Aruḷ Nilai Sudalai Madan Aalayam -அருள் நிலை சுடலை மாடன் ஆலயம்.

  • Home
  • India
  • Tirunelveli
  • Aruḷ Nilai Sudalai Madan Aalayam -அருள் நிலை சுடலை மாடன் ஆலயம்.

Aruḷ Nilai Sudalai Madan Aalayam -அருள் நிலை  சுடலை மாடன்  ஆலயம். Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aruḷ Nilai Sudalai Madan Aalayam -அருள் நிலை சுடலை மாடன் ஆலயம்., Buddhist Temple, Tirunelveli.

முனியம்மா , முனியாண்டி பெயர் விளக்கம் . முனி பெயர் கொண்ட ஆண்டி -முனியாண்டி ,அந்த முனியை பெற்ற அம்மா - முனியம்மா .புத்தரி...
04/05/2025

முனியம்மா , முனியாண்டி பெயர் விளக்கம் .

முனி பெயர் கொண்ட ஆண்டி -முனியாண்டி ,அந்த முனியை பெற்ற அம்மா - முனியம்மா .

புத்தரின் பெயர் சாக்கிய முனி புத்தா , அவரே பாண்டிய நாட்டில் பாண்டி முனி என அழைக்கப்பட்டார்.

துன்பத்திற்கான தீர்வை தேடி புத்தர் துறவு மேற்க்கொள்ளும் போது அவர் கழுத்தில் அணிந்திருந்த ராஜ குடி ஆவரணம், ராஜ உடை என அனைத்தையும் துறந்து ஆண்டியாக மாற்றம் கொள்கிறார். ஆகவே அவர் ஆண்டி எனவும் அழைக்கப்பட்டார்.

01/05/2025
29/04/2025

"வரதா, வரதன், வரதராஜ், வரதராஜன், வரதராஜப்பெருமாள், வரதமுனி, வரதமூர்த்தி" போன்ற பெயர்களும் புத்தரின் நாமங்களாகும்.

"ஈஸ்வரன், மகேஸ்வரன், பரமேஸ்வரன், முனீஸ்வரன்," போன்ற பெயர்களின் முழுமையான அர்தத்தை விளங்கி கொள்வதற்கு, அந்த பெயர்களின் முடிவில் உள்ள "வரன்" என்ற சொல்லின் அர்த்தத்தை தெரிந்து கொள்வதும் அவசியமாகும்.

(மகா+ஈஸ+வரன் = மகேஸ்வரன்,
"பரம+ஈஸ+வரன் = பரமேஸ்வரன்",
"முனி+ஈஸ+வரன் = முனீஸ்வரன்).

"வரன்" என்ற தமிழ் சொல்லானது "வரம்" என்ற சொல்லில் இருந்து வந்ததாகும்.

"வரம்" என்றால் தமிழ் அகராதியில் "மேன்மை, அருள்" போன்ற அர்த்தத்தை கொண்டுள்ளது.

பாலி மொழியிலும் "மேன்மை, அருள்" என்று அதே அர்த்தத்தில்தான் "வர, வரங்" என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

"வர, வரங், வரம், வரன்" என்ற சொல்லில் இருந்தே "வரதன்" என்ற பெயரும் உருவாகியுள்ளது.

கீழ்க்கண்ட தமிழ் நூல்களில் "வரதன்" என்பதை புத்தரை குறிப்பிடவே பயன்படுத்த பட்டுள்ளது.

"வாடாத போதி நெறிநீழல் மேய வரதன் பயந்த அறநூல்"
- வீரசோழியம்.

விளக்கம்:- வாடாத போதி(போதிமரம், ஞானம்) ஒழுக்கம் நிழலாக பரவ வரதன்(புத்தர்) வழங்கிய அறநூல்.

"மாதவா போதி வரதா வருளமலா
பாதமே யோத சுரரைநீ - தீதகல
மாயா நெறியளிப்பா யின்றன் பகலாச்சீர்த்
தாயே யலகில்லா டாம்". -போதிமாதவன், சித்திரக் கவி விளக்கம்.

