SriMan Narayanasamy Dharmapathi, Palayanchettikulam

SriMan  Narayanasamy Dharmapathi, Palayanchettikulam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SriMan Narayanasamy Dharmapathi, Palayanchettikulam, Hindu temple, Sivalaperi Road, Palayamchettikukam, Tirunelveli.

07/03/2022
07/03/2022
25/02/2022

அகிலத்திரட்டு அம்மானை மூலமும் உரையும்

*****காப்பு*****
1) ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசுபண்ணிக்
காரணம்போல் செய்தகதை கட்டுரைக்கப் பூரணமாய்
ஆராய்ந்து பாட அடியேன் சொல் தமிழ்க்குதவி
நாராயணர் பாதம் நாவினில்

2) பாண்டவர் தமக்காய்த் தோன்றிப் பகைதனை முடித்து மாயோன்
வீன்றிய கலியன் வந்த விசனத்தால் கயிலை ஏகிச்
சான்றவர் தமக்காய் இந்தத் தரணியில் வந்த ஞாயம்
ஆண்டவர் அருளிச் செய்ய அம்மானை எழுதலுற்றேன்

3) சிவமே சிவமே சிவமணியே தெய்வ முதலே சிதம்பரமே
தவமே தவமே தவக்கொழுந்தே தாண்டவச் சங்காரதமியே எங்களுட
பவமே பவமே பலநாளும் செய்த பவம் அறுத்து உன்
அகமே வைத்து எங்களை ஆட்கொள்வாய்

சிவசிவ சிவசிவ அரகரா அரகரா

4) அலையிலே துயில் ஆதிவராகவர்
ஆயிரத்தெட்டு ஆண்டினில் ஓர்பிள்ளை
சிலையிலே பொன்மகர வயிற்றினுள்
செல்லப்பெற்றுத் திருச்சம்பதிதனில்
முலையிலே பொன்மகரப்பாலை உமிழ்ந்துபின்
உற்றதெச்சணம் மீதில் இருந்துதான்
உலகில் சோதனை பார்த்தவர் வைந்தரின்
உவமை சொல்ல உகதர்மம் ஆகுமே

5) திருமொழி சீதையாட்குச் சிவதலம் புகழ எங்கும்
ஒருபிள்ளை உருவாய்த் தோன்றி இகபரிசோதனைகள் பார்த்துத்
திருமுடி சூடித் தர்ம சீமையில் செங்கோல் ஏந்தி
ஒருமொழி அதற்குள் ஆண்ட உவமையை உரைக்கலுற்றார்

*****இந்நூல் வாசிப்பு நிறைவு பெற்றது*****
அய்யா உண்டு

#அகிலத்திரட்டு_அம்மானை_மூலமும்_உரையும்

24/02/2022

அகிலத்திரட்டு அம்மானை மூலமும் உரையும் (பாகம் 2 வரி: 7454-7457)

*****நூல் பயன்*****
திண்ணம் இந்த அகிலத்திரட்டு அம்மானை தன்னைத்
திடமுடனே மனம் விருப்பமாகக் கேட்டோர்
எண்ணம் இந்த வினைதீர்ந்து ஞானமான
இறையவரின் பாதாரத்து இயல்பு பெற்று
வண்ணம் இந்தத் தர்மபதி வாழ்வும் பெற்று
மக்களுடன் கிளை பெருகி மகிழ்ச்சியாக
நிண்ணம் இந்தப் பார்மீதில் சாகாவண்ணம்
நீடூழி காலம் இருந்து ஆள்வார் திண்ணம்

---------
உரை
---------
இந்த அகிலத்திரட்டு அம்மானை நூலை மிகுந்த மன உறுதியுடனும், விருப்பத்துடனும், கேட்டவர்கள் தீய எண்ணமாகிய வினைகள் எல்லாம் தீர்ந்து ஞானமயமான இறையவரின் பாதத்தின் நிறைவு மயமாகி, நிலை பெற்று, செழிப்புப் பொருந்திய இந்தப் பழைமையான உலகில் நிலைந்த வாழ்வும் பெற்று, சிறந்த மக்களுடனும் சுற்றத்தாருடனும் பெருகி, மகிழ்ச்சியுடன் என்றென்றும் இவ்வுலகில் சாகாநிலை பெற்று எக்காலத்திலும் வாழ்வர். இது சத்தியம்.
---------------------
அய்யா உண்டு
---------------------
#அகிலத்திரட்டு_அம்மானை_மூலமும்_உரையும்

