சிவகாமசுந்தரி சமேத சிதம்பரரேஸ்வரர் திருக்கோவில்

  • Home
  • India
  • Tiruvallur
  • சிவகாமசுந்தரி சமேத சிதம்பரரேஸ்வரர் திருக்கோவில்

சிவகாமசுந்தரி சமேத சிதம்பரரேஸ்வரர் திருக்கோவில் சிவகாமசுந்தரி சமேத சிதம்பரரேஸ்வரர் ?

கயிலாய வாழ்வு தரும் தொட்டிக்கலை சீதம்பரேஸ்வரர்

தலவரலாறு:
பிரம்மதேவன் இத்தலத்து இறைவனை வழிபாட்டு அமிர்தகலசத்தினை பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்திரன் இறைவனை வழிபாட்டு அமிர்தகலசத்தினை பெற்றதாக தலபுராணம் கூறுகிறது.
கலைசை, கலைசபுரி, கோவிந்தபுரம் என போற்றப்படும் இத்தலத்தின் இன்றைய பெயர் தொட்டிக்கலை. இத்தலத்தில் பசுக்கொட்டில்கள் அதிக அளவில் இருந்தமையால் இவ்வூர் தொட்டிக்கலை என வசங்கப்படுவதாக தெரியவருகிறது. பசுத்தொழுவம் உள்ள கழுநீர் தொட்டியை ஆதாரமாக வைத்தே தொட்டிக்கலை என்று வழங்கப்படுகிறது.
சிவபெருமான் நாட்டியமாடிய திருத்தலம்; இந்திரன் மற்றும் பிரம்மா அமிர்தகலசம் பெற்ற பூமி; சிதம்பரத்தை போற்றும் சிதம்பரேஸ்வரர் ஆலயம் கொண்ட மண்; சைவர்களும், வைணவர்களும் போற்றி வாங்கிய தளம்; திருவாவடுதுறை ஆதின குலகுரு பூஜித்த தலம், சிவன் மற்றும் முருகன் அடியார் மாதவ சுப்பிரமணியர் வாழ்ந்த தலம், பிள்ளை தமிழ் கொண்ட கோவில்; சிவகங்கை தீர்த்தம், நந்தியோடை கொண்ட பூமி; கோவை, வண்ணம், கட்டளை, பரணி என பல்வேரு இலக்கியங்கள் புகழும் பூமி ஏன் பல்வேறு பெருமைகள் கொண்டதது, திருவள்ளூர் திருத்தொட்டிகலை சிதம்பரேஸ்வரர் திருக்கோவில்.
திருவாவடுதுறை ஆதின குருவாகப் போற்றப்படும் ஸ்ரீ மாதவச் சிவஞான ஸ்வாமிகளும் இவரின் அருள்சீடரான தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவரும் இவ்வூரில் வாழ்ந்து இறைவனை வழிபட்டுள்ளார். ஸ்ரீ மாதவ சிவஞான முனிவர் தமிழில் பாஷ்யம் இல்லாத குறையை தீர்க்க சிவஞான போதம் சாத்திர நூலுக்கு திராவிட மஹா பாஷ்யம் இயற்றினார். அதேபோல, இத்தலத்து செங்கழுநீர் மீதும் செங்கழுநீர் விநாயகர் பிள்ளை தமிழை பாடியுள்ளார் மேலும் சிதம்பரேஸ்வரர் புகழ் படும் கலைசை பதிற்று பத்தந்தாதியையும் பாடியுள்ளார்.

தேறாய் கலைசைச் சிவனே இறை என்று;
ஏறாய் சிவலோகம் இடும் பையெவாம்;
பாறாய் பதம்அஞ் சும்விதிப் படியே;
கூறாய் அருளே குறியாய் மனமே.

என்ற பாடல் வரிகள் மூலம் இத்தலத்து இறைவனை வழிபடுவோர் சிவலோகச் செல்வத்தினை அடைவர் என உறுதி கூறுகின்றார் சுவாமிகள்.

