13/03/2024
ஒரு முறை பூதை படைகளின் தலமை தலைவர் ஸ்ரீ சாஸ்தா அவர்கள் தனது வெள்ளை அசுப வாகனத்தில் குத்து கம்பு, போர்வாள், ஈட்டியுடன் பூத படைகள் சூல ஊர் எல்கையை வலம் வர தயாராகி கொண்டு இருப்பார். அப்போது கஜ முக வாகனம் அருகே நின்று கொண்டு இருக்கும் தளபதி சங்கலி பூதத்தானரை அழைத்து இன்று இங்கு காவல் நில்லுங்கள் நான் சுடலை மற்றும் மாட படைகளை அழைத்து செல்கிறேன் என்று கூறிவிட்டு வெள்ளை அசுப வாகனத்தில் ஏறி புறப்பட்டார். அவருடன் வரும் பூத படைகளை வழி நடத்தும் சுடலைமாடனுக்கு ஒரு சந்தேகம் மற்றும் மனகுழப்பம் தோன்றியது.
நமக்கு ஏன் படை தளபதி பட்டம் கிடைக்கவில்லை? நமது ஐயன் சாஸ்தாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நமது குலத்திற்கு காவலாக தான் இருக்கிறேன் என்று சிந்தித்து கொண்டு இருப்பார். அதை ஞான சித்தி மூலம் உணர்ந்த சாஸ்தா ஏன் சுடலையான் உன் முகத்தில் இத்தனை கலவரம்? என்ன வேண்டும் உனக்கு என கணத்த குரலில் கேள்வி கேட்பார். ஐயனே சிவ குலத்தில் மானிடனாக பிறந்த நான் மானிட ஆசை பாசங்களை அனுபவித்து இறுதியாக என் சீவன் என் பூத உடலில் இருந்து பிரிந்த காரணத்தால் உங்களிடம் வந்து சேர்ந்தேன். எனது பாவ புண்ணிய கணக்கை கொண்டு மாட படைகளில் ஒருவராக இருந்த நான் தற்போது சிவ மகன் பட்டம் கொண்ட சுடலை மாடன் பதவிக்கு உயர்ந்துள்ளேன். இதற்கு 100 வருட காலங்கள் ஆகிவிட்டன. உங்கள் கட்டளைகளை நிறைவேற்றி மாட படைகளை நன்றாக வழி நடத்துகின்றேன். ஆனால் எனது தந்தையின் தம்பி மகனாகிய என்னுடைய இளை சகோதரன் 18 வருட காலங்கள் கூட ஆகவில்லை ஆனால் அவனுக்கு பூத படைகளின் தளபதி என்று சொல்லக்கூடிய சிவனின் உயர்ந்த மகன் பூதத்தனார் பதவியை கொடுத்து விட்டீர்கள் என்று மன வருந்தி கூறினார்.
அதற்கு சாஸ்தா அவர்கள், மாடனே இந்த பதவி தலைமை பொறுப்பு பட்டம் என்பது உனது காக்கும் திறமையை மட்டும் பொறுத்தது அல்ல நீ மானிடனாக வாழும் காலத்தில் உனது பெரியவர்கள், பெற்றோர், மனைவி, மக்கள் மற்றும் பெண்களை எவ்வாறு நடத்தினாய் அதே போன்று உனது தந்தை வழி கர்மவினையை பொருத்து தான் அமையும். உன்னை விட வயதில் மூத்தவர்கள் இன்று பரிவார தெய்வங்களிலும் இல்லாமல் பந்தி சேனைகளிலும் இல்லாமல் பேய், பிசாசு, தூர் ஆன்மாவக தீய மாந்தீரிகர்களின் கைப்பிடியில் சிக்கி பல துயரங்களை அனுபவிக்க காரணம் குலத்தை மதிக்காதது, குலத்தை நல்வழி படுத்தாது, குலத்தின் ஒற்றுமைக்கு எதிராக செயல்பட்டது, துர் மாந்தீரியாகி அப்பாவி ஏழை மக்களை கொடுமைபடுத்தியது, பெற்றோர் மற்றும் மனைவிகளை அடிமைபடுத்தியது, பெண்கள், உடன் பிறந்தவர்கள், நம்பியவர்களுக்கு துரோகம் செய்தது, கோயில் உடைமைகளை அபகரித்தது என்று பல குற்றங்களை ஈவு இறக்கம் இன்றி செய்ததன் வினையே ஆகும். உனது கர்ம வினை குறைவாக இருந்த காரணத்தால் தற்போது நீ சுடலை மாடன் பதவி அந்தஸ்தை பெற்று உள்ளாய். உனக்கு அஷ்டமா சித்தியான பிரபஞ்ச சக்தியை வரமாக அளிக்கும் சக்தி என்னிடம் இருந்தாலும் சிவன் அனுமதி இல்லாமால் உனக்கு அந்த வரத்தை அளிக்க முடியாது. அந்த வரமே மற்றவர்களுக்கு நீ அளிக்கும் வர சக்தி ஆகும். உனது கர்மவினை கணக்குகள் அனைத்தும் மகேஸ்வரன் அறிவார். மேலும் அஷ்டமா சக்திகளான அணிமா, மகிமா, இலகிமா, சித்திகள், கரிமா, ப்ராப்தி, பிரகாம்யம். ஈசத்துவம் போன்றவை கை கூடும் போது நீ மாமிச உணவுகளை தவிர்த்து ஞான சிந்தனையில் இருந்தால் மட்டுமே தேவ ரகசியமான எதிர்காலத்தை உணர முடியும். அதை உணர்ந்த பிறகு தான் உன்னை நம்பி வந்தவர்களுக்கு என்ன வரம் கொடுப்பதால் கால சக்கரம் சரியாக சுழலும் என்பதை உணர்வாய். எனவே இதை உணர்ந்து உனது தலமையாளர்களின் கட்டளைக்கு அடி பணிந்து சிவன் கூற்றுக்கு கட்டுபட்டு உனது கடமையை தொடர்ந்து நிறைவேற்றிவா, வெற்றி உனக்கே என்று கூறி அசுபம் கனைக்க ஊரை காக்க வலம் சென்று விடுவார்.
மனித பிறவி என்பது பிறந்து சராசரியாக 60 முதல் 70 வருட காலங்கள் வரை வாழும் போது நீ செய்த வினையை, கர்ம வினையாக பல ஆயிரம் ஆண்டு காலம் அனுபவிக்க வேண்டும் என்பது தெரியாமல் பல மனிதர்கள் இந்த பிறவி பணம் சம்பாதிக்கவும், ஆடம்பரமாக வாழவும் பல தவறுகளை செய்து வருகின்றனர். இதனை உணர்ந்து நல் புரிதலுடன் குல மற்றும் குடும்ப ஒற்றுமையுடன், தவறு புரியாமல் செய்த தவறுக்கு தண்டனை கிடைக்கும் என்ற மன பயத்துடன், நோய் இல்லாத நல் வாழ்க்கை வாழ உறுதி எடுங்கள். இயற்கை மற்றும் பிரபஞ்ச சக்திகளை உணர முயற்சி செய்யுங்கள். உங்கள் ஆன்மாவை நல் வழிபடுத்துங்கள்.