கூவம் ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை திரிபுராந்தக சுவாமி. Koovam Shivan Temple.

  • Home
  • India
  • Tiruvallur
  • கூவம் ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை திரிபுராந்தக சுவாமி. Koovam Shivan Temple.

கூவம் ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை திரிபுராந்தக சுவாமி. Koovam Shivan Temple. This sivasthalam temple is located at Koovam. Tiruvallore - Kancheepuram bus route goes via Perambakkam, a small town. Koovam is next to Perambakkam.

The temple is located about 1 Km. from Koovam bus stop. கோவில் விபரம்: கூவம் என்ற பெயரில் தற்போது அறியப்படும் இத்தலம் திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னையிலிருந்து சுமார் 50 கி.மி. தொலைவில் இருக்கிறது. இத்தலத்தின் அருகே தான் கூவம் ஆறு உற்பத்தியாகிறது. சுத்தமான நீரோட்டம் உள்ள இந்த ஆறு சென்னையை நெருங்கும் போது மிகவும் அசுத்தமடைந்து விடுகிறது. இத்தலத்து இறைவன் ஒரு சுயம்பு லிங்கம். இங்குள்ள இறைவனை, லிங்கத் திருமேனியை ஆலய அர்ச்சகர்கள் கூட தொடுவதில்லை. அதனால் இறைவன் தீண்டாத் திருமேனி நாதர் என்றும் பெயர் கொண்டுள்ளார். இங்குள்ள லிங்கம் காலத்திற்கு ஏற்ப நிறம் மாறுவதாக கூறப்படுகிறது. அதிக மழைபெய்வதாக இருந்தால் இறைவரின் திருமேனியில் வெண்மை நிறம் தோன்றுவதும், யுத்தம் ஏற்படுவதாயிருந்தால் சிவப்புநிறம் படர்வதும் ஆகிய அற்புதம் பொருந்திய தலம். இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் முதலில் இறைவி திருபுரசுந்தரியை வணங்கிவிட்டுத் தான் பிறகு மூலவர் திரிபுராந்தகரை வழிபடவேண்டும் என்ற நியதி வழக்கத்தில் உள்ளது. திருமணமான தம்பதியர்களுக்கு இடையே ஏற்படும் எந்தவிதமான பிரச்னைகளும் இத்தலத்து இறைவனை வழிபடுவதின் மூலம் தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.

தெற்கு திசையிலுள்ள 5 நிலை இராஜகோபுரம் தான் இவ்வாலயத்தின் பிரதான வாயிலாகும். கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்து தெற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள வாயில் வழியாக அம்பாள் மற்றும் சுவாமி சந்நிதிகள் உள்ள பகுதிக்குள் செல்லலாம். முதலில் அம்பாள் திரிபுரசுந்தரி சந்நிதியும், அதையடுத்து திரிபுராந்தக சுவாமி சந்நிதியும் கிழக்கு நோக்கு அமைந்துள்ளன. சுவாமி சந்நிதி விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையது. இரண்டு சந்நிதிகளையும் சேர்த்து வலம் வர பிரகாரம் உள்ளது. உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் அச்சிறுத்த விநாயகர் சந்நிதி அமைந்திருக்கிறது. அம்பாள் மற்றும் சுவாமி சந்நிதிகளுக்கு தனித்தனியே கொடிமரம், பலிபீடம் இருக்கின்றன. சுவாமி சந்நிதி நுழை வாயிலுக்கு முன் இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் திரிபுராதிகள் மூவருள் இருவர் இவர்கள் என்று சொல்லப்படுகிறது. சுவாமி சந்நிதி நுழை வாயிலுக்கு முன் வலதுபுறம் தெற்கு நோக்கிய நடராஜர் சந்நிதி உள்ளது. வள்ளி தெய்வானையுடன் உள்ள முருகர், தட்சினாமூர்த்தி ஆகிய மூர்த்தங்களும் பார்க்க வேண்டியவை. சுவாமி கருவறை கோஷ்டத்தில் உள்ள லிங்கோத்பவர் சிற்பமும் கலையழகுடன் உள்ளது. மஹாவிஷ்னு வராக அவதாரம் எடுத்து பூமியைக் குடைவதும், பிரம்மா அன்னப் பறவை உருவில் ஜோதி உருவமான சிவபெருமானின் முடியைக் காண முயலுவதும் லிங்கோத்பவர் சிற்பத்தில் காணலாம். பக்கத்தில் பாலமுருகன் சந்நிதியும் அடுத்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதியும் உள்ளன. துர்க்கை சந்நிதிக்கு எதிரில் சந்தன மேடை உள்ளது. இதில் அரைத்த சந்தனம் சுவாமிக்குச் சார்த்தப்படுகிறது.நவக்கிரக சந்நிதி வடக்கு வெளிப் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் உள்ளது.

