Palani Thaipusam Flag Hosting & Urchavam Padi Pooja

Palani Thaipusam Flag Hosting & Urchavam Padi Pooja Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Palani Thaipusam Flag Hosting & Urchavam Padi Pooja, Hindu temple, IDUVAMPALAYAM, Tirupur.

14/02/2025
19/01/2024

19.01.2024 Thaipusam Flag Hosting by
vasam

Palani Thaipusam Flag Hosting 12.01.2022done By Senguntha Mudaliyar - Iduvampalayam Muthukalai Tharaganar Vamsamசெங்குந்...
12/01/2022

Palani Thaipusam Flag Hosting 12.01.2022
done By Senguntha Mudaliyar - Iduvampalayam Muthukalai Tharaganar Vamsam
செங்குந்த முதலியார் வம்சம் - இடுவம்பாளையம் முத்துக் காளி தரகன் வம்சத்தார் இன்று பழனி தைப்பூச கொடி ஏற்ற விழா சிறப்பாக நடை பெற்றது

22/01/2021

Palani Thaipusam Flag Hosting 22.01.2021

செங்குந்தர் வரலாறு is at பழனி முருகன்.*'இன்று, ஜூன் 10 “ #பழனி_மலையில்_தங்கரதம்” முதல் பவனி வந்த நாள்'*!* 72ஆண்டுகளுக்கு...
10/06/2020

செங்குந்தர் வரலாறு is at பழனி முருகன்.
*'இன்று, ஜூன் 10 “ #பழனி_மலையில்_தங்கரதம்” முதல் பவனி வந்த நாள்'*!

* 72ஆண்டுகளுக்கு முன், 1948 ஆம் ஆண்டு, இதே ஜூன் 10ஆம் நாள், பழனி மலையின் வெளிப்பிரகாரத்தில் *"தங்கரதோற்சவம்'* முதல் பவனியைத் தொடங்கியது.

*"இந்த தங்கரதத்தை காணிக்கையாக வழங்கியவர் ஈரோடு #செங்குந்த_கைக்கோளர்_மரபு, #புள்ளிக்காரர்_கோத்திரம் பங்காளிகள்
V.V.C.R. முருகேச முதலியார் அவர்கள்'*

* 1948இல் வெளியிடப்பட்ட, பழனி தலவரலாறு புத்தகத்திலுள்ள தகவல்:

* ுருகேச_முதலியார் அவர்கள் பழனி ஆண்டவர், மலைமேல் வெளிப் பிரகாரத்தில் பவனி வருவதற்கான முறையில் சுமார் அறுபதாயிரம் செலவில் ஒரு அழகிய தங்கரதம் செய்து ஆண்டவருக்கு உரிமையாக்கியுள்ளார்கள். இவர்களது பேரன்பும் தெய்வ உணர்ச்சியும் போற்றுதற்குரியதாகும்.

*இதனை 10.6.1948
ஆம் நன்னாளில் மலையின் மீது வெளிப்பிரகாரத்தில் திருவுலாவுக்குக் கொணரப்பெற்றது.
· தவிர, திரு VVCR. முருகேச முதலியார் அவர்கள், வடக்கு மழைப் பிரகாரத்தில் “வீரதுர்க்கையை”யும், தெற்கில் “அகோர மங்கையை”யும் பிரதிட்டை செய்துள்ளார்கள். வரத்தாற்றுப் பாறை மீது “பிரம சண்டி”யையும். சாதுசாமிகளது மடத்திற்கெதிரில் “மகிஷாசுர மர்த்தினி”யையும் பிரதிட்டை செய்ய ஏற்பாடாகிறது. இவ்விதமாக இறைவனின் நற்கருணை இவர்கள் மூலமாக பத்தர்களுக்குக் கிடைப்பதாகின்றது போற்றப் பெறுவதாகும் .

* நூலாசிரியர் : ஜெ.எம்..சோமசுந்தரம் பிள்ளை. பி.ஏ.பி.எல். பழனி சைவசிந்தாந்த சபையினர் வெளியிட்டுள்ள “பழநித் தல வரலாறும் திருகோயில் வழிபாடும்” என்ற இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ளவர், (கடந்த மார்ச் மாதம் நூற்றாண்டு விழாக் கொண்டாடிய) சென்னிமலை கலாஞான சங்கத்தைத் தொடங்கியவரும், பின்னாளில் காசி பழனி எனப் பலத் திருத்தலங்களில் ஆலய/ஆன்மீகத் திருப்பணிகளில் தம்மை அர்ப்பணித்துக்கொண்ட *“ஸ்ரீகாசிவாசி” ஈசான சிவாச்சாரியார் அவர்கள்'*
நன்றி.

