! 🙏
நமது பாக்குப்பேட்டை ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோவிலில், வருகிற 27.03.2026 அன்று ஸ்ரீராம நவமி உற்சவம் தொடங்கி பத்து நாட்கள் நடைபெற உள்ளது. இவ்விழா 05.04.2026 அன்று நிறைவடையும்.
தினமும் மாலை 4 மணிக்குத் திருமஞ்சனம் ஆரம்பித்து, உற்சவர்களுக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து, நாதஸ்வர மேளம் முழங்க, நாமசங்கீர்த்தனைகள் பாடி, பாதம்தாங்கிகளால் சுவாமிகள் உள்வீதிப் புறப்பாடு நடைபெறும். பத்தாவது நாள் உற்சவமூர்த்திகள் நான்கு மாடவீதிகளிலும் உலா வருவார்கள்.
இந்த பத்து நாள் உற்சவத்திலும் கலந்துகொண்டு தாயார் மற்றும் பெருமாளின் அருளைப் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இப்படிக்கு,
தலைவர் மற்றும் நிர்வாகிகள்,
ஸ்ரீ கோதண்டராமர் கோவில் நிர்வாகம்,
பாக்குப்பேட்டை.