புராண வரலாறு: இத்தலம் சிவபெருமான் நிகழ்த்திய திரிபுர சம்ஹாரத்துடன் சம்பந்தம் கொண்டதாகும். சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்ய புறப்பட்ட போது முழுமுதற் கடவுள் விநாயகரை வழிபட்டு கிளம்பாததால் சிவன் ஏறிய தேரின் அச்சு முறிந்து விட்டது. பிறகு விநாயகர் வழிபாடு செய்து புறப்பட்டார் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான் வில் கையிலேந்தி காட்சி கொடுப்பதால் இத்தலம் திருவிற்கோலம் என்ற பெயரில் ஒரு பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது. இத்தலத்திலுள்ள விநாயகருக்கு அச்சிறுத்த விநாயகர் என்று பெயர்.

ஆலய சிறப்பு: இந்த கோவிலிலுள்ள தீர்த்தம் அக்னி தீர்த்தம் (கூபாக்கினிதீர்த்தம் ) எனப்படும். ஆலய அர்ச்சகர்கள் இந்த அக்னி தீர்த்தத்தில் நீராடிய பிறகே தினசரி பூஜைகள் செய்வார்கள். கடுமையான வறட்சி காலத்திலும் இந்த அக்னி தீர்த்தம் வற்றுவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் 4 கி.மி தொலவிலுள்ள கூவம் ஆற்றிலிருந்து கொண்டு வரும் நீரால் மட்டுமே இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் வழக்கத்தை அர்ச்சகர்கள் கடைபிடித்து வருகின்றனர். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக என்றேனும் இவ்வாறு கூவம் ஆற்று நீர் அபிஷேகத்திற்கு இல்லையெனில் இளநீர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பகல்நேர அபிஷேகம் செய்ய அருகில் உள்ள பிஞ்சவாக்கம் என்ற கிராமத்தில் இருந்து கொண்டு வரப்படும் பால் பயன்படுத்தப்படுகிறது. பிஞ்சவாக்கம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் இவ்வாலய இறைவன் அபிஷேகத்திற்கு பால் கொடுப்பதை தங்கள் கடமையாக நினைத்து செயல்படுகின்றனர்.

அதிக மழை, வெள்ளம் வரும் அறிகுறி இருந்தால் சுவாமி மீது வெண்மை படரும் என்றும், போர் நிகழ்வதாயின் செம்மை படரும் என்றும் சொல்லப்படுகின்றது. இது பற்றியே ஞானசம்பந்தர் தம் பதிகத்தின் 3-வது பாடலில் ஐயன் நல் அதிசயன் என்று குறிப்பிடுகின்றார். இவ்வண்ண மாற்றம் தற்போது காணப்படவில்லையாம். மூலவர் - திரிபுரம் எரித்த மூர்த்தி. அபிஷேகங்கள் செய்வதால் உண்டாகும் மேற்புறப் படிவுகள் தானாகவே பெயர்ந்து விழுந்து திருமேனி சுத்தமாகி விடும் என்று சொல்லப்படுகிறது.

கோயிலுக்கு வெளியே - திரிபுர சம்ஹார காலத்தில் தேர் அச்சு முறிந்திட, உடனே பெருமானை விடையாக இருந்து தாஙகியதாகச் சொல்லப்படும் - கரிய மாணிக்கப் பெருமாள் கோயில் உள்ளது.

ஆவணி மாத தேய்பிறை  #பிரதோஷம்🌺🙏🏽
08/09/2026

ஆவணி மாத தேய்பிறை #பிரதோஷம்🌺🙏🏽

03/09/2026

கார் பேகங்கள் சூழ்ந்து எம்பெருமானின் ராஜகோபுரம்

 #மஹா_சங்கடஹர_சதுர்த்தி:🌺விநாயக சதுர்த்திக்கு முன் வரும் தேய்பிறை சதுர்த்தியை மஹா சங்கட ஹர சதுர்த்தியாகும்.மஹா சங்கட ஹர ...
31/08/2026

#மஹா_சங்கடஹர_சதுர்த்தி:🌺

விநாயக சதுர்த்திக்கு முன் வரும் தேய்பிறை சதுர்த்தியை மஹா சங்கட ஹர சதுர்த்தியாகும்.

