03/05/2025
மகாசக்தி மாரியம்மன் கோவில்
T.அய்யம்பாளையம்
*திருவிழா விவரம்*
************************
02/05/2025
(*வெள்ளிக்கிழமை*)
*மாலை*
*புண்ணியஸ்தானம்* செய்தபின் கோவிலை சுத்தப்படுத்தி *பால்குடம் எடுப்பவர்களுக்கு மாலைபோடுதல்,கங்காணம் கட்டுதல்* நிகழ்வு நடைபெறும்.
-----------------------------------------------
03/05/2025
(*சனிக்கிழமை*)
*மாலை*
3.00- மணிக்குமேல் மூங்கில், வாழைமரம் தென்னங்கீற்று வெட்ட செல்லுதல்,
*இரவு*
வீட்டிற்கு ஒருவர் வீதம் அவசியம் அனைவரும் வந்து *தேர் அலங்காரம், வாழை மரம் கட்டுதல், பந்தல் அலங்காரம், தோரணம் கட்டுதல்* போன்ற வேலைகளை செய்து முடித்தல்.
-----------------------------------------------
04/05/2025 (*ஞாயிற்றுக்கிழமை*)
*காலை*
*தேர் அலங்காரம்* நடைபெறும்.
*மதியம்*
11.00- மணிக்கு மேல்
காவிரிக்கு *தீர்த்தக்குடம்* எடுக்க செல்லுதல் .
*மாலை*
5.00-மணிக்கு மேல் 7.00-க்குள் *பால்குடம்,தீர்த்தகுடம்* திருவீதி உலா வருதல்.
*இரவு*
7.00-மணிக்கு மேல் 8.00-க்குள் *கரகம் பாலித்தல்*.
8.00மணிக்குமேல்
அனைவரும் *வீடுகளில் மாரியாயி* கும்பிடுதல்.
9.30-க்கு மேல் 11.00-க்குள்
மாரியம்மன் கோவிலில் *மாவிளக்கு பூஜை* நடைபெறும்.
11.00 மணிக்கு மேல் *சந்தனகாப்பு அலங்காரம்* நடைபெறும்.
-----------------------------------------------
05/05/2025 (*திங்கட்கிழமை*)
*காலை*
11.00 மணிக்குள்
*பொங்கல் வைத்து மொட்டை அடித்தல், கிடாவெட்டு பூஜை*, நடைபெறும்.
அனைவரும் அவசியம் 9.00 மணிக்குள் பொங்கல் வைத்து முடிக்கவும்.
*மாலை*
5.00-க்கு மணியம்பட்டிக்கு *படுவளம் அழைக்க* செல்லுதல்.
*இரவு*
7.00 மணிக்கு மேல்
🕺💃 *தாரை அபிநயா திரைப்பட நடன நாட்டிய நிகழ்ச்சி*🕺💃 நடைபெறும்.
10.00மணிக்குமேல்
*வானவேடிக்கை* *ட்ரம்செட் இசையுடன் தேர் திருவீதி உலா* வருதல்.
இரவு *புராண நாடகம்* நடைபெறும்.
-----------------------------------------------
06/05/2025 (*செவ்வாய்க்கிழமை*)
*மாலை*
5.00-க்கு *படுவளம் அழைத்தல்*.
6.00 மணிக்கு மேல்
*மஞ்சள் நீர்* , *ட்ரம்செட் இசையுடன் குதிரை வாகனம் திருவீதி உலா* வருதல், *முளைப்பாரி எடுத்தல்*,*வான வேடிக்கை*,*கரகம் குடிபுகுதல்* திருவிழா நிறைவுற்றது.
----------------------------------------------
*குறிப்பு:*
#அனைவருக்கும் தெரியும் இப்பொழுது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. ஆகவே பொங்கல் வைத்து கிடா வெட்டுவதை காலை 11 மணிக்குள் முடிக்க வேண்டும். எனவே அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்து பொங்கல் வைப்பவர்களை காலை 7.00 மணியிலிருந்து 9.00 மணிக்குள் பொங்கல் வைத்து முடிக்குமாறு எடுத்து சொல்லி பொங்கல் வைக்க சொல்லவும்.
🙏 நன்றி🙏