விளக்கம்:- "மாதவனே ! போதிமரத்தடியில் அமர்ந்த மேலானவனே ! குற்றமற்றவனே ! உன்
திருவடிகளை ஏத்தத் தேவரை நீ குற்றம் நீங்க அழிவில்லாத வீட்டு நெறியை
அடையச செய்வாய். தாயே ! எல்லையற்ற வலிமை உடையாய் ! உன்னிடம் அன்பு
நீங்காத சிறப்பை அருள்."

பாலி திபிடக(திரிபீடகம்) நூல்களிலும் "வர'வரங்" போன்ற நாமங்களை புத்தரை குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளது.

ரதன ஸுத்தாவில் கீழ்க்கண்ட வரிகள் அற்புதமாக எழுதப்பட்டுள்ளது.

"வரோ வரஞ்ஞூ வரதோ வராஹரோ, அனுத்தரோ தம்மவரங் அதேஸயி;
இதம்பி புத்தே ரதனங் பநீதங்..."

விளக்கம்:-
வரோ - மேன்மையானவர்.

வரஞ்ஞூ - மேன்மையை அறிந்தவர்.

வரதோ - மேன்மையை தருபவர்.

வராஹரோ - மேன்மையை கொண்டுவருபவர்.

அனுத்தரோ தம்மவரங் அதேஸயி - ஈடு இணையற்ற மேன்மையான தம்மத்தை போதித்தவர்.

இதம்பி புத்தே ரதனங் பநீதங் - இதுவும் புத்தரின் மிக உயர்ந்த ரத்தினமாகும்.

பாலி நூலில் புத்தவந்தனா பாடலாக கீழ்க்கண்ட வரிகள் எழுதப்பட்டுள்ளது.

"வரோ வரஞ்ஞூ வரதோ, வருத்தமோ வராஹரோ; வரதம்மங் அதேஸயி, புத்தங் தங் பனமாமயஹம்".

இதில் "வருத்தமோ = வரங்+உத்தமங்" என்ற சொல் "மேன்மையிலும் மேன்மையான" என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட தமிழ் மற்றும் பாலி நூல்களின் ஆதாரத்தை கொண்டே "வர,வரங்,வரம்,வரன்,வரதன்" போன்ற பெயர்களை புத்தரின் நாமங்களாகும் என்று

என் உள்மெய்யை காணும் சிந்தனைக்கு உத்தம வழிகாட்டியுமான, தமிழ் மற்றும் திராவிட ஒளிவிளக்கு பண்டிதர் அயோத்திதாசரும் வாதிடுகிறார்.

"வரதன்+நாடு=வரதநாடு,
வரதர்+நாடு=வரதநாடு,"

"வரதன்" என்பது "பரதன்" என்று மருவியத்கவும்.
"வரதர்" என்பது "பரதர்" என்று மருவியதாகவும்.

"வரதநாடு" என்பது "பரதநாடு" எனறு மருவியதாவும்.

"வரதம்" என்பது "பரதம்" என்று மருவியதாகவும்.

"பரதம்" என்பது "பாரதம்" என்று
மருவியதாகவும்.

"பரதநாடு" என்பது "பாரதநாடு" என்று மருவியதாகவும்.

பண்டிதர் அயோத்திதாசர் வழியில் புரிந்து கொள்ள முடிகிறது.

அதாவது "விஹார்" என்பது "பிஹார்" என்றும்.

"பாரனாசி" என்பது "வாரனாசி" என்றும்.

"பந்தே" என்பதை "வந்தே" என்றும்.

"வந்தே" என்பதை "பந்தே" என்றும்.

பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு தேசத்தின் பல்வேறு மக்களால் மருவி மருவி உச்சரித்து... இன்றும்கூட உச்சரிக்க படுவதை காணமுடியும்.

இதன் அடிப்படையில்தான்
"இந்தியா" என்றாலும்,
"பாரதம்" என்றாலும் அது புத்தரின் நாமத்தில் இருந்து வந்ததாகும் என்பது பண்டிதர் அயோத்திதாசர் வாதம் ஆகும்.

அது மிகச்சரியான வாதமாகும் ஆகும்.

உலகம் முழுவதும் பல தேசத்து அறிஞர்களும் பாமரர்களும் அறிந்த வைத்திருந்த இந்தியாவின், பாரதத்தின் மேன்மையான ஒற்றை அடையாளம் ததாகதர் கௌதம புத்தர் ஆவார்.