மஹா சங்கட ஹர சதுர்த்தி - கேதுவால் ஏற்படும் தோஷங்கள் போக்கி கீர்த்தியுடன் வாழவைக்கும்!

ஸ்ரீ விநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப் பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது. ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தியில் இருந்து 12 மாதங்கள் அனுஷ்டித்து விநாயக சதுர்த்திக்கு முந்தைய தேய்பிறை சதுர்த்தியான மகா சங்கடஹர சதுர்த்தி அன்று முடிப்பது சிறந்த நற்பலன்களை தரும்.

விநாயகர் ஒரு முறை கைலையில் ஆனந்தமாய்த் நடனமாடும் போது அங்கே வந்த சந்திரன், விநாயகரின் பெருத்த தொந்தியையும், துதிக்கையையும், அவற்றைத் தூக்கிக் கொண்டு அவர் ஆடுவதையும் பார்த்து விட்டுப் பெரிதாய்ச் சிரித்தான். அவன் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடியதைக் கண்ட விநாயகர் அவனின் கலைகள் தேய்ந்து போனவை, தேய்ந்தவையாகவே இருக்கும் எனக் கூறவே, மனம் வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாகவும், தன்னுடைய தவற்றை நீக்கவும் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றான்.

அப்போது விநாயகர் சந்திரனிடம், "இன்று முதல் சுக்கில பட்சச் சதுர்த்திகளில் உன்னைப் பார்ப்பவர்களுக்குப் பாவம் சம்பவிக்கும், எனவும், அதைப் போக்கிக் கொள்ளச் சதுர்த்தி விரதம் இருந்து பூஜித்தால் அவர்களுக்கு நன்மையே விளையும்" எனவும் சொன்னார். இந்த விரதமே சங்கடஹர சதுர்த்தி விரதம் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வரும் "சங்கடஹர சதுர்த்தி" நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும் என்பது நம்பிக்கை.

நான்காம் பிறையை பார்க்கக் கூடாது ஏன்?

பொதுவாக, `நாலாம் பிறை fயைப் பார்க்கக் கூடாது f என்பார்கள் பெரியவர்கள். நான்காம் நாள் பிறையைப் பார்ப்பவர்களுக்கு `மித்ர தோஷம்' ஏற்படும் என்று வரலாறு கூறுகிறது. ஒருமுறை, பகவான் கிருஷ்ணரே நாலாம் பிறையைப் பார்த்துவிடுகிறார். அதன் விளைவாக அவருக்கும் மித்ர தோஷம் ஏற்படுகிறது.

சத்ராஜித் என்னும் மன்னன் சூரியனை வழிபட்டு, அதன் பலனாக சூரிய பகவானிடமிருந்து சியமந்தக மணியைப் பெற்றான். அவன் அந்த ரத்தினத்தை அணிந்திருந்தபோது, சூரிய பகவானைப்போல் பிரகாசத்துடன் காணப்பட்டான். அந்த நேரத்தில், அங்கு வந்த கிருஷ்ண பகவான், அந்த மணியைக் கையில் எடுத்துப் பார்க்க ஆவல்கொண்டார். ஆனால், சத்ராஜித் அதற்கு மறுத்துவிட்டான்.

பிறகு ஒருமுறை, சத்ராஜித்தின் சகோதரன் ப்ரசேனன், அந்த ரத்தினத்தை (சியமந்தக மணி) அணிந்துகொண்டு வேட்டைக்குச் சென்றான். அப்போது சிங்கம் ஒன்று அவனைத் தாக்கிக் கொன்று, அந்த ரத்தினத்தையும் எடுத்துச் சென்றுவிட்டது. இதனால், சத்ராஜித் மன்னனும், மற்ற பொதுமக்களும் பகவான் கிருஷ்ணர் மீதே சந்தேகம் கொண்டனர். இதனால், கிருஷ்ணர் அவமானத்துக்குள்ளாக நேர்ந்தது.
இதைக் கேள்விப்பட்ட ஸ்ரீநாரதர் கிருஷ்ணரிடம் வந்தார். `நாலாம் பிறையைப் பார்த்ததால் வந்த விளைவே இது என்றார்.