ஸ்ரீ மாதவச் சிவஞான சுவாமிகளின் பன்னிரு மாணாக்கர்களில் ஒருவரான தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் இத்தலத்து இறைவன் மீது அளவற்ற அன்பு கொண்டு கலைசை கோவை, கலைசை சிலேடை வெண்பா, கலைசை சிதம்பரேசர் சந்நிதி முறை, கலைசை சிதம்பரேசர் பஞ்சரத்தினம், கலைசை சிவகாமியம்மை பஞ்சரத்தினம், கலைசை சிதம்பரேசர் பரணி, கலைசை சிதம்பரேசர் கட்டளை ஆகிய அறிய நூல்களை இயற்றியுள்ளார். மேலும் சிலேடை, வெண்பா, சந்நிதி முறை, வண்ணம், பஞ்சரத்தினம் போன்ற பல்வேறு நூல்களையும் அயிலூர், முருகன் பிள்ளைத்தமிழ், பழனி பயிற்றுப் பத்தந்தாதி, வடத்திருமுல்லைவாயில் கொடிவுடை நாயகி அந்தாதி, பழனி குழந்தைவேலர் பஞ்சரத்தினமாலை, குற்றால கலைசை உலா, குற்றால சிற்றசபை திருவிருத்தம், ஆவாடுதுறை கோவை, தன் குருவின் மீது பஞ்சரத்தினமாலை, வண்ணம், ஆனந்தக்கவிதை முதலான நூல்களையும் இயற்றியுள்ளார்.

இவர் திருவிருத்தம் பாடி தொழுநோய்யாளியின் நோய் தீர்த்ததும், திருத்தணிகை திருவிருத்தம் படி பார்வை யற்றவரைப் பார்வை பெறச்செய்ததும் இவர் தம் வாழ்வில் நிகழ்த்திய அதிசயங்களில் சிலவாகும். இம்முனிவர் தோன்றியது கட்டுமன்னார்குடி என்றாலும் இவூரைத் தொடர்புபடுத்தி தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் என்ற அழைக்கப்படுகின்றார்.

இத்தலத்து இலக்கியங்கள் வெளிவர மூலகாரணமாய்த் திகழ்ந்தவர், தமிழ் தாத்தா உ.வே சாமிநாத ஐயர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆலய அமைப்பு:
கிழக்கு நோக்கிய ஆலயம், ஆலயத்தின் எதிரில் சிவகங்கை தீர்த்தம், நுழைவாயிலை மட்டுமே கொண்டுள்ள கோபுர அடித்தளம் ராஜகோபுரத்தை தங்கி நிற்க தயார் நிலையில் உள்ளது நுழைவாயிலை கடந்ததும் பலிபீடம், செப்புத்தகடு போர்த்திய கோடிமரம், நந்திதேவர் ஆகியோரை தரிசிக்கலாம். மஹாமண்டபத்திற்குள் நுழைந்ததும் நேர் எதிரே தாமரை பீடத்தில் வட்டவடிவ ஆவுடையரில் எழுதுஅருளிய இறைவன் மூலவர் ஸ்ரீ சிதம்பரரேஸ்வரரை தரிசிக்கலாம். இந்திரனும், மகன்களும், மன்னர்களும் வழிபட்ட இறைவனின் திருமேனியை காண கண்கோடி வேண்டும். கருவறை சுற்றில் கணபதி, தக்ஷிணாமூர்த்தி, பிரம்மன், துர்கை அருள்பலிக்கின்றார்கள்.
மஹாமண்டபத்து மேல் தலத்தில் எழில்மிகு கவிழ்ந்த தாமரை மொட்டும் அதையொட்டிய புடைப்புச் சிற்பங்களும் கலைநயத்தை பாறைசாற்றுகின்றன. தூண்களில் விநாயகர் மற்றும் பலவாறு புடைப்புச் சிற்பங்கள் அமைந்து கவர்கின்றன சுவாமி சந்நதிக்கு இடதுபுறத்தில் சிவகாமி அம்பிகையின் சந்நிதி அமைத்து உள்ளது அன்னையின் அருள்கோலம் நம்மை பக்தியில் ஆழ்த்துகிறது. இத்தலத்து நடராஜப்பெருமானை தரிசித்தவர்கள் மனதில் மீண்டும் மீண்டும் தரிசிக்கும் எண்ணம் இயல்பாகவே தோன்றும்.
இத்திருக்கோவிலில் ஸ்ரீ விநாயகர், வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முருகப்பெருமான், மஹாலக்ஷ்மி, ஸ்ரீ தியாகராஜர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஸ்ரீ விஸ்வநாதர் விசாலாட்சி, சோமாஸ்கந்தர் ஆகியோர் தனி சந்நிதியில் எழுத்து அருள்பலிக்கின்றார்கள்.