அதனால் "மகேஸ்வரன், பரமேஸ்வரன், முனீஸ்வரன், வரதா, வரதன், வரதராஜ், வரதராஜன், வரதராஜப்பெருமாள், வரதமுனி, வரதமூர்த்தி" போன்ற பெயர்களும் புத்தரின் நாமங்களாகும்.

"மன்னாசை விட்டு மறச்செவி அடைத்தோன்,
ஐம்புலன் அடக்கி அறச்செவி திறந்தோன்,
அரச நீழலில் அனுதினம் தங்கி
அருந்தவம் புரிந்த சாக்கிய மாமுனிவன்,
ஐயனே!
நின் அடி மலரினை தொழுதேன்,
அவனே நீயாம் ஐயம் அதற்கில்லை.

பகவன் நீயே! பரமன் நீயே!
புனிதன் நீயே! புராணன் நீயே!
தருமன் நீயே! தலைவன் நீயே!
ஆதி நீயே! அறவோன் நீயே!
ஆயிவாரத் தாழியான் நீயே!
உண்மை ஒளியால் உள்ளிருள் போக்கி,
நன்மை விளைவிக்கும் ஞாயிறும் நீயே!
யானும் இன்று உன் இணையடி பணிந்து பாரில் பிறந்த பயன்னெல்லாம் பெற்றேன் அய்யா!

Happy Birthday my daughter! I want to wish you a life time of happiness and love💕. I pray that God BUDDHA grant you a lo...
28/04/2025

Happy Birthday my daughter! I want to wish you a life time of happiness and love💕. I pray that God BUDDHA grant you a long life, good health and more birthdays to come!

HAPPY BIRTHDAY TANYA🎉🎉🎂🎈🎊

புத்தரை முனீஸ்வரன் ஆக்கிய இந்து மதம்!June 02, 2015புத்தரை முனீஸ்வரன் ஆக்கிய இந்து மதம்!புத்தம் ஓர் அறிமுகம் மயிலை சீனி.வ...
27/04/2025