23/02/2022

அகிலத்திரட்டு அம்மானை மூலமும் உரையும் (பாகம் 2 வரி: 7450-7453)

*****ஆசிரியர் வாழ்த்து*****
வாறான கதை வகுத்த நாதன் வாழ
வகுத்து எழுதிப் படித்த குல மனுவோர் வாழ
வீறான தெய்வச் சத்தி மடவார் வாழ
வீரமுக இலட்சுமியும் இசைந்து வாழ
நாராயணர் அருளால் படித்தோர் கேட்டோர்
நல்ல உரை மிகத்தெளிந்து நவின்று கற்றோர்
ஆறாறும் பெற்று அவர்கள் அகமே கூர்ந்து
அன்று ஊழி காலம் இருந்து ஆள்வார் திண்ணம்

---------
உரை
---------
இப்படித் தெளிவான வழியில் கதை வகுத்த வைகுண்டநாதன் வாழட்டும். இதை ஏட்டிலிருந்து எடுத்து எழுதிப் படித்தவரும் அந்தக் குல மக்களும் வாழட்டும். சக்தி பொருந்திய தெய்வக்கன்னியர் வாழட்டும், வீரத் தன்மையான முகம் பொருந்திய இலட்சுமிதேவி மகிழ்ந்து வாழட்டும். நாராயணருடைய அருளால் இந்நூலைப் படித்தவர்களும், கேட்டவர்களும், இந்நூலுக்குரிய உரையை மிகவும் தெளிவாக எடுத்து எழுதியவர்களும் சொன்னவர்களும், அதைக் கற்றவர்களும் பதினாறு பேறுகளையும் பெற்று உள்ளத்தில் மகிழ்வும் பெற்று, எக்காலமும் என்றென்றும் வாழ்ந்து இவ்வுலகத்தை ஆட்சி புரிவார்கள் என்பது நிச்சயம். இது சத்தியம்.
---------------------
அய்யா உண்டு
---------------------
#அகிலத்திரட்டு_அம்மானை_மூலமும்_உரையும்

22/02/2022

அகிலத்திரட்டு அம்மானை மூலமும் உரையும் (பாகம் 2 வரி: 7446-7449)

*****நூல் நிறைவு கூறல்*****
மாதவளுக்குத் தாம் உரைத்த காண்டம் தன்னை
வையகத்து மனுவோர்கள் அறிய மாயன்
தாதணியும் தாமரை ஊர்ப் பதியில் மேவித்
தழைத்து இருக்கும் சான்றோரில் தர்மவாளன்
நாதன் அருள் மறவாத இராமகிருஷ்ண பெருமாள்
நாடன் அகம் மகிழ்ந்து பெற நலமாய் வந்த
சீதன் அரிகோபாலன் மனதுள் ஓதிச் செப்பு எனவே
நாதன் உரை தொகுத்தவாறே

---------
உரை
---------
இலட்சுமிதேவிக்கு நாராயனார் உரைத்தவையே இந்த நூல் ஆகும்.
இந்த நூலை இவ்வுலக மக்கள் அறியும்படி செய்ய மாயன் வைகுண்ட நாதனாக தேன் நிறைந்த பூக்களையுடைய தாமரையூர் பதிக்குச் சென்றார்.
அங்குச் சகலச் செழிப்புகளும் தழைத்து இருக்கும் சான்றோர் இனத்தில், தருமத்தையும் இறைவன் அருளையும் சிறிதளவும் மறக்காத இராமகிருஷ்ண பெருமாள் நாடார் வாழ்ந்து வந்தார்.
அவருள்ளம் மகிழ்வுறும்படி நல்ல உயர்வோடு வந்து பிறந்தவன் ஒழுக்கமுள்ள அரிகோபாலன் ஆவார். அந்த அரிகோபாலன் சீடரின் மனத்தில் புரியும்படி வைகுண்டநாதன் இக்கதையைக் தொகுத்துக் கூறினார்.
இவ்வாறு வைகுண்டநாதன் தொகுத்து உரைக்க உரைக்க அரிகோபாலன் சீடரால் இந்நூல் எழுதப்பட்டது. இவற்றை "நாம் தொகுத்தவாறு மக்களுக்கு நீ விளக்கமாக கூறுவாயாக" என்று வைகுண்டநாதன் உத்தரவிட்டார்.
---------------------
அய்யா உண்டு
---------------------
#அகிலத்திரட்டு_அம்மானை_மூலமும்_உரையும்

