Moulana Shahul Hameed Jamaali

Moulana Shahul Hameed Jamaali Founder, Al-Madhrasathul Badhriyya, Karambakudi, Pudukkotai Dist,
Founder Principal, Jamiya Ilhamul Uloom, Arabic Collage, Inamkulathur, Tiruchy-621303,

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தியாக தீபம் மர்ஹும் ---------------------------------------------------------------------...
02/02/2017

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தியாக தீபம் மர்ஹும்
--------------------------------------------------------------------------------------
E. அகமது அவர்களின் நீங்கா நினைவலைகள்..
---------------------------------------------------------------------

மறியாதைக்குரிய மாண்புமிகு E. அகமது அவர்கள் மத்திய ரயில்வே இணை அமைச்சராக இருந்தபோது இனாம்குளத்தூருக்கு நமது இஸ்லாமிய பண்பாட்டு மையம் நூலகத்தை திறந்து வைப்பதற்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் நாம் இணைந்து பணியாற்றுவதற்கும், நல்லாசி மொழிந்து நல்வாழ்த்து கூற வருகை தந்தார்கள்.

அது சமயம், இனாம்குளத்தூர் நுழைவாயிலில் நாம் இன்புற்று இனிய வார்த்தைகளில் உரையாடியது இதயத்திற்கு இதத்தைத் தந்தது.

படம் – 2
------------

சிரிப்புடன் கூடிய இந்த சந்திப்பு அரசியல் வாழ்க்கையில் தூர் நோக்கு சிந்திப்பாக இருக்க வேண்டும். மற்ற அரசியலைப் போன்று கண்ணீராகி கானல் நீராகி விடக்கூடாது என்பதை நமக்கு உணர்த்தும் விதமாகவும், பிறர் உணரும் விதமாகவும் இருக்கிறது.
நாம் பிடித்திருக்கின்ற அவர்களுடைய வலக் கரத்தில் நாளை மறுமை நாளில் நன்மை தீமையின் சான்றிதழ் வழங்கப்படும். அந்த சான்றிதழிலாவது , நாமும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகில் இவர்கள் தலைமையில் இணைந்தோம், இருந்தோம் என்பதற்கு சாட்சியாக, சான்றாக இந்த எளியோனாகிய நம்முடைய பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை.

படம் – 3
------------

அகம் மலர்ந்து, முகம் மலர்ந்து, கண் குளிர்ந்து இஸ்லாமிய பண்பாட்டு மையத்தை பக்தி பரவசத்தோடு சமூகம் சுமூகம் பெற்றிடவும், சமதர்ம சகோதரத்துவம் மேலோங்கி மகத்தான மறுமலர்ச்சி பெற்று பெருகிட வேண்டும் என்ற சிந்தையோடு திறந்து வைக்கும் E. அகமது அவர்கள்.

படம் – 4
------------

நமது ஜாமிஆவில் விருது பெற்று வெளியேறும் மாணவர்களின் அணிவகுப்பில் மறைந்த மர்ஹும் நம்முடைய E. அகமது அவர்கள்.

படம் – 5
------------

நமது இஸ்லாமிய பண்பாட்டு மையத்தின் சார்பாக நினைவு பரிசு வழங்கி வாழ்த்து கூறினோம்.

படம் – 6
------------

நமக்கு பொன்னாடை போற்றி புழகாங்கிதம் அடைந்த மனிதருள் புனிதர், தேசியத் தலைவர், மறைந்த மர்ஹும் E. அகமது அவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் மண்ணறையை விரிவாக்கி, நாளை மஹ்ஷரின் இடர் நீக்கி, தனது அர்ஷை நிழலாக்கி, சுவனத்தில் இடம் அளித்து, சுக வாழ்வு அளிப்பானாக.

ஆமின் யா ரப்பில் ஆலமின்

மூதறிஞர் எழுத்தரசு A.M. ஹனீப் அவர்களின் இழப்பு--------------------------------------------------------------------------...
02/02/2017

மூதறிஞர் எழுத்தரசு A.M. ஹனீப் அவர்களின் இழப்பு
----------------------------------------------------------------------------
பேரிழப்பாகும்..
----------------------

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் எழுத்தரசு என்று போற்றப்படும் மூதறிஞரும், முற்போக்கு சிந்தனையாளருமான, பெரியவர் A.M. ஹனீப் அவர்களின் எழுதுகோல் முஸ்லிம் லீகின் சிரசாகும். அவர்களுடைய ஒவ்வொரு வரியும் மூலையில் முடங்கிக் கிடக்கின்ற முதியோர்களுக்கும், இளைஞர்களுக்கும் உணர்வூட்டும் முரசாகும்.

அவர் மறைந்தாலும் அவர் விட்டுச் சென்ற முஸ்லிம் லீகின் வரலாற்று புத்தகங்கள் வளமாக வழி காட்டும் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை. எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு எல்லா வளங்களையும் வாரி வழங்கி சுவனத்தின் சுக வாழ்வு அளிப்பானாக.

ஆமின் யா ரப்பில் ஆலமின்

Address

Inam Kulathur
Tiruchirappalli

Telephone

8807316359

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moulana Shahul Hameed Jamaali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category