புத்தரை முனீஸ்வரன் ஆக்கிய இந்து மதம்!
June 02, 2015
புத்தரை முனீஸ்வரன் ஆக்கிய இந்து மதம்!
புத்தம் ஓர் அறிமுகம்
மயிலை சீனி.வெங்கடசாமி
தாராதேவி, மங்கலாதேவி, சிந்தாதேவி முதலான பௌத்த தெய்வங்களின் கோயில்களும், பிற்காலத்தில் இந்துக்களால் பகவதி கோயில்களாகவும் கிராமதேவதை கோயில்களான அம்மன் கோயில்களாகவும் மாற்றப் பட்டனவாகத் தெரிகின்றன.
சாத்தன்’, அல்லது ‘சாத்தனார்’ என்னும் பெயர் ‘சாஸ்தா’ என்னும் வடமொழிப் பெயரின் திரிபு. ‘சாஸ்தா’ என்பது புத்தருக்குரியபெயர்களுள் ஒன்று என்பது ‘அமரகோசம்’, ‘நாமலிங்கானுசாசனம்’ முதலிய வடமொழி நிகண்டுகளால் அறியப்படும். எனவே, ‘சாஸ்தா’ என்னும் சொல்லின் திரிபாகிய ‘சாத்தன்’ என்னும் பெயர் புத்தரைக் குறிக்கும் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கப்பட்டுவந்தது. இந்தப் பெயரைப் பௌத்த மதத்தினர் பெரும்பான்மையும் தத்தம் சிறுவருக்குச் சூட்டினர். பண்டைக் காலத்தில், அதாவது கடைச்சங்க காலத்தில், தமிழ் நாட்டிலிருந்த பௌத்தர்கள் ‘சாத்தன்’ என்னும் பெயரைப் பெரும்பாலும் மேற்கொண்டிருந்தனர் என்பது சங்க நூல்களினின்றும் தெரியவருகின்றது. பௌத்த நூலாகிய ‘மணிமேகலை’யை இயற்றியவர் பௌத்த மதத்தினர் என்பதும், அவரது பெயர் ‘சாத்தனார்’ என்பதும் ஈண்டுக் கருதத்தக்கது. கோவலன் என்னும் ‘சிலப்பதிகார’க் கதைத் தலைவனுடைய தந்தை ‘மாசாத்துவன்’ என்னும் பௌத்தன் என்பதும், கோவலன் கொலையுண்டபின், மாசாத்துவன் பௌத்த பிக்ஷ¨வாகித் துறவுபூண்டான் என்பதும் ஈண்டு நோக்கற்பாலன. மற்றும், ‘பெருந்தலைச் சாத்தனார்’, ‘மோசி சாத்தனார்’, ‘வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார்’, ‘ஒக்கூர்மா சாத்தனார்’, ‘கருவூர்க் கந்தப்பிள்ளை சாத்தனார்’ முதலான சங்ககாலத்துப் புலவர்களும் பௌத்தர்களாக இருந்திருக்கக்கூடும் என்று, அவர்கள் கொண்டிருந்த ‘சாத்தன்’ என்னும் பெயரைக்கொண்டு கருதலாகும்.
கொங்கண நாடாகிய துளுவதேசத்தில் உள்ள சில கோவில்களுக்குச் ‘சாஸ்தாவு குடி’ என்றும், ‘சாஸ்தா வேஸ்வரம்’ என்றும், ‘சாஸ்தாவு கள’ என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன என்றும், இவை யாவும் பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில்களாக இருந்தன என்றும், பௌத்த மதம் அழிவுண்ட பின்னர் இந்தக் கோயில்கள் இந்துமதக் கோயில்களாக மாற்றப்பட்டன என்றும் கூறப்படுகின்றது இதனை உறுதிப்படுத்துகின்றது. இப்பொழுதும் மலையாள நாட்டில் சாஸ்தா கோயில்கள் உண்டு. இவற்றிற்குச் ‘சாத்தன் காவுகள்’ என்று பெயர். (காவு = கா = தோட்டம், அல்லது பூஞ்சோலை என்பது பொருள்) பண்டைக் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்த பௌத்தக் கோயில்கள் பூஞ்சோலைகளின் நடுவில் அமைக்கப்பட்டிருந்ததாகப் பண்டை நூல்களினால் தெரிகின்றது. இவற்றிற்கு ‘ஆராமம்’ (பூங்தோட்டம்) என்று பெயர் வழங்கிவந்தன. மலையாள நாட்டிலுள்ள சாத்தன் காவுகளும் பண்டைக் காலத்தில் பௌத்தக்கோயில்களாக இருந்து, இப்போது இந்துமதக் கோயில்களாக மாற்றப்பட்டவை என்பது ஆராய்ச்சிவல்லோர் கருத்து. சாத்தனாருக்கு ‘ஐயப்பன்’ என்னும் பெயரும் மலையாள தேசத்தில் வழங்கிவருகின்றது. காவிரிப்பூம்பட்டினத்திலும் சாத்தன் கோயில் இருந்ததாகச் சிலப்பதிகாரத்தினால் தெரிகின்றது. ‘சாஸ்தா’, அல்லது ‘சாத்தன்’ என்னும் வட சொல்லிற்கு நேரான தமிழ்ச்சொல் ‘ஐயன்’, அல்லது ‘ஐயனார்’ என்பது. ‘ஐயன்’ என்பதற்கு உயர்ந்தோன், குரு, ஆசான் என்பன பொருள். பௌத்தமதம் அழிந்த பின்னர், அம்மதக்கொள்கைகளையும் தெய்வங்களையும் இந்து மதம் ஏற்றுக்கொண்டபோது, வெவ்வேறு கதைகள் கற்பிக்கப்பட்டன. வைணவர் புத்தரைத் திருமாலின் ஓர் அவதாரமாகவே வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர். சைவ சமயத்தோர், புத்தராகிய சாத்தனாரைத் திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் பிறந்த பிள்ளையாகக் கற்பித்து, சாத்தனாரைத் தமது தெய்வக்குழாங்களில் ஒருவராகச் சேர்த்துக்கொண்டனர். அப்பர் சுவாமிகளும் தமது தேவாரத்தில் சாத்தனாரைச் சிவபெருமானின் பிள்ளை என்றே கூறியிருக்கின்றார்.