21/02/2022

அகிலத்திரட்டு அம்மானை மூலமும் உரையும் (பாகம் 2 வரி: 7438-7441)

*****இலட்சுமிதேவி சந்தேகம் தெளிதல்*****
மாயன் உரை மனம் அதிலே மாது கேட்டு
மகிழ்ந்து முகம்மலர்ந்து வாய்புதைத்துச் சொல்வாள்
தீயன் எனும் மாகொடிய அரக்கர் சேர்க்கை
திரை அறுக்க நீர் துணிந்து சென்ற நாளே
ஞாயநெறி காணாத அடிமை போல
நடுங்கி மனது உடைந்து வெகுநாளே தேடி
ஆயர் உமை நானடியாள் இன்று கண்டே
அகம் மகிழ்ந்தேன் எனது துயர் இழந்திட்டேனே

---------
உரை
---------
இப்படியாக மாயன் உரைத்ததைக் கேட்டு இலட்சுமிதேவி மனதில் தெளிவடைந்து, மகிழ்ந்து, முகம் மலர்ந்து, மறுமொழி பேசாவண்ணம் அளமதியாய் நின்று மீண்டும் திருமாலிடம் பேசலானாள்.
“சுவாமி, தீயவன் என்று கூறக் கூடிய கொடிய அரக்கர்களுடைய தோற்றங்களை முழுவதுமாக அறுத்து எறிவதற்காக நீர் மனம் துணிந்து சென்ற நாள்முதலாக, நான் நியாய நெறிகளை அறியாத அடிமையைப் போன்று, மனம் நடுங்கி, கலங்கி எல்லாரையும் வழி நடத்தும் ஆயனாகிய உம்மை வெகு நாள்களாகத் தேடினேன். இவ்வாறு தேடி அடியாளாகிய நான் காவலிருந்து, இன்று உம்மைக் கண்டு கொண்டேன்; என் மனம் மகிழ்ந்தேன்; என்னுடைய துன்பம் எல்லாம் நீங்கி மகிழ்வடைந்து விட்டேன்" என்றாள்.
---------------------
அய்யா உண்டு
---------------------
#அகிலத்திரட்டு_அம்மானை_மூலமும்_உரையும்

21/02/2022

அகிலத்திரட்டு அம்மானை மூலமும் உரையும் (பாகம் 2 வரி: 7442-7445)

*****நாராயணர் வாழ்த்து*****
இழந்திட்டேன் என்ற மடமயிலே மானே
என்று ஆதி இருகையால் மாதை ஆவி
புகழ்ந்து இட்டமான மணிமேடை புக்கி
பூவையரை இடம் இருத்தி புகழ்ந்து வாழ
மகிழ்ந்து இட்டமான முறை நீதி வாழ
மறைவாழ இறையவரும் மகிழ்ந்து வாழ
உகந்து இட்டமான முறை நூல்போல் வாழ
உம்பர் சிவமாது உலக மனுவோர் வாழ

---------
உரை
---------
"என் துன்பம் எல்லாம் நீங்கி விட்டதென்று கூறிய பெண்மயிலே மானே" என்று கூறி, ஆதியாகிய திருமால் இலட்சுமிதேவியைத் தமது இருகைகளாலும் அணைத்து, புகழ்ந்து, தங்களுக்கு விருப்பமான மணி மேடையினுள் சென்று, இடது பக்கத்தில் இருத்தி, மீண்டும் புகழ்ந்து, அவளை வாழ வாழ்த்தினார். தமக்கு விருப்பமான முறையிலுள்ள சிறந்த நீதியினை வாழ வாழ்த்தினார். வேதங்கள் வாழ வாழ்த்தினார். இறையவரும் மகிழ்ந்து வாழ வாழ்த்தினார். மகிழ்ச்சி பொருந்திய விருப்பமான முறையில் உள்ள இந்நூலின் உபதேச முறைகள் போல் வாழும் எல்லா மக்களையும் வாழ வாழ்த்தினார். வானலோகத் தேவர்களும் சிவமும் இப்பெரிய உலக மனிதர்களும் வாழ வாழ்ந்தினார்.
---------------------
அய்யா உண்டு
---------------------
#அகிலத்திரட்டு_அம்மானை_மூலமும்_உரையும்

Address

Sivalaperi Road, Palayamchettikukam
Tirunelveli
627353

Alerts

Be the first to know and let us send you an email when SriMan Narayanasamy Dharmapathi, Palayanchettikulam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category