குலம்- தூரன்,சாத்தந்தை,செங்கண்ணன்
தூரன்:
தூர் என்பது நெல் பயிர் திரண்டு இருப்பது. கிணறு, ஏரியில் நிறைந்த சேற்றை அகற்றுவதற்கும் தூர் எடுத்தல் என்கிறோம். வேளாண்மையில் தூர் கட்டி நெற்பயிர் வளர்ந்தால் விளைச்சல் பெருகும். வரப்புயர நெல் உயரும் என்றார் ஒளவையார். "உழவுத் தொழிலை உழைப்பால் மிகைப்படுத்தி அதிக நெல் விளைச்சல் புரிந்தோர் தூரன் கூட்டத்தினர்".
கபிலர் பாடிய புறத்தில் வேளிருள் "புலிகடிமால்", இருங
்கவேல் ஒருவன். இவன் கொல்லி மலை அடிவாரத்தை ஆண்டவன். கபிலர் இங்கு வந்து பாரி மகளை மணந்துகொள்ளக் கேட்டார். இன்று சிவன் ஆண்ட ஊர் புலிகரட்டுப்புதூர் எனப்படுகிறது. இவனது "புலி" குத்திக் கல் சேலம் தொல் பொருள் துறையில் உள்ளது.
ஈரோடு , வெள்ளகோவில் நோய்யல் ஆற்றங்கரையில் அமைந்த ஊர் தூரன்பாடி. தூரன்பாடியே இவர்களின் முதற்காணியாகும். தூரை குலம் தூரன் குலம் என ஆனது. துவரை குலம் தூரன் குலம் ஆகாது.
வெள்ளக்கோயில் அருகில் "மரந்தைபுரியில்" தூரன் குலத்தினர் "மாந்தீசன் கோவில்" கட்டினர். தூரன் என்னும் மாந்திரரை என்ற தொடர் தூரன் குலத்தார் மாந்தரஞ்செரலிடம் அமைச்சர்களாக இருந்தனர் என்பதை உணர்த்தும்.
செங்கோட்டு அர்த்தநாரீசுவரர் கோவில் பணி தூரன் கூட்டத்தினர் செய்தனர் என திருப்பணிமாலை கூறும்.
காங்கேயம் சிவன் மலை முருகனுக்கு, தூரன் குலத்தினரில் குமார் நாச்சிமுத்து அறப்பணி செய்தான். தூரன் குலத்தினர் மொடக்குறிச்சி கரியகாளியம்மனையும், வெங்கம்பூர் அக்கரைப்பட்டி முத்துசாமியையும், மோழிப்பள்ளி அண்ணாமாரையும், குமாரமங்கலம் பொன் காளியம்மனையும் தூரன் குலத்தினர் காணி தெய்வங்களாக வைத்துள்ளனர்.
குமாரமங்கலம், பாலை, மோழிப்பள்ளி, நன்செய் இடையாறு, வெங்கம்பூர், தோட்டணி, பழமங்கலம், வீரகனூர், நல்லூர் கல்யாணி, காங்கேயம், பொன்முடி, தாழம்பாடி, அய்யம்பாளையம், கூணவேலம்பட்டி, சீராப்பள்ளி, பச்சாபாளையம், நெருப்பூர், இசிப்பட்டி ஆகிய ஊர்கள் தூரன் கூட்டத்தினரின் காணி ஊர்களாகும்.