சைவப்பெரு வள்ளல்
வி.வி.சி.ஆர். முருகேச முதலியார் பற்றிய மற்ற தகவல்கள் 👇

* பழனி முருகன் கோவிலுக்கு வைரவேல் காணிக்கையாக கொடுத்ததும் இவர் தான்

*வி.வி.சி.ஆர். முருகேச முதலியார் ஈரோட்டில் #செங்குந்தர்_கல்விக்கழகம் என்ற அமைப்பை எஸ். மீனாட்சிசுந்தர முதலியார், ஜ. சுத்தானந்தன் முதலியார் உள்ளிட்டோருடன் சேர்ந்து துவக்கினார். இன்று செங்குந்தர் கல்விக்கழகத்தால் பத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது

*இவரை போல, தெய்வ பக்தி கொண்டவர்கள் அக்காலத்தில் மிக சிலரே. இவருக்கும் தொழில், நூல் வியாபாரம் என்றாலும், தம் வருவாயில் பெரும்பகுதியை, இவர் இறைவன் பணிக்கே அர்ப்பணித்தார் என்பதே உண்மை.

*அந்த காலத்திலேயே இவர் பல கோவில்களுக்கு தர்மகர்த்தாவாக இருந்தார். பழனி கோவிலுக்கு, 25 ஆண்டு காலம் இவர் #அறங்காவலராக இருந்தார். அந்த சமயத்தில் முருகனுக்கு தங்கத் தேர், தங்க மயில், தங்க வேல் போன்றவற்றை செய்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு.

*மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில் போன்ற ஸ்தலங்களிலும் இவர் அறங்காவலராக பணியாற்றியுள்ளார். திருப்பதியில் பயணிகள் தங்குவதற்கு, விடுதி கட்டிக் கொடுத்த இவர், திருச்செங்கோடு மலைக் கோவிலுக்கும் முதல் முதலாக மின் இணைப்புக்கு ஏற்பாடு செய்தார். மலைப் படிக்கட்டுகளில் இப்போது விளக்கு எரிவது இவரது உபயத்தினால் தான்.

* #திருத்தணி யில், படி, மண்டபம் கட்டிய இவர், தாம் செய்த காரியங்களுக்காக, விளம்பரம் தேடிக் கொண்டதே இல்லை.

*இவரின் அண்ணன் தான்
VVCR. வையாபுரி முதலியார். சேலம் - நாமக்கல் மாவட்டத்தில் முதன் முதலில் தொடங்கப்பட்ட, #புள்ளிகார்_மில்ஸ் என்ற புகழ்பெற்ற நூற்பு ஆலையை நிறுவி, ஏராளமான குடும்பங்களுக்கு உதவியவர்.

*இவரின் தம்பி தான் சேலம்
#மார்டன்_தியேட்டர்ஸ் நிறுவனர்
டி.ஆர். சுந்தரம் முதலியார். பரவலாக "டி.ஆர்.எஸ்" என்று அழைப்பார்கள்.
தென்னிந்திய திரைத்துறையில் பல சாதனைகள் படைத்து, 100 திரைப்படங்களுக்கு மேல் தயாரித்த முதல் இந்தியன்.
#பழனி
#பழனி_முருகன்
#தங்கரதம்

********************
*
*
*
*

#வீர_செங்குந்த_மரபு குழு

#செங்குந்தர் அல்லது #கைக்கோளர் அல்லது #செங்குந்தர்_கைக்கோள_முதலியார் எனப்படுவோர் சங்க காலத்துக்கு முன்பு இருந்து தென்னிந்தியா மற்றும் இலங்கையில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர்.

