19/07/2026
#திருநெல்வேலி_ஆவணி_மூலம்_திருவிழா: பராபவ ஆண்டு - 2026.
✨"திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி" ஶ்ரீ காந்திமதி அம்மை உடனுறை சுவாமி ஶ்ரீ நெல்லையப்பர் திருக்கோவில் ஆவணி மூலம் திருவிழா வரும் 13/08/2026 வியாழக்கிழமை அன்று காலை சுவாமி ஶ்ரீ நெல்லையப்பர் சன்னதியில் கொடியேற்றத்துடன் துவங்கி 11 நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது.
💥முதலாம் திருநாள் (13/08/2026):
🔯காலை: ஆவணி மூலம் திருவிழா கொடியேற்றம்.
🔯இரவு: சுவாமி ஶ்ரீ சந்திரசேகரர் - ஶ்ரீ பவானி அம்மை சப்பரத்தில் எழுந்தருளல்.
💥நான்காம் திருநாள் (16/08/2026):
🔯பகல்: சுவாமி ஶ்ரீ நெல்லையப்பர், ஶ்ரீ காந்திமதி அம்மை மண்டகப்படியில் சிறப்பு அபிஷேகங்கள் கண்டருளி அலங்கார தீபாராதனை.
🔯இரவு: சுவாமி ஶ்ரீ நெல்லையப்பர், ஶ்ரீ காந்திமதி அம்மை வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருளல்.
💥ஏழாம் திருநாள் (19/08/2026):
🔯இரவு:
🔵 ஶ்ரீ சந்திரசேகரர் - ஶ்ரீ பவானி அம்மை சப்பரத்தில் எழுந்தருளல்.
🔴 ஶ்ரீ செளந்தரசபாபதி சிவப்பு சாத்தி எழுந்தருளல்.
⚪பின்னிரவு: ஶ்ரீ செளந்தரசபாபதி வெள்ளை சாத்தி எழுந்தருளல்.
💥எட்டாம் திருநாள் (20/08/2026):
🟢காலை: ஶ்ரீ செளந்தரசபாபதி பச்சை சாத்தி எழுந்தருளல்.
🔯இரவு: ஶ்ரீ சந்திரசேகரர் - ஶ்ரீ பவானி அம்மை சப்பரத்தில் எழுந்தருளல்.
💥ஒன்பதாம் திருநாள் (21/08/2026):
🔯காலை: ஶ்ரீ சந்திரசேகரர் - ஶ்ரீ பவானி அம்மை சட்டத் தேரில் எழுந்தருளல்.
🔯பின்னிரவு: கருவூர் சித்தர் வீதி உலாவாக மானூர் புறப்பட்டு செல்லுதல்.
💥பத்தாம் திருநாள் (22/08/2026):
🔯பகல்: பொற்றாமரை திருக்குளத்தில் தீர்த்தவாரி.
🔯பின்னிரவு: சுவாமி ஶ்ரீ சந்திரசேகரர் - ஶ்ரீ பவானி அம்மை பல்லக்கிலும், அகத்திய முனிவர், தாமிரபரணி அம்மை, பாண்டிய மகாராஜா, குங்குலியக்கலிய நாயனார் ஆகியோர் சப்பரத்திலும் வீதி உலாவாக மானூர் புறப்பட்டு செல்லுதல்.
💥பதினொன்றாம் திருநாள் (23/08/2026):
🔯காலை:
"ஆவணி மூலத் திருக்காட்சி"
🔵காலை 7.00 மணிக்கு மேல் மானூரில் சுவாமி ஶ்ரீ சந்திரசேகரர் - ஶ்ரீ பவானி அம்மை, கருவூர் சித்தருக்கு காட்சியளித்தருளல்.
🔵காலை 9.00 மணிக்கு மேல் ஆச்சாரிய சபையாக விளங்கும் மானூர் அம்பலவாண சுவாமி கோவிலில் சுவாமி ஶ்ரீ சந்திரசேகரர் - ஶ்ரீ பவானி அம்மை எழுந்தருளி சிறப்பு அபிஷேகங்கள் கண்டருளி அலங்கார தீபாராதனை.
🔵மதியம் 1.00 மணிக்கு மேல் சுவாமி ஶ்ரீ சந்திரசேகரர், ஶ்ரீ பவானி அம்மை பல்லக்கிலும் மற்றும் பரிவார மூர்த்திகள் சப்பரத்திலும் மானூரில் இருந்து திருநெல்வேலி புறப்பட்டு செல்லுதல்.
🔯மாலை:
🔵திருநெல்வேலி எழுந்தருளும் வழியில் இராமையன்பட்டி அம்பலம் பரிவேட்டை மண்டபத்தில் சுவாமி ஶ்ரீ சந்திரசேகரர், ஶ்ரீ பவானி அம்மை எழுந்தருள, சுவாமி ஶ்ரீ சந்திரசேகரர் வெள்ளி குதிரை வாகனத்திற்கு மாற்றமாகி சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை கண்டருளல்.
🔵தொடர்ந்து சுவாமி ஶ்ரீ சந்திரசேகரர் - வெள்ளி குதிரை வாகனத்திலும், ஶ்ரீ பவானி அம்மை பல்லக்கிலும், கருவூர் சித்தர் மற்றும் பரிவார மூர்த்திகள் சப்பரத்திலும் திருநெல்வேலி புறப்பட்டு செல்லுதல்.
-திருநெல்வேலிக்காரன்.