`சதுர்த்தியன்று விநாயகப் பெருமானை தரிசித்தால், இந்தப் பழியில் இருந்து நீங்கலாம்' என்று ஆலோசனையும் கூறினார். அதன்படியே, கிருஷ்ணரும் விநாயகரை வழிபட்டு, தனக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைக்க, அந்த ரத்தினத்தைத் தேடி தானே புறப்பட்டார். இறுதியில் கரடிக் கூட்டத்தின் தலைவனான ஜாம்பவானிடம் அந்த ரத்தினம் இருப்பதை அறிந்து, அவனுடைய குகையை நோக்கிச் சென்றார்.

இந்த ஜாம்பவான் வேறு யாருமல்ல; ராமாவதாரத்தின்போது சீதா பிராட்டியைக் கண்டடைய ஸ்ரீராமருக்கு உதவி செய்தவரேதான்! ஆஞ்சநேய சுவாமிக்கு அவரது பலம் குறித்து நினைவூட்டியவரும் இவரே. இவருக்கு ஸ்ரீராமபிரானைக் கட்டித் தழுவ வேண்டுமென்ற ஆசை நெடுநாளாக இருந்தது. ஆனால், தன் உடம்பில் இருக்கும் ரோமங்கள் அவரை புண்ணாக்கிவிடக்கூடும் என்று அஞ்சி, தமது ஆசையை வெளிப்படுத்தாமல் அடக்கிக்கொண்டிருந்தார்.

ராமர் மீது இந்த அளவுக்கு பக்திகொண்டிருந்த ஜாம்பவான், ஸ்ரீகிருஷ்ணர்தான் ராமராகவும் அவதரித்தவர் என்பதை அறியாமல், அவருடன் போர்புரிய ஆயத்தமானார். துவந்த யுத்தமும் தொடங்கியது. இருவரும் கட்டிப் புரண்டு சண்டையிடும்போதுதான், தன்னுடன் சண்டை இடுபவர் ஸ்ரீராமர் என்று அறிந்தார் ஜாம்பவான்.

பின்னர், நடந்த தவற்றுக்கு மன்னிப்புக் கோரி, தனது மகளான ஜாம்பவதியை கிருஷ்ணருக்கு மணமுடித்துவைத்தார். சமந்தகமணி என்கிற ரத்தினத்தையும் அவரிடமே ஒப்படைத்தார். அந்த சமந்தக மணியை சத்ராஜித்திடம் சேர்ப்பித்தார் ஸ்ரீகிருஷ்ணர். கிருஷ்ணர் மீது வீண் பழி சுமத்தியதற்காக வருந்திய சத்ராஜித், அவரிடம் மன்னிப்புக் கோரி, தன் மகளான சத்யபாமாவையும் அவருக்கே மணமுடித்துத் தந்தான். இந்தப் புராணக் கதையைப் படிப்பவர்கள் அனைவரும், தங்களுக்கு ஏற்பட்ட வீண்பழியிலிருந்து நீங்கப் பெறுவர் என்பது ஐதீகம்.

நாமும், சிராவண மாதத்தில் வரும் இந்தச் சங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகப் பெருமானை வழிபட்டால், அந்த வருடம் முழுக்க வரும் சங்கட ஹர சதுர்த்திகள் அத்தனைக்கும் சேர்த்து வழிபட்ட பலனை அடையலாம். நாளை மஹா சங்கடஹர சதுர்த்தி. விரதம் இருப்பது எப்படி என்பதை அறிவோமா?

விரதம் இருக்கும் முறை:

காலையில் நீராடி, தூய ஆடை அணிந்து, விநாயகர் சந்நிதிக்குச் சென்று, அவரை வழிபட்டு, விரதத்தைத் தொடங்க வேண்டும். அன்று முழுக்க உபவாசம் இருக்க வேண்டும். மாலையில், விநாயகர் கோயிலுக்குச் சென்று, சங்கட ஹர சதுர்த்தி பூஜையில் பங்கேற்க வேண்டும். வீடு திரும்பி, சந்திரன் உதயமானதும், அதைப் பார்த்து வணங்க வேண்டும். பிறகு, நம் வீட்டு பூஜை அறையில் இருக்கும் விநாயகரை வணங்கி விரதத்தை முடித்துக்கொள்ளலாம். அன்றைய தினம் முழுக்க விநாயகரைத் துதிப்பது நற்பலன்களைத் தரும்.

