Srirangam Temple

Srirangam Temple Srirangam is the first, foremost and the most important of the 108 main Vishnu temples.
(228)

20/04/2023

ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் விருப்பன் திருநாளின் ஐந்தாம் நாளான 15.04.2023 அன்று காலை ஸ்ரீநம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார். சேஷ வாகனத்தில் வாகன மண்டபத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீநம்பெருமாள் புறப்பட்டு அனைவருக்கும் திருக் காட்சியளித்து சித்திரை வீதிகள் வழி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து சேவை சாதித்தார். பின்பு வாகன மண்டபத்தை அடைந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பட்டுநூல்காரர் ஆஸ்தான மண்டபத்தை அடைந்தார். இதில் ஏராளமான பக்தர்கள், பட்டர்கள், நிர்வாகிகள் மற்றும் கைங்கர்யபரர்கள் கலந்துக்கொண்டனர்.
#ஸ்ரீரங்கம் #ஸ்ரீரங்கநாதர்கோயில் #விருப்பன்திருநாள்

At the Srirangam Arulmigu Sri Ranganathaswamy Temple, on April 15, 2023 - the fifth day of the Viruppan Thirunaal, our gracious Lord Sri NamPerumal reached the Vaagana Mandapam from the Kannadi Arai in a decorated pallakku in the morning. Resplendent Sri NamPerumal, gorgeously attired in festive silks was taken in a holy procession atop the Sesha Vaaganam through the Chitthirai Veedhi and back to the Vaagana Mandapam.Our beloved Lord then showered precious blessings on the Vazhinadai Ubhayangal before reaching the Pattunoolkaarar Aasthana Mandapam. The Bhattars, kaingaryaparargal, temple administrators and plenty of ardent devotees attended the special ceremonies.

20/04/2023

ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் விருப்பன் திருநாளின் நான்காம் நாளான 14.04.2023 அன்று மாலை திருச்சி ஆரிய வைஸ்யாள் ஆஸ்தான மண்டபத்திலிருந்து ஸ்ரீநம்பெருமாள் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்து சித்திரை வீதிகள் வழி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வாகன மண்டபத்தை அடைந்தார். அனைவர்க்கும் சேவை சாதித்த பின்னர் வாகன மண்டபத்திலிருந்து புறப்பட்டு மீண்டும் கண்ணாடி அறையைச் சேர்ந்தார். இதில் ஏராளமான பக்தர்கள், பட்டர்கள், நிர்வாகிகள் மற்றும் கைங்கர்யபரர்கள் கலந்துக்கொண்டனர்.
#ஸ்ரீரங்கம் #ஸ்ரீரங்கநாதர்கோயில் #விருப்பன்திருநாள

Divine Lord Sri NamPerumal, dazzling in gorgeous attire, showered abundant blessings from atop the regal Garuda Vaaganam during the procession which began from the Aariya Vaisyal Aasthana Mandapam on the fourth day (Apr 14) evening of the Viruppan Thirunaal at Srirangam Arulmigu Sri Ranganathaswamy Temple. The Lord blessed the ocean of devotees who had gathered along the Chitthirai Veedhi and returned to the Vaagana Mandapam. From there our beloved Lord reached the Kannadi Arai later in the evening.

19/04/2023

ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் விருப்பன் திருநாளின் 14.04.2023 அன்று நான்காம் திருநாளுக்காக ஸ்ரீநம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார். சந்திர பிரபை என்னும் இரட்டை பிரபை வாகனத்தில் அங்கிருந்து புறப்பட்டு பட்டாடை அலங்காரத்தில் அனைவருக்கும் காட்சியளித்து சித்திரை வீதிகள் வழி வலம் வந்து மீண்டும் வாகன மண்டபத்தை அடைந்தார். பின்னர் வாகன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி திருச்சி ஆரிய வைஸ்யாள் ஆஸ்தான மண்டபத்தை அடைந்தார். இதில் ஏராளமான பக்தர்கள், பட்டர்கள், நிர்வாகிகள் மற்றும் கைங்கர்யபரர்கள் கலந்துக்கொண்டனர்.
#ஸ்ரீரங்கம் #ஸ்ரீரங்கநாதர்கோயில் #விருப்பன்திருநாள்

On April 14th, the fourth day of Viruppan Thirunaal at the Srirangam Arulmigu Sri Ranganathaswamy Temple, Lord Sri NamPerumal reached the Vaagana Mandapam from the Kannadi Arai in an aesthetically decorated pallakku the morning. Our beloved Deity, festively attired in rich silks and ornaments and graceful atop the beautifully decorated Chandra Prabhai (Irattai Prabhai) Vaaganam, was carried in a divine procession through the Chitthirai Veedhi and back to the Vaagana Mandapam. From the Vaagana Mandapam, the celestial Deity blessed the Vazhinadai Ubayangal and reached the Trichy Aariya Vaisyal Aasthana Mandapam. Plenty of devotees, Bhattars, temple executives and kaingaryaparargal participated in the festivities.

