கிறிஸ்தவ பொது மகமை சங்கம்,பங்களாச் சுரண்டை

  • Home
  • India
  • Tirunelveli
  • கிறிஸ்தவ பொது மகமை சங்கம்,பங்களாச் சுரண்டை

கிறிஸ்தவ பொது மகமை சங்கம்,பங்களாச் சுரண்டை Bungalow Surandai Sabai was formed in 1844 and the church "Holy Trinity Church" was built on the same year 1844 by Rev. Baren Bruck is a missonary.

Bungalow Surandai Sabai was formed in 1844 and the church "Holy Trinity Church" was built on the same year 1844 by Rev Baren Bruck. is a missionary, who came all the way to India and helped all poor people especially the people around Bungalow Surandai and spread the word of God. As a result of his dedication, the Church was built as well as the school "Baren Bruck Hig.sec.school on 1846 to educate all the children. As a memory of Rev. Baren Bruck, Bungalow Surandai Pastorate functioning Baren Bruck mission Hospital, Baren bruck Community College in Nursing and Computer Applications."Holy Trinity Church" in Bungalow Surandai is one of the oldest church in Tirunelveli Diocese,
Which is having 14 congregations. Pastorate Thanks giving Festival is one of the famous festivals, which is the time of fellowship for all pastorate members. The church is having Mass on every sunday and communion on first sunday of the month. The other prayer meetings happening are : Early Morning prayer, Evening prayer on daily basis and other festival time special prayer meetings. In the month of May, all the children in the pastorate will have V.B.S classes. We would like to take this opportunity to thank Rev. Baren Bruck for this wonderful church and school. helped us to grow high in our life and generation by generation.

130 வது ஸ்தோத்திர பண்டிகையில் சிறந்த  மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சேகரத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.
13/07/2026

130 வது ஸ்தோத்திர பண்டிகையில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சேகரத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.

பங்களா சுரண்டையில் 130-வது ஸ்தோத்திரப் பண்டிகை சிறப்பாக நடைபெற்றதுதென்னிந்திய திருச்சபை – திருநெல்வேலி திருமண்டலத்திற்கு...
04/07/2026

பங்களா சுரண்டையில் 130-வது ஸ்தோத்திரப் பண்டிகை சிறப்பாக நடைபெற்றது

தென்னிந்திய திருச்சபை – திருநெல்வேலி திருமண்டலத்திற்குட்பட்ட பாரம்பரியமிக்க பங்களா சுரண்டை சேகரத்தின் 130-வது ஸ்தோத்திரப் பண்டிகை இன்று (ஜூலை 4) இறைபக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் கன்னியாகுமரி திருமண்டல முன்னாள் பேராயர் அருள்திரு. Rt. Rev. Dr. A. R. செல்லையா அவர்கள் தலைமை வகித்து சிறப்பு ஆராதனையை நடத்தி, தேவசெய்தி வழங்கினார்.

ஸ்தோத்திரப் பண்டிகையையொட்டி, திருச்சபை மக்கள் தாங்கள் கிறிஸ்துவுக்குச் செய்த பொருத்தனைகள், முதற்பலன்கள், விளைச்சலின் முதல் பலன்கள், வருமானக் காணிக்கைகள், நன்றிக்காணிக்கைகள் மற்றும் பல்வேறு பொருட்காட்சிகளை தேவசன்னதியில் படைத்தனர். அவை அனைத்தையும் பேராயர் அவர்கள் ஜெபித்து ஆசீர்வதித்து, தேவன் அளித்துள்ள ஆசீர்வாதங்களுக்கு என்றும் நன்றியுள்ளவர்களாக வாழ வேண்டும் என்று தனது செய்தியில் வலியுறுத்தினார்.

இந்த 130-வது ஸ்தோத்திரப் பண்டிகையில் வெளிநாடுகளிலிருந்து வந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டு, திருச்சபை மக்களுடன் இணைந்து இறைவனைத் துதித்து, விழாவை மேலும் சிறப்பித்தனர். அவர்களின் வருகை விழாவிற்கு தனிச்சிறப்பையும் உற்சாகத்தையும் அளித்தது.

நூற்றாண்டுகளைத் தாண்டி இறைசாட்சியாக விளங்கும் பங்களா சுரண்டை சேகரத்தின் இப்பாரம்பரிய ஸ்தோத்திரப் பண்டிகை, இறைவனின் கிருபைக்கும் அறுவடை ஆசீர்வாதங்களுக்கும் நன்றியை வெளிப்படுத்தும் மறக்கமுடியாத ஆன்மிக நிகழ்வாக அமைந்தது.

04/07/2026
04/07/2026
இன்றைய திருச்சபைகள் கர்த்தர் கொடுத்த எண்ணற்ற ஆசீர்வாதங்களை அனுபவித்து வருகின்றன.கல்வி வளர்ச்சி, மருத்துவ முன்னேற்றம், வே...
28/05/2026

இன்றைய திருச்சபைகள் கர்த்தர் கொடுத்த எண்ணற்ற ஆசீர்வாதங்களை அனுபவித்து வருகின்றன.
கல்வி வளர்ச்சி, மருத்துவ முன்னேற்றம், வேலை வாய்ப்புகள், உயர்ந்த வாழ்க்கைத் தரம், சமூக மரியாதை, பொருளாதார முன்னேற்றம் — இவை அனைத்தும் கர்த்தரின் கிருபையால் கிடைத்தவைகள்.

ஆனால் இன்று பல இடங்களில் ஆசீர்வாதங்களை பெற்ற மக்கள், ஆசீர்வதித்த கர்த்தரையே மறந்து வாழ தொடங்கியுள்ளனர்.
ஜெபம் குறைந்துவிட்டது. பரிசுத்த வாழ்க்கை மங்கிவிட்டது. சபை ஆராதனை ஒரு பழக்கமாக மாறிவிட்டது. தேவனின் சித்தத்தை விட உலகத்தின் விருப்பங்கள் முக்கியமாய்ப் போய்விட்டன.

வேதாகமம் எச்சரிக்கிறது:
“உன் தேவனாகிய கர்த்தரை மறந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு” (உபாகமம் 8:11)

கர்த்தர் கொடுத்த ஆசீர்வாதங்கள் நம்மை தேவனிடமிருந்து விலக்க அல்ல; அவரிடத்தில் இன்னும் நெருக்கமாக நடத்தவே கொடுக்கப்பட்டவை.

இது விழித்தெழ வேண்டிய நேரம்.
ஆசீர்வாதங்களை எண்ணுவதற்கு முன், ஆசீர்வதித்த ஆண்டவரை நினைவுகூருவோம்.
திரும்பவும் ஜெபத்திற்கும், பரிசுத்தத்திற்கும், உண்மையான அர்ப்பணிப்பிற்கும் திரும்புவோம்.

“கர்த்தரை விட்டுவிட்ட சபை பலமாகத் தோன்றலாம்;
ஆனால் கர்த்தருடன் இருக்கும் சபைதான் உயிருள்ள சபை.”

Address

Bungalow Suandai
Tirunelveli
627859

Telephone

9176780001

Website

Alerts

Be the first to know and let us send you an email when கிறிஸ்தவ பொது மகமை சங்கம்,பங்களாச் சுரண்டை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to கிறிஸ்தவ பொது மகமை சங்கம்,பங்களாச் சுரண்டை:

Shortcuts

Share