குருக்கபாளையம் கிராமம் 638660

  • Home
  • India
  • Tirupur
  • குருக்கபாளையம் கிராமம் 638660

குருக்கபாளையம் கிராமம் 638660 குருக்கபாளையம் கிராமம்-638660
Kurukkapalayam,Koduvai Via, Kangayam TK, Tirupur DT.Tamilnadu

காங்கயம் - கொடுவாய் வழியில் உள்ளது குருக்கபாளையம் கிராமம், இங்கு திருக்கோயில்கள் பல உள்ளது. குருக்கள் பலர் தங்கியிருந்த காரணத்தால் குருக்கள்பாளையம் என பெயர் வந்தது. குருக்கபாளையம் திரிந்து வந்துள்ளது. குருக்கபாளையம், ஆண்டிப்புதூர், தட்டாரவலசு,ஓலப்பாளையம் மற்றும் அய்யம்பாளையம் ஆகிய ஊர்கள் அடங்கியுள்ளன.

குருக்கபாளையம் ஊராட்சி (Kurukkapalayam Gram Panchayat), தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உ

ள்ள குண்டடம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, காங்கேயம் சட்டமன்றத் தொகுதிக்கும் ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 5 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 5 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1120 ஆகும். இவர்களில் பெண்கள் 537 பேரும் ஆண்கள் 583 பேரும் உள்ளனர்.

09/07/2025
08/07/2025

🌾 விவசாயிகளுக்கு நல்ல செய்தி!
பாழடைந்த கிணறுகளை புதுப்பிக்க அரசு வழங்கும் மாபெரும் உதவி! 💧

✅ ஒரு கிணறுக்கு ரூ.2.50 லட்சம் வரை மானியம்
✅ மத்திய + மாநில அரசுகளின் இணைத் திட்டம்
✅ உங்கள் செலவில் பணி செய்து முடித்த பிறகு, மானியம் உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக!

📌 தேவையான ஆவணங்கள்:
பட்டா, அடங்கல், ஆதார், ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம்

📍சென்னை, நீலகிரியை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் திட்டம் அமலாகிறது!

🧑‍🌾 உரிமை உள்ள விவசாயிகள் உடனே உங்கள் வட்டார வேளாண் பொறியியல் அதிகாரியை அணுகுங்கள்!

🌱 பழைய கிணறு புது வாழ்வை பெறட்டும்!

📞 தலைமை அலுவலக தொடர்பு

Department of Agriculture, Tamil Nadu
Chepauk, Chennai –

பொதுக் கேள்விகளுக்கு: 044‑28583323

உதவி/office support: 044‑28524894

🏢 வேளாண் பொறியியல் துறை – சென்னை

Chennai Agricultural Engineering Department

தொலைபேசி: 044‑29510922 / 29510822 / 29515322

#விவசாயம் #கிணறு_புதுப்பிப்பு #மாநிய_திட்டம் #தமிழ்நாடு_விவசாயிகள் #வேளாண்துறை

டாடா நிறுவனம் உயர் மின்னழுத்த கோபுரங்களை அமைப்பதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 20/5/2025 க்குள் பொதுமக்கள் விவசாயிகள் ...
22/03/2025

டாடா நிறுவனம் உயர் மின்னழுத்த கோபுரங்களை அமைப்பதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 20/5/2025 க்குள் பொதுமக்கள் விவசாயிகள் தங்கள் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம்.

30/05/2024

*வணக்கம்
அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஸ்ரீ காசி விசாலாட்சி திருக்கோவிலில் குரோதி வருடம் வைகாசி 18 தேதி 31.5.2024 வெள்ளிக்கிழமை (நாளை) இரவு 7.00 மணி அளவில் கோவில் திருப்பணி சம்பந்தமான மாபெரும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதால் நமது கிராமத்தைச் சேர்ந்த
(குருக்கபாளையம், ஆண்டிபுதூர், தட்டாரவலசு, ஓலப்பாளையம் மற்றும் அய்யம்பாளையம்) பக்தர்கள் அனைவரும் (*வீட்டுக்கு ஒருவர்*) கண்டிப்பாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*

18/05/2024

காங்கேயம் அருகே ஆடு திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது - மற்றொருவர் தப்பியோட்டம்

30/04/2024

குண்டடம் சின்ன வெங்காய வியாபாரியிடம் இருந்து 7 லட்ச ரூபாய் மதிப்புள்ள சின்ன வெங்காயம் திருட்டு

Address

Koduvai Via
Tirupur
641602

Telephone

9876543210

Website

Alerts

Be the first to know and let us send you an email when குருக்கபாளையம் கிராமம் 638660 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category