அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் இடுவாய் திருப்பூர்

  • Home
  • India
  • Tirupur
  • அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் இடுவாய் திருப்பூர்

அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயம்  இடுவாய்  திருப்பூர் மிகப் பழமையான சக்தியுள்ள மாரியம்மன்

21/07/2023

🌹 ஆடி வெள்ளி...

ஆடி மாத வெள்ளிக்கிழமையின் மகிமை..

எந்த வெள்ளிக்கிழமை எந்த அம்மனுக்கு உரியது?

🌟 ஆடி மாத வெள்ளிக்கிழமைகளுக்கு தனிச்சிறப்புண்டு. இம்மாத வெள்ளிக்கிழமைகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததும் கூட. பொதுவாக ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதம் மட்டுமின்றி, இம்மாதத்தில் அம்மனின் சக்தி இருமடங்காக இருக்கும்.

🌟 ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் திருமணமான பெண்கள் விரதமிருந்தால், மாங்கல்ய பலம் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, இம்மாத வெள்ளிக்கிழமைகளில் யார் அம்மனை வேண்டி விரதமிருந்தாலும், அவர்கள் நினைப்பது நிறைவேறும்.

🌟 ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு அம்மனுக்கு உகந்தது. அந்த வெள்ளிக்கிழமைக்குரிய அம்மனை வேண்டினால், நிச்சயம் நினைப்பது நிறைவேறும் என்பது ஐதீகம். இப்போது எந்த வெள்ளிக்கிழமை எந்த அம்மனுக்கு உரியது என்றும், என்ன நன்மைகள் கிடைக்கும்? என பார்க்கலாம் வாங்க...

முதல் வெள்ளிக்கிழமை :

🌟 ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையானது சொர்ணாம்பிகை அம்மனுக்கு உரியது. சொர்ணாம்பிகை அம்மன் பார்வதி தேவியின் ஒரு வடிவம். எனவே, ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையின்போது, சொர்ணாம்பிகை அம்மனை மனம் உருகி வேண்டினால், வீட்டில் செல்வ வளம் பெருகும்.

இரண்டாம் வெள்ளிக்கிழமை :

🌟 ஆடி மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமை, அங்காள அம்மனுக்கு உகந்தது. காளி தேவியின் மற்றொரு வடிவம்தான் அங்காள அம்மன். ஆடி மாத இரண்டாம் வெள்ளிக்கிழமையின்போது அங்காள அம்மனுக்கு பூஜை செய்து வணங்கி வந்தால், புத்திக்கூர்மை அதிகரிப்பதோடு, வலிமையும், வீரமும் அதிகரிக்கும்.

மூன்றாம் வெள்ளிக்கிழமை :

🌟 ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமையானது அன்னை காளிகாம்பாளுக்கு உகந்தது. இந்த அம்மன் பார்வதி தேவியின் மற்றொரு வடிவம். எனவே, காளிகாம்பாளை மூன்றாம் வெள்ளிக்கிழமையின்போது வேண்டினால், தைரியம் அதிகரிப்பதோடு, ஆரோக்கியமும் மேம்படும்.

நான்காம் வெள்ளிக்கிழமை :

🌟 ஆடி மாதத்தின் நான்காம் வெள்ளிக்கிழமையானது காமாட்சி அம்மனுக்கு உகந்தது. இவர் சக்தியின் ஓர் வடிவம். இவரை ஆடி மாதத்தின் நான்காம் வெள்ளிக்கிழமையின்போது வணங்கினால், நம்மை சுற்றியுள்ள தீய சக்தி நீங்கும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

ஆடி மாதத்தில் அம்மனை வழிபட்டு அனைவரும் சிறப்படைய வாழ்த்துகள்..!!

Address

Iduvai Main Road , Government High School Near
Tirupur
641687

Telephone

+919965370690

Website

Alerts

Be the first to know and let us send you an email when அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் இடுவாய் திருப்பூர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share