Tirunelveli Diocese

Tirunelveli Diocese Diocese News

03/07/2026
🙏 52வது ஸ்தோத்திரப் பண்டிகை அழைப்பிதழ் 🙏கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!கர்த்தருடைய பெரிதான கிருபையால் தென்னிந்தியத் திர...
20/06/2026

🙏 52வது ஸ்தோத்திரப் பண்டிகை அழைப்பிதழ் 🙏

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
கர்த்தருடைய பெரிதான கிருபையால் தென்னிந்தியத் திருச்சபை - திருநெல்வேலி திருமண்டலம், நமது கோவிலூற்று சேகரத்தின் 52வது ஸ்தோத்திரப் பண்டிகை வருகிற ஜூலை 31, ஆகஸ்ட் 1, 2 ஆகிய தேதிகளில் கோவிலூற்று பரி. சிமியோன் ஆலய வளாகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற உள்ளது.

📅 தேதிகள்: 2026 ஜூலை 31 (ஆடி 15), ஆகஸ்ட் 1 (ஆடி 16), & ஆகஸ்ட் 2 (ஆடி 17)
📍 இடம்: பரி. சிமியோன் ஆலய வளாகம், கோவிலூற்று

✨ பண்டிகை கால சிறப்பு நிகழ்வுகள்:

ஜூலை 31 (வெள்ளி): மாலை 5.00 மணிக்கு பவனி & கொடியேற்றம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மாலை 6.00 மணிக்கு ஆயத்த ஆராதனையும், மாலை 6.30 மணிக்கு ஐக்கிய விருந்தும் நடைபெறும். இரவு 7.00 மணிக்கு சபையார் மற்றும் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஆகஸ்ட் 1 (சனி): பகல் 2.00 மணிக்கு பிரதானப்பண்டிகை ஆராதனை நடைபெறும். இறை செய்தி மற்றும் ஆசீர்வாதத்தை மகாகனம் பேராயர் அவர்கள், The Rt.Rev.Dr. ARGST. பர்னபாஸ் அவர்கள் வழங்குவார்கள். மாலை 4.00 மணிக்கு பொருட்கள் ஏலமும், அதனைத் தொடர்ந்து சேகர சபையார் கீத ஆராதனை மற்றும் பஜனை பிரசங்கமும் நடைபெறும்.

ஆகஸ்ட் 2 (ஞாயிறு): காலை 9.00 மணிக்கு பரிசுத்த நற்கருணை ஆராதனை நடைபெறும். பகல் 2.00 மணிக்கு நடைபெறும் வருடாந்திரக்கூட்டத்தில் CSI திருநெல்வேலி திருமண்டல முன்னாள் லே செயலாளர் திருமிகு. Dr. D.S. ஜெயசிங் அவர்கள் செய்தி வழங்குவார்கள். மாலை 4.30 மணிக்கு பெண்கள் சிறப்பு கூட்டமும் நடைபெறும்.

மேலும் வேதபாடத்தேர்வு விபரங்கள் மற்றும் பண்டிகை கால முழு நிகழ்ச்சி நிரலை அறிய இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழ்களைப் பார்க்கவும்:

சேகர மக்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்....
உங்கள் யாவரையும் அன்புடன் வரவேற்கும்... சேகர சபை ஊழியர்கள்.

கிறிஸ்துவின் இறைப்பணியில் உங்களுக்காக ஜெபிக்கும்...
Rev. Y. ஜீவா தாமஸ், சேகரத்தலைவர், கோவிலூற்று சேகரம்.

#ஸ்தோத்திரப்பண்டிகை

10/05/2026

Address

Punitha Vathiyar Street, Palayamkottai
Tirunelveli
627002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tirunelveli Diocese posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share