19/04/2023

ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் விருப்பன் திருநாளின் மூன்றாம் நாளான 13.04.2023 அன்று மாலை ஸ்ரீநம்பெருமாள் சிறப்பு பட்டாடை அலங்காரத்தில் சௌகார் ஆஸ்தான மண்டபத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட யாளி வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகள் வழி வலம் வந்து பக்தர்கள் அனைவருக்கும் அருள்பாலித்து வாகன மண்டபத்தை அடைந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கண்ணாடி அறையைச் சேர்ந்தார். ஏராளமான பக்தர்கள், பட்டர்கள், நிர்வாகிகள் மற்றும் கைங்கர்யபரர்கள் இதில் கலந்துக்கொண்டனர். #ஸ்ரீரங்கம் #ஸ்ரீரங்கநாதர்கோயில் #விருப்பன்திருநாள்

Our revered Lord Sri NamPerumal reached the Sowcar Aasthana Mandapam on Apr 13th morning as part of the third day festivities of Viruppan Thirunaal at Srirangam Arulmigu Sri Ranganathaswamy Temple. The resplendent Deity was carried in a divine procession from the Sowcar Aasthana Mandapam atop the stunningly decorated Yaali Vaaganam, through the Chitthirai Veedhi to the Vaagana Mandapam in the evening. After blessing the celebrations and the gathered devotees, our gracious Lord returned to the Kannadi Arai later. The Bhattars, kaingaryaparargal and temple executives joined the huge throng of devotees in celebrating this joyous event.

17/04/2023

ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் விருப்பன் திருநாளின் மூன்றாம் நாளான 13.04.2023 அன்று காலை ஸ்ரீநம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார். சிம்ம வாகனத்தில் எழுந்தருளும் எம்பெருமானை தரிசித்தால் எதிர்ப்புகள் நீங்கி தடைகள் அகன்று எடுத்த காரியம் சித்தி அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகள் வழி வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்து வாகன மண்டபத்தை அடைந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஆழ்வான் திருச்சுற்று வழியாக வலம் வந்து சௌகார் ஆஸ்தான மண்டபத்தை அடைந்தார். ஏராளமான பக்தர்கள், பட்டர்கள், நிர்வாகிகள் மற்றும் கைங்கர்யபரர்கள் இதில் கலந்துக்கொண்டனர்.
#ஸ்ரீரங்கம் #ஸ்ரீரங்கநாதர்கோயில் #விருப்பன்திருநாள்

On April 13, 2023 - the third day of the Viruppan Thirunaal at Srirangam Arulmigu Sri Ranganathaswamy Temple, Lord Sri NamPerumal reached the Vaagana Mandapam in a beautifully decorated pallakku from the Kannadi Arai in the morning. It is believed that receiving blessings from divine Sri NamPerumal’s regal presence on the Simma Vaaganam can remove the difficulties and hurdles caused by our enemies and can bring us victory in all our endeavours. On this auspicious day, our beloved Lord, festively attired in fabulous silks and jewellery, and atop the grand Simma Vaaganam, was carried on a holy procession from the Vaagana Mandapam, through the Chitthirai Veedhi and back to the Vaagana Mandapam. After showering precious blessings on everyone, our beloved Lord reached the Sowcar Aasthana Mandapam through the Aazhwaan Thiruchuttru. Hordes of devotees, Bhattars, temple officials and kaingaryaparargal joyfully participated in the holy ceremonies.

17/04/2023

ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் விருப்பன் திருநாளின் 2ஆம் நாளான 12.04.2023 அன்று காலை ஸ்ரீநம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து தோளுக்கினியான் பல்லக்கில் பட்டாடை அலங்காரத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகள் வழி வலம் வந்து வழிநடை உபயங்கள் கண்டருளினார். பின்னர் கொடியாலம் சேஷாத்திரி ஐயங்கார் ஆஸ்தான மண்டபத்தை அடைந்து அனைவருக்கும் காட்சியளித்தார். அன்று மாலை அம்மண்டபத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட கற்பக விருக்ஷ வாகனத்தில் சிறப்பு பட்டாடை அலங்காரத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகள் வழி வலம் வந்து பக்தர்கள் அனைவருக்கும் அருள்பாலித்து வாகன மண்டபத்தை அடைந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கண்ணாடி அறையைச் சேர்ந்தார். ஏராளமான பக்தர்கள், பட்டர்கள், நிர்வாகிகள் மற்றும் கைங்கர்யபரர்கள் இதில் கலந்துக்கொண்டனர். #ஸ்ரீரங்கம் #ஸ்ரீரங்கநாதர்கோயில் #விருப்பன்திருநாள்

