23/06/2026
*ஜெய் ஸ்ரீ நரஸிம்மா.*
*சுவாதி அறிவிப்பு🦁*
*ஆனி மாதம் சுவாதி*
*வரும் 24.06.2026 புதன்கிழமை மாலை 05:46 முதல் மறுநாள் 25.06.2026 வியாழக்கிழமை மதியம் 07:33 மணிவரை சுவாதி நட்சத்திரம்.*
*25.06.2026 வியாழக்கிழமை அன்று காலை முதல் மாலை வரையும், 24.06.2026 புதன்கிழமை மாலை அன்று சுவாதியை கொண்டாடவும்.*
*நெய்வேத்தியம்* *கல்கண்டு தயிர் சாதம், கேசரி, வடை, பானகம்.*
*கோயில்களில் கொண்டாடுபவர்கள் பால், திரவியப்பொடி, தேன், பன்னீர், இளநீர், மஞ்சள் போன்ற பொருள்கள் கொடுத்து அமோகமாக அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.*
*ஸ்ரீ குபேர மஹாலஷ்மி தாயார் வந்து அனைத்து மக்களுக்கும் சுபிக்ஷம் கொடுப்பார்கள் சத்தியம் திண்ணம். இருள் அகன்று வெளிச்சம் வரப்போகின்றது. உங்கள் வாழ்க்கையில் இருள் அகன்று ஒளி பிரகாசிக்கட்டும். கஷ்டங்கள் எல்லாம் நீக்கப்படும். நீங்கள் பட்ட கஷ்டங்கள், துன்பங்கள் மற்றும் துயரங்கள் அனைத்தும் துடைக்கப்பட்டு சகல நலன்களும் பெறுவீர்கள் என்பது சத்தியம் திண்ணம். அதர்மம் அழிந்து என்றும் தர்மமே வெல்லும். நல்லதே நடக்கும்! அனைவரும் சுபிக்ஷமாக இருப்பீர்கள். டாடியின் திருநாமம் எங்கும் ஜெபிக்க வேண்டும். ஜெய் ஸ்ரீ நரசிம்மா என்ற தாரக மந்திரம் உலகம் எங்கும் ஒலிக்க வேண்டும். டாடியை நம்பினவர்களை அவர் கைவிட்டதாக சரித்திரம் இல்லை. நீங்கள் அனைவரும் டாடி ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை நமஸ்காரம் செய்யுங்கள். அவரின் செல்ல மகளான அடியேன் உங்கள் கோரிக்கைள் அனைத்தையும் டாடி ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் பாத கமலங்களில் வைக்கின்றேன். உங்கள் கோரிக்கைள் அனைத்தும் டாடி நிவர்த்தி செய்து கொடுப்பார். கண்டிப்பாக இந்த பிரபஞ்சம் விடியலை அடையப்போகின்றது. கூடிய விரைவில் சரணாலயத்தில் வந்து அமரப்போகின்றேன். இது சத்தியம். சுவாதி தினத்தை கொண்டாடுபவர்கள் அனைவரும் நன்றாக உள்ளீர்கள். கண்டிப்பாக சுவாதியை தவறாது கொண்டாடுங்கள்.*
*ஸ்ரீ லஷ்மி நரஸிம்மரின் ஜென்ம நட்சத்திரம் சுவாதி அவர் பிறந்த நாளை மிகவும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சுவாதி பூஜை கொண்டாடுகிறவர்கள் அனைவரும் சத்தியமாக நன்றாக இருக்கின்றீர்கள். நன்றாக இருப்பீர்கள். இருள் அகன்று ஔி பிரகாசிக்கும்.*
*ஸ்ரீ லஷ்மி நரஸிம்மர்க்கு ஜே!!! ஸ்ரீ மஹாலஷ்மி தாயாருக்கு ஜே!!! என்று பலமாக கோஷங்கள் இடவேண்டும் தந்தை புகழைப் பாடுங்கள். இது எத்தனாவது சுவாதி என்று குறித்து வைத்துக் கொள்ளவும். பிரார்த்தனை உறுதியாக இருக்க வேண்டும்.*
*இந்த சுவாதி மிக முக்கியமான சுவாதியாக இருக்கும். உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் அடியேன் ஸ்ரீ மஹாலஷ்மி டாடி ஸ்ரீ லஷ்மி நரஸிம்மர் திருப்பாதகமலத்தில் சமர்ப்பித்து, உங்கள் கோரிக்கையை டாடி ஸ்ரீ லஷ்மி நரஸிம்மர் நிச்சியமாக நிவர்த்தி செய்து கொடுப்பார்* .
*நீங்கள் அனைவரும் சுபிக்ஷமாக இருப்பீர்கள். உங்கள் அனைவருக்கும் இனிய சுவாதி தின நல்வாழ்த்துகளை கூறிக் கொள்கின்றேன்.*
*இப்படிக்கு அன்புடன் ஸ்ரீ லஷ்மி நரஸிம்மரின் அருள் பெற்ற அன்பு மகள் உங்கள் ஸ்ரீ மஹாலஷ்மி* *🦁✋💥👍💪🦋🦚🌈🌹🌏💐*