‘ பார்த்தனுக் கருளும்வைத்தார் பாம்பரை யாடவைத்தார்
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாமவேதங்
கூத்தொடும் பாடவைத்தார் கோளராமதிய நல்ல
தீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார் திருப்பயற்றூரனாரே ‘
என வரும் தேவாரத்தினாலே இதனை அறியலாம்.
DSCN0365
சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு புத்தர் சிலை
பிற்காலத்தில், ‘சாத்தனார்,’ ‘ஐயனார்’, ‘அரிஹரபுத்திர்’ என்னும் இத்தெய்வத்தைக் கிராம தெய்வமாகச் செய்து, பண்டைப் பெருமையைக் குலைத்துவிட்டனர். ‘சாத்தன்,’ அல்லது ‘சாஸ்தா’ என்று புத்தருக்குப் பெயர் கொடுக்கப்பட்டதன் காரணம் என்னவென்றால், அவர் எல்லாச் சாஸ்திரங்களையும் கற்றவர் என்னும் கருத்துப் பற்றி என்க. சிலப்பதிகாரம், கனாத்திற முரைத்த காதையில், ‘பாசண்டச் சாத்தற்குப் பாடுகிடந்தாளுக்கு’ எனவரும் அடியில், ‘பாசண்டச் சாத்தன்’ என்னும் சொல்லுக்கு அடியார்க்கு நல்லார் எழுதும் உரை வருமாறு : “பாசண்டம் தொண்ணூற்றாறு வகைச் சமய சாத்திரத் தருக்கக் கோவை. இவற்றிற்கு முதலாயுள்ள சாத்திரங்களைப் பயின்றவனாதலின், மகாசாத்திர’னென்பது அவனுக்குப் பெயராயிற்று.” இவர் கூறும் உரைக்கேற்பவே பௌத்தர்களும், புத்தர் பல நூல்களைக் கற்றவர் என்று கூறுவர். இதனை வற்புறுத்தியே, ‘சூடாமணி நிகண்டும்,’
‘ அண்ணலே மாயாதேவிசுதன் அகளங்க மூர்த்தி
நண்ணியகலைகட் கெல்லாம்நாதன் முக்குற்ற மில்லோன் ‘
என்று கூறுகின்றது. ‘அருங்கலை நாயகன்’ என்று திவாகரம் கூறுகின்றது. நாகைப்பட்டினத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் உருவச்சிலையொன்றன் பீடத்தில், ‘ஸ்வஸ்தி ஸ்ரீ ஆகம பண்டிதர் உய்யக்கொண்ட நாயகர்’ என்று எழுதியிருப்பது காண்க. புத்தர் சகல சாஸ்திரங்களையும் கற்று வல்லவர் என்பதும், அதுபற்றியே அவருக்குச் ‘சாஸ்தா’, அல்லது ‘மகா சாஸ்தா’ என்னும் பெயருண்டென்பதும் அறியப்படும். ‘லலிதாவிஸ்தார’ என்னும் பௌத்த நூலிலும் புத்தர் பலகலைகளைக் கற்றவர் என்று கூறப்பட்டுள்ளதென்று கூறுவர். இன்னுமொரு கண் கூடான சான்று யாதெனில், காஞ்சீபுரத்திலுள்ள காமாட்சியம்மன் கோயிலின் உட்பிராகாரத்தில் இருந்த புத்தர் உருவச் சிலைக்குச் ‘சாஸ்தா’ என்னும் பெயர் உள்ளதுதான். (படம் 6 காண்க.) இச்சாஸ்தாவைப்பற்றிக் ‘காமாட்சிலீலாப் பிரபாவம்’ என்னும் காமாக்ஷ¤ விலாசத்தில், ‘காமக்கோட்டப் பிரபாவத்தில்’, ‘தேவியின் (காமாட்சி தேவியின்) தன்யபானஞ் செய்து (முலைப்பால் அருந்தி) சுப்பிரமணியரைப் போலான சாஸ்தா ஆலயம்’ காமாட்சியம்மன் கோயிலில் இருக்கிறதாகக் கூறப்பட்டுள்ளது. * ‘சாஸ்தா’ என்பவரும் ‘புத்தர்’ என்பவரும் ஒருவரே என்பதற்கு இதுவே போதுமான ஆதாரம். இன்னும் சில ஆதாரங்கள் உண்டு. அவை விரிவஞ்சி விடப்பட்டன.