On April 12th, the second day of the Viruppan Thirunaal (Chitthirai Ther) at Srirangam Arulmigu Sri Ranganathaswamy Temple, gorgeously attired Sri NamPerumal was taken in a procession from the Kannadi Arai through the Chitthirai Veedhi in the Tholukkiniyan in the morning, when the Lord blessed the vazhinadai ubayangal. The benevolent Deity then reached the Kodiyalam Seshadri Iyengar Aasthana Mandapam and showered gracious blessings on everyone. In the evening, Sri NamPerumal was carried in a holy procession from the Kodiyalam Seshadri Iyengar Aasthana Mandapam atop the Karpaga Viruksha Vaaganam through the Chitthirai Veedhi and reached the Vaagana Mandapam. After showering divine blessings on everyone, the holy Deity returned to the Kannadi Arai. A large number of devotees along with the Bhattars, Kaingaryaparargal and the temple executives attended the event.

17/04/2023

ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் பங்குனி மாதம் நடைபெறும் விருப்பன் திருநாள் என்றழைக்கப்படும் சித்திரை தேர் திருவிழாவின் முதல் நாளான 11.04.2023 அன்று காலை கொடியேற்றதிற்காக மூலஸ்தானத்திலிருந்து ஸ்ரீநம்பெருமாள் புறப்பட்டு துவஜாரோஹன மண்டபத்தை அடைந்தார். துவஜாரோஹனம் (கொடியேற்றம்) நடைபெற்றதும் அம்மண்டபத்திலிருந்து புறப்பட்டு கண்ணாடி அறையைச் சேர்ந்தார். பிறகு பேரிதாடனம் நடைபெற்றது. அன்று மாலை ஸ்ரீநம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் பட்டாடையில் அலங்கரிக்கப்பட்ட திருச்சிவிகையில் புறப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் காட்சியளித்து சித்திரை வீதிகள் வழி வலம் வந்தார். பிறகு சந்தனு மண்டபத்தை அடைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து யாக சாலைக்கு புறப்பட்டார். அங்கு ஸ்ரீநம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளி கண்ணாடி அறையை சேர்ந்தார். ஏராளமான பக்தர்கள், பட்டர்கள், நிர்வாகிகள் மற்றும் கைங்கர்யபரர்கள் இதில் கலந்துக்கொண்டனர்.
#ஸ்ரீரங்கம் #ஸ்ரீரங்கநாதர்கோயில் #விருப்பன்திருநாள்

The Viruppan Thirunaal (Chitthirai Ther) celebrated during the Thamizh month of Panguni at Srirangam Arulmigu Sri RanganathaswamyTemple began on April 11, 2023. On the first day, Sri NamPerumal reached the Dhwajarohana Mandapam from the Moolasthanam early in the morning, where the Dhwajarohanam (flag-hoisting) ceremony was performed to signal the commencement of the festival. Sri NamPerumal was then taken in a procession to the Kannadi Arai from the Dhwajarohana Mandapam. The Beri Thaadanam ritual was performed next. In the evening, divine Sri NamPerumal, resplendent in beautiful silks and jewellery along with the Ubaya Naachiyaars was taken in a grand procession through the Chitthirai Veedhi to the Santhanu Mandapam where He showered His blessings on everyone. From there, the Deity reached the Yaga Saalai and blessed the Thirumanjanam ceremony. Lord Sri NamPerumal returned to the Kannandi Arai later. A sea of ardent devotees, Bhattars, temple officials and Kaingaryaparargal enthusiastically participated in the ceremonies.

17/04/2023

ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீரங்கநாதர் திருக்கோயிலில் நடைபெறும் முக்கியமான திருவிழாக்களில் ஒன்றான விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேரோட்டம் 11.04.2023 முதல் 21.04.2023 வரை நடைபெறவுள்ளது. சித்திரைத் தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்தம்ப ஸ்தாபனம் (முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி) 10.04.2023 அன்று காலை மிதுன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சித்திரை வீதியில் உள்ள சித்திரை தேரில் முகூர்த்தக்காலில் சந்தனம், மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்களப்பொருட்கள் வைக்கப்பட்டு மந்திரங்கள் முழங்க புனிதநீர் தெளிக்கப்பட்டு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது. இந்நிகழ்ச்சியில் இணை ஆணையர், உதவி ஆணையர், மணியக்காரர், பட்டர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்களும் இதில் கலந்துக்கொண்டனர். #ஸ்ரீரங்கம் #ஸ்ரீரங்கநாதர்கோயில் #சித்திரைதேர்முகூர்த்தக்கால்