ஆலயத்தில் வெளிச்சுற்றில் வடக்குப்பகுதியில் வசந்தமண்டபம், தெற்கு பகுதியில் மடப்பள்ளி மற்றும் தலவிருச்சமான வில்வமரம் உள்ளது, வில்லமாரதுஅடியில் நாகர் சந்நிதியை காணலாம்.

இத்திருக்கோவில் இந்து சமய அறநிலையத்துறையால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது.

மூலவர்: ஸ்ரீ சிதம்பரேஸ்வரர்
அம்பாள்: சிவகாமசுந்தரி
தலவிருச்சம்: வில்வமரம்
தீர்த்தம்: சிவகங்கை தீர்த்தம்
தரிசன நேரம்: காலை 9 – 11 AM; மாலை – 5 – 7 PM

எங்கே இருக்கு ?
சென்னை திருவள்ளூர் ரயில் மற்றும் பேருந்து வழித்தடங்களில் செவ்வாய்ப்பேட்டையை அடைந்து அங்குஇருந்து வடக்கே 3 கிலோமீட்டர் தொலைவில் இத்தலத்தை அடையாளம்.
செவ்வாப்பேட்டை ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்து ஆட்டோ வசதி உண்டு

விஷேஷ நாட்கள் மற்றும் பூஜை:
பிரதோஷம்
கிருத்திகை
சதுர்த்தி
திருவாதிரை
ஆடிப்பூரம்
அன்னாபிஷேகம்
நவராத்திரி
சஷ்டி
நால்வர் அவதாரத்திருநாள்
சபாபதி அபிஷேகம்
ஆருத்ரா

சித்திரை மாதா நடராஜர் அபிஷேகம் & அலங்காரம்
17/05/2026

சித்திரை மாதா நடராஜர் அபிஷேகம் & அலங்காரம்

அஷ்டமி பைரவர் அபிஷேகம் & அலங்காரம்
17/05/2026

அஷ்டமி பைரவர் அபிஷேகம் & அலங்காரம்

கிருத்திகை முருகப்பெருமான் அபிஷேகம் & அலங்காரம்
17/05/2026

கிருத்திகை முருகப்பெருமான் அபிஷேகம் & அலங்காரம்

பிரதோஷம் நந்தியும்பெருமான் அபிஷேகம் அலங்காரம், பிரதோஷநாதர்
17/05/2026

பிரதோஷம் நந்தியும்பெருமான் அபிஷேகம் அலங்காரம், பிரதோஷநாதர்

கிருத்திகை முருகப் பெருமான் அபிஷேகம் மற்றும் அலங்காரம்
23/03/2026

கிருத்திகை முருகப் பெருமான் அபிஷேகம் மற்றும் அலங்காரம்

மாசி மாதம் நடராஜர் அபிஷேகம் மற்றும் அலங்காரம்
23/03/2026

மாசி மாதம் நடராஜர் அபிஷேகம் மற்றும் அலங்காரம்

தேய்பிறை அஷ்டமி பைரவர் அபிஷேகம் மற்றும் அலங்காரம்
23/03/2026

தேய்பிறை அஷ்டமி பைரவர் அபிஷேகம் மற்றும் அலங்காரம்

பிரதோஷம் அபிஷேகமும் அலங்காரமும் சுவாமி உலா
23/03/2026

பிரதோஷம் அபிஷேகமும் அலங்காரமும் சுவாமி உலா

பிரதோஷம் அபிஷேகம், அலங்காரம் சுவாமி உலா
23/03/2026

பிரதோஷம் அபிஷேகம், அலங்காரம் சுவாமி உலா

பிரதோஷம் அபிசேகம் மற்றும் அலங்காரம் 30 Jan 2026
01/02/2026

பிரதோஷம் அபிசேகம் மற்றும் அலங்காரம் 30 Jan 2026

Address

Thottikalai Village
Tiruvallur
602024

Opening Hours

Monday 9am - 11am
5pm - 7pm
Tuesday 9am - 11am
5pm - 7pm
Wednesday 9am - 11am
5pm - 7pm
Thursday 9am - 11am
5pm - 7pm
Friday 9am - 11am
5pm - 7pm
Saturday 9am - 11am
5pm - 7pm
Sunday 9am - 11am
5pm - 7pm

Telephone

9840704499

Website

Alerts

Be the first to know and let us send you an email when சிவகாமசுந்தரி சமேத சிதம்பரரேஸ்வரர் திருக்கோவில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category