‘சாஸ்தா’ என்னும் புத்தருடைய கோயில்களை ‘ஐயனார் கோயில்கள்’ என்றும், ‘சாதவாகனன் கோயில்கள்’ என்றும் சொல்லி, பிற்காலத்து இந்துக்கள் நாளடைவில் அவற்றைக் கிராமதேவதையின் கோயில்களாக்கிப் பெருமை குன்றச் செய்துவிட்டது போலவே, ஏனைய சில புத்தப் பெயர்களுக்கும் வேறு பொருளும் கதையும் கற்பித்து அவற்றையும் மதிப்பிழக்கச் செய்துவிட்டதாகத் தெரிகின்றது. சில இடங்களில் புத்தரை முனீஸ்வரன் ஆக்கிவிட்டனர். தென்னாட்டில், ‘தலைவெட்டி முனீஸ்வரன்’ கோயில் என ஒன்று உண்டென்றும், அக்கோயிலில் உள்ள உருவம் புத்தரின் உருவம்போன்றுள்ளதென்றும் சொல்லப்படுகின்றது. இப்பொழுது காணப்படும் ‘தருமராஜா கோயில்கள்’ என்பனவும் பண்டொருகாலத்தில் பௌத்தக் கோயில்களாயிருந்திருக்கவேண்டும் என்று தோன்றுகின்றது. ‘தருமன்,’ அல்லது ‘தருமராசன்’ என்பதும் புத்தருக்குரிய பெயர்களில் ஒன்று, பிங்கல நிகண்டில் ‘தருமன்’ என்றும், திவாகரத்திலும் நாமலிங்கானுசாசனத்திலும் ‘தர்மராஜன்’ என்றும் புத்தருக்கு வேறு பெயர் கூறப்பட்டுள்ளது. இது தமிழ் நிகண்டுகளினாலும் அறியப்படும். இந்தத் தருமராஜா கோயில்களான பௌத்தக் கோயில்கள், இந்துமதம் செல்வாக்குப் பெற்ற காலத்தில், பஞ்சபாண்டவரில் ஒருவரான தருமாராஜா கோயிலாகக் கற்பிக்கப்பட்டுப் பலராலும் நம்பப்பட்டன. தருமராஜா கோயில்களில், பௌத்தர் போற்றும் ‘போதி’ என்னும் அரச மரங்கள் இன்றைக்கும் காணப்படுவதே, தருமராஜா கோயில்கள் பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில்கள் என்பதை விளக்கும். சமீபகாலம் வரையில் பௌத்தமதம் நிலைபெற்றிருந்த வங்காளத்திலே, இப்பொழுதும் சில பௌத்தக் கோயில்களுண்டென்றும், அக்கோயில்களில் உள்ள புத்தவிக்கிரகங்களுக்குத் ‘தருமராஜா’, அல்லது ‘தருமதாகூர்’ என்று பெயர் வழங்கப்படுகின்றதென்றும் அறிகின்றோம். எனவே, தமிழ் நாட்டிலுள்ள இப்போதைய தருமராஜா கோயில்கள் பண்டைக்கால்தில் பௌத்தக் கோயில்களாயிருந்திருக்கவேண்டும் என்று கருதப்படும். இவ்வாறே, தாராதேவி, மங்கலாதேவி, சிந்தாதேவி முதலான பௌத்த தெய்வங்களின் கோயில்களும், பிற்காலத்தில் இந்துக்களால் பகவதி கோயில்களாகவும் கிராமதேவதை கோயில்களான அம்மன் கோயில்களாகவும் மாற்றப் பட்டனவாகத் தெரிகின்றன. தாராதேவி கோயில் திரௌபதையம்மன் கோயிலென இப்பொழுது வழங்கப்படுகின்றது. ‘தருமராஜா’ என்னும் பெயருள்ள புத்தர் கோயில், பிற்காலத்தில், பாண்டவரைச் சேர்ந்த தருமராஜா கோயிலாக்கப்பட்டது போல, ‘தாராதேவி’ என்னும் பௌத்த அம்மன் கோயில், தருமராஜாவின் மனைவியாகிய திரௌபதையின் கோயிலாக்கப்பட்டதுபோலும். சுருக்கமாகச் சொல்லுவதென்றால், இப்போது திருமால் கோயில்கள் அவ்வவ்விடங்களில் ‘வரதராசர் கோயில்’, ‘திருவரங்கர் கோயில்’, ‘வேங்கடேசர் கோயில்’ முதலிய வெவ்வேறு பெயர்களுடனும், சிவபெருமான் கோயில்கள் ‘கபாலீஸ்வரர் கோயில்’, ‘தியாகராசர் கோயில்’, ‘சொக்கலிங்கர் கோயில்’ முதலான வெவ்வேறு பெயர்களுடனும் வழங்கப்படுவது போலவே, பண்டைக்காலத்தில், பௌத்தக் கோயில்களும் புத்தருடைய பல பெயர்களில் ஒவ்வொன்றன் பெயரால் ‘தருமராசா கோயில்’, ‘சாத்தனார் கோயில்’, ‘முனீஸ்வரர் கோயில்’ என்பன போன்ற பெயர்களுடன் வழங்கப்பட்டுவந்தன என்றும், பிற்காலத்தில், இந்துமதம் செல்வாக்குப் பெற்றபோது, அவை இந்துமதக் கோயிலாகச் செய்யப்பட்டு, இந்துமத்த் தொடர்பான கதைகளுடன் இணைக்கப்பட்டு, பின்னும் நாளடைவில் அவை கிராம தேவதை கோயில்கள் என்னும் நிலையில் தாழ்ந்த நிலைக்குக் கொண்டுவரப்பட்டனவென்றும் தோன்றுகின்றது.
* காஞ்சிக் காமாட்சி அம்மன் கோயில் உட் பிராகாரத்தில் இருந்த இந்த ‘சாஸ்தா’ என்னும் புத்தர் உருவச்சிலை இப்போது சென்னைப் பொருட்காட்சிச் சாலையில் இருக்கின்றது.
(தொடரும்)
அறிஞர் மயிலை சீனி. வெங்கடசாமி எழுதிய பெளத்தமும் தமிழும் நூலின் அத்தியாயங்கள் பகுதி கட்டுரைகளாக பிரசுரிக்கப்படுகின்றன.