Chitthirai Therottam, also known as Viruppan Thirunaal, is one of the very important festivals celebrated at Srirangam Arulmigu Sri Ranganathaswamy Temple. This year the festival is scheduled to be held from the 11th to the 21st of April. As the prelude to the Chitthirai Therottam, the Sthamba Sthaabanam (Muhurthakkal Nadudhal) ceremony was performed on April 10, 2023 with the flag hoisting during the auspicious Mithuna Lagnam. Following this, the Muhurthakkal Nadudhal ceremony was performed by adorning the muhurthakkal of the Chitthirai Ther in the Chitthirai Veedhi with holy articles such as sandal paste, mango-tree leaves and flower garlands along with the sprinkling of holy water, to the chanting of divine mantras. The Joint Commissioner, Assistant Commissioner, Maniakaarar, Bhattars, kaingaryaparargal, temple officials and plenty of devotees participated in the ceremonies.

14/04/2023

ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் ஆதிபிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான 11ஆம் நாள் 07.04.2023 அன்று மாலை ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கருட மண்டபத்தை அடைந்தார். கருட மண்டபத்தில் அனைவருக்கும் காட்சியளித்த பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார். இரவு அலங்கரிக்கப்பட்ட ஆள் மேல் பல்லக்கு எனப்படும் ஆளும் பல்லக்கில் சிறப்பு பட்டாடை அலங்காரத்தில் ஸ்ரீநம்பெருமாள் புறப்பட்டு சித்திரை வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்கள், பட்டர்கள், நிர்வாகிகள் மற்றும் கைங்கர்யபரர்கள் என அனைவர்க்கும் அருள்பாலித்து சேவை சாதித்து மீண்டும் வாகன மண்டபத்தை அடைந்தார். பின்னர் மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு மூலஸ்தானத்தை அடைய விழா இனிதே நிறைவுற்றது.
#ஸ்ரீரங்கம் #ஸ்ரீரங்கநாதர்கோயில் #ஆதிபிரம்மோற்சவம்

On April 7, 2023, the eleventh and concluding day of the AadhiBrahmotsavam Festival at the Srirangam Arulmigu SriRanganathaswamy Temple, Lord Sri NamPerumal was carried in a regal procession from the Moolasthanam to the Garuda Mandapam. After gracing the gathered devotees with His divine presence, the Lord reached the Vaagana Mandapam. Later in the evening, radiant Lord Sri NamPerumal, splendidly attired in glowing jewellery and festive silks, atop the gorgeously decorated Aalum Pallakku (Aal Mel Pallakku), was taken in a procession through the Chitthirai Veedhi and back to the Vaagana Mandapam. The celestial Deity returned to the Moolasthanam after showering precious blessings on the huge crowd of devotees, Bhattars, kaingaryaparargal and temple officials who had gathered to celebrate this wonderful event.

13/04/2023

ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் ஆதிபிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாளின் தொடர்ச்சியாக 06.04.2023 அன்று காலை பங்குனி தேர் என்னும் கோரதம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீநம்பெருமாள் பட்டாடை அலங்காரத்தில்அலங்கரிக்கப்பட்ட திருப்பல்லக்கில் தாயார் சன்னிதியிலிருந்து புறப்பட்டார். ரதாரோஹன ரத யாத்திரைக்காக கோரதத்தில் வீற்றிருந்த ஸ்ரீநம்பெருமாள் பட்டாடையில் பக்தர்களுக்கு திருக்காட்சியளிக்க பக்தி பரவசத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை ரங்கா ரங்கா என்று பக்தி பெருக்குடன் வடம் பிடித்து இழுத்து எம்பெருமானின் அருளை பெற்றனர். ஏராளமான பக்தர்கள், பட்டர்கள், நிர்வாகிகள் மற்றும் கைங்கர்யபரர்கள் கலந்துகொள்ள கோரதம் இனிதே நடைபெற்றது.
#ஸ்ரீரங்கம் #ஸ்ரீரங்கநாதர்கோயில் #ஆதிபிரம்மோற்சவம்

At the Srirangam Arulmigu Sri Ranganathaswamy Temple, as a continuation of the ninth day festivities of the AadhiBrahmotsavam festival, the Panguni Ther - also known as the Ko Radham - was celebrated with great enthusiasm on the morning of Apr 6, 2023. Our beloved Lord Sri NamPerumal was carried on a beautifully decorated thirupallakku from the Thaayaar Sannidhi to the Ko Radham in the morning. During the holy Rathaarohana Rathayaatra, resplendent Lord Sri NamPerumal showered divine blessings on everyone, while the ardent devotees pulled the Ko Radham while chanting “Ranga, Ranga”, with great fervour. An ocean of devotees, Bhattars, temple executives and kaingaryaparargal gathered to participate in the Ko Radham ceremony and pray to the divine Lord.