முடியாட்சி காலங்களில், அக்காலத்திய படைத் தளபதிகளாக, படைவீரர்களாகவும், மற்றும் ஜவுளி உள்ளிட்ட நெசவு சார்ந்த தொழில் செய்த சமூகம் ஆவர்.
இச்சமூக மக்கள் #முதலியார் என்கிற பட்டத்தை பயன்படுத்க்குகிறார்கள்

⚜செங்குந்தர் - செங்குந்தம் என்றால் இரத்தத்தால்(செம்மை) சிவந்த ஈட்டி (குந்தம்) என்று பொருள். செங்குந்தர் என்றால் 'அத்தகைய' செந்நிறமான ஈட்டியை உடையவர்.

⚜கைக்கோளர் என்றால் வலிமையான (கோள்-வலிமை) கைகளை உடையவர் என்று பொருள்.

⚜"முதலி" என்பது உயர் இராணுவ அதிகாரிகளைக் குறிக்கிறது. பின் அதுவே 'முதலியார்' என்றானது.

🔰தோன்றிய வரலாறு🔰
முருகனின் தாயான பார்வதியின் சிலம்பில் இருந்த ஒன்பது இரத்தினங்களிலிருந்து பிறந்தவர்கள் ஒன்பது வீரர்கள் (நவவீரர்கள்), அதாவது 1. #வீரபாகு 2. #வீரகேசரி, 3. #வீரமகேந்திரர், 4. #வீரமகேஸ்வரர், 5. #வீரபுராந்தரர், 6. #வீரராக்கதர், 7. #வீரமார்த்தாண்டர், 8. #வீராந்தகர் மற்றும் 9. #வீரதீரர் ஆகியோர் முருகனின் படையில் சூரபாத போரில் அரக்கனைக் வீழ்த்த தலைமையேற்றனர். அரக்கனைக் கொன்ற பிறகு, போர்வீரர்கள் சிவனிடம் ஒரு தொழிலை ஏற்றுக்கொள்வதாகக் கூறினர், இது எந்தவொரு உயிரினத்தையும் அழிக்கவோ அல்லது காயப்படுத்தவோ சம்பந்தப்படாது, நெசவு அத்தகைய தொழிலாக இருப்பதால், அவர்கள் அதில் பயிற்சி பெற்றனர். மேற்கண்ட தளபதிகளில் ஒருவரான வீரபாகுவின் மகள் சித்திர வள்ளியை மன்னர் முசுகுந்த சோழன் மணந்தார். இந்த நவவீரர்கள்(ஒன்பது வீரர்கள்) மற்றும் முசுகுந்த சோழனின் சந்ததியரே செங்குந்தர் கைக்கோள முதலியாரின் முதல் தலைமுறை ஆகும்.

#சோழ_வம்சம் #நவவீரர்கள்_வம்சம் #வீரபாகு_வம்சம் #தெரிந்த_கைக்கோளர்_படை #முதலியார்_வம்சம
மன்னர்க்களிடம்
#சேனைத்தலைவர் #காருகர் #தத்துவாயர் பட்டம் பெற்ற வம்சம் நாம்

 #பழனி தைப்பூச கொடியேற்ற விழா 02.02.2020   Thaipusam flag hosting & Urchavam Padi Pooja  02.02.2020  , Tirupur
02/02/2020

#பழனி தைப்பூச கொடியேற்ற விழா 02.02.2020 Thaipusam flag hosting & Urchavam Padi Pooja 02.02.2020 , Tirupur

15.01.2019 THAIPUSAM FLAG HOISTING URCHAVAM done in Palani, Sri Periyanayagi Amman Temple at 10.30 am today by IDUVAMAPA...
16/01/2019

15.01.2019 THAIPUSAM FLAG HOISTING URCHAVAM done in Palani, Sri Periyanayagi Amman Temple at 10.30 am today by IDUVAMAPALYAM Senguntha Mudaliyar Vasam since 400 years above

2019 THAIPUSAM FLAG HOISTING URCHAVAM done in Palani, Sri Periyanayagi Amman Temple at 10.30 am today by IDUVAMAPALYAM S...
15/01/2019

2019 THAIPUSAM FLAG HOISTING URCHAVAM done in Palani, Sri Periyanayagi Amman Temple at 10.30 am today by IDUVAMAPALYAM Senguntha Mudaliyar Vasam since 400 years above

Address

IDUVAMPALAYAM
Tirupur
641687

Website

Alerts

Be the first to know and let us send you an email when Palani Thaipusam Flag Hosting & Urchavam Padi Pooja posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category