26/08/2026

ஆவணி சதுர்தசி எம்பெருமானுக்கு நன்னீராட்டல்

26/08/2026

ஆவணி சதுர்தசி நடராஜர் சிறப்பு அபிஷேக தீப ஆராதனை 🌺🙏🏽

🌺 #ஆவணி மாத வளர்பிறை  #சதுர்த்தசி திருநீராட்டல்(அபிஷேகம்)"🌺—🌺"ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர்அந்தணர் பிரியாத சிற்றம்பலம்...
26/08/2026

🌺 #ஆவணி மாத வளர்பிறை #சதுர்த்தசி திருநீராட்டல்(அபிஷேகம்)"🌺

🌺"ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர்
அந்தணர் பிரியாத சிற்றம்பலம்
நாடினாய் இடமா நறுங்கொன்றை நயந்தவனே
பாடினாய் மறையோடு பல்கீதமும்
பல்சடைப்பனி கால்கதிர் வெண்திங்கள்
சூடினாய் அருளாய் சுருங்க எம தொல்வினையே."🌺

பொருளுரை : நறுமணம் உடைய நெய்யும், பாலும், தயிரும் ஆட்டப் பெற்றவனே! தில்லைவாழ் அந்தணர் எல்லோரும் எப்பொழுதும் அகத்தும் புறத்தும் பிரியாது வழிபடும் திருச்சிற்றம்பலத்தைத் திருக்கூத்தாடும் ஞானவெளியாகக் கொண்டு வாழ்பவனே! நறிய கொன்றைப் பூமாலையை நயந்து (விரும்பிச்) சூடியவனே! நான்மறையுள் சாமகானத்துடன் பல கீதங்களையும் பாடியவனே! பலவாகிய சடைமேல், குளிர் பனியைச் சொரிகின்ற வெண்ணிலவை உடைய இளம் பிறையைச் சூடியவனே! எம் தொல்லை வினை இல்லையாம்படி திருவருள் செய்க.

"ஓர் ஆண்டில் நடராஜருக்கு ஆறு அபிஷேகங்கள். நமக்கு ஓர் ஆண்டு, தேவர்களுக்கு ஒரு நாள். ஓர் ஆண்டில் நடராஜருக்கு ஆறு நாட்கள் அபிஷேகம் நடத்தப்படும்.

01 #சித்திரை மாதம் #திருவோண நட்சத்திரத்தில் கனக சபையில், மாலையில் அபிஷேகம்.

02 #ஆனி மாதத்தில் #உத்திர நட்சத்திரத்தில் இராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் அதிகாலை மூன்று மணிக்கு அபிஷேகம்.

03 #ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தசியில் கனக சபையில் மாலையில் அபிஷேகம்.

04 #புராட்டாசி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தசியில் கனக சபையில் மாலையில் அபிஷேகம்.

05 #மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் இராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் அதிகாலை மூன்று மணிக்கு அபிஷேகம்.

06 #மாசி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தியில் கனக சபையில் மாலையில் அபிஷேகம்.

🌺"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"🌺

ஆவணி மாத வளர்பிறை  #பிரதோஷம்🌸🙏🏽🌺
26/08/2026

ஆவணி மாத வளர்பிறை #பிரதோஷம்🌸🙏🏽🌺

Address

கூவம் கிராமம்
Tiruvallur
631402

Opening Hours

Monday 6am - 11am
5pm - 8pm
Tuesday 6am - 11am
5pm - 8pm
Wednesday 6am - 11am
5pm - 8pm
Thursday 6am - 5pm
Friday 9am - 11am
5pm - 8pm
Saturday 6am - 11am
5pm - 8pm
Sunday 6am - 11am
5pm - 8pm

Alerts

Be the first to know and let us send you an email when கூவம் ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை திரிபுராந்தக சுவாமி. Koovam Shivan Temple. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to கூவம் ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை திரிபுராந்தக சுவாமி. Koovam Shivan Temple.:

Shortcuts

Share

Category