13/04/2023

ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் ஆதிபிரம்மோற்சவத்தின் 8ஆம் நாளான 04.04.2023 அன்று காலை ஸ்ரீநம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி எல்லைக்கரை ஆஸ்தான மண்டபத்தை அடைந்தார். மாலை ஆஸ்தான மண்டபத்திலிருந்து புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் சிறப்பு பட்டாடை அலங்காரத்தில் பக்கதர்களுக்குக் காட்சியளித்து அருள்பாலித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சித்திரை வீதிகள் வழியாக, வலம் வந்து கோரதம் அருகே வையாளி கண்டருளி சேவை சாதித்த பின்பு மீண்டும் கண்ணாடி அறையைச் சேர்ந்தார். இதில் ஏராளமான பக்தர்கள், பட்டர்கள், நிர்வாகிகள் மற்றும் கைங்கர்யபரர்கள் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது. #ஸ்ரீரங்கம் #ஸ்ரீரங்கநாதர்கோயில் #ஆதிபிரம்மோற்சவம்

On the morning of Apr 4th, the eighth day of the Aadhi Brahmotsavam at Srirangam Arulmigu Sri Ranganathaswamy Temple, Sri NamPerumal began His divine procession from the Kannadi Arai in an intricately bedecked pallakku, blessed the Vazhinadai Ubayangal and reached the Ellaikarai Aasthana Mandapam. In the evening, resplendent Lord Sri NamPerumal, glowing in colourful silks and unique ornaments, was taken in a grand procession astride the wonderfully decorated Kudirai Vaaganam through the Chitthirai Thiruveedhi, where the Lord blessed the revered Vaiyaali ritual near the Ko Radham. The benevolent Deity returned to the Kannadi Arai later in the evening. Plenty of devotees, Bhattars, temple admin and kaingaryaparargal joyfully participated in the celebrations.

12/04/2023

ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் அனைத்து உற்சவங்களில் சிறப்பானதானது ஏழாவது நாள் விழா ஆகும். ஆதிபிரம்மோற்சவத்தின் 7ஆம் நாளான 03.04.2023 அன்று மாலை ஸ்ரீநம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் அலங்கரிக்கப்பட்ட திருச்சிவிகையில் சந்தனு மண்டபத்திலிருந்து சிறப்பு பட்டாடை ஆபரண அலங்காரத்தில் புறப்பட்டார். திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளி பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்த பின்னர் சித்திரை வீதிகள் வழியாக வலம் வந்து ஆழ்வான் திருச்சுற்று வழியாகத் தாயார் சன்னதியைச் சேர்ந்தார். அங்கு ஸ்ரீநம்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின் அங்கிருந்து மீண்டும் புறப்பட்டு கண்ணாடி அறையைச் சேர்ந்தார். ஏராளமான பக்தர்கள் உள்பட பட்டர்கள், நிர்வாகிகள் மற்றும் கைங்கர்யபரர்கள் இதில் கலந்துகொண்டனர். #ஸ்ரீரங்கம் #ஸ்ரீரங்கநாதர்கோயில் #ஆதிபிரம்மோற்சவம்

The seventh day of all the festivals celebrated at the Srirangam Arulmigu Sri Ranganathaswamy Temple, has some important ceremonies associated with it. Following that tenet, during the evening of the seventh day (03/04/2023) of the holy Aadhi Brahmotsavam festival, our Lord Sri NamPerumal, along with the Ubaya Naachiyaars, was carried in a splendidly decorated Thiruchivigai from the Santhanu Mandapam to the Thirukottaram. The resplendent Deity showered divine blessings on the Nellalavai ceremony and the devotees gathered there. The Lord was carried in a grand procession through the Chitthirai Veedhi and reached the Thaayaar Sannidhi through the Aazhwan Thiruchuttru. After blessing the Thirumanjanam ceremony there, Sri NamPerumal returned to the Kannadi Arai later in the evening. Plenty of faithful devotees, Bhattars, Kaingaryaparargal and temple officials joyfully participated in the ceremonies.

Address

Srirangam
Tiruchirappalli
620006

Alerts

Be the first to know and let us send you an email when Srirangam Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category