கிராமங்களில் காவல் தெய்வங்களாகக் கருதப்படும் சுடலை மாடன், இசக்கி மாடன், புலமாடன், வேம்பன், கருப்பசாமி, மாடசாமி, மாயாண்டி...
27/04/2025

கிராமங்களில் காவல் தெய்வங்களாகக் கருதப்படும் சுடலை மாடன், இசக்கி மாடன், புலமாடன், வேம்பன், கருப்பசாமி, மாடசாமி, மாயாண்டி, முனியாண்டிபோன்ற ஆண் தெய்வங்களும், முப்பிடாரி, வண்டிமரிச்சி, காட்டேரி, உச்சிமாகாளி, இருளாயி, முனியம்மாள், இசக்கியம்மன் போன்ற பெண் தெய்வங்களும் சிறு தெய்வ வழிபாட்டு முறைகளில் வணங்கப்பட்டு வருகிறது.

இத்தெய்வங்களின் கோயில்களுக்கு பெரும்பாலும் கூரை வேயப்படுவதில்லை. அப்படியே கூரை வேயப்பட்டிருந்தாலும் அவை எளிமையாகவே இருக்கிறது. இக்கோவில்களில் சிலைகள் இருக்கும் தனி அறையான கருவறை என்கிற பாதுகாக்கப்பட்ட பகுதிகள் இல்லை. சாமியின் சிலையைத் தொட்டு வணங்கலாம். இத்தெய்வங்கள் பெரும்பாலும் மணல், சுண்ணாம்பு கலந்து திண்டுகளாக முக்கோண வடிவில் உருவாக்கப்பட்டு வெள்ளையடிக்கப்பட்டிருக்கும். வெள்ளையடிக்கப்பட்ட திண்டுகளில் சாமிகளின் முகம் மட்டும் வரையப்பட்டிருக்கும் அல்லது காவிநிறக் கோடுகள் நீளவாக்கில் போடப்பட்டிருக்கும். சில ஊர்களில் கற்சிலைகளாகவும், சில ஊர்களில் சிலைகள் களி மண்ணாலோ சுண்ணாம்பாலோ உருவங்களாக உருவாக்கப்பட்டு வண்ணம் பூசி இருக்கும், கற்சிலைகளுக்கு வண்ணம் பூசப்படுவதில்லை. பிற இந்து தெய்வங்களைப் போல் கருணை வடிவான முகங்களாக இத்தெய்வங்களின் முகங்கள் அமைக்கப்படுவதில்லை.

ஆண்டுக்கொரு முறையோ அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியிலோ இத்தெய்வங்களுக்கு சிறப்பு விழா 'கொடை விழா' என்கிற பெயரில் நடத்தப்படுகிறது. இவ்விழாவில் ஆடு, பன்றி மற்றும் சேவல்களைப் பலியிட்டு அசைவ உணவு படைக்கும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தெய்வங்களுக்கு மது, சுருட்டு போன்ற போதைப் பொருட்கள் படைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.

தோவாளை கஞ்சிப்பறை சுடலைமாடனுக்கு படைக்கப்பட்டிருக்கும் அசைவ படையல்
இக்கோயில்களின் கொடை விழாக்களின் பொழுது ஒரு சில பக்தர்கள் சாமியாடும் வழக்கம் இருக்கிறது. சாமியாடிகள் அல்லது சாமிகொண்டாடிகள் என்றழைக்கப்படும் அவர்கள் ஒரு சில குடும்பங்களிலிருந்தே பரம்பரையாகத் தேர்வு செய்யப்படும் வழக்கம் இன்னும் இருக்கிறது. இவர்கள் ஆவேசத்துடன் ஆட்டமிட்டுக் குறி சொல்லும் வழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். இந்நிலையில் குறிப்பிட்ட சிலர் தங்களது குறைகளையோ அல்லது பொதுவான குறைகளைத் தெரிவித்து அதைத் தீர்க்க வழி கோருகின்றனர். சாமியாடுபவர்களும் அதற்கு பதில் அளிக்கின்றனர். இப்பதிலை தெய்வமே தெரிவித்ததாக நினைத்து அதன்படி நடக்கும் வழக்கம் கிராமப்பகுதிகளில் இன்னும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கொடைவிழாக்களின் பொழுது தீப்பந்தம் ஏந்தி ஆடுவதும் நடுச்சாம வேளைகளில் சுடுகாட்டிற்கு சென்று வேட்டையாடுவதும் சுடலைமாடசுவாமியின் வழக்கமாகும். கணியான் கூத்து என்றழைக்கப்படும் மகுட கச்சேரி, தப்பட்டையுடன் கூடிய மேளம் ஆகிய இசை அமைப்புகள் சுடலைமாடசுவாமிக்கே உரித்தான இசையமைப்புக்களாகும்.

வாயில் மனித எலும்புகளை கடித்தபடி சுடுகாடு சென்று வேட்டையாடி திரும்பும் சாமியாடிகள்.
இக்கோவில்களில் அசைவ உணவு வகைகள் படைக்கப்படுவதால் புரோகிதர்கள் மூலம் பூசைகள் செய்யப்படுவதில்லை. ஒரு சில கோயில்களில் மட்டும் ஓதுவார்கள் பூசைகள் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் இந்தப் மிருகங்களைப் பலியிடும் நடைமுறைகளில் கலந்து கொள்வது இல்லை. ஆனால் இக்கோயில்களில் அதிகமாக அந்தக் கோயில் வைத்திருக்கும் சமூகத்தைச் சேர்ந்தவர்களே பூசைப் பணிகளைச் செய்து வருகின்றனர்

Dr. S. Anbarasan

27/04/2025

Aruḷ Nilai Sudalai Madan Aalayam -
அருள் நிலை சுடலை மாடன் ஆலயம்.

South Street, Kusavankulam, Unnankulam( P.o), Nanguneri (t.k), Tirunelveli, Tamil Nadu 627108

27/04/2025

சுடலை மாடன் ' தகன நிலத் தலைவர் ' என்பது தென்னிந்தியாவில் குறிப்பாக தூத்துக்குடி , விருதுநகர் , திருநெல்வேலி , தென்காசி , கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் முக்கியமாக வழிபடப்படும் கிராமப்புற திராவிட நாட்டுப்புற மத தெய்வமாகும்

Address

Tirunelveli

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aruḷ Nilai Sudalai Madan Aalayam -அருள் நிலை சுடலை மாடன் ஆலயம். posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share