ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் - ஓங்காரக்குடில் துறையூர்

  • Home
  • India
  • Tiruchirappalli
  • ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் - ஓங்காரக்குடில் துறையூர்

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் - ஓங்காரக்குடில் துறையூர் தினமும் அன்னதானம்- ஞானிகளின் கோவில்
சத்தியமே அகத்தியம்! அகத்தியமே ஜெயம்!

துறையூர் ஓங்காரக்குடில் ஞானிகளின் சங்கமத்துறையாகத் திகழும் திருத்தலம். ஆசான் தவத்திரு அரங்கமகாதேசிகர் சுவாமிகள் அகத்திய மாமுனிவரின் அவதாரமாய் திகழும் அற்புத ஞானி. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான ஏழைகளின் பசியை போக்கும் தருமச்சாலை.
இலவசஉணவு, இலவச குடிநீர், இலவச கண் மருத்துவம், இலவச திருமணம், கல்வி கற்க உதவி

17/07/2026
16/02/2026

மகான் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் திருஅவதார தின விழா சிறப்பு

🌷 #மகாசிவராத்திரி_வாழ்த்துக்கள் 🌷 #முருகப்பெருமானையும் ,  #சிவபெருமானையும் ,  #அகத்தியர்பெருமானையும் மற்றும் சிவனை வணங்க...
15/02/2026

🌷 #மகாசிவராத்திரி_வாழ்த்துக்கள்

🌷 #முருகப்பெருமானையும் , #சிவபெருமானையும் , #அகத்தியர்பெருமானையும் மற்றும் சிவனை வணங்கி சிவனோடு சிவமாக ஐக்கியமாகிய சிவசித்தர்களையும் வணங்கி நாமும் #சிவநிலையாகிய_இறைநிலை அடைவோம் !

🌷இகவாழ்வில் உள்ள எல்லா நலங்களும் வளங்களும் பெறுவதோடு
🌷பரவாழ்வாகிய
மரணம்_ஜனனம் என்னும் பிறவிப்பிணியிலிருந்து விடுபட்டு #மரணமில்லா_பெருவாழ்வு என்னும் உயர் சித்தி நிலையை நாமும் அடைந்து இறைவனோடு இறைவனாக இணைந்து இறைஇன்பமாகிய பேரின்பத்தில் என்றும் திளைத்திருக்கலாம்

🌷அதற்கு #முக்கிய_மூன்று_கொள்கைகள்

🌷 1. முருகப்பெருமான் , சிவபெருமான் , அகத்தியர்பெருமான் உள்பட நவகோடிசித்தர்களை பூஜித்து வணங்கவேண்டும்
அதாவது ஆதிதலைவனும் முதன்முதலில் கடவுள்தன்மை அடைந்த முருகப்பெருமான் முதல் 1874 ம் ஆண்டு தைபூசத்தில் சித்தி அடைந்த வள்ளலார்பெருமான் மற்றும் இரண்டு வருடங்களுக்கு முன்பாக 14.05.2024 ம் ஆண்டு வைகாசி பூசம் அன்று சித்தி பெற்ற துறையூர் #ஓங்காரக்குடிலாசான் #ஆறுமுகஅரங்கர்_பெருமான் வரை உள்ள நவகோடி சித்தர்களை நாம் தினமும் உள்ளம் உருகி பூஜித்தல் வேண்டும் .
( நவகோடி சித்தர்களில் #18சித்தர்கள் , #63நாயன்மார்கள் , #12ஆழ்வார்கள் , #சிவபெருமான் , #விஷ்ணுபெருமான் #கிருஷ்ணர் இன்னும் அநேகம் அநேகம் சித்தர்களும் ஞானிகளும் கடவுளும் அடக்கம் )

🌷 2. ஞானிகள் சித்தர்களை பூஜிப்பதோடு மாதம் இருவருக்கோ , அல்லது முடிந்த அளவு சைவஉணவினை #அன்னதானம் செய்தல்வேண்டும்

🌷 3. கண்டிப்பாக #உயிர்கொலை_தவிர்த்தல் வேண்டும் , இறைவனுக்கு வேண்டிக்கொண்டேன் என்ற பெயரிலோ அல்லது நாம் உண்ணும் பொருட்டு நம் நாக்கு சுவைக்காகவோ எந்த உயிரையும் கொல்லுதல் கூடாது , அசைவ உணவு கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் . எல்லா உய்ரிகளும் இறைவன் குழந்தைகள் என்று எண்ணி #ஜீவகாருண்யம் கடைபிடித்தல் வேண்டும்

🌷இந்த மூன்று அடிப்படை கொள்கைகளை கடைபிடித்தால் நிச்சயமாக
#சாதாவரங்களோடு_சாகாவரமும்_சாத்தியமே !

🌷 #சாகாவரம்_அருளும்_உயர்ந்த_நாமஜெபங்கள்

🌷 #ஓம்_சுப்பிரமணியர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_சிவபெருமான்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_அகத்தியர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_திருவள்ளுவர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_அருணகிரிநாதர்_திருவடிகள்_போற்றி

🌷 #ஓம்_மாணிக்கவாசகர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_திருஞானசம்பந்தர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_திருநாவுக்கரசர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_சுந்தரர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_ஆறுமுக_அரங்கர்_திருவடிகள்_போற்றி

03/02/2026

தைப்பூசம் விழா - ஓங்காரக்குடில் 01.02.2026

🌷மகான்  #அருணகிரிநாதர்  #திருத்தணிகை  #திருப்புகழ் 279 #பகலி ராவினுங் கருவி யாலனம்     பருகி யாவிகொண் ...... டுடல்பேணிப்...
23/01/2026

🌷மகான் #அருணகிரிநாதர் #திருத்தணிகை #திருப்புகழ் 279

#பகலி ராவினுங் கருவி யாலனம்
பருகி யாவிகொண் ...... டுடல்பேணிப்

#பழைய வேதமும் புதிய நூல்களும்
பலபு ராணமுஞ் ...... சிலவோதி

#அகல நீளமென் றளவு கூறரும்
பொருளி லேயமைந் ...... தடைவோரை

#அசடர் மூகரென் றவல மேமொழிந்
தறிவி லேனழிந் ...... திடலாமோ

#சகல லோகமும் புகல நாடொறுஞ்
சறுகி லாதசெங் ...... கழுநீருந்

#தளவு நீபமும் புனையு மார்பதென்
தணிகை மேவுசெங் ...... கதிர்வேலா

#சிகர பூதரந் தகர நான்முகன்
சிறுகு வாசவன் ...... சிறைமீளத்

#திமிர சாகரங் கதற மாமரஞ்
சிதற வேல்விடும் ...... பெருமாளே.

🌷 #பாடலின்_கருத்து

பகலிலும் இரவிலும் இந்த உடம்பு என்ற கருவியால் சோறு உண்டு உயிரைப் பாதுகாத்து இவ்வுடம்பை விரும்பி வளர்த்த யான்,

பழமையான வேத நூல்களையும் புதுமையான நூல்களையும் பலவகையான புராணங்களையும் ஒரு சிலவற்றை ஓதி உணர்ந்து, இத்தனை அகலம் இத்தனை நீளம் என்று அளக்க முடியாத பேரின்பப் பொருளிலே மனத்தை வைத்து அமைதியுறும் ஆன்றோரை, மூடர், ஊமையர் என்றெல்லாம் வீண் வார்த்தைகளால் அவமதித்து அறிவிலியாகிய அடியேன் அழிந்து போகலாமா?

எல்லா உலகங்களும் போற்றிப் புகழும்படி, தினந்தோறும் தவறாமல் மலர்கின்ற செங்கழுநீர் மலரும், முல்லையும், கடப்ப மலரும் தரிக்கின்ற மார்பனே, அழகிய #திருத்தணிகையில் வாழ்கின்ற செவ்வொளி வீசும் #வேலாயுதா, சிகரங்களைக் கொண்ட கிரெளஞ்ச மலை பொடிப்பொடியாக, #பிரம்மாவும், மேல்நிலையிலிருந்து தாழ்ந்த #இந்திரனும் சூரனது சிறைச்சாலையிலிருந்து மீட்சி பெற, இருண்ட கடல் கொந்தளித்து அலை ஓசை மிக, மாமரமாக மாய உருக்கொண்ட #சூரனது உடல் பிளவுபட, #வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே.

🌷 #ஓம்_முருகா
🌷 #ஓம்_சரவணபவ
🌷 #ஓம்_சரவணஜோதியே_நமோ_நம
🌷 #ஓம்_சுப்பிரமணியர்_திருவடிகள்_போற்றி

🌷 #ஓம்_அகத்தியர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_அருணகிரிநாதர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_வள்ளலார்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_ஆறுமுக_அரங்கர்_திருவடிகள்_போற்றி

🌷FaceBook
https://www.facebook.com/SriAgathiarSanmarkaSangam
🌷youtube:
https://www.youtube.com/c/MurugaYugamArumugaArangar
🌷Instagram
https://www.instagram.com/murugayugam

Address

113 Extension, Thuraiyur
Tiruchirappalli

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் - ஓங்காரக்குடில் துறையூர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் - ஓங்காரக்குடில் துறையூர்